புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_m10ரொமான்ஸ் ரகசியங்கள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொமான்ஸ் ரகசியங்கள் !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 01, 2012 12:59 pm

மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத விஷயம்... காதல். கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து... லேட்டஸ்ட் இணையதளங்கள் வரை காதல் எங்கேயும் இடம் பிடித்திருக்கிறது. இலக்கியம், புராணங்கள், இசை, ஓவியம், சிற்பம் என்று காதலைப் பற்றிப் பேசாத கலைகளே இல்லை.

'கலைகளிலேயே உன்னதமான கலை... சினிமா' என்பார் ரஷ்யப் புரட்சிக்காரர் லெனின். அந்த சினிமாவிலும் காதலே கதையின் தளம். டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவத்தை ஒரு காவியமாக எடுத்த ஹாலிவுட், அதன் பிரதான அடிப்படையாக ஒரு காதலைத்தானே சொன்னது!

காதலைப் பற்றி ஆயிரக்கணக்கான படங்கள் உலகின் அநேக மொழிகளில் வெளிவந்து அழியாப் புகழைப் பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட உன்னதமான படங்களில் ஒன்றுதான் பிரபல இரானிய இயக்குநர் மஜீதி மஜீத் இயக்கிய 'பரன்’!

'பரன்’ என்கிற வார்த்தைக்கு 'மழை’ என்று பொருள். இது ஒரு கவிதைத்துவமான காதல் கதை. ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இரான் நாட்டு தலைநகரான டெஹ்ரானின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆப்கன் அகதிகளின் முகாம்கள் இருக்கும். தலிபான் அரசாங்கத்தின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், அங்கேதான் பல சிரமங்களிடையே வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். அதிகாரப்பூர்வமான அனுமதி அட்டை இல்லாமல் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள்.

ரொமான்ஸ் ரகசியங்கள் ! Avl64
டெஹ்ரான் நகரத்தில் குறைந்த கூலிக்கு இப்படி கட்டடப் பணியில் ஈடுபட்டிருக்கும் அகதிகளுக்கு... டீ, சாப்பாடு தரும் வேலையில் இருப்பான் உள்ளூர் குர்தீஷ் இளைஞனான லத்தீஃப். சுலபமான வேலை என்பதால் ஜாலியாகப் பொழுதை ஓட்டுவான். எல்லோரையும் கலாட்டா செய்தபடி இருப்பான். கட்டட வேலையில் இருக் கும் ஆப்கன் அகதி ஒருவர் விபத்தில் சிக்கி, காலில் அடிபட்டதால், தனக்குப் பதிலாக தன் இளம் மகனை வேலைக்கு அனுப்புகிறார். ரஹமத் என்னும் அந்தப் பையன் மிகவும் மென்மையாக இருக்கிறான். கடினமான வேலைகளை அவனால் செய்ய முடியாது என்று நினைக்கும் முதலாளி, டீ கொடுக்கும் வேலையில் அவனை போட்டுவிட்டு, லத்தீஃபை கட்டட வேலைக்கு மாற்றுகிறார்.

சுலபமான வேலை பறிபோனதால் கடுப்பான லத்தீஃப், ரஹ்மத்தை வம்பு செய்து கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில்... ரஹ்மத் ஆண் அல்ல பெண் என்பதும், அவளுடைய உண்மையான பெயர் பரன் என்பதும் அவனுக்குத் தெரிய வருகிறது. பெண்கள் இதுபோல் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. ரஹ்மத்திடம் முறையான அனுமதி அட்டையும் இல்லை. இதெல்லாம் வெளியே தெரிந்தால் அவளுக்குப் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்பதால்தான் ஆண் வேடமிட்டிருக்கிறாள். இது தெரிந்த பிறகு, லத்தீஃபுக்குப் பாவமாகிவிடுகிறது. இன்ஸ்பெக்டர்களிடமிருந்தும் மற்ற ஆண்களிடமிருந்தும் அவளைக் காப்பாற்றுவதே அவனுக்கு வேலையாகிறது. ஒரு பிரச்னையில் எல்லா ஆப்கன்காரர்களையும் வேலையைவிட்டே நீக்கி விடுகிறார் முதலாளி.

பரனைத் தேடி அவளுடைய அகதி முகாமுக்குப் போகிறான் லத்தீஃப். அங்கே காணும் காட்சிக ளும், பரனின் மேல் அவன் காதல் வயப்படும் காட்சிகளும் அற்புதமாக படம்பிடிக்கப்பட்டிருக் கின்றன. மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பரனின் குடும்பம். ஆனால், அவர்களிடம் பணம் இல்லை. தன்னுடைய அனுமதி அட்டையை விற்று, அந்தப் பணத்தை அவர்களிடம் தருகிறான் லத்தீஃப்.

பரன், லத்தீஃப்பிடம் விடைபெறும் கடைசி காட்சி கவிதை போல் எடுக்கப்பட்டிருக்கும். வெளியே சொல்லாத காதலுடன், ஒரு டிரக்கில் பரன் கிளம்ப, லத்தீஃப் கையசைக்க, அவளுடைய பெயரைச் சொல்வது போல் அப்போது மழை பொழிய ஆரம்பிக்கும். அரசியல் மற்றும் சமூக இன்னல்களிடையே ஒரு காதல் சத்தமின்றி நசுக்கப்படுவதை அதிக வசனம் இன்றி வெறும் விஷ§வலாகவே அழுத்தமாகச் சொன்ன அருமையான படம்... 'பரன்’.

காதல், நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. பழைய குடிசையில் வாழும் ஏழை விவசாயிக்கும் காதல் உண்டு. அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ், ஜென்னி - மார்க்ஸ் என்று புகழ் பெற்ற ஜோடிகள் சரித்திரத்தில் இருந்தாலும், பாடப்படாத காவிய காதல்கள் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன.

காதல் என்பதற்கு திட்டவட்டமான தியரி கிடையாது. மனிதனின் ஆதார இனப்பெருக்கத்துக்காக ஆண் - பெண்ணிடையே இயற்கை தோற்றுவிக்கும் இனக்கவர்ச்சிதான்... காதல். அறிவியல், காதலைப் பற்றி என்ன சொல்கிறது? ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது காதல் தோன்றுவதற்கு முன்னால் அட்ரினலின் போன்ற ரகளையான நரம்பு வழி ரசாயனம், ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது (இதைத்தான் 'ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்). ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலர்களின் ஃபேவரைட்டான சாக்லேட்டில் இது நிறைய உண்டு), அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகிறது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கைகோத்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து, இதயம் ஏகாந்தமாக உணர்ந்து, படபடவென்று அடித்துக்கொள்கிறது. ஆண் - பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது.

இதெல்லாம் அறிவியல் பார்வை. இதைத் தாண்டி இலக்கியப்பூர்வமான, கவிதைத்தனமான, இதிகாசத்தனமான காதல்கள் உண்டு. எந்தவித விளம்பரமும் இல்லாத சாதாரண மனிதர்களின் காதல்தான் உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

''நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும்போது உங்களால் தூங்க முடியாது. ஏனென்றால், காதலின் நிஜம் என்பது நீங்கள் தூக்கத்தில் காணக்கூடிய கனவுகளைவிட சுகமானது, ஆச்சர்ய மானது!'

'காதலுக்கு இனிமையான முடிவு என்பது கிடையாது. ஏனென்றால் காதலுக்கு முடிவு என்பதே கிடையாது!'

- இப்படி காதலைப் பற்றி எத்தனை எத்தனையோ பார்வைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன!

ஆகவே தோழிகளே... வாழ்க்கையின் அடிப்படை சூட்சமம் என்னவென்று தெரிகிறதா? ரொமான்ஸ்! அது இல்லாமல் வாழ்க்கை இல்லை. அது உங்கள் கண்ணீரில் ஆனந்தத்தை வரவழைக்கும். இதயத்தின் ரத்த ஓட்டத்தைச் சரிப்படுத்தும். துன்பங்களை விரட்டியடிக்கும் துணிவைத் தரும். தனிமையை தலைதெறிக்க ஓடவிடும். உங்கள் மனம் மற்றும் உடல் பிரச்னைகளை அற்புத மருத்துவமாகிக் காப்பாற்றும். காதலில்லாத மனித சரித்திரம் இல்லை. இலக்கியம், கலைகள் இல்லை. உலகத்தின் அச்சு சுழல்வதே காதல் என்னும் அச்சாணியில்தான்.

ஆதலினால்...
காதல் செய்வீர் உலகத்தீரே!
நிறைவடைந்தது

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 1:11 pm

உண்மைதான் கலைகளிலே காதல் என்பது மிகவும் சக்தி வாய்ந்ததுதான்.
காதலர்களில் ஒருத்தருக்கொருத்தார் மாறுபட்ட எண்ணங்களையும்,விருப்பங்களையும்,கருத்துகளையும் கொண்டு இருந்தாலும் அவர்களை ஒன்று இணைப்பது காதல் தானே.
இதில் சொல்ல பட்டு இருக்கும் கதை எத்தனை அழகா காதலை சொல்லி இருக்கிறது.நல்ல பகிர்வு பிரசன்னா. நன்றி



ரொமான்ஸ் ரகசியங்கள் ! Uரொமான்ஸ் ரகசியங்கள் ! Dரொமான்ஸ் ரகசியங்கள் ! Aரொமான்ஸ் ரகசியங்கள் ! Yரொமான்ஸ் ரகசியங்கள் ! Aரொமான்ஸ் ரகசியங்கள் ! Sரொமான்ஸ் ரகசியங்கள் ! Uரொமான்ஸ் ரகசியங்கள் ! Dரொமான்ஸ் ரகசியங்கள் ! Hரொமான்ஸ் ரகசியங்கள் ! A
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Mon Feb 13, 2012 11:38 am

சூப்பருங்க



ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 11:44 am

ஆதலினால்...
காதல் செய்வீர் உலகத்தீரே!

காதலி கிடைத்தால் தானே சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரொமான்ஸ் ரகசியங்கள் ! Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:49 am

இளமாறன் wrote:
ஆதலினால்...
காதல் செய்வீர் உலகத்தீரே!

காதலி கிடைத்தால் தானே சோகம்

எத்தனையாவது காதலி உங்களுக்கு வேண்டும்? ஏற்கனவே (இதை சொல்லக் கூடாது என்று என்னை இளா மிரட்டி வைத்துள்ளார்)



ரொமான்ஸ் ரகசியங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 11:52 am

சிவா wrote:
இளமாறன் wrote:
ஆதலினால்...
காதல் செய்வீர் உலகத்தீரே!

காதலி கிடைத்தால் தானே சோகம்

எத்தனையாவது காதலி உங்களுக்கு வேண்டும்? ஏற்கனவே (இதை சொல்லக் கூடாது என்று என்னை இளா மிரட்டி வைத்துள்ளார்)

ஐயா சிவா பெருமானே உங்கள் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா ...

ஒன்றே போதும் அதுவும் நன்றாய் இருந்தால் போதுமே ( உலகம் ரசிக்க தான் - இது சிவா வின் ரகசியம் ) ஜாலி ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரொமான்ஸ் ரகசியங்கள் ! Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:54 am

உலகம் ரசிக்கத்தான் - இது அனைவருக்குமே பிடித்ததுதானே, எனக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா என்ன?



ரொமான்ஸ் ரகசியங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Mon Feb 13, 2012 12:31 pm

என்க்கு ஒரு சந்தேகம் எல்லாம் ஓகே. ஆனா ஒரு தலைபச்சமா காதல் வருதே அது?

subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Mon Feb 13, 2012 12:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக