ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்

3 posters

Go down

12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள் Empty 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்

Post by சிவா Sun Feb 12, 2012 2:01 pm

12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள் Fly

சென்னையில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகளின் மெய் சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சியை குழந்தைகள் வெகுவாக ரசித்தனர்.

சாகச நிகழ்ச்சி

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஒ.டி.ஏ.) பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், சாகசங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவ்வப்போது பாராசூட் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

எதிரி நாட்டு ரேடருக்கு தெரியாமல் பாராசூட்டில் இறங்கி தாக்குதல் நடத்துவது எப்படி என்பதே இந்த பயிற்சியின் நோக்கம். தற்போது ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் பொன்விழா ஆண்டையொட்டி ஒரு சிறப்பான வானவெளி திருவிழாவுக்கு இந்திய ராணுவம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, தாம்பரத்தை அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பாராசூட் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. வியக்க வைக்கும் இந்த சாகச நிகழ்ச்சியை ராணுவம் மற்றும் விமானப்படையினர் இணைந்து நடத்தினர்.

உற்சாக கொண்டாட்டம்

இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு செங்கல்பட்டை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானவர்கள் பயிற்சி மையத்தில் குவிந்திருந்தனர்.

சாகச நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தரையில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து 13 வீரர்கள் ஒவ்வொருவராக பாராசூட் மூலம் குதித்தனர். பறவைகளைபோல் பறந்தபடி, வானில் மிதந்து வந்த வீரர்களை கண்டதும் மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

ஆக்ராவில் இருந்து 7 பாராசூட் ராணுவ படை வீரர்களும், 6 விமானபடை வீரர்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். முதலில் 6 பேரும், அதன் பின்னர் 7 பேரும் விமானத்தில் இருந்து குதித்து தரை இறங்கினர்.

தேசிய கொடி வண்ணத்தில்...

மெய்சிலிர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை குழந்தைகள் மிக உற்சாகமாக கண்டு களித்தனர். அதிலும் குறிப்பாக தேசிய கொடியின் வண்ணங்களுடன் 3 வீரர்கள் பாராசூட்டில் ஒரே நேர்கோட்டில், ஒரே நேரத்தில் பறந்து வந்து தரை இறங்கியதை கண்டு பார்வையாளர்கள் மெய் மறந்து போயினர்.

போர்க்களம் போல் ஆனது...

கார்கில் போரை நினைவு கூறும் வகையில் போர்க்கள காட்சி பயிற்சி அளிக்கப்பட்டது. போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்புதல்? எதிரியை வெடிகுண்டை வெடிக்க செய்து எவ்வாறு வீழ்த்துவது? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பதுங்குகுழியில் மறைந்திருந்து எவ்வாறு எதிரியை குறிபார்த்து தாக்குவது என்பது பற்றியும் பயற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளை பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தின் தலைவர் லெப்டினட் ஜோ உள்பட ராணுவ உயர் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

தமிழர்

ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சியில் 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் கீழே குதித்த மிழக வீரர் குப்புசாமி கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், நவம்பட்டி எனது கிராமம். இதுவரையில் 700-க்கு மேல் பாராசூட் பயிற்சி மேற்கொண்டு உள்ளேன். பாராசூட் வீரர்களுக்கு ஆக்ராவில் பயிற்சி கொடுக்கிறார்கள்.

பயிற்சியின்போது முதல் முதலாக பாராசூட் மூலம் கீழே குதிக்கும்போது பயம் இருக்க தான் செய்யும். நாங்கள் 12 ஆயிரம் அடியில் இருந்து குதித்தோம். ஒரு வினாடிக்கு 180 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வந்தோம்.

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...

விளையாட்டுக்காகவும், போர் முனைக்காகவும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆபத்து காலங்களில் விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கீழே இறங்கும் நேரத்தில் 3 நாட்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்கள் அடங்கிய 45 கிலோ எடை கொண்ட பையையும் எடுத்து வருவோம்.

இன்று நடைபெற்ற பயிற்சியில் ஒரே தமிழர் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. இந்த தேசத்திற்காக போர் முனைக்கு செல்லும் நாட்களை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி


12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள் Empty Re: 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்

Post by மகா பிரபு Sun Feb 12, 2012 3:01 pm

பாராட்டுக்கள்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள் Empty Re: 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 3:09 pm

சூப்பர் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள் Empty Re: 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
»  100 வீரர்கள் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ‘ஸ்கை டைவ்’ செய்து கின்னஸ் சாதனை
»  ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்!
» ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலி
» ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum