ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்

3 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.
avatar
Guest
Guest


Back to top Go down


கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:34 am

பாடல் பிறந்த சம்பவம் 3

கே.பாலச்சந்தருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் உள்ள நட்பு வித்தியாசமானது. ஒவ்வொருவரும் மற்றவருடைய திறமையை மதித்து மிகவும் கெளரவமாகப் பழகினர். 60-ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியிலும், 70ம் ஆண்டின் ஆரம்பத்திலும் கே.பாலச்சந்தர் வெளியிட்ட பல படங்களின் வெற்றியின் பின்னணியில் கவியரசர் கண்ணதாசன் பாடல், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பு எனும் கூட்டுறவு மிளிர்ந்தது.

இந்தப் பட்டியல்களில் ஒன்றுதான் "பட்டினப் பிரவேசம்". இந்தப் படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு மெட்டு மீட்டியிருந்தார் அது கே.பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் கேள்வி "பூனையின் கழுத்தில் யார் மணி கட்டுவது?" ஆமாம், இந்த மெட்டிற்கேற்றவாறு பாடலை அமைக்கும்படி யார் கவியரசரைக் கேட்பது? ஒரு கால கட்டத்திலே இசையமைப்பாளர்களின் கட்டளைப்படியே பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதினார்கள். ஆனால் இந்தக் கலாச்சாரத்தை மாற்றியதே கண்ணதாசன் எனலாம். கண்ணதாசன் இந்தக் கட்டுப்பாட்டிற்குப் பணிய மறுத்த கவிஞர். எனவே இந்தப் பொறுப்பைக் கவியரசரின் உற்ற நண்பரான எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடமே கே.பாலச்சந்தர் ஒப்படைத்திருந்தார். இதைச் செயலாக்குவதற்கு எம்.எஸ்.வி ஒரு தந்திரத்தைக் கையாண்டார். ஒரு சவாலாக "எங்கே இந்த மெட்டிற்கு ஒரு பாடல் எழுது பார்க்கலாம்" என்று கவியரசரிடம் கேட்டார். முதலில் தனது பாணியில் மறுத்தாலும் பின்பு ஒருவாறு கவிஞர் ஒத்துக் கொண்டு 15 நிமிடங்களில் அந்தப் பாட்டை எழுதி முடித்தார். அதுதான் உங்கள் நினைவிலும், என் நினைவிலும் என்றும் நிறைந்திருக்கும், "வான் நிலா நிலா அல்ல " என்னும் பாடல்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இன்னிசைக் குரலில் ஒலிக்கும் கானம் அது. இந்தப் பாடலை எழுதி முடித்த பின் கவிஞரே இதன் பெருமை பற்றிக் குறிப்பிடுகையில், நகைச்சுவையாக தன் ஒவ்வொரு வரியும் "லா"வில் முடிகிறது. இதில் நான் குறிப்பிடாத முக்கியமான மூன்று "லா"க்கள் "மதர் - இன் - லா (மாமியார்), பாதர் - இன் - லா (மாமனார்), டாட்டர் - இன் - லா (மருமகள்) என்று குறிப்பிட்டாராம்.

கவியரசர் கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் நட்பு மிகுந்த ஜோடித்தனத்தை தனது படம் ஒன்றினில் புகுத்த ஆவலாக இருந்த கே பாலச்சந்தர்,"வறுமையின் நிறம் சிகப்பு " படத்தில் "சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி" என்னும் பாடலைப் புகுத்தினார். அதனை நினைவு கூர்ந்தீர்களானால், ஸ்ரீதேவி ராகத்தைக் கொடுக்க கமல்ஹாசன் அதற்கேற்றவாறு பாடலைக் கொடுப்பதாக அந்தக் காட்சி அமைந்திருந்தது. இதில் ஸ்ரீதேவி எம்.எஸ்.விஸ்வநாதனையும், கமல்ஹாசன் கவியரசர் கண்ணதாசனையும் பிரதிபலிப்பது போன்ற அர்த்தத்தைத்தான் இந்தக் காட்சியில் கே.பாலச்சந்தர் வெளிக்கொணர்ந்திருந்தார்.

மற்றுமொரு திரைப்படம் கே.பாலச்சந்தர் அவர்களின் "அபூர்வ ராகங்கள்". அதில், கதையின் முடிவுரையாக பாடல் ஒன்றை அமைக்கும்படி கே.பாலச்சந்தர், கவியரசரைக் கேட்டார், அதற்காகவே பிறந்த அருமையான பாடல் "கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்குப் பதிலென்ன?" என்பதாகும். இந்தப் படத்தின் கருத்தையே மிகவும் ஆழமாக விவரித்தது இது.

நண்பர்களே ! மேலே நான் குறிப்பிட்ட சம்பவங்கள் உங்களுக்குச் சுவையூட்டுபவையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:38 am

கண்ணதாசன் என்ற தனிமனிதன் தமிழ் நெஞ்சங்களில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தமிழ் இலக்கிய உலகிலே அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது . கவிஞர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இன்றைய பாடல்களை அளக்கும் அளவுகோலாக கவித்தலைவனின் ஆக்கங்களே அமைகின்றன . ஒரு பாடலின் வெற்றியை ஒப்பீடு செய்ய அவரது படைப்புக்களே முன்னிற்கின்றன.

இந்த இதழில் அவரது இனிய திரைகானம் ஒன்று நமக்குச் சொல்ல வந்த செய்தியை அந்தப் பாட்டைப் பகுப்பதின் மூலம் பார்ப்போம்

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு (ஆறு)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி !

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் -
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் -
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை எனப்து அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

ஆசை,கோபம்,களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு,நன்றி,கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு)


இந்தப்பாடல் உங்களில் பலருக்கும் ஞாபகம் இருக்கும்.

ஆண்டவன் கட்டளை என்னும் படத்திற்காக கவிஞர் இயற்ற , டி.எம்.ஸ் குரல் கொடுத்து , நடிகர் திலகம் நடித்திருந்தார்.

ஒரு மனிதன் அமைதியான வாழ்வு வாழ எளிமையான ஆறு கட்டளைகளைத் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்.

அதிலே ஒரு சிறப்புப் பாருங்கள் ஒரு சராசரி மனிதன் வாழ்விலே அவன் விரும்புவது பொன், பட்டு என்பதுவே அதாவது வாழ்க்கை வசதிகளைக் குறிப்பிடுகிறார்.

சொல்லுவதையே, செய்பவன் வாழ்க்கையில் அவன் சொல்வதும் அதைச் செய்வதும் பொன்னைப் போலே அவனுக்கு இன்றியமையாததாம் . அது மட்டுமல்ல இனபம் வருகிறது அந்த இன்பத்திலே ஒளிந்து துன்பம் தொடர்கிறது. துன்பம் என்று பதைத்துப் போகிறோம் அந்த துன்பத்தைலே இன்பம் குடி கொள்கிறது . இதிலே துன்பத்தினூடாக வரும் இன்பம் அவனுக்குப் பட்டைப் போன்றதாம்.

ஒரு வாழ்க்கையின் இன்றியமையாத தத்துவத்தைச் சொல்லிய அழகைப் பார்த்தீர்களா?

உண்மையை பேசுங்கள் , நன்மையைச் செய்யுங்கள் உலகம் தானாக உங்களைத் தேடி வரும் . உங்கள் நிலை உயரும் போது , முன்பு இருந்த நிலையை மனதில் கொண்டு பணிவாக நடந்தீர்களால் நீங்கள் வணக்கத்துக்குரியவர்களாவீர்கள் என்கிறார் கவிஞர்.

இந்த நான்கு கட்டளைகளை அறிந்தாலே நன்மையாகுமாம் .

உண்மையை அன்புக்கும் , பணிவை பண்புக்கும் ஈடு கட்டி அதன் முக்கியத்துவம் வாழ்க்கையில் எப்படி பேணப்பட வேண்டும் என்று அழகாக எடுத்தியம்புகிறார் .

ஆசை, கோபம், களவு இந்தக் குணங்கள் ஒரு மனிதனை மிருகமாக்குகின்றன. இதைக் கடந்தவன் வாழ்க்கை தெய்வாம்சங்கள் பொருந்திய ஒரு தூய்மையான வாழ்க்கையாக மாறுகிறது என்று நமக்கெல்லாம் ஒரு இலட்சியப்பயணத்தை மேற்கொள்ளுமாறு அறைகூவல் விடுகிறார் .

மிருகம் என்பது கள்ள மனமின்றி வேறொன்றில்லை அதேபோல தெய்வமனம் பிள்ளை மனம் என்று நமது கண்ணுக்கு புலப்படக்கூடிய ஒரு உதாரணத்தின் மூலம் உயர்த்திக் காட்டுகிறார் நமது கவிஞர்.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:38 am

கண்ணதாசன் கூற்று

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் ஊசலாடிக்கொண்டிருப்பதல்ல பிறப்பின் நோக்கம். சுகமான சிந்தனைக்கு அவகாசம் வேண்டும். அது எங்கே கிடைக்குமோ அங்கே; எப்படிக் கிடைக்குமோ அப்படி; எதனால் கிடைக்குமோ அதனால் கொண்டுவரப்பட வேண்டும்.

புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்கள் ஆகின்றன. எண்ணங்கள் பூர்த்தியடையும்போது அதற்கு நிம்மதி என்று பெயர் வருகிறது. எது தேவையோ அதைப்பெற்றுவிட முயற்சி செய்வோம்; இல்லையேல் விட்டுவிடத் தயாராகுவோம். காரணம் எமக்குத் தேவை நிம்மதி.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:44 am

கண்ணதாசன் சாலை , கண்ணதாசன் பதிப்பகம் , கண்ணதாசன் இல்லம் .அப்பா! இம்முறை எனது சென்னை விஜயத்தின் போது நான் கடந்த இந்த காவியத்தலைவனின் ஞாபகச் சின்னங்கள் கணக்கிலடங்கா . கலையுலகில் சினிமா உலகில் பலர் உலா வருகிறார்கள் ஆனால் மக்கள் மனதில் தமக்கென ஒரு நீங்காத இடத்தை ஏற்படுத்திச் செல்பவர்கள் ஒரு சிலரே . அவரின் இல்லத்தின் வாயிலில் நிற்கும்போது ஒரு கவிதையுணர்ச்சியுடன் கூடிய அமைதி நெஞ்சை நிறைக்கிறது.

இந்த ஆக்கத்திலே அவரது பாடல் ஒன்றை முதலில் பார்ப்போம். அவர் தனது பாடல்களிலே தமிழ்ச் சொல்வளத்தாலே கருத்துக்களுக்கு உயிர் வடிவம் கொடுத்தார். அவர் பாடல்கள் சராசரி மனிதரின் இதயங்களின் மென்மையான பகுதிகளைத் தீண்டியது. வாழ்க்கை தம்மை நோக்கி வீசிய இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாது தவிக்கும் ஒருவனுக்கு அவரது பாடல்களினால் இதயத்தின் வலி தாங்கக் கூடியதாக இருந்தது. இதுவே இந்தக் கவிமகன் புகழேணியின் உச்சிக்குச் செல்ல ஏதுவாக அமைந்தது.

இந்த ஆக்கத்திலே நான் பார்க்கப் போகும் பாடல் இந்த உலகிலே எமது வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மிகவும் எளிமையாக எமக்குப் புரிய வைக்கும் பாடல். வாழ்க்கையைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டு, அதற்காக எத்தனையோ பாடுபடும் நமக்கு அந்த வாழ்க்கையின் தத்துவத்தை சில வரிகளிலேயே புரிய வைத்து விடுகிறார் கவிஞர்.

இந்தப் பாடல் நீர்க்குமிழி எனும் படத்திலே இடம் பெற்றது. நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களின் நடிப்பிற்கு, வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் குரலில், கவிஞரின் தம்பியெனும் உரிமை பெற்ற திரு விஸ்வநாதன் அவர்களுடம் திரு ராமமூர்த்தியும் இணைந்து வழங்கிய இசையில் மக்களின் மனதை நிறைத்த பாடல்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா


எத்தகைய ஒரு நிதர்சனமான உண்மையை எப்படி எளிமையாக எமக்குப் புரிய வைத்திருக்கிறார் கவிஞர்.

எத்தனை ஆட்டம் போடுகிறான் மனிதன்? எத்தனை ஏக்கர் நிலத்தை வாங்கிக் குவிக்கிறான், எத்தனை பேரை ஏமாற்றித் தனது காரியங்களைப் புரிகிறான்!
அவனுக்கென ஆண்டவன் கணித்து வைத்திருப்பதோ
ஆறடி நிலம்தான்!

முதலில் எமக்கெல்லாம் தொட்டிலடா
கண்மூடினால் காலில்லாக் கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரயாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா


ஒரு வைத்தியர் நோயாளிக்குக் கசப்பான மருந்தை இனிப்புத் தடவிக் கொடுப்பதைப் போல , வாழ்வின் கசப்பான உண்மைகளை இனிப்பான தமிழ் வார்த்தை கலந்து எம்மையெல்லாம் , எம்மையறியாமலே பாடலை முணுமுணுக்க வைத்து விட்டார் இந்த ஆய கவி.

வாழ்க்கை என்பது ஒரு நிகழ்வு அந்த நிகழ்வில் மறதி முக்கியமானது அல்லவா , மறதி என்பது இல்லாவிட்டால் மனிதன் பைத்தியக்காரன் ஆகிவிடுவானல்லவா ? அங்கேதான் நித்திரை எமக்குக் கை கொடுக்கிறதாம். எவ்வளவு ஆழமான கருத்து!

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவர் அல்லவோ திறக்கின்றார்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா


இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன் அதை எத்தனை எளிமையாக எமது கவிஞர் கவலையிலும் சிரித்திருங்கள் என்கிறார்.

நாமெல்லோரும் கர்வமாக பல காலம் இருப்போம் என்ற மாயையில் பல காரியங்கள் புரிகின்றோமாம், எமது கண்களைத் திறப்பது, எமக்கு முன்னாலே இறப்பவர்கள் தானாம், அப்போதுதான் இந்த வாழ்க்கை நிலையற்றது என்ற எண்ணம் எமக்கு வருகின்றதாம்.

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவரெல்லாம் நிலைப்பதில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா



தமது வழ்க்கை எனும் புத்தகத்தை அழகாய்த் தொகுப்பார்களாம் ஆனால் அதைச் சுவைக்க அவர்களால் முடிவதில்லையாம். ஆஸ்திகளை சேர்த்து வைத்து விட்டு அனுபவிக்க முடியாது போகும் எமது நண்பர்களைப் பற்றித்தான் இங்கே விளக்கம்` !

தொடங்கிய உடனே மறைந்து விடுவதால், முடிக்காமலே போய்விடும் சிலரும் இருக்கிறார்களாம். மரணம் எனும் முடிவுரையைக் கொடுப்பது காலன்,ஆனால் தாம் தொடங்கிய வாழ்க்கையை முடிக்காமலே போகிறவர்கள் யார் தெரியுமோ ?
தம்மைத் தாமே அழித்துக் கொள்பவர்கள் தான் .
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:45 am

இதோ இன்னுமொருமுறை கவிஞரின் ஆழ்ந்த கவியாற்றலை, அனுபவத்தோடு படிந்த கருத்தெனும் பாசியை மெதுவாகத் தூக்கிப்பார்க்கும் ஒரு சிறிய அவா.

இளம் வயதினிலே கவிஞரின் திரை கானங்கள் வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மனத்தைக் கவர்ந்தன. அம்மாவின் முந்தானையைப் பற்றிப் பின் தொடரும் போது தாயின் பெருமைப் பாடல்கள் நெஞ்சைத் தொட்டன.

தந்தை காலத்திற்கேற்ற சுதந்திரத்தை அளித்தபோது, தந்தையின் மீதான பாசத்தை அள்ளித் தெளிக்கும் பாடல்கள் அடி நெஞ்சில் அலையாடின.

கன்னியின் பின்னே காதல் என்றெண்ணி கவர்ந்திழுக்கப்பட்டு அலையும்போது காதல் பாடல்கள் கருத்தைக் கவர்ந்தன.

வாழ்க்கையில் பட்டுத் தெளிந்தபோது அனுபவப் பாடல்கள் ஆறுதலளித்தன.

பின்னே! ஓர் இடத்தில் இவற்றைச் சீர்தூக்கிப்பார்க்கும்போது, அவையனைத்தையுமளித்த கவிஞரின் ஆழமான ஞானம் அதிசயிக்க வைத்தது. இன்றும் அதிசயிக்க வைக்கிறது

இந்த இதழில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது, கவிஞரின் இறைமைத் தத்துவத்தைப் புதைத்து வைத்த பாடலொன்றை! இந்தப் பாடல் டி.எம்.எஸ். அவர்களின் கணீரென்ற குரலிலே, செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல்.

இந்தப் பாடலின் சிறப்பு இதன் எளிமை, அதனுள் புதைந்துள்ள ஆழமான தத்துவம். கவிஞர் பயன்படுத்தியுள்ள தமிழ்ச்சொற்கள் ஒரு சாதாரண பாமரனைக்கூடக் கவர்ந்து அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தூண்டும் தன்மை வாய்ந்தவை.

பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்


பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமேயில்லை. என்ன இறைமையின் ஆரம்பத்தை இதற்குப் போய் ஒப்பிடுகிறாரே கவிஞர் என ஆதங்கப்படுகிறீர்களா?

ஆரம்பத்தை ஒன்றிலிருந்து ஆரம்பித்திருக்கலாமே! இல்லை முக்கால், அரை,கால் என அளவுகள் ஒன்றிற்குப் பின்னாலும் ஓர் அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. எனவே நாம் கையை விரிக்கும் பூஜ்ஜியத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார். பூஜ்ஜியம் அதாவது தனக்கென ஒரு பெறுமானமும் அற்ற, லாப நட்டம் வேண்டாத ஓர் ஆரம்பம். இதைத்தவிர எதை நாம் ஆரம்பத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம்?

கவிஞர் கூற விளைவது என்னவெனில், எதுவுமேயற்ற ஒரு தற்பெருமயில்லா ராஜ்ஜியத்தின் தலைவன்தான் இறைவன். தனக்கென ஒரு பெறுமதியைக் கொண்டிருக்கா விட்டாலும், 1, 2,3 என்னும் இலக்கங்கள் தமது பெறுமதியை ஏற்றிக் கொள்வது தம் பின்னால் சேர்க்கும் பூஜ்ஜியத்தின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. அதேபோல, இறைவனின் சேர்க்கை இல்லா வாழ்க்கை பெறுமானமற்றது என்கிறார் கவிஞர்.

அது மட்டுமல்ல. இந்த ராஜ்ஜியத்தின் தலைவனை எவன் புரிந்து கொள்கிறானோ அவன் மனிதன் அல்ல இறைவன் என்று நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது. இங்கே கவிஞர் அந்த ராஜ்ஜியத்தின் தலைவனை அறிந்து கொண்டால், அந்தத் தலைவனே இறைவன் என்று கூறுகிறார்.

தென்னை இள நீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்


பலவிதமான உறைகளாலே மறைக்கப்பட்டு இருப்பதுதான் தென்னங்காய். அதனுள் இருக்கும் தேங்காயையோ அன்றி இளநீரையோ அதைத் தாங்கியிருக்கும் ஓட்டையோ பார்த்த மாத்திரத்தில் தெரிந்து கொள்ள முடியாது. எமக்கப்பாற்பட்ட சக்தி என்று எம்மால் நோக்கப்படும் அந்த இறைவனும் அதைப் போன்றவனே என்று எம் கண்முன்னே, பாமர மனிதனுக்குக் கூடத் தெரியக்கூடிய ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறார் கவியரசர்.

எம் மனத்திலுள்ள ஆணவம் எனும் அந்த மாயையை எத்தனையோ சிரமப்பட்டு அகற்றினாலே அங்கு இறைவன் எனும் உண்மையை அறிகிறோம்.

இங்கே நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகவாதிகளுக்கு ஒன்றைக் கூற விழைகிறேன். நீங்கள் ஆணவம் என்னும் மாயையினைக் களைந்து இறைவனைக் காணுகிறீ£ர்கள் என்று கூட எண்ணத் தேவையில்லை. உங்களின் உள்ளத் தெளிவு எனும் உண்மையைக் காணுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். மனச்சஞ்சலங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தெளிவான, அமைதியான சிந்தனை நீரோட்டத்தைக் காணுவதாக எடுத்துக் கொள்ளுங்கள். கவிஞர் இங்கே கூற விழைவது அதுதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:46 am

அத்தகைய ஒரு சுத்திகரிப்பின் பின் உங்கள் மனம் எத்தகைய அமைதியைக் காணுகிறதோ, அந்த அமைதியின் பெயரே தெய்வம் என்கிறார் கவிஞர்.

முற்றும் கசந்ததென்று
பற்றற்று வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்


என்ன பார்க்கிறீர்கள் நண்பர்களே!

வாழ்க்கையின் எல்லா இன்பத்தையும் அனுபவித்து, அனுபவத் தூணில் அடிபட்டு முற்றையும் துறந்து விட்டு தனியாக வரும் ஒருவனுக்கு பற்றே இருக்காதே! அவனுக்குக் கூட அத்தகைய சூழலில் ஒரு தனிமை இருக்கத்தானே செய்யும். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் சொந்தமென ஒரு சக்தி அமைதியைக் கொடுக்கிறதே! அந்த அமைதியை அறிந்து கொண்டு, அவ்வழியே நாம் அந்த அமைதியைப் பின்பற்றினால் அதுதான் தெய்வம்!

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்குள் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்


முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? என்பது மனித மனத்தினில் உலவும் விடையற்ற வினாக்களில் ஒன்று. விடையற்ற வினாவை மனதில் தொங்க விட்டது ஒரு சக்தியென்றால் அந்த சக்தியே இறைவன் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.

கோழியைப் படைத்து, முட்டையைப் படைத்து, வாழைக் கன்றைப் படைத்து பல அரிய செயல்களைப் புரிந்தவன் ஒர் ஏழையாம், அவனே இறைவனாம்!

முக்கியமாக இங்கே கவிஞர் விளக்க விழைவது அந்தஸ்து என்பதற்கு இறைவனின் சந்நிதானத்தில் அர்த்தமேயில்லை என்பதுவே!

நண்பர்களே! இறைவன் எனும் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தியை நம்பி உங்கள் தன்னம்பிக்கையை இழப்பது என்றுமே உண்மையான ஆன்மீகமாகாது. அதேசமயம் ஆன்மீகப் போர்வையில் செய்யும் அநாகரீகச் செயல்களை மூடிமறைப்பதும் ஆன்மீகமாகாது.

உங்கள் மனத்தின் குறைபாடுகளை உள சுத்தியோடு ஏற்றுக்கொண்டு அதன் நிவர்த்திக்காக உண்மையாக, நேர்மையாக எவன் ஒருவன் ஆக்கபூர்வமாக செயல்படுகிறானோ அவன் தான் உண்மையான ஆன்மீகவாதி என்பதுவே யதார்த்தமாகும்.

சமீபத்தில் எமது உள்ளங்களை, வாழ்க்கையைப் பாதித்த இயற்கை அனர்த்தங்களுக்குக் காரணம் தேடிக் குழம்பும்போது, கவிஞரின் சில அனுபவப் பாடல்கள் ரணமான உள்ளங்களுக்கு சிறிய ஒத்தடம் கொடுக்கிறது.

என்னோடு சேர்ந்து நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்தில் ஆனந்தமடைந்தது உங்களைவிட நானே என்பதுவே உண்மை.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:47 am

கற்பனைக் கடலினில் தேரோடித் தான் கண்டெடுத்த முத்துக்களை மாலையாக்கி, ரசிகர்கள் கழுத்தினில் பூட்டி அழகு பார்த்துக் களித்திருந்த கவிச்சக்கரவர்த்திதான் கண்ணதாசன். அனைத்தையுமே கற்பனைக் கடலினில் கண்டெடுத்தவை என்று வகைப்படுத்திவிடவும் முடியாது. ஏனெனில், தனது வாழ்க்கைப் பயணத்தில் அனுபவம் எனும் பாதையில் நடக்கும் போது காலில் தைத்த முட்களை அடுத்தவருக்கு பல்லுக்குத்த உதவுமே என்று சேகரித்து உருவாக்கிய அரும் படைப்புகளும் உண்டு.

இந்தப் பகுதியில் அவரை வெள்ளித்திரை வசனகர்த்தாவாக எடுத்துப் பார்க்கவே விழைந்தேன். ஆனால் கடந்த மாதம் 26ம் நாள்¢ல் சுனாமி என்னும் அந்தப் பேரழிவு-பேரிடர்-பேரலை கொய்தெடுத்த எம் அரும்பெரும் உறவுகளை நினைத்து எமது மனம் அனைத்தும் சொல்லொணாத் துன்பத்தில் அமிழ்ந்திருக்கும் வேளையிது.

புண்ணாகிப் போயிருக்கும் எமது இதயங்களுக்கு, விடையற்ற வினாக்களை இயற்கையை நோக்கி வீசிக் கொண்டிருக்கும் இப்பொழுதினிலே, ஆன்மீகப் பலத்தை உலுப்பிப் பார்க்கும் ஓர் உச்சக் கட்டத்திலே, கண்ணதாசனின் எந்தப் பாடல் எமது மனங்களில் சிறிது ஆறுதலைத் தோற்றுவிக்கும் என்று எண்ணிப்பார்த்து அதைச் சிறிது நோக்கலாம் என எண்ணினேன்.

எனது மனத்தில் உதித்தது ஒரு பாடல். தனது ஆருயிர் மனைவியை இழந்து, அதிலெழுந்த சோகத்திலாழ்ந்து கணவன் பாடுவதாய் வரும் ஒரு காட்சி.

"பாலும் பழமும்" எனும் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பிற்கு, டி. எம். எஸ்ஸின் காந்தர்வக் குரலில் ஒலித்த இந்தப் பாடல் அனைவரது நினவுகளையும் விட்டகல மறுக்கும் ஒரு பாடல்!

அந்தப் பாடலைப் பார்ப்போமா?

போனால் போகட்டும் போடா
இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் - யாரடா
போனால் போகட்டும் போடா!


தன்னுடைய உயிருக்குயிரான மனைவியின் சாவைத் தடுக்கும் சக்தி தனக்கில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், விரக்தியைத் தத்துவமாக்குகிறான்!

வந்தது தெரியும், போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த
மண்ணில் நமக்கே இடமேது?


வந்தது நமக்குத் தெரியும் என்கிறார். ஆமாம், எமது அன்னை எம்மை இந்த உலகில் தள்ளிய வரவு எமக்குத் தெரிந்த ஒன்றுதானே! ஆனால் எப்போ போகப் போகிறோம்? எங்கே போகப் போகிறோம்? தெரிந்தவர் யார்?
இப்படி ஒரு சின்னத் தத்துவத்தை உலகின் கடைசி மனிதனுக்கும் புரியக்கூடிய வகையில் எடுத்துக் காட்டுகிறார் இந்த ஒப்புயர்வற்ற கவிஞர்.

இழப்பால் தள்ளாடும் மனங்களுக்கு காலத்தால் மறையாக் கவிஞனின் ஆறுதல் என்ன? எம்மை நோக்கி ஒரு கேள்விக் கணையைத் தொடுக்கிறார். இந்தப் பூமியில் பிறந்தவரெல்லாம் மரணமின்றி நிலையாக வாழ்ந்து விட்டால் புதிய பிறப்புகளுக்கு இடமேது என்கிறார் கவிஞர்.

வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா!


சொந்தத்தை இழந்து தவிக்கும் மனங்களுக்கு, வாழ்க்கையை வியாபாரம் என்றெண்ணி ஆறுதல் அடையுங்கள் என்கிறார் கவியரசர். எப்படி என்கிறீர்களா? பிறப்பை வரவு என்று எடுத்துக் கொள்ளுங்கள்; அப்படியானால் செலவு இருக்கத்தானே வேண்டும்? எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத மரணத்தைச் செலவு என்றெண்ணிக் கொள்ளுங்கள், கணக்கு முடிந்து விடுகிறது. மிகவும் எளிமையாக எடுத்துரைத்து விடுகிறார். ஆனால் எம்மால் இந்தத் தத்துவத்தை எண்ணுவதன் மூலம் ஆறுதலடைய முடிகிறதா? இல்லை. வரவின்போது மகிழும் நாம், செலவின்போது அழத்தான் செய்வோம். இது இயற்கை நியதி. ஆனால் கவிஞரின் கூற்று. சில நேரங்களிலே விளக்கமற்ற செய்கைகளை விளக்குகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:48 am

இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதினாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது -
இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா!


நம் வாழ்க்கை இறைவனிடம் வாங்கிய இரவல். அவன் அதைத் திருப்பிக் கேட்கும்போது நாம் கொடுக்காமல் இருந்துவிட முடியுமா? அப்படிச் சொல்லி விட்டால் கூட அவன் விட்டு விடுவானா? மறைந்தவருக்கும் எமக்கும் உள்ள நெருக்கமான, உருக்கமான, உன்னதமான உறவைச் சுட்டிக்காட்டி, கூக்குரல் போட்டு அழுது புரள்வதினாலே, மாண்டு போன அந்த உயிரை என்ன எமக்கு மீண்டும் தந்து விடுவானா? மனமே துயரை மறந்து ஆறுதல் அடைந்துவிடு என்கிறார் கவிஞர்.

அடுத்தென்ன?

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந் தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா!
போனால் போகட்டும் போடா!


இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சியில் வரும் அந்தக் கணவன் ஒரு டாக்டர். தனது மனைவியின் மரணத்தைத் தடுக்க வகை சொல்லாக் கல்வி என்ன கல்வி என்று விரக்தியின் விளிம்பில் அங்கலாய்ப்பது போல் பாடலைப் புனைந்திருக்கிறார் கவிஞர். அப்படி அந்தக் கல்வியின் மூலம் வகையறிந்திருந்தால் என் அன்பு மனைவி இப்படி தீயினுள் கருகும் நிலையை நான் கண்ணுற வேண்டி வந்திருக்காதே என்று வெம்புகிறான். என்ன சொல்ல விழைகிறார் கவிஞர்? இறைவனின் இந்த உயிரழிப்புத் தத்துவத்தைப் புகட்ட எந்தக் கல்வியுமே கிடையாது. துயர் எவருக்குமே பொதுவானது. மரணம் வரும்போது இருப்பவன், இல்லாதவன், கற்றவன், கல்லாதவன் என்று வேறுபாடு பாராட்டுவது கிடையாது.

முடிவாக நமக்கு ஓர் அருமையான, ஓர் எளிமையான தத்துவத்தைக் கூறுகிறா அமரர் கண்ணதாசன். 'என்னிடம் பணம் இருக்கிறது. என்னிடம் அறிவு இருக்கிறது. என்னிடம் அழகு இருக்கிறது. நான் உயர்ந்தவன். அவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு பொய்மையில் உழலும் மனிதரைப் பார்த்துக் கவிஞர் சிரிக்கிறார். நீங்கள் எல்லோருமே இறைவன் எனும் இயக்குனர் இயக்கும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. அவன்தான் எல்லாம் தெரிந்தவன். நமது வருகையும் மறைவும் அவன் கையிலேயே இருக்கிறது.

நண்பர்களே! கவிஞர் கண்ணதாசன் எனும் அந்த உயரிய கலைஞன் எனக்கு வாழ்க்கையில் விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள், அவரது படைப்புகளே! அது உள்ளோர், இல்லாதோர் எனும் பாகுபாடின்றி அனைவரின் ஆளுகைக்கும் உட்பட்டது. அதை ரசிப்பதற்கு எங்கள் இதயத்தின் மனிதத்துவப் பகுதியைக் கொஞ்சம் திறந்தால் போதும்.

'சுனாமி' எனும் அந்த இயற்கையின் கொடூரத் தாண்டவத்திற்குத் தம்மைப் பலிகொடுத்தவர்கள், அவர்தம் உறவினர்கள் ஆகியோரின் இழப்புக்கள் ஈடுகட்ட முடியாதவை. ஆனால் புண்பட்ட இதயத்திற்குக் கொஞ்சம் களிம்பு தடவுவது போல மனதைத் தேற்றும் சிலவற்றை நினைவு கூறுவோம்.

கடலோடு ஐக்கியமாகிவிட்ட உதிரத்தின் உறவுகளுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்! உறவுகளை இழந்து ஏதிலிகளாகியவர்களுக்கு உறவுகளாய் நாமுள்ளோம்.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:49 am

தமிழக சட்டசபையில் முதலாவது ஆஸ்தான கவிஞர் எனும் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களை இதுவரை இந்தப் பகுதியிலே கவிஞராக, கட்டுரையாளராக பார்த்திருந்தோம். இந்தப் பகுதியிலே என் உள்ளங்கவர் கவிஞரை ஒரு திரைப்பட வசனகர்த்தாவாக பார்ப்போம் என எண்ணினேன்.

கவிதைகளில் எப்படி அழகிய தமிழை ஆராதித்தாரோ, கட்டுரைகளில் எப்படி தமிழை இறகாக்கி எம்மிதயங்களை வருடிக் கொடுத்தாரோ, திரையிசைப்பாடல்களில் எப்படி அனுபவம் எனும் வாசனையைக் கலந்து தமிழ் எனும் பன்னீரை எம்மீது தெளித்தாரோ, அதே போன்று திரைக்கதை வசனங்களிலும் அவரது ஆழ்ந்த அனுபவத்தின் சாயல் பூசப்பட்ட தமிழைக் காணக்கூடியதாக இருக்கும்.

கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்துப் பார்க்கும்போது கவிஞர் உரைநடை எழுதிய படங்கள் பதினாறுதான். பாட்டுக்கள் எழுதுவது அவரது தனித்திறன் என்றால் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் தணியாத தாகம் கொண்டார். அந்த சைக் கனவை நனவாக்கவே பல திரைப்படங்களைத் தானே தயாரித்தார்.

திரைப்படங்களுக்குப் பாட்டெழுதுவதில் ஈட்டிய பொருளையெல்லாம், திரைப்படங்கள் தயாரிப்பதில் இழந்தார் என்றே கூறவேண்டும். ஆனால் அந்த இலட்சிய மனிதன் தன் இலக்கியதாகம் தணிக்கும் பொருட்டு பணத்தைப் பெரிதென மதிக்காது கனவை நனவாக்கி மகிழ்ந்தார்.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் முயற்சியில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரியும் போது, மற்றோரை முன்னேற விடாது தடுக்கும் மனோபாவம் கொண்டவர்களால் இவரது திறமை மறைக்கப்பட்டது. இதை தனது வனவாசம் எனும் சுயசரிதை நூலில் அழகாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு,”வசனத் துறையில் எனக்கென ஒரு தனிப்பாணி உண்டு. சமூகக் கதைகளை விடச் சரித்திரக் கதைகளிலேயே அதை நிறைவேற்ற வாய்புக்களுண்டு”என்று அவர் குறிப்பிடுவதுண்டு.

முதலாவதாக ”தெனாலிராமன்” எனும் திரைப்படத்திலே கவிஞரின் சக உயிரினங்களின் மீது அன்பு கொள்ளும் மனப்பாங்கப் படம் பிடித்துக் காட்டும் ஒரு காட்சியையும் அதற்கு அவர் எழுதிய உரைநடையையும் பார்ப்போம்.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:49 am

கோவிலிலே ஆடு ஒன்றைப் பலியாக்குவதற்காக ஒரு கும்பல் முனைகிறது. இதைத் தெனாலிராமன் தடுக்கிறான்

"யாரடா அது... தாயின் பூசையைத் தடுப்பது?”என்கிறான் அந்தக் கும்பலின் தலைவன் போன்றவன்.

அதற்குத் தெனாலிராமன்,"தாயின் பூசை! வாயற்ற உயிரின் வாழ்வை முடிப்பதா தாயின் பூசை? நீங்களெல்லாம் இரக்கமற்ற அரக்கர்களா?”என்பான்.

இந்த இடத்தில் கவிஞரின் பாடல் ஒன்றின் சில வரிகளையும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

"அரக்கர் குலமெல்லாம் அன்றோடழியவில்லை
இரக்கமிலா வடிவாக இன்னும் இருக்குதய்யா”
என்று வரும்.

இது கருணை மறந்த உள்ளங்களைப் பற்றி அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டை நன்கு புரிய வைக்கும்.

"ராஜா தேசிங்கு” என்னும் படத்தில் வரும் காட்சி ஒன்றில் புறா ஒன்றை மகபத்கான் அடித்து வீழ்த்துவதாக காட்சி வரும். அதை ஆயிஷா பெண்களுக்கேயுரிய கருணையுடன் கையிலெடுத்து

"பறந்து வரும் புறா! பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாத குலத்தில் பிறந்த உனக்கா இந்தப் பரிதாபம்! உன்னைத் துடிக்க வைத்த அந்தப் பாவி யார்? இந்த இரக்கமற்ற கொடுமையை எமது மனித குலம்தாந் செய்யும்” என்று பேசுவதாக எழுதியிருந்தார்.

அடுத்தொரு படமான “சிவகெங்கைச் சீமை” - மருது பாண்டியரின் அரண்மனையில், ஊமைத்துரை தஞ்சம் அடைந்ததைக் காட்டும் ஒரு வசனத்தைக் கவிஞர் அமைத்திருந்தார் அது பின்வருமாறு

"கணை துளைத்திருக்கிறது. சிறகு ஒடிந்திருக்கிறது. அனாதைப் புறா, ஆதரவில்லாமல் இங்கே வந்து விழுந்திருக்கிறது”இந்த வசனத்தின் மூலம் ஒரு ஊமைப் புறாவையும்,
ஊமைத்துரையையும் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார் எமது ஒப்பற்ற கவிஞர்.

இங்கே கவிஞர் மற்றைய உயிரினங்களின் மீது தான் கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்தும் சில உரைநடைகளையே பார்த்தோம்.

நண்பர்களே! இந்தத் தலைப்பில் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய விடயங்கள் எண்ணிக்கையிலடங்காதவை, ஏனெனில் எமது கவியரசர் தன்னிகரற்றவர். கண்ணதாசன் எனும் இந்தத் தமிழ் வனத்திற்குள் நான் என்னைத் தொலைத்த காலங்கள் எத்தனையோ! ஆனால் அங்கே வழிதெரியாமல் திண்டாடவில்லை, பதிலாக இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவதற்கு வழி கிடைத்து விட்டதே என்று ஆதங்கப்பட்டதுதான் உண்டு.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 2 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum