புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_m10எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 11:36 am

First topic message reminder :

வணக்கம் உறவுகளே...

இங்கே கொஞ்சம் விவகாரமான விஷயத்தைப் பேசலாம் என்றுதான் இந்த மடலை
உங்கள் முன் வி(வ)ரிக்கிறேன்...
இந்த விவகாரம் இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாகத் துருத்திக்கொண்டே தொடர்கிறது.

கவிதை எது?-கவிஞன் யார்?
இந்தக் கேள்விகள் இன்றும் எழுப்பப்படுகின்றன.

தமிழ்த் துறையில் பயின்று தமிழ் இலக்கியத்தில் பட்டங்கள் பெற்றவர்களே இந்தக் கேள்விகளை எழுப்புவதில்
என்றைக்கும் முன்னிலையில் இருப்பவர்கள்.
அதிலும் குறிப்பாக மனனம் செய்தவற்றைத் தவிர மனசில் வேறு எதையும் தேக்காதவர்கள்-தேக்க இயலாதவர்கள்
இந்தக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள் என்பது வெயிலின் தகிப்பைப் போன்ற வெள்ளை உண்மை.

இவர்களில்-ஏன் நம்மிலும் பெரும்பாலானோருக்கு எவனையும் இறந்தப் பிறகே சிறந்தவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடித் துதி பாடுவதே தூய-துயர இயல்பாகிப் போய்விட்டது.
இந்த உண்மை சற்று வலியானதுதான்.ஆனால் வலிமையானது.

உயிரோடு இருக்கும் ஒருவன் கவிஞனாகப் புகழ்ப் பெற்றால்-புகழப் பெற்றால் இந்தத் தமிழ்த் தெய்வங்களுக்கு
எழுந்து வரும் கோபம் இமயத்தையும் குள்ளமாக்கும்.
அவனுக்கு எதுகை-மோனை மட்டுமே வருகிறது.சந்தத்தில் சத்தம் போடுகிறான்.சங்கப் புலவர் குப்பைக் கோழியாரை விட இவன் உயரம் குறைந்தவன் என்றெல்லாம் இழித்தும்-பழித்தும் அவன் மீதுக் குப்பையைக் கொட்டிக் குதூகலிப்பர்.குதர்க்கத்திலேயே வாழ்வைக் கழிப்பர்.

இது போன்ற வெற்றுக் கூச்சலும்-வேதாள வேஷமும் தமிழிலக்கியத்தில் பட்டம் பெற்றுக் கவிஞானவனுக்கு எதிராகவே போடப்படுகிறது என்றால் வெகு சாதாரணனுக்கு நடப்பதில் வியப்பொன்றுமில்லை.

அது சரி...இப்படியெல்லாம் வக்காலத்து வாங்குகிறாயே...தமிழை முறைப்படிப் படித்துவிட்டுத்தான் கவிதை எழுதுகின்றார்களா?.இப்படியும் சிலர் கேட்பதும் காதில் விழுகிறது.

உங்கள் கேள்வியில் உயிரும் உண்மையும் உள்ளது.ஒப்புக்கொள்கிறேன்.

உரைநடையோ-கவிநடையோ எதுவாயினும் உயரிலக்கணம் படிக்காவிடினும் ஓரளவிற்கு அடிப்படை இலக்கணமேனும் அறிந்து-தெளிந்து அதன்பிறகே எழுதத் தொடங்க வேண்டும் என்கிறக் கட்சிதான் நானும்.
அப்பொழுதுதான் ஓரளவேணும் எழுத்து-பொருட்பிழையைத் தவிர்க்க இயலும்.

எல்லாவற்றிற்கும் மேலாக,எழுத நினைக்கும் முன்,அது உரைநடை-கவிதை எதுவாயினும் சிலகாலத் தொடர் வாசிப்பிற்குப் பின் தொடங்கினால் சற்றேத் தூக்கலாக இருக்கும் நம் நடையும் எழுத்தும்.ஏன்?. கருத்தும் கூட.

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்,'நம்மவர்கள் எழுத்தாளர்களாக இருப்பதை விட எடுத்தாளர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை' என்று அடிக்கடி சாட்டையால் அடிப்பார்.

ஆரம்பத்தில் எடுத்தாளர்களாகத்தான் எழுதத் தொடங்குவர்.பின்னர் தொடர் வாசிப்பிற்குப் பின் தனக்கென்று ஒரு பாணியை எற்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் ஆகிவிடுவர்.இதை நாம் நிறைய ஜாம்பவான்களிடம் காணலாம்.
ஆரம்பத்தில் நம் ஆதர்ஷக் கர்த்தாக்களே நம் எழுத்தின் தொடக்கக் காலத்தில் நம்மை ஆக்கிரமிப்பர்.அதன்பின் மெல்ல தவழ்ந்து-எழுந்து-விழுந்து-நடந்து-வளர்ந்து-ஓடி-தேடி-உயர்ந்து நிற்கும் மனித வளர்ச்சிப் பரிமாணம் எழுத்துத் தொழிலும் ஏற்படும்.அது கவிதை-உரைநடை எந்த வடிவாயினும்.

எல்லாம் சரி...எது கவிதை? என்று கேட்கிறீர்கள்..புரிகிறது...

"வார்த்தைகள் நடமாடினால் அது உரைநடை.நடனமாடினால் அது கவிதை."-இது நம்மைப் போன்றோர் தமிழைத் தைரியமாகத் தூக்கிப் பிடிக்க ஒரு தும்பிக்கையைப் போல நம்பிக்கைத் தந்த பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா சொன்னது.

இன்னும் எளிமையாக ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இதோ:
புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்குரெண்டு கூட்டம்-எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவர்க்குச் சொல்.

இத்துணை எளிமையாக மண்டையில் அடிப்பது போலச் சொன்னவர் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்துதான்.

உரைநடையோ -கவிதையோ எதுவாகினும் உயிரும்-உணர்வும்-உணச்சியும் மிதந்து மிதந்து மேலே வந்து மெல்ல
நம் கைப் பிடித்து மேலேறி-தோளேறி மண்டையை ஊடுருவி மூளை-மனசு இரண்டிற்குள்ளும் பரவி-விரவி வேர்ப் பிடித்து ஆழமாய் ஆக்கிரமித்தால் அதுவே சிறந்த எழுத்து-சிறந்த கவிதை.

இதுவே என் சிரம் தாழ்ந்த(நிமிர்ந்தும் என்று கொள்ளலாம்) கருத்து.

நன்றி உறவுகளே.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:05 am

/// கதை எழுதுபவன் கதை எழுதட்டும். யார் வேண்டாம் என்று சொல்வார்கள். கதை எழுதுபவன் நான்காக, ஐந்தாக மடித்து, ஒடித்து எழுதிவிட்டு இதோ என் கவிதை என்று சொல்வது திறந்த வீட்டில் நாய் நுளைவதற்க்குச் சமம். தமிழ் கவிதைக்கு, சாதாரண வேலி மட்டும் இல்லை. யாப்பு என்கிற வலுவான கோட்டை கொத்தளத்தோடு உள்ளது.////

உங்கள் கூற்று உண்மைதான் அய்யா...இன்றைக்கு நிறைய பேர் -நான் உட்பட-உடைத்துப் போட்ட வார்த்தைகளையே கவிதை என்று பிதற்றுகிறார்கள்...
ஆனால் இன்னொன்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும் மரபு என்ற பெயரில் வெறும் தளையும் சீறும் மட்டுமே இருந்துவிட்டால் அது கவிதை என்று கதறுகின்றோரும் இருக்கின்றனர்...

உங்களைப்போல் வெகுசிலரே நிஜ மொழியடர்த்தியோடு எழுதுகின்றனர் என்பதும் அப்பட்டமான உண்மை...

மற்றபடி உங்கள் நேரத்தை இதைப் படித்துப் பின்னூட்டமிடவும் செலவிட்டதற்கு நன்றிகள் அய்யா...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:10 am

///வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா---என்றால், கம்ப ராமாயணம், சிலம்பு, அகம், புறம், பக்தி இலக்கியங்கள் எல்லாம் என்ன வாழும் கவிதைகள் இல்லையா? அவ்வளவு ஏன், புலவர் குழந்தை எழுதிய கீமாயணம், குழந்தைக்கவிஞர் அழா. வள்ளியப்பன் எழுதிய குழந்தைப் பாடல்கள் கூட வடிவத்தில் இல்லாமலா போய்விட்டது. அவை வாழாமல் அழிந்து விட்டதா.///

அய்யா...அவர் சொன்னதை நாம் ஏன் இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்...எந்தக் கவிதையாக இருந்தாலும் உணர்வும் அடர்வும் இருந்தால் அது வாழும் என்று அர்த்தம் கொள்ளலாமே?...

அவர் பிரபலம்-விளம்பர வெளிச்சம் பாய்ச்சப் பெற்றவர் என்பதால் அவருக்கு நீங்கள் தூசு என்றெல்லாம் கொள்ள முடியாது...
உங்கள் அளவில் நீங்கள் ஓர் உயரத்தில் இருப்பவர் என்பதில் அய்யம் இல்லை அய்யா...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 11:21 am

ராரா நான் முறையாக தமிழ் படிக்காதவன் -
அதில் எனக்கு வருத்தமும் வேதனையும் உள்ளது.
ஆனால் எழுதப் படிக்க பேச அறிவேன்.

இலக்கணம், இலக்கியம் இது பற்றி நானறியேன்.
நல்ல அர்த்தங்களும், வார்த்தை ஜாலங்களும்,
எளிதாக புரியும் வரிகளை மட்டுமே எனக்கு புரியும், பிடிக்கும்.

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Feb 21, 2012 11:29 am

சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:35 am

கொலவெறி wrote:ராரா நான் முறையாக தமிழ் படிக்காதவன் -
அதில் எனக்கு வருத்தமும் வேதனையும் உள்ளது.
ஆனால் எழுதப் படிக்க பேச அறிவேன்.

இலக்கணம், இலக்கியம் இது பற்றி நானறியேன்.
நல்ல அர்த்தங்களும், வார்த்தை ஜாலங்களும்,
எளிதாக புரியும் வரிகளை மட்டுமே எனக்கு புரியும், பிடிக்கும்.

நானும் உங்கள் கட்சிதான்...
நுணுக்கமான மொழியறிவு(ம்) எனக்கு(ம்) இல்லைதான்...
ஆனால் ரசிக்கத் தெரிந்தால் போதுமே?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 21, 2012 2:58 pm

ரா.ரா3275 wrote:/// கதை எழுதுபவன் கதை எழுதட்டும். யார் வேண்டாம் என்று சொல்வார்கள். கதை எழுதுபவன் நான்காக, ஐந்தாக மடித்து, ஒடித்து எழுதிவிட்டு இதோ என் கவிதை என்று சொல்வது திறந்த வீட்டில் நாய் நுளைவதற்க்குச் சமம். தமிழ் கவிதைக்கு, சாதாரண வேலி மட்டும் இல்லை. யாப்பு என்கிற வலுவான கோட்டை கொத்தளத்தோடு உள்ளது.////
உங்கள் கூற்று உண்மைதான் அய்யா...இன்றைக்கு நிறைய பேர் -நான் உட்பட-உடைத்துப் போட்ட வார்த்தைகளையே கவிதை என்று பிதற்றுகிறார்கள்...
ஆனால் இன்னொன்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும் மரபு என்ற பெயரில் வெறும் தளையும் சீறும் மட்டுமே இருந்துவிட்டால் அது கவிதை என்று கதறுகின்றோரும் இருக்கின்றனர்...
உங்களைப்போல் வெகுசிலரே நிஜ மொழியடர்த்தியோடு எழுதுகின்றனர் என்பதும் அப்பட்டமான உண்மை...
மற்றபடி உங்கள் நேரத்தை இதைப் படித்துப் பின்னூட்டமிடவும் செலவிட்டதற்கு நன்றிகள் அய்யா...
நன்றி ரா.ரா., தற்ச்சமயம் உணவு இடைவேளையில் வீடு வந்தேன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மரபு இருந்தால் போதும் என்று எத்தனையோ பேர் கருத்துச் செறிவு இல்லாமல் எழுதுகின்றவர்களும் இருக்கிறார்கள். நான் முன்பு ஒரு பின்னூட்டத்தில் சொன்னதப்போல்
குப்பனும் குளிக்கப் போனான்
கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
இப்பத்தான் என்றேன் நானும்

என்று எதுகை மோனையைக் கிண்டல் செய்வதுபோல் கருத்தாளம் இல்லாமல் எழுதிய கவிதையை முன்பு படித்துள்ளேன்.

நான் புதுக்கவிதைக்கு பரம எதிரி என்பதாய் என்னை நினைக்க வேண்டாம். நானும் புதுமையை விரும்புகிறேன். கடந்த கவிதைப்போட்டியில் எத்தனையோ நல்ல கவிதைகள், உங்களுடையதையும் சேர்த்து, கண்டேன். படித்தேன். பாராட்டினேன். மாறிவரும் உலகுக்கு ஏற்ற மரபோடு ஒத்த கவிதைகள் வருவதை வரவேற் க்கிறேன். அதற்க்காக, மரபு என்ற உயர்ந்த, பரந்த, மாட மாளிகையை அடித்துத் தரைமட்டமாக்கி விட்டு அங்கே புதுக்கவிதை என்ற ஒரு குடிசையைக் கட்டுவதை நான் எதிர்க்கிறேன். அவ்வளவுதான்.

இன்று எழுதப்படும் புதுக்கவிதைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் வெறும் விடுகதை, புதிர்களாகவே உள்ளது என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
"நள்ளிரவில் வாங்கினோம் சுதந்திரம்
இன்னும் விடியவே இல்லை "

என்று நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு கவிதை எழுதப்பட்டது. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டினார்கள். உண்மைதான்.
உயர் ஜாதிக்காரர்களின் மெத்தனப்போக்கையும், பிராமணர்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தையும் சம்மட்டியால் அடித்தது, கீழே உள்ள ஒரு சிறு கவிதை.
இட ஒதுக்கீட்டை நாங்களும்
ஏற்க்கமாட்டோம்
வா...எங்களோடு வந்து நீயும்
பீ ...அள்ளு

அம்பேத்காரையும் பெரியாரின் தளராத உழைப்பையும் இந்த சிறுகவிதை சுட்டிக்காட்டியது.
இப்போது எழுதப்படும் புதுக்கவிதைகள் இப்படி கருத்தாளம் உள்ளதாகவும், பொருட்செறிவோடும் உள்ளதா என்பது சந்தேகமே. வெறும் விடுகதைகளும், புதிர்களும், கண்ணாம்பூச்சி விளையாட்டும் கவிதை ஆகிவிடாது.

நானும் " பொழுதை கழிக்க ஓர் வழி'' என்ற ஒரு திரியை நடத்தி வருகிறேன். அதில் உள்ள விருத்தங்களைப் படித்துப் பாருங்கள். உள்ளே மறந்திருக்கும் ஒரு சொல்லைக் கண்டு பிடிக்கும் ஒரு வார்த்தை விளையாட்டே இந்தத் திரி. மரபு இலக்கணத்தில் கவிதை இருக்கும். ஆனால் மொத்தமாகப் படித்துப் பார்த்தால் பொருள் இருக்காது. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கும். இதை மரபுக் கவிதை என்று நானே ஒத்துக்கொள்ள மாட்டேன். இதில் ஆழ்ந்த கருத்தோ, விழுமிய பொருளோ எதுவும் இருக்காது. சரி, கார் வந்துவிட்டது, நான் மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும். பின்பு பார்க்கலாம் ரா.ரா. அவர்களே மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 3:18 pm

///நான் புதுக்கவிதைக்கு பரம எதிரி என்பதாய் என்னை நினைக்க வேண்டாம். நானும் புதுமையை விரும்புகிறேன். கடந்த கவிதைப்போட்டியில் எத்தனையோ நல்ல கவிதைகள், உங்களுடையதையும் சேர்த்து, கண்டேன். படித்தேன். பாராட்டினேன். மாறிவரும் உலகுக்கு ஏற்ற மரபோடு ஒத்த கவிதைகள் வருவதை வரவேற் க்கிறேன். அதற்க்காக, மரபு என்ற உயர்ந்த, பரந்த, மாட மாளிகையை அடித்துத் தரைமட்டமாக்கி விட்டு அங்கே புதுக்கவிதை என்ற ஒரு குடிசையைக் கட்டுவதை நான் எதிர்க்கிறேன். அவ்வளவுதான்.///

உண்மைதான் அய்யா...நான் எழுதி அனுப்பியது ஆசிரியப்பா எனும் அவசரப்பா.
எனக்கு ஓரளவே மரபுக் கவிதைக்கான இலக்கணம் தெரியும்...
நுனிப்புல் மேய்ந்துவிட்டு நுகத்தடியை மேய்ந்ததாய் நான் சொன்னால் ஊர் சிரிக்கும் உலகம் சிரிக்கும்.
எனவே நான் எனக்கு மரபு தெரியாது என்பதற்காய் அதை வெறுக்கும்
ஈனக் கட்சி நான் அல்லன்.
அதே வேளையில் புதுக் கவிதை மட்டுமே 'ஒரு பூபாள வானத்தைப் புதுக்கும்' என்றும் பொய் சொல்லப்போவதில்லை.

ஆனால்,இன்றைக்கு எழுதுகின்ற நிறைய பேருக்கு வாசிக்கும் பழக்கம் சுத்தமாய் இல்லை என்பது சூரியச் சூடு போன்ற உண்மை.
ஒரு ஆத்மநாமையோ,நா.பிச்சைமூர்த்தியையோ,நஞ்சுண்டானையோ,தேவதேவனையோ,வேழவேந்தனையோ,
இளந்தேவனையோ,நா.காமரசனையோ...
எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று எண்ணினால் நமக்கே அவமானம் மிஞ்சும்.
இது அவசரக்காலம்.எனவே யாரையும் குற்றம் சொல்லிக் காணப் போகும் மிச்சம் ஏதுமில்லை.
எனவே இதைப் பற்றி எதையும் பேசிப் பயனில்லை.

அய்யா...உங்களுக்கு ஓர் வேண்டுகோள்...
விருத்தம்,வெண்பாப் பாடல்கள் எழுதுவது பற்றி ஒரு திரி தொடங்கி
இளந்தலைமுறையினர்க்கு எளிதில் விளக்கலாமே...

நன்றி அய்யா...ஆரோக்கியமான உங்கள் வாதத்திற்கு...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 01, 2012 4:06 pm

ஒவ்வொருவருடைய மேலான கருத்துகளுக்கும் மிக்க மிக்க நன்றி.
நிறைய படிப்பினைகளைப் பெற முடிந்தது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 5:20 pm

sinthiyarasu wrote:ஒவ்வொருவருடைய மேலான கருத்துகளுக்கும் மிக்க மிக்க நன்றி.
நிறைய படிப்பினைகளைப் பெற முடிந்தது.

நன்றி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 19, 2015 3:05 pm

எது கவிதை? என்பதற்கு இது சரியான விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன் .
=========================================================
கவிதையெனும் பந்தலுக்கு நான்கு தூணுண்டு
செவிக்கினிய சொற்கள் முதலாம் தூணாகும் !
சந்தமெனும் ஓசையினால் மெல்லவே உள்ளத்தை
உந்துகின்ற உணர்ச்சி இரண்டாம் தூணாகும் !
பருப்பின்றி சாம்பார் சுவைக்காது என்பதுபோல்
பொருட்சுவையே கவிதைக்கு மூன்றாம் தூணாகும் !
தோப்புக்கு வேலியே காப்பு என்பதுபோல்
யாப்பென்னும் கட்டுறுதி நான்காம் தூணாகும் !
இந்நான்கு தூண்களிலே ஒன்று பழுதெனினும்
சிங்காரக் கவிப்பந்தல் நில்லாது சரிந்திடுமே !

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக