ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)

4 posters

Go down

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Empty காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)

Post by kirikasan Tue Feb 14, 2012 4:15 pm

( இது ஒரு காதல்கதை)

வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்

விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்

மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்

தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்

பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்

அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்

மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்

முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்

என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?

சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி

கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்

மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி

நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்

கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்

பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்

முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்

கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்

இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்

கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது

கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Empty Re: காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)

Post by kitcha Tue Feb 14, 2012 4:42 pm

இயற்கை காதல் இயற்கையின் மீது காதல் - மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Empty Re: காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)

Post by ந.கார்த்தி Tue Feb 14, 2012 4:56 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Empty Re: காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)

Post by ஜாஹீதாபானு Tue Feb 14, 2012 4:57 pm

கவிதை அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Empty Re: காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)

Post by kirikasan Tue Feb 14, 2012 9:50 pm

பாராட்டுக்கள் வழங்கிய kitcha, ந.கார்த்தி, ஜாஹீதாபானு மூவருக்கும் என் நன்றிகள்!!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Empty Re: காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum