ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by jesudoss Sun Feb 12, 2012 1:31 pm

வெறும் பொழுதுபோக்கிற்காகவும், மக்கள் தங்களது அன்றாட கவலையிலிருந்து சற்று நேரம் ஓய்வுபெற்று, கேளிக்கைகளின் மூலம் மன அமைதி பெறுவதற்காகவும் மட்டுமே துவக்கப்பட்டது சினிமா. நாளடைவில் மக்கள் மனதில் கொஞ்சம் பக்தி, சமூக அக்கறையை வளர்க்கும் விதமாக, புராண பக்திப் படங்களும், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்களும், மனதில் பதிய வைக்கும் கதையம்சம் மற்றும் கருத்தாழமிக்க பாடல்களுடன் வெளிவரத்துவங்கின.

மேடை நாடகங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற நடிகர் மட்டுமே, சினிமாக்களில் ஹீரோக்களாக வலம் வந்தனர். நாடக அனுபவம் இல்லாதவர்கள், சினிமாவில் அடியெடுத்து வைக்க முடியாது. ஒரு ஹீரோவுக்கோ, நகைச்சுவை நடிகனுக்கோ, இன்னின்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.ஆகவேதான், எம்.கே.டி., டி.ஆர். மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், வைஜயந்திமாலா, பத்மினி, பானுமதி, கண்ணாம்மா போன்ற புகழ்பெற்ற நாயக, நாயகிகளும், என்.எஸ்.கே., போன்ற நகைச்சுவை நடிகர்களும் கொடிகட்டிப் பறந்தனர்.கதையம்சத்துடன், ஆடல் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அன்றைய சினிமாக்கள், ரசனையுடனும், ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களுடனும், நாகரிகமான கேளிக்கைகளுடனும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தன.காலம் செல்லச் செல்ல, மக்கள் ரசனை மாற்றத்திற்கு ஏற்ப, திரைப்படங்களில் ஆடல், பாடல் காட்சிகள் குறைக்கப்பட்டன.

ஆனால், இப்போது வருகிற 95 சதவீத தமிழ் சினிமாக்களில், வன்முறையில் எப்படி இறங்குவது, கொலை, கொள்ளை எப்படி திட்டம் தீட்டி செய்வது, மேஜர் கூட ஆகாத பெண்ணை, எப்படி மயக்கி காதல் செய்வது, பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, பெற்றோரையும், பெரியவர்களையும் எப்படி அநாகரிகமாக அழைப்பது என சொல்லிக் கொடுக்கின்றன. உதாரணமாக, பெரியவர்களை, "யோவ், பெரிசு' என்றும், தாய், தந்தையை, "கிழவன், கிழவி' என்றும் அழைப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. இது போன்று, தமிழ் கலாசாரத்திற்கு சற்றும் ஏற்புடையதாக இல்லாத காட்சியமைப்புகளும், வசனங்களும், பாடல்களும் இடம் பெற்று குடும்பத்துடன் சினிமா பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கின்றன.

வளர்ந்துவரும் இளம் தலைமுறை கவிஞர் ஒருவர், நல்ல அழகு தமிழில், இலக்கிய நடையுடன் எழுதித் தந்த பாடலை பார்த்து தயாரிப்பாளர், "என்னய்யா இது, இந்தக் காலத்திற்கு தகுந்த பாடலா கேட்டால், ஏதோ சங்க காலத்து பாட்டையல்லவா எழுதித் தருகிறாய்' என்று கடிந்து கொண்டார். அந்தப் பாடல் வரிகளிலுள்ள கலைநயம், இலக்கிய நடை, இலக்கண வார்த்தைகள் ஆகியவற்றை எடுத்துவிட்டு, ஆங்கிலச் சொற்களுடன் ஆபாசமான வார்த்தைகளையும் புகுத்தி எழுதச் சொன்னார். தன்மானமும், தமிழ் பற்றுமுள்ள அந்த கவிஞர், அதற்கு மறுக்கவே அவருடைய வாய்ப்பு பறிபோனது.இன்றைய சினிமாக்களும் அவற்றில் வரும் காட்சியமைப்புகளும், வசனங்களும், பாடல்களும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு எந்த வகையில் உபயோகமாக இருக்கிறது என, எந்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனரால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது.அன்றைக்கு கெட்டுப் போனவர்களும், சினிமாவைப் பார்த்து திருந்தி வாழ நினைத்தனர். இன்றைக்கு திருந்தி வாழ நினைப்பவர்களும், திசைமாறிப் போகும் படியாகத்தான், இக்கால சினிமாக்கள் பெரும்பாலானவை அமைகின்றன.



என்னதான் கடைசி காட்சியில், ஒரு நல்ல முடிவையோ, ஒரு நல்ல செய்தியையோ சொன்னாலும், அதற்குமுன் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்த்த வன்முறை காட்சிகளும், விரச காட்சிகளும், ஆபாச நடனங்களுமே இளம் தலைமுறை, இளவயது நெஞ்சங்களில் ஆழமாகப் பதியும்.நாளுக்கு நாள் பெருகி வரும் கள்ளக்காதலுக்கும், அது தொடர்பான கொலைக்கும், இக்கால சினிமாவின் பங்கும் நிச்சயம் உண்டு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.இக்கால சினிமாக்கள் இளம் தலைமுறையினருக்கு தேசப்பற்றையோ, தெய்வ பற்றையோ உணர்த்தாவிட்டால் பரவாயில்லை; சகித்துக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் தனிமனித ஒழுக்கத்தைக் கூட உணர்த்துவதில்லை.
மீசை கூட முளைக்காத பள்ளி மாணவன், தனக்கு பாடம் சொல்லித்தரும் டீச்சரையோ அல்லது சக மாணவியையோ எப்படி வசியம் செய்வது, இழுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடுவது, பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, ஆசிரியரை எப்படி கொலை செய்வது போன்ற ஒழுக்க நெறியில்லாத கதைகளையும், காட்சிகளையும்தான் இக்கால சினிமாக்கள் இளைய தலைமுறைக்கு சொல்லித் தருகின்றன.



சென்னை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவன், தன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்றே, இக்கால சினிமா, தொலைக்காட்சி தொடர்களால் ஏற்படும் விளைவுகளுக்கு உதாரணமாக சொல்லலாம். "அக்னிபாத்' என்ற இந்தி சினிமாவை 30க்கும் மேற்பட்ட முறை பார்த்து, அதன் மூலம் ஆசிரியையை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்' என அந்த மாணவன் கூறியுள்ளான். "ஒய்திஸ் கொலை வெறி?' பாடலை முணுமுணுக்காத குழந்தைகளே தமிழகத்தில் இல்லை. சினிமா பாடல்களும், காட்சிகளும் பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எந்த அளவுபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.மொத்தத்தில், இக்கால சினிமாக்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு, இன்றைய இளம் தலைமுறையினரை கெடுப்பது என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதில் சந்தேகமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார் என்ற கேள்விக்குத்தான் விடை இல்லை.

vbnarayana@gmail.com


தினமலர்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 1:39 pm

அண்ணா இதற்கு தீர்வு தான் என்ன ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by jesudoss Sun Feb 12, 2012 1:59 pm

எல்லாம் நம்ப கயில் தான் இருக்கிறது பகவதி.
பெற்றோர்கள் பிள்ளைகளை முற்றிலுமாக கவனிக்க வேண்டும்.
அவன் எங்க போகிறான்,,என்ன செய்கிறான்...எல்லாம் கவனிக்க பட வேண்டும்.... அவனது நண்பர்கள் யார். நல்லவர்களா இல்லை கெட்டவர்களா..என்று கவனிக்க வேண்டும்...

தொட்டில் பலகம்தான் சுடுகாடு வரைக்கும்.

அன்பும்,கண்டிப்பும் ,, கண்டிப்பாக வேண்டும்
குழந்தைகளை சினிமா தேயடருக்கு கூட்டிட்டு போறதுக்கு பதிலாக
நல்ல ஆன்மீக சிந்தனைகள் வளர கூடிய இடதிற்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும்,,,,கோயில் மற்றும் பட்டிமன்றம் நடைபெறும் இடம்,,,லைப்ரரி... விளையாட்டுகளை மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் ......

எல்லாம் பெற்றோர்கள் கைல்தான் இருக்கிறது...




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 2:08 pm

நீங்கள் சொல்வது சரி ஜூசுதாஸ் அண்ணா, இப்போது உள்ள பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் உழைது கொண்டிருக்கிறார்கள் , அப்புறம் எப்படி அண்ணா,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by jesudoss Sun Feb 12, 2012 2:46 pm

கூட்டு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களுக்கு இது ஒரு பெரிய சுமையாக இருக்காது ....தாதா ,,,பாட்டி ,,,மாமா ,,,அத்தை போன்றவர்கள் பார்த்து கொள்வார்கள்
தனி குடும்பத்தில் வளரும் குழந்தைகள் தான் பிரச்சனையல் சிக்குகின்றன





தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550 உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 2:57 pm

அண்ணா ,அனைவரும் நாகரீக மோகத்தில் தங்களின் சந்தோசதையே பெரிதாக நினைத்து கொண்டு தனி குடும்பமாக வல்ழவே ஆசை படுகிந்த்ரனர் , மேலும் தன் பெற்றோரை தான் தான் பர்துக்கொள்ள வேண்டியகட்டாயம் வரும் போலுது அவர்கள் முதியோர் இல்லத்தில் தள்ள படுகிந்த்ரனர் இதுதான் இண்ட்ராய சூல்நிலை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by சாமி Sun Feb 12, 2012 4:56 pm

நண்பர்களே
இதற்கு ஒரே வழி, எளிமையான வழி, ஏற்றுக்கொள்ளக்கூடிய வழி வீட்டிலிருந்து ‘தொலைக்காட்சி பெட்டியை’ அப்புறப்படுத்துவதுதான்.
நன்றி
சாமி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 5:32 pm

சாமி அண்ணா உங்களால் முடியுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by சாமி Sun Feb 12, 2012 5:40 pm

நண்பர் பகவதி அவர்களுக்கு,
என் வீட்டில் ‘தொலைக்காட்சி’ வைத்துள்ளேன். ஆனால் எந்த கேபிள் இணைப்பையும் கொடுக்கவில்லை. DVD PLAYER வைத்துள்ளேன். தேர்ந்தெடுத்த AUDIO, VIDEO மற்றும் MOVIES பார்ப்பதற்காக.
நன்றி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 5:49 pm

அண்ணா உண்மையிலயே நீங்கள் க்ரேட், ஆனால் பயனுள்ள விஷயங்களும் உள்ளன அறிவியல் பூர்வமான நிகல்சிகள் செய்திகள் விளயாட்டு ,முதலிய தேவைகளுக்கு டி‌வி தேவை தானே அண்ணா ,
ex national geography discovery
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி Empty Re: உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum