ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

+5
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
ஜாஹீதாபானு
ரா.ரா3275
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 11:36 am

வணக்கம் உறவுகளே...

இங்கே கொஞ்சம் விவகாரமான விஷயத்தைப் பேசலாம் என்றுதான் இந்த மடலை
உங்கள் முன் வி(வ)ரிக்கிறேன்...
இந்த விவகாரம் இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாகத் துருத்திக்கொண்டே தொடர்கிறது.

கவிதை எது?-கவிஞன் யார்?
இந்தக் கேள்விகள் இன்றும் எழுப்பப்படுகின்றன.

தமிழ்த் துறையில் பயின்று தமிழ் இலக்கியத்தில் பட்டங்கள் பெற்றவர்களே இந்தக் கேள்விகளை எழுப்புவதில்
என்றைக்கும் முன்னிலையில் இருப்பவர்கள்.
அதிலும் குறிப்பாக மனனம் செய்தவற்றைத் தவிர மனசில் வேறு எதையும் தேக்காதவர்கள்-தேக்க இயலாதவர்கள்
இந்தக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள் என்பது வெயிலின் தகிப்பைப் போன்ற வெள்ளை உண்மை.

இவர்களில்-ஏன் நம்மிலும் பெரும்பாலானோருக்கு எவனையும் இறந்தப் பிறகே சிறந்தவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடித் துதி பாடுவதே தூய-துயர இயல்பாகிப் போய்விட்டது.
இந்த உண்மை சற்று வலியானதுதான்.ஆனால் வலிமையானது.

உயிரோடு இருக்கும் ஒருவன் கவிஞனாகப் புகழ்ப் பெற்றால்-புகழப் பெற்றால் இந்தத் தமிழ்த் தெய்வங்களுக்கு
எழுந்து வரும் கோபம் இமயத்தையும் குள்ளமாக்கும்.
அவனுக்கு எதுகை-மோனை மட்டுமே வருகிறது.சந்தத்தில் சத்தம் போடுகிறான்.சங்கப் புலவர் குப்பைக் கோழியாரை விட இவன் உயரம் குறைந்தவன் என்றெல்லாம் இழித்தும்-பழித்தும் அவன் மீதுக் குப்பையைக் கொட்டிக் குதூகலிப்பர்.குதர்க்கத்திலேயே வாழ்வைக் கழிப்பர்.

இது போன்ற வெற்றுக் கூச்சலும்-வேதாள வேஷமும் தமிழிலக்கியத்தில் பட்டம் பெற்றுக் கவிஞானவனுக்கு எதிராகவே போடப்படுகிறது என்றால் வெகு சாதாரணனுக்கு நடப்பதில் வியப்பொன்றுமில்லை.

அது சரி...இப்படியெல்லாம் வக்காலத்து வாங்குகிறாயே...தமிழை முறைப்படிப் படித்துவிட்டுத்தான் கவிதை எழுதுகின்றார்களா?.இப்படியும் சிலர் கேட்பதும் காதில் விழுகிறது.

உங்கள் கேள்வியில் உயிரும் உண்மையும் உள்ளது.ஒப்புக்கொள்கிறேன்.

உரைநடையோ-கவிநடையோ எதுவாயினும் உயரிலக்கணம் படிக்காவிடினும் ஓரளவிற்கு அடிப்படை இலக்கணமேனும் அறிந்து-தெளிந்து அதன்பிறகே எழுதத் தொடங்க வேண்டும் என்கிறக் கட்சிதான் நானும்.
அப்பொழுதுதான் ஓரளவேணும் எழுத்து-பொருட்பிழையைத் தவிர்க்க இயலும்.

எல்லாவற்றிற்கும் மேலாக,எழுத நினைக்கும் முன்,அது உரைநடை-கவிதை எதுவாயினும் சிலகாலத் தொடர் வாசிப்பிற்குப் பின் தொடங்கினால் சற்றேத் தூக்கலாக இருக்கும் நம் நடையும் எழுத்தும்.ஏன்?. கருத்தும் கூட.

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்,'நம்மவர்கள் எழுத்தாளர்களாக இருப்பதை விட எடுத்தாளர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை' என்று அடிக்கடி சாட்டையால் அடிப்பார்.

ஆரம்பத்தில் எடுத்தாளர்களாகத்தான் எழுதத் தொடங்குவர்.பின்னர் தொடர் வாசிப்பிற்குப் பின் தனக்கென்று ஒரு பாணியை எற்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் ஆகிவிடுவர்.இதை நாம் நிறைய ஜாம்பவான்களிடம் காணலாம்.
ஆரம்பத்தில் நம் ஆதர்ஷக் கர்த்தாக்களே நம் எழுத்தின் தொடக்கக் காலத்தில் நம்மை ஆக்கிரமிப்பர்.அதன்பின் மெல்ல தவழ்ந்து-எழுந்து-விழுந்து-நடந்து-வளர்ந்து-ஓடி-தேடி-உயர்ந்து நிற்கும் மனித வளர்ச்சிப் பரிமாணம் எழுத்துத் தொழிலும் ஏற்படும்.அது கவிதை-உரைநடை எந்த வடிவாயினும்.

எல்லாம் சரி...எது கவிதை? என்று கேட்கிறீர்கள்..புரிகிறது...

"வார்த்தைகள் நடமாடினால் அது உரைநடை.நடனமாடினால் அது கவிதை."-இது நம்மைப் போன்றோர் தமிழைத் தைரியமாகத் தூக்கிப் பிடிக்க ஒரு தும்பிக்கையைப் போல நம்பிக்கைத் தந்த பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா சொன்னது.

இன்னும் எளிமையாக ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இதோ:
புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்குரெண்டு கூட்டம்-எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவர்க்குச் சொல்.

இத்துணை எளிமையாக மண்டையில் அடிப்பது போலச் சொன்னவர் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்துதான்.

உரைநடையோ -கவிதையோ எதுவாகினும் உயிரும்-உணர்வும்-உணச்சியும் மிதந்து மிதந்து மேலே வந்து மெல்ல
நம் கைப் பிடித்து மேலேறி-தோளேறி மண்டையை ஊடுருவி மூளை-மனசு இரண்டிற்குள்ளும் பரவி-விரவி வேர்ப் பிடித்து ஆழமாய் ஆக்கிரமித்தால் அதுவே சிறந்த எழுத்து-சிறந்த கவிதை.

இதுவே என் சிரம் தாழ்ந்த(நிமிர்ந்தும் என்று கொள்ளலாம்) கருத்து.

நன்றி உறவுகளே.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 12:47 pm

இது யாருக்கும் எதிரானதன்று...எடுத்து வைக்கத் தோன்றிய வாதம் இது...அவ்வளவே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ஜாஹீதாபானு Tue Feb 14, 2012 1:12 pm

யாருமே கவனிக்கல போல சோகம்

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 1:15 pm

ஜாஹீதாபானு wrote:யாருமே கவனிக்கல போல சோகம்

இதுபோன்ற கட்டுரைகளுக்குக் கவனிப்பு எப்போதுமே குறைவுதான்...
இருந்தும் தெரிந்தே பதிவேற்றினேன்...
அதுதான் மிகப்பெரிய சோகம்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 1:16 pm

ஜாஹீதாபானு wrote:

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:

எனக்கு மட்டும் என்னவாம்?...
நானும் உங்களைப்போலத்தான்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ஜாஹீதாபானு Tue Feb 14, 2012 1:18 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:

எனக்கு மட்டும் என்னவாம்?...
நானும் உங்களைப்போலத்தான்...
இதெல்லாம் ஓவரு .................... என்ன கொடுமை சார் இது

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 1:22 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:

எனக்கு மட்டும் என்னவாம்?...
நானும் உங்களைப்போலத்தான்...
இதெல்லாம் ஓவரு .................... என்ன கொடுமை சார் இது

ஓவரு இல்ல...கொஞ்சம் ஃபேவரு... ரிலாக்ஸ்

Last edited by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 1:23 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by பாலாஜி Tue Feb 14, 2012 1:22 pm

இவர்களில்-ஏன் நம்மிலும் பெரும்பாலானோருக்கு எவனையும் இறந்தப் பிறகே சிறந்தவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடித் துதி பாடுவதே தூய-துயர இயல்பாகிப் போய்விட்டது.
இந்த உண்மை சற்று வலியானதுதான்.ஆனால் வலிமையானது.

இது முற்றிலும் உண்மை ... எனக்கும் கவிதை படிக்க மட்டுமே தெரியும் . ஆகவே ....

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 1:24 pm

வை.பாலாஜி wrote:
இவர்களில்-ஏன் நம்மிலும் பெரும்பாலானோருக்கு எவனையும் இறந்தப் பிறகே சிறந்தவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடித் துதி பாடுவதே தூய-துயர இயல்பாகிப் போய்விட்டது.
இந்த உண்மை சற்று வலியானதுதான்.ஆனால் வலிமையானது.

இது முற்றிலும் உண்மை ... எனக்கும் கவிதை படிக்க மட்டுமே தெரியும் . ஆகவே ....

நன்றி பாலாஜி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 21, 2012 8:35 am

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:யாருமே கவனிக்கல போல சோகம்

இதுபோன்ற கட்டுரைகளுக்குக் கவனிப்பு எப்போதுமே குறைவுதான்...
இருந்தும் தெரிந்தே பதிவேற்றினேன்...
அதுதான் மிகப்பெரிய சோகம்
அப்படி நினைக்க வேண்டாம் தம்பி ரா.ரா. எனக்குத் தெரிந்த, முடிந்த நல்லதோர் விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆயினும் அதிக வேலைப்பளு உள்ளதால், பதிலை ஆரம்பித்தால் முடிக்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சம் காரணமாக தொடங்கப் பயப்படுகிறேன். மார்ச் மாதம் முடிவதற்க்குள் முடிக்க வேண்டிய வேலை அதிகமாக உள்ளது. மேலும், மார்ச்சில் பத்து நாட்கள் நாகபூரி வேறு செல்ல வேண்டும்.
இன்னும் எளிமையாக ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இதோ:

புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்குரெண்டு கூட்டம்-எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவர்க்குச் சொல்.

இத்துணை எளிமையாக மண்டையில் அடிப்பது போலச் சொன்னவர் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்துதான்.

இப்படி ஒரு மேற்க்கோளை கொடுத்துள்ளீர்கள். எளிமையாக மண்டையில் அடிப்பதுபோல் வைரமுத்து சொல்லியிருக்கிறார் என்றீர்கள். எதுகை, மோனை மாறாமல் எழுதியுள்ளார். மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் விரவி வருகிறது இவரின் நாலுவரிக் கவிதையில். எட்டு வெண்சீர் வெண்டளையும், ஆறு இயர்ச்சீர் வெண்டளையும் வருகிறது. கடைசிச் சீர் ஓரசைச் சீராக 'நாள்' எனும் வாய்பாட்டில் முடிகிறது. ஆக, இது தொல்காப்பியர் கொடுத்த யாப்பிலக்கணம் முற்றிலும் மாறாமல் எழுதப்பட்ட ''நேரிசை வெண்பா''வாகும். இவை எல்லாம் செய்தவர் 'வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா' என்று நீங்கள் சொன்னதப்போல் மண்டையில் அடிக்கிறார். 'குதிக்கிறதே
இங்குரெண்டு கூட்டம்'' என்கிறார். அந்த இரண்டு கூட்டத்தில் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவராம் இவர்? வைரமுத்து மிகப் பெரிய மனிதர்...அவர் முன்பு நானெல்லாம் ஒரு சிறு தூசுத்தான். ஆயினும் நான் சொல்வேன்...இவர் இரண்டு பக்கமும் சிண்டு முடிக்கின்ற வேலையை அல்லவா செய்கின்றார்?

வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா---என்றால், கம்ப ராமாயணம், சிலம்பு, அகம், புறம், பக்தி இலக்கியங்கள் எல்லாம் என்ன வாழும் கவிதைகள் இல்லையா? அவ்வளவு ஏன், புலவர் குழந்தை எழுதிய கீமாயணம், குழந்தைக்கவிஞர் அழா. வள்ளியப்பன் எழுதிய குழந்தைப் பாடல்கள் கூட வடிவத்தில் இல்லாமலா போய்விட்டது. அவை வாழாமல் அழிந்து விட்டதா.

எது கவிதை என்பதற்கு எண்ணற்ற விளக்கங்கள் உள்ளன. அதை ஆரம்பித்தால் வெகு நாட்கள் தொடரும். வெறும், கூகுள் செய்து பாருங்கள், புரியும். வேலை பளுவின் காரணமாக இப்போது இத்துடன் முடித்துக்கொள்கிறேன். பின்பு தொடர்வேன் (மார்ச் மாதம் முடிந்த பின்பு)
ஒன்று மட்டும் உண்மை ரா.ரா.
"கண்டவன் எல்லாம் கவிதை எழுத முடியாது.
கண்டபடி எழுதினால் கவிதை ஆகி விடாது."
அறிஞர் அண்ணா சொன்ன அந்த விளக்கம் மிகவும் சரியானதாகும். கதை எழுதுபவன் கதை எழுதட்டும். யார் வேண்டாம் என்று சொல்வார்கள். கதை எழுதுபவன் நான்காக, ஐந்தாக மடித்து, ஒடித்து எழுதிவிட்டு இதோ என் கவிதை என்று சொல்வது திறந்த வீட்டில் நாய் நுளைவதற்க்குச் சமம். தமிழ் கவிதைக்கு, சாதாரண வேலி மட்டும் இல்லை. யாப்பு என்கிற வலுவான கோட்டை கொத்தளத்தோடு உள்ளது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum