புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_lcapகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_voting_barகண்ணதாசன் எனும் காவியம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:50 am

நமது வாழ்க்கையிலே சில சமயங்களில் தாங்கவொண்ணாத் துயரங்களில் அழுந்துகிறோம். நம்மைச் சுற்றியுள்ள சொந்தங்கள் எனும் பந்தங்கள் நாம் எதிர்பார்த்தபடி ஆறுதலாக இல்லாமல், நமது மனத்தின் துயரத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறார்கள். நடந்த நிகழ்வுகளை நடக்க விடாமல் பாதுகாப்பதற்கு நாம் பகீரத முயற்சி செய்திருந்தாலும், கைக்கு மீறிக் காரியங்கள் நடந்து விடுகின்றன. துயரச் சுமையினால் தோய்ந்துபோன உள்ளத்துடன் தவிக்கின்றோம்.

மேலே குறிப்பிட்ட சம்பவம் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு காலகட்டத்தில் நடந்திருக்கும். இல்லையானால் இனி நடக்கவும் கூடும். அப்படியான ஒரு சம்பவத்திலே ஒரு நண்பன் அருகே அமர்ந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக் கூறி, அது எதனால் நிகழ்ந்தது என்று தனது மனதில் படுகிற விதத்தில் எடுத்துரைதானாகில், எமது மனம் எவ்வாறு இலேசாகும் என்று சிறிது எண்ணிப்பாருங்கள்.

இத்தகைய மனஅமைதியைத்தான் கவியரசரின் பாடல்களும் கட்டுரைகளும் எனக்குத் தந்திருக்கின்றன. என் உள்ளத்தைத் திறந்து சொல்லப்போனால், அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அவரது அரிய பொக்கிஷ நூல்களைப் படிக்கும் வரை, நான் இந்து என்று பெயரளவில்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். "அர்த்தமுள்ள இந்து மதம்" என்னை மதவெறியனாக ஆக்கியது என்று சொல்ல வரவில்லை, என்னை மனிதாபிமானமிக்க இந்துவாகப் பரிணமிக்க வைத்தது என்றே சொல்லுவேன். மனிதனுக்கு மதம் ஒரு அணிகலனே தவிர ஆடையில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நெளிவு, சுளிவுகளையும் புரிந்து வைத்துக் கொண்ட நம் கவியரசு அதை அழகாய்த் திரைப்படப்பாடல்களிலும் கட்டுரைகளிலும் வரைந்து நமது மனப் புண்களுக்கு மருந்திட்டார். அவரது அனுபவம் எனும் பட்டறையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டதால்தான் கருத்தெனும் ஆயுதம் கூர்மையாக வாசிக்கும் உள்ளங்களில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

இங்கே அவரது வாழ்வைத் தொட்ட துயரத்தின் சாயலைக் கொண்டு ஒரு திரைப்படத்தில் அவர் படைத்த பாடலோடு தொடர்புடைய சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்.

மீண்ட சொர்க்கத்தில் ஆரம்பித்துக் கவியரசுக்கும், டைரக்டர் ஸ்ரீதருக்கும் இடையிலான நட்பு இறுதிவரை தொடர்ந்ததென்றே கூற வேண்டும். "சுமைதாங்கி" எனும் படத்தைக் கவியரசர் தயாரிக்க, டைரக்டர் ஸ்ரீதர் இயக்கினார்.

இந்தப் படத்தின் கதாநாயகனாகக் காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். அதிலே ஒரு காட்சியில், ஜெமினி கணேசன் கடற்கரையோரத்தில் ஒரு பாடல் பாடுவது போன்ற காட்சி, அதற்கான பாடல்
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்".

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:50 am

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் தான் கவியரசர் முதன்முதலில் சென்னைக்கு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் வந்த போது நின்ற இடமாம். அப்போது அங்கே தூங்கக்கூடாது என்றுகூட அவரை ஒரு போலிஸ்காரர் விரட்டியிருக்கிறாராம்.. இந்தப் பாடல் அந்த இடத்திலேதான் படமாக்கப்பட வேண்டும் என்பதில் கவியரசர் மிகுந்த பிடிவாதமாக இருந்தாராம். அது மட்டுமல்ல அந்தக் காட்சி படமாக்கப்படும் நேரத்திலே, ஸ்டூடியோ விளக்குகளை உபயோகிப்பதற்குப் பதிலாக, தனது எட்டு அம்பாஸிடர் கார்களின் விளக்குகளை கதாநாயகன் மேல் விழப்பண்ணி அந்தக் காட்சியைப் படமாக்கினாராம்.

இதற்குத் தனது கார்களை உபயோகித்தது தனது பெருமையைப் பறை சாற்ற அல்ல, ஒருவன் தனது சொந்தத் திறமையை உபயோகித்து, எட்டுக் கார்கள் வைத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு உயரமுடியும் என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதற்காகவே.

இங்கே நான் இதை குறிப்பிடுவதற்குக் காரணம் கவியரசரின் உள்ளத்தில் காலமகள் ஏற்படுத்திய வடுக்களை அவர் எப்படி அனுபவப் பாடங்களாகக் கொண்டார் எனபதை எடுத்துக்காட்டவேயாகும்.

கவியரசர் தொட்டது என்னைப் போன்ற சாதாரண ரசிகர்களின் மனத்தை மட்டுமல்ல, கலையுலகச் சிகரங்களின் உச்சியில் வீற்றிருந்தோரின் மனத்தில் அவர் வகித்த இடம் மகத்தானது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, 1984ம் ஆண்டளவில் நடிப்புச் செம்மல் கமல், செவாலியே சிவாஜி கணேசனுடன் சேர்ந்தளித்த ஒரு பேட்டியின் போது, பாலும் பழமும் படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘போனால் போகட்டும் போடா’ எனும் பாடல் காட்சியில் அவர் நடிப்பைப் புகழ்ந்து பாராட்டினார். அதற்கு நடிகர் திலகமோ அந்தப் பாடலின் சிறப்பு தனது நடிப்பினால் அல்ல மறைந்த கவியரசரின் பாடல் வரிகளும், அதன் பொருளுமே என்று கூறி "எமக்கெல்லாம் தத்துவம் சொன்னவர் கவிஞர், இப்போ அவரே தத்துவமாகி விட்டார்" என்று கூறி தனது கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகளைச் சுண்டி விட்டாராம்.

கவியரசரின் தத்துவம், அதை நன்றாய்ப் பயன்படுத்திய வகை, அவருடைய கருத்துக்களின் ஆழம் அளக்க முடியாதவை. அவருக்கும் எழுத்து "க" விற்கும் உள்ள தொடர்பும் நெருக்கமானதே! எப்படி என்கிறீர்களா?

"க"ண்ணதாசன், அவருடைய முதலாவது பாடல் 'கன்னியின் காதலி' எனும் படத்தில் இடம்பெற்ற "க"லங்காதிரு மனமே! கடைசியாகக் கவிஞர் எழுதிய பாடல் மூன்றாம் பிறை எனும் படத்தில் இடம்பெற்ற "க"ண்ணே கலைமானே ஆகும்.

இப்படிக் "க" வோடு தொடங்கி முடிந்த திரைப்படப் பாடல்களின் நாயகன், "க"விதை உலகிலும், "க"ட்டுரை உலகிலும் கோலோச்சியவன் "க"டைசிவரை என் போன்ற ரசிகர்களின் மனத்தை ஆட்சி செய்வான் என்பது அசைக்கமுடியாத உண்மை.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:51 am

எங்கே தொடங்கப் போகிறேன்? எங்கே முடிக்கப் போகிறேன்? என் கண்முன்னே நான் கண்டு வாசித்து அறிந்த கவியரசரைப் பற்றி எழுதுவதற்கான முயற்சியே எனது கைகளில் இல்லை எனும் ஒரு நிலை இருக்கும் போது, எப்படி இந்த வாழ்க்கையை மட்டும் நான் எனது எண்ணப்படிதான் வாழுகிறேன் என்று எண்ண முடியும்? இதையேதான் கவியரசர் தனது பல படைப்புக்களில், பாடல்களில்,கட்டுரைகளில் தெளிவாக, அழகாக விளக்கியிருக்கிறார்.

ஒரு மனிதன் அறிவுரை கூறும்போது, "மது அருந்தாதே" என்று கூறுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவனது சொந்த வாழ்க்கையில் அந்த மனிதன் ஒரு நாளுமே மதுவைத் தீண்டியது கூட இல்லையானால் "என்ன, இவன் தான் அறியாத இன்பத்தை, எம்மை அடைய விடாது தடுக்கிறானே" என்று சிலர் ஆதங்கப்படுவார்கள் ("மது அருந்துவது இன்பமானது" என்று நான் கூறுகிறேன் என்று வாசகர்கள் தவறாகப் பொருள் கொள்ளாதீர்கள்). அதே மனிதன் முன்பு நன்றாக மது அருந்திக் களித்தவன் இப்போ தனது பழக்கத்தை மாற்ற்¢க் கொண்டு அறிவுரை கூறுகின்றானானால் "தான் மட்டும் அனுபவிக்கும் வரை அனுபவித்து விட்டு இப்போ எங்களைத் தடுக்க வந்து விட்டான்" என்று ஒரு சாரார் விசனப்படலாம்.

ஆனால் எமது கவியரசரோ, "நான் இப்படி நடந்தேன், இவ்வாறு இருந்தேன்" என்று தனது தவறான பழக்க வழக்கங்களை ஒளிவு மறைவின்றி நம்மோடு பகிர்ந்து, தன்னையே அதற்கு உதாரணமாய் எடுத்துக் கொண்டு நம்மை நல்வழிப் படுத்த முயற்சி எடுத்துள்ளார். அதனால்தான் அவரது எழுத்து வெற்றியடைந்தது. அர்த்தமுள்ள இந்துமதம் கூட அன்றாட வாழ்க்கை முறைகளுடன், மதத்தின் வழிமுறைகளைப் பிணைத்துக் காட்டியதே தவிர, நம்மால் புரிந்து கொள்ளாதபடி மதத் தத்துவங்களை அள்ளி வீசவில்லை.

இத்தகைய கவியரசரின் வாழ்க்கையிலே அவர் மது, மங்கை என்று தனது வாழ்நாளைக் கழித்தபோது சில கவிதைகள் எழுதியிருந்தார். அப்படியான கவிதைகள் சிலவற்றை இங்கே எடுத்துப் பார்க்க விழைகிறேன்.

அதற்கு முன்னால் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு "

இனி மேலே குறிப்பிட்டவாறு அவரது கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மதுவை ஓர் கையில் வைத்து
மங்கையோர் புறத்தே வைத்தால்
எதுவரை உலகம் போகும்
எங்கெங்கோ போகும், நானும்
அதுவரை போவேன்.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:52 am

இந்தக் கவிதையின் கருத்தை உற்று நோக்கினால் கவிஞரின் அன்றைய வாழ்க்கை முறையை நன்றாக எடுத்துக் காட்டுகிறது. சாதாரண மனித மன ஆசை எனும் நதியினில் நீச்சலடித்து விட்டுத்தான் அந்தப் பயணத்தின் சிரமம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துரைத்திருக்கிறார், நம் கவிஞர்.

இது ஏதோ பெரிய சாதனை என்று நான் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கவிஞனின் வாயிலிருந்து, அந்தந்தக் காட்சிகளுக்கேற்றவாறு வெற்றிப்பாடல்கள் வந்து விழுவதன் பின்னணி, இவைகளைப் பற்றி அறிந்திருப்பதால் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இதே வரிசையில் இன்னுமொரு கவிதையைப் பார்ப்போம் !

காதலை, மதுவை, இன்பக்
காட்சியை வென்றேனென்று
ஓதுவோர் எவரும் இந்த
உலகிற்குத் தேவையில்லை


கவிஞர் தனது கருத்துக்களோடு பின்னொரு காலத்தில் தானே முரண்பட்டு நின்றார் அவரே தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் கவிஞரிடம் நான் ரசித்த உயர்ந்த குணங்களில் ஒன்று. மேலே குறிப்பிட்ட கவிதையின் கருத்தைப் பார்த்தீர்களானால், கவிஞரே யார் உலகிற்குத் தேவையில்லை என்று கூறினாரோ அதே மனிதனாகத் தானே மாறியிருந்திருக்கிறார்.

மனத்தினில் ஒருகாலத்தில் ஒரு செயலைப்பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்தோமேயானால், பின்னால் நமது எண்ணம் பிழையானது என்றறிந்து அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நம்மில் எல்லோருக்கும் வந்து விடாது. அதை அடைந்து விட்டால் நாம் மனிதத்துவம் எனும் பரீட்சையில் தேறி விட்டோம் என்றே பொருள். அந்த வரிசையில் கவித்தலைவர் தன்னுடைய மனிதத்துவத்தை நிலைநாட்டி விட்டார் என்றே கூற வேண்டும்.

இங்கே நாம் எடுத்துப் பார்த்தது கவிஞரின் மற்றொரு பக்கம், அதுதான் அவரது ஆன்மீகக் கதவைத் திறந்த சாவியாகும். கண்ணதாசனின் பக்கங்களைப் புரட்டும்போது நாம் இந்தப் பக்கங்களையும் பார்க்கத்தான் வேண்டும், அதைத்தான் அவரும் விரும்பினார் ஏனென்றால் அவர் வாழ்க்கையில் மற்றவர்களிடம் அர்த்தத்தைத் தேடவில்லை, தன்னிடமே தேடினார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:54 am

மனக்கேணியில் மேலும் மேலும் ஊறிக்கொண்டேயிருக்கிறது. இம்முறை அவரைப்பற்றிய ஆக்கத்தை வித்தியாசமான முறையில் பார்ப்போம். கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அவரது சில பாடல்களையும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு இணைத்துப் பார்ப்போம் என்றொரு ஆசை. எங்கே போவாமா கனவுலகம்?

இங்கே நமது காதாபாத்திரமாக ராம் என்றொரு 24 வயது இளைஞனை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். வசதியான குடும்பத்தில் பிறந்த அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

கேட்டதெல்லாம் கிடைத்துத் தனது வாழ்க்கையில் எந்தப் பொறுப்பையும் உணராத ராம் மதுவிலும் மங்கையிலும் தனது நேரத்தைக் கழிக்கிறான். என்ன ராம் பாடுகின்றானா?

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு


உல்லாசமாய் தனது வாழ்க்கையை கழித்த ராம் தற்செயலாக எளிமையே உருவான பாந்தமான அழகுடைய உமாவைப் பார்த்து விடுகிறான். கேட்க வேண்டுமா?

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்


கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அவன் தந்தை உமாவை மட்டும் வாங்கித் தரமாட்டாரா என்ன? பின்னென்ன பெண் பார்க்கும் படலம். பணத்திற்கு முன் உமாவின் ஏழைத் தந்தை மனத்தையா பார்க்கப் போகிறார்? பெண்களுக்கே உரிய அந்த மெளனம் (இங்கே ஏழ்மையால் பிறந்தது) என்ற சம்மத்துடன் உமா மிஸஸ். ராம் ஆகிறாள். என்ன ஊமை ராகமோ?

யாருக்கு யாரென எழுதியவன் - என்னை
அவனுக்குத் தானென எழுதி விட்டான்


குடிகாரக் கணவன் வாழ்க்கையில் கண்டிப்பில்லாமையால் தான் இப்படியோ உமா யாரைக் கேட்கிறாள்?

கலைமகள் கைப்பொருளோ? - அதை
மீட்டவும் விரலில்லையோ?


விஸ்கி போத்தலை நடுவீட்டில் உடைக்கிறாள் தானா? மதுவா? கெடுவைக்கிறாள். எங்கே ஓடுகிறான் ராம்? ஓ ! பாடுகிறானோ

நாளைமுதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம் சபதம் போட்டு விட்டான்.


இனிமையான தாம்பத்தியம் தொடங்குகிறது தந்தையின் வியாபாரத்தைப் பொறுப்பேற்கிறான் ராம்.

தேனிருக்கும் மலரினிலே
நீ இருக்கச் சம்மதமா?
பாலிருக்கும் கனிகளிலே
பழகிவரச் சம்மதமா?


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:55 am

கண்ணதாசனைப் பற்றி நான் அள்ளி அள்ளி இறைத்துக் கொண்டு இருக்க என்
சந்தோஷமான இல்லறத்தின் பயனாக இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான் ராம். கண்ணின் மணிபோல பிள்ளைக¨ளை வளர்த்து வருகிறார்கள் ராமும் உமாவும்.

நீரோடும் வைகையிலே
நின்றாடும் மீனே !


காலங்கள் உருண்டோடி பிள்ளகள் பெரியவர்களாகின்றனர். எதிர்பாராதவிதமாக அவனது வியாபாரம் கவிழ்ந்து விடுகிறது. தந்தையுடன் கருத்து வேறுபட்டு பிள்ளைகள் பிரிகின்றனர்.

யாரை நம்பி நான் பிறந்தேன்?
போங்கடா போங்க


கணவனும் மனைவியும் தனிமையில் தத்தளித்து கொடுமையான வறுமையில் வாடி நோய்களுக்குள்ளாகி ராம் இந்த உலகை விட்டு மறைகின்றான். என்ன அசரீரியா?

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ?


நண்பர்களே இது கவிஞரின் முத்துக்களை கோர்த்து ஒரு சிறிய மாலையாக்கும் உணர்ச்சி. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஒவ்வொரு பாடல் என ஒரு வாழ்க்கை தொடங்கியது முதல் முடியும் வரை அவர் தொடுத்த பாடல்கள் கூட வரும்.

இந்தப் பகுதியை அவருடைய ஒரு கவிதையின் சிறு பகுதியுடன் இந்த இதழில் நிறைவு செய்கிறேன்.

இமயமுடி மீதேறிக் காஷ்மீரில் இறங்குவேன்
இயற்கையை ரசித்திருப்பேன்
இளகியதோர் காலையில் புதுடில்லி ஓடுவேன்
இந்தியில் பேசி மகிழ்வேன்.


மிகவும் எளிமையாக நான்கே நான்கு வரிகளில் இந்தியாவின் பரப்பளவையும் அதன் பெருமையையும் உள்ளடக்கி விட்டார். இதில் சிறப்பான அம்சம் என்னவெனில் இது மிகவும் எளிய தமிழில் அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் அமைந்திருப்பதுதான்.

ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:56 am

கவிதை ஒன்றைத் தாளில் வடிக்கும் போது அங்கே உண்ர்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அந்த உணர்ச்சி மனதில் நிலை கொள்ளுவது ஒரேயொரு கணம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் அந்த ஒருகணத்தில் பிறக்கும் அந்தக் கவிக்குழந்தை அந்தக் கவிஞனின் மனநிலையை அவன் பயணித்த அந்தப் பயணத்தின் தூரத்தை அளந்து விடுகிறது.

முதலாவதாக நான் பார்க்க விளைவது "நான் மனிதரைப் பாடமாட்டேன்" என்ற அவரது கவிதையின்
சிலபகுதிகள்.
மானிடரைப் பாடிஅவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கை யான பதிகம்
மலையளவு தூக்கிஉடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வ மிருகம்


கவிஞர் கண்ணதாசன் தன்னைத்தானே கேள்விக்கணைகளால் துளைத்து அதன் மூலம் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திற்கும் காரணம் தேடி அலைந்தவர். எதையும் உண்மை எனும் தராசில் வைத்து அளந்து பார்த்தார். தன் பக்கம் எடை குறைந்திருந்தாலும் அதை வார்த்தைகளில் வடிக்கத் தவறவில்லை கவியரசர்.

மேலெயுள்ள கவிதைப் பகுதியைப் பாருங்கள். தலையங்கமே ஒரு கதை சொல்லுகிறது. மாம் தான் மனிதரைப் பாடமாட்டேன் என்கிறார். அப்படியானால் என்ன அவர் மனிதரைப் பாடவேயில்லை என்று அர்த்தமா? இல்லை. பாடிய மனிதர்கள் பின்பு அவர் மனதில் மகிமையை இழக்கும் சந்தர்ப்பத்தில் விரக்தியின் உச்சிக்குத் தள்ளப்பட்டு அங்கே தன் உள்ளத்தின் ஓலத்தை வெளிப்படுத்துகிறார்.

என்ன அழகாக தனது மனதின் உணர்ச்சிகளை வார்த்தையின் மொழியின் துணை கொண்டு வடிக்கிறார்.

தான் மானிடைரை பாடுகிறாராம் ஆனால் பாடிய மானிடர் மாறிவிடும் போது ஏசுகிறாராம். ஆனால் இதிலிருந்து தான் மறுவதில்லையாம் ஏனெனில் இதுதான் தனது வழக்கமாம். புகழும் போது அவர்களை மலையளவு உயரத்தில் துக்கிக் கொண்டாடிப் பின்னர், வலிக்கும் படித் தொப்பெனத் தரையில் போடும் தனது பாங்கை இம்மியளவும் மறைக்காது, தனது வார்த்தை ஜாலங்களில் வடித்திருக்கிறார் கவியரசர். கவிஞரின் தமிழ் அங்கு வலிக்கும்படி விழுவோருக்குக் கூட ஒத்தடம் கொடுக்கிறது.

கவியரசர் கண்ணதாசன் தம் மனத்தினுள் தம்மைக் கண்டு கொள்ள விழைந்த போதெல்லாம் அவர் வடித்த கவிதைகள் உண்மையின் விளை நிலமாகத்தானிருந்தன. அந்த உண்மை எனும் வேப்பங்காயை தமிழ் எனும் தேன் தடவி மாங்கனியாக்கினார். இந்த இதழில் அவரது கவிதைகளின் சில பகுதிகளைப் பார்ப்பதன் மூலம் அவர் எவ்வாறு தன்னைப் பகுத்தார் எனப் பார்ப்போம்.

இந்தக் கவிதையின் மற்றொரு பகுதியைப் பார்ப்போம்.
நானிடறி வீழ்ந்த இடம்
நாலா யிரமதிலும்
நான்போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகனென
நான்கூறி விற்ற பொருள்
நல்லபொருள் இல்லை அதிகம்


கவிஞரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவர் வாழ்க்கையில் பட்ட பல துன்பங்களை அறிவர். எதையும் சரியாக சீர் தூக்கிப் பார்க்காமல் தனது மனம் சரியெனக் கூறியதை அப்படியே அப்பட்டமாக எடுத்துரைப்பவர் கவிஞர். இவரின் இந்தக் குணம் இவருக்குப் பல நண்பர்களையும் உருவாக்கியது, பல எதிரிகளையும் உருவாக்கியது.

அவரது கவிதை வரிகளைப் பாருங்கள்!

தான் நடந்த வாழ்க்கைப் பாதையில் இடறி விழுந்த இடம் நாலாயிரம் என்கிறார். அதாவது இடறி விழுவது என்றால் தன் காலே தட்டி விழுவதாகும், அதாவது தனது விழுகைக்குக் காரணம் தான்தான் என்கிறார்.

அது மட்டுமல்ல வடுக்கள் பதியும் அளவிற்கு விழுந்திருக்கிறார் என்று பொருள்.

தனது வாழ்க்கைப்பாதையில் தான் ஒரு நடைபாதை வா வியாபாரி போல் விற்றதில் அதிகம் நல்லவை இல்லை என்கிறார்.

கவிஞர் இங்கே என்ன சொல்ல முற்படுகிறார் என்றால், தான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் தானடைந்த சோதனைகள் அதிகமானவை; தன்னாலே தனக்கு ஏற்படுத்தப்பட்டவை, அதனை அனுபவம் என்று தான் விற்கும்போது ஏனோ நல்ல சந்தர்ப்பங்கள் அதிகம் இல்லை என்று வருத்தப்படுகிறார்.

நண்பர்களே கவிஞருடைய நல்ல கவிதையின் உதாரணமாக இரு பகுதிகளை எடுத்து அவர் எவ்வாறு தன்னை நிறுத்துப் பார்த்தார் என்று பார்த்தோம். தன் தவறுகளைக்கூட தமிழ் எனும் தேன் தடவி சுட்டிக்காட்டி எமைச் சிந்திக்க வைக்கிறார் கவிஞர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:57 am

கடந்த வாரம் கவியரசரின் கவித்திறனை அவரது கவிதையின் சில பகுதிகளைப் பகுத்துப் பார்த்தோம். சக்திதாசன் இம்முறை எமக்கு என்ன வழங்கப் போகிறான் என்று எண்ணுகிறீர்களா?

கண்ணதாசன் ஒரு கடல் அதிலே நான் ஒரு ஓரத்திலிருந்து கை வாளி கொண்டுதான் அள்ளுகிறேன். அவரது படைப்புக்கள் அள்ள அள்ள ஊறும் ஒரு தமிழ்க்கேணி.

கவிஞர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதனால்தான் மிகவும் வேதனையான சூழல்களில் கூட அவரிடமிருந்து அமுதம் போலத் தமிழ்ப் பாடல்கள் பொங்கி வந்திருக்கின்றன. அதைக் கேட்கும் ரசிகர்கள் அவர் நீந்திய அந்த சோக நதியில் தாமும் நீந்துவது போன்ற உணர்வையடைகிறார்கள் இங்கே இப்போது நான் பார்க்கப் போவது எமது கவியரசரின் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களும் அதனால் பிறந்தவையும்.

ஒரேயொரு சம்பவத்தை நினைவு கூறுங்கள் நண்பர்களே, கவியரசர் பிறந்தது சிறுகூடல்பட்டியில், ஆனால் இந்த உலகை விட்டு மறைந்ததுவோ எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சிக்காகோ நகரில்.

"நெஞ்சில் ஓர் ஆலயம்" எனும் படத்திற்காகக் கவிஞர் எழுதிய "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" எனும் பாடலை நினைந்து கொள்ளுங்கள் ! அதில் ஓர் வாசகம்

"எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது"


என்ன? தனது வாழ்வை மனதில் கொண்டுதான் இந்தப்பாடலை எழுதினாரோ?

கவிஞரின் பாடல்கள் எத்தனை வருடங்களானாலும் மனதை விட்டகலா மந்திரம், ஏனென்றால் வாழ்க்கையின் உண்மை நிலைகளைப் புர்¢யும் தமிழில் புனைவதுதான்.

தமிழ்த்திரையுலக இயக்குனர்களில் ஏ.பி.நாகராஜன் மிகவும் பிரசித்தி பெற்றவர். கவிஞருக்கும், இவருக்குமிடையில் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பத்திரிகைகளில் அறிக்கைப் போர் நடந்தது. பின்பு இதை வெறுத்து இருவருமே ஒன்று சேர்ந்தார்கள். இவர்களின் சேர்க்கையின் விளைவு அரிய பல படங்களும் அவற்றில் இசைத்த பாடல்களும்.

அந்தத் திரைப்படங்களில் ஒன்றுதான் "திருவிளையாடல்" அதிலே "ஒருநாள் போதுமா" "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை", "பாட்டும் நானே" என்ற மூன்று பாடல்களையும் தந்த கவியரசரின் ஆற்றலை விவரிக்க வார்த்தையேது? ஒரு திரைக்கதைச் சம்பவத்தைப்பின்னணியாக வைத்து மூன்று பாடல்களைத் தரும் திறன் நிகரற்றது.

அது மட்டுமா? "பாட்டும் நானே" எனும் பாடல் மனிதனை நோக்கி இறைவன் பாடுவதாக
அமைந்தது. இத்தகைய ஒரு பாடலைப் புனையும் ஆற்றல் கவியரசரிடமே மிளிர்ந்தது.

இந்தப் பாட்டின் உருவாக்கம் மிகவும் சுவராஸ்யமானது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வ்¢. மகாதேவன். அனைவரும் ஒரு அறையில் உட்கார்ந்திருக்கும் போது, பாடல் வரிகளின் ஆரம்பம் கிடைக்காது கவியரசர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கே.வி. மகாதேவன் நகைச்சுவை ததும்ப "என்ன இன்னைக்குள்ளே பாட்டு முடிஞ்சிடுமா?" என்று கவிஞரைப் பார்த்துக் கேட்க, கவிஞரின் வாயில் இருந்து உதித்தது,

"ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொருநாள் போதுமா?
நாதமா? கீதமா? அதை நான் பாட
இன்றொருநாள் போதுமா?


எங்கே, மற்றொரு சம்பவம் பார்ப்போம். "நான்" என்றொரு திரைப்படம் அதற்குப் பாடலாசிரியர் நமது கவிஞர். பாடல் பதிவு செய்யப்படும் அறையில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். மிகவும் சிறிய அறையில் முண்டியடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாடலுக்கான காட்சி விவரிக்கப்படுகிறது. கவிஞரின் தமிழருவியிலிருந்து தெறிக்கிறது தமிழ்த்துளி,

"போதுமோ இந்த இடம்?"

ஒரு தமிழ்க்கவிக்கு, சந்தர்ப்பம் கொடுக்கும் சாவிகளைக் கொண்டு புதிய கதவுகளைத் திறக்கும்
ஆற்றலுண்டு என்பதற்கு இதைத்தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும்?

கண்ணதாசன் எனும் அந்தத் தேன்கூட்டிலிருந்து பலவந்தமாகத்தான் இந்தத் தேனீ வெளியேறுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:58 am

கண்ணதாசனுடைய படைப்புக்களில் முன்னணியில் இருப்பது அவரது "அர்த்தமுள்ள இந்துமதம்" எனும் தொகுப்பாகும். சமயத்தைப் பற்றி எத்தனையோ நூல்கள் எத்தனையோ பெரியவர்களினால் படைக்ககப்பட்டு இருக்கின்றன அர்த்தமுள்ள இந்து மதத்தின் தனித்தன்மை என்ன? அவை இந்த அளவிற்குப் பிரபல்யமானதற்குக் காரணம் என்ன என்றொரு கேள்வி நெஞ்சங்களில் எழுவது இயற்கையே. அர்த்தமுள்ள இந்துமதம் எனும் பெயர் சில சமயங்களில் தவறான அர்த்தத்தைக் கொடுத்து விடுகிறதோ என்று கூட நான் எண்ணுவதுண்டு. ஏனெனில், அது வாழ்க்கை முறை பற்றிய புத்தகம்.

மிகவும் எளிமையாக, சாதாரண மனிதனுக்கும் புரியக்கூடிய தமிழில் தெள்ளத் தெளிவாக, விளக்கமற்ற நிகழ்வுகளுக்கு தன் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அனுபவ உதாரணங்களைக் கொண்டு விளக்கமளித்திருப்பதே இந்தப் படைப்புக்களின் தனிச் சிறப்பு.

கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்க்கையில் சகலவிதமான சூழல்களையும் அனுபவித்து வெளிவந்தவர். சாதாரண மனிதனுடைய சாபாசங்கள், அங்கலாய்ப்புக்கள், எதிர்பார்புக்கள், ஏமாற்றங்கள் என சகல விதமான உணர்ச்சிகளுக்குள்ளும் உட்படுத்திக் கொண்டவர். வாழ்க்கையில் எல்லோருமே இந்த உணர்ச்சிகளை ஏதாவது ஒரு கட்டத்தில் அனுபவித்திருபார்கள்தானே, அப்புறம் அவர்களைவிட கவிஞர் கண்ணதாசன் எந்த வகையில் வேறுபட்டவர் என நீங்கள் எண்ணக்கூடும். தான் சென்று வந்த உணர்ச்சிப் பயணத்தின் உண்மையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் வீரம் படைத்தவர் என்பதுவே அவரின் தனித்தன்மைக்குக் காரணம்.

நான் அடிக்கடி கூறுவதுண்டு, ஒரு உண்மையான கவிஞன் வாழுவது ஒரு கணம், அந்த ஒரு கண உணர்ச்சியின் வெளிப்பாடே பலசமயங்களில் உன்னதமான கவியாகிவிடுகிறது. தமிழ் என்பது ஒரு அழகிய மொழி. அதை உபயோகிப்பவர் அதற்கு என்ன வடிவம் கொடுக்கிறார்களோ அதைப் பொறுத்துத்தான் அதை ரசிப்பவர்களின் மகிழ்வு இருக்கப்போகிறது.

அதேபோல பலசமயங்களில் வாழ்வின் நிகழ்வுகள் எம்மை ஆனந்தம் எனும் மலையுச்சியிலிருந்து விரக்தி எனும் பள்ளத்தாக்கிற்குத் தள்ளிவிடுகிறது , அதிலிருந்து மீண்டு மேலேறி வருவதற்கு உபயோகப்படும் ஏணி போன்றதே கவிஞருடைய "அர்த்தமுள்ள இந்துமதம்".

அர்த்தமுள்ள இந்துமதம் தொகுப்பின் ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கும் போது நான் இந்து என்று என் மனதில் கொண்டிருந்த அந்த நினைப்பு புது வடிவங்களை எடுக்கத் தொடங்கியது. கண்ணதாசன் அங்கே செய்ய முயற்சித்திருப்பது, மனதின் ஆன்மீக ராகங்களை மீட்ட , உன்னதமான மனித உணர்வுகளை மேலோங்கச் செய்ததுவேயாகும்.

"காலக்கணிதம்" எனும் கவிதையொன்றிலே கவியரசர் குறிப்பிடுகிறார், "இகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது, புகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது" என்று. அது மட்டுமல்ல இந்த உலகில் பல செயல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. அதனால் நாம் கொண்ட கருத்து பிழையென்று உணர்ந்த மாத்திரத்தில் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகிறார்.

"மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்!
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்."


அடுத்த பாகத்தில் கவியரசரின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் கூற்றுக்கள் சிலவற்றையும், அதற்கு வாழ்க்கை முறையோடு கைகோர்த்துச் செல்லும் சில உதாரணங்களையும் எடுத்துப்பார்க்கவுள்ளேன், நீங்களும் கூட வருவீர்களா?

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:59 am

கண்ணதாசனின் எழுத்துக்களில், அனுபவ ஆராதனைகளில் முன்னிற்பது “அர்த்தமுள்ள இந்துமதம்". இது முற்றுமுழுதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. சமயத்தை, மதத்தை மனிதனின் நாளந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு சம்பந்தப் படுத்தி விளக்குவதனால், சாதாரண மனிதனுக்கும் அதன் அர்த்தம் விளங்கக் கூடிய வகையில் சமயத்தை இலகுவாக்கி, மதத்தை மனத்தில் பதிய வைத்தார்.

இந்த வாரம் அர்த்தமுள்ள இந்து மதத்திலிருந்து சில பகுதிகளைப் பார்க்க விழைகிறேன். கண்ணதாசன் என்றொரு மனிதன் தன் இதயத்தின் ரணங்களிலிருந்து வடிந்த ரத்தத்திலிருந்து எடுத்த சோக பானம் கொடுக்கும் சுவையைக் கொஞ்சம் பார்ப்போம்.

வாழ்க்கை நிலையாமையைப் பட்டினத்தார் பாடல் கொண்டு நன்கு விளக்குகிறார் கண்ணதாசன். பட்டினத்தாரின்,

விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்

எனும் பாடலை மேற்கோள் காட்டி வாழ்க்கையின் தத்துவத்தை அழகுற விளக்குகிறார்.

கவிஞர் எமது உயிரை இறைவன் கடனாகக் கொடுத்தார் என்கிறார். அந்தக் கடனின் காலம் முடியும் போது அதை அறவிட வரும் அமீனாவாக எமனைக் குறிப்பிடுகிறார். இதிலிருந்து அவர் எமக்குக் கூற விளைவது என்னவென்றால். இந்த உயிரே உன்க்குச் சொந்தமானது இல்லை, பின் உனது எனது என ஏன் அடித்துக் கொள்கிறாய் என்பதுவே.

என்ன வாழ்க்கை? நிலையாமை என்று சொல்லிச் சொல்லி ஒரே போரடிக்கும் தத்துவத்தை அவர் சொல்லவில்லை, இந்து சமயத்தில் அடிக்கடி வாழ்க்கையின் நிலையாமை பற்றிக் குறிப்பிடப் படுவதின் காரணத்தை அழகாகப் பின்வருமாறு கூறுகிறார்:

"யாக்கை நிலையாமையை இந்து சமயத் தத்துவ ஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது மனிதனை விரக்தி அடையச் செய்வதற்கு அல்ல. வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே”

மிக அழகாக வாழ்க்கையின் நடைமுறையோடு ஒத்துப் போகும் கருத்தைக் கூறுவதன் மூலம், தொடர்ந்து வரும் விரக்தி எனும் அந்த வீணான உணர்ச்சியிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ள ஒரு மார்க்கம் சொல்லுகிறார் கண்ணதாசன்.

மேலும் அவர் தத்துவப் பாடலுக்கு வாழ்க்கையோடு ஒத்துப் போகும் கருத்தைக் கூறுகின்றார்.

"காயமே இது பொய்யடா
காற்றடித்த வெறும் பையடா"

என்ற பட்டினத்தார் பாடலைக் கூறி அதைப் பின்வருமாறு நியாயப் படுத்துகிறார்:

"இது இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்தப் பாடப்படவில்லை. நிலைக்காத, பொய்யான இந்த உடலைக் காப்பாற்றப் பொய் சொல்லாதே, திருடாதே, பிறரை ஏமாற்றாதே என்று எச்சரிப்பதற்காகவே பாடப்பட்டது" என்று கூறி இந்தத் தத்துவங்கள் தெரிந்திருப்பதால் நாமடையும் பயனை அழகாய் விவரிக்கிறார் கவிஞர்.

கண்ணதாசனைப் பொறுத்த வரையில் மரணத்தின் மகிமையை மனிதன் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்கிறார். அதை முன்னமே அறிந்து கொள்வதினால் பேராசை அடைவது தவிர்க்கப்பட்டு மனிதன் சீரிய நெறிக்குள்ளாகி மனதில் அமைதி காண விழைகிறான். இதுவே இந்துமத ஞானிகளின் நோக்கம் என்கிறார் எம் கவிஞர்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக