ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

3 posters

Go down

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Empty பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

Post by சிவா Sun Feb 12, 2012 11:12 am

குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி காரணமாக, என் தோழிக்கு, 35 வயதில் தான் திருமணம் நடந்தது. சமீபத்தில், அவளை பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஒரு பெண் டாக்டரும், இரண்டு நர்சுகளும் பரிசோதித்துவிட்டு, "ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும்...' என்றதுடன், போனசாக, "ஏன் காலாகாலத்துல கல்யாணத்தை பண்ண வேண்டியது தானே... ஒருத்தன் கூடவா கிடைக்கல... இந்த வயசுலயா குழந்தை பெத்துப்பாங்க?' என்று கடுகடு குரலில், "அட்வைஸ்' மழையும் பொழிந்தனர்.

உடனே நான், "அவள் ஏழை... இப்ப கல்யாணம் ஆனதே கடவுள் புண்ணியம்...' என்றேன்.

அதற்கும் சளைக்காத அந்த டாக்டர், "ஏழையா பிறந்தா, எவனையாவது காதலிச்சு கல்யாணத்தை பண்ணி, சிக்கல் இல்லாம குழந்தையை பெத்துக்க வேண்டியது தானே... இப்ப எங்க உயிரை எடுக்கறீங்களே...' என்றார் கோபமாக. மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல், வாயடைத்து நின்றேன்.

பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணின் மனதை, இந்தப் பேச்சு எவ்வளவு பாதிக்கும் என்பதை, அவர் புரிந்து கொள்ளாததை நினைத்த போது, ஆத்திரம் தான் பொங்கியது.

பெண்மைக்கு மதிப்பு கொடுப்பரா அரசு மருத்துவமனை பெண் டாக்டர்கள்?

— அ.துஷாலி, அறந்தாங்கி.


பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Empty Re: பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

Post by சிவா Sun Feb 12, 2012 11:12 am

இரட்டை அர்த்த பாடல் தேவையா?

தனியார், "டிவி' சேனல்களின் நிகழ்ச்சிகள், மிகவும் மோசமாக போய் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அதில் ஒளிபரப் பப்படும் நாடகங்கள், நடனங்கள் மற்றும் திரைப் படங்கள், தரமற்று, அருவருப்பாகவும், குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாகவும் இல்லை. இவை, நம் வீட்டிற்குள் வந்து குப்பையை கொட்டி, நம் குடும்பங்களை பாழ்படுத்துகின்றன.

மேலும், தனியார் எப்.எம்., என்று சொல்லக் கூடிய வானொலி சேவை, 24 மணி நேரமும் மக்களை கெடுத்து, குட்டி சுவராக்குகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள், இந்த, எப்.எம்., சேவையில் ஒலிபரப்பாகும், எந்த கருத்தும் இல்லாத, மிக மட்டமான இரட்டை அர்த்தம் பொதிந்த பாடல்களையும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரின், மட்டமான, அர்த்தமற்ற விளக்கங்களையும் கேட்டு, தவறான பாதைக்கு சென்று விடுகின்றனர்.

உதாரணமாக, ஒரு தொகுப்பாளர், ஒரு ஆணிடம், "உங்களுக்கு காதலி உண்டா?' என்று கேட்கிறார்; அவரும், "உண்டு' எனவும், "அது, ஒருதலை காதல்...' என்றும் கூறுகிறார். அந்த நபரிடம், "அந்த பெண்ணின் பெயரை சொல்ல முடியுமா? அதை சொல்வதன் மூலம், அந்த பெண், எப்.எம்., சேவை கேட்டால், அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்து, அது, உங்களுக்கு சாதகமாக அமையும்...' என்றும் கூறுகிறார். அவரும், பெயர் ஊர் மற்றும் தெருவின் பெயரை தெரிவிக்கிறார்.

அந்த பெண்ணின் குடும்பத்தினர், அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து இருக்கும் போது, அந்த மாப்பிள்ளை, இந்த ஒலிபரப்பை கேட்டால், அந்த கல்யாணம் நின்று விடும் வாய்ப்புள்ளது; ஆனால், அந்த பெண்ணின் மேல், எந்த தவறும் இல்லை. இது, ஒரு பானைக்கு, ஒரு சோறு பதம் தான். இன்னும் எவ்வளவோ கலாசார கேடுகள் தினமும் அரங்கேறி வருகின்றன.

இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தக்கூடிய, ஒரு அரசு ஏஜன்சி நம்மிடையே இல்லை. ஆகவே, பொது மக்களாகிய நாம் தான், இந்த, "டிவி' சேனல்கள் மற்றும் எப்.எம்., நிகழ்ச்சிகளை பார்ப்பதை, கேட்பதை நிறுத்த வேண்டும். அப்போதுதான், நம்முடைய சந்ததியினர் நல்ல முறையில் வளர்வர்.

— எஸ்.கிருஷ்ணன், சென்னை.


பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Empty Re: பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

Post by சிவா Sun Feb 12, 2012 11:13 am

ஆண்களும் சமைக்க வேண்டும்!

என் உறவினர் பெண் ஆசிரியராக இருக்கிறார். சமீபத்தில் அவரை காணச் சென்ற போது, அவருடைய, 10 வயது மகனும், 12 வயது மகளும், சமையல் அறையில் இருந்தனர். அம்மா மாடியிலிருப்பதாக சொல்லவே, மாடிக்கு சென்றேன்.

பி.எட்., தேர்வுக்காக படித்து கொண்டிருந்த அவர், என்னை வரவேற்றார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, அவருடைய மகளும், மகனும் மாடிக்கு வந்தனர். ஒருவர் கையில், எங்கள் இருவருக்கும் தனித்தனியே இரு தட்டில் நூடுல்சும், மற்றொருவர் கையில், குட்டி பிளாஸ்கில் டீயும் இருந்தது. வியப்போடு பார்த்தேன்.

"மாமா... தினமும் அம்மா தான் எங்களுக்கு சமைத்து தர்றாங்க. அவங்கதான் எங்களுக்கு நூடுல்ஸ் செய்யவும், தோசை சுடவும் கத்துத் தந்திருக்காங்க. இப்ப அவங்க பரிட்சைக்கு படிக்கறதாலே, நாங்க உதவி செய்யறோம்; சாப்பிடுங்க...' என்று கூறிவிட்டு சென்றனர்.

ஆச்சரியத்துடன் உறவினர் பெண்ணை பார்த்தேன். "இந்த காலத்துல ஆண் பிள்ளைகளும், கட்டாயம் சமையல் செய்ய கத்துக்கணும். கல்யாணமான புதுசுல, என் கணவருக்கு அடுப்பை பற்றவைக்கக் கூட தெரியாததால், பல சமயங்களில் கஷ்டப்பட்டேன். அதனாலத்தான், பசங்களுக்கு இப்பவே சொல்லி கொடுக்கிறேன். நாளைக்கே படிப்புக்காகவோ, வேலைக்காகவோ, அவங்க தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தா, தாமாகவே சமைச்சு சாப்பிடணும் இல்லையா?' என்றார்.

எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று நினைத்துக் கொண்டேன்.

— ஷோபனாதாசன், நாட்டரசன்கோட்டை.


பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Empty Re: பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

Post by சிவா Sun Feb 12, 2012 11:13 am

நாகரிக அடிமைகள்!

உறவினர் கல்யாணத்தில் கலந்து கொள்ள, வெளியூர் சென்றிருந்தேன். அதே ஊரில் தான், என் பள்ளி சினேகிதி, அரசுத் துறையில் வேலை பார்க்கிறாள். ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று, அவள் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். எதிர்பாராத சந்திப்பால், உருவான மகிழ்ச்சியில் திளைத்தோம்.

சிறிது நேரம் கூட, அந்த மகிழ்ச்சி நிலவவில்லை. "ஏன் படித்தோம்... ஏன் வேலையில் சேர்ந்தோம்ன்னு இருக்கு. மொத்த சம்பளத்தையும் மாமியார் வீடு வாங்கிக் கொள்கிறது. ஆபீஸ் வந்து போக, ரயில் பாஸ் எடுத்து கொடுத்து விடுகின்றனர். டீ செலவுக்கு, 10 ரூபாய் மட்டும் தருகின்றனர். விருப்பப்பட்ட ஒன்றையும் வாங்க முடிவதில்லை. புடவை கூட அவர்கள் வாங்கிக் கொடுத்தால் தான் உண்டு. கேட்டால், "கடன் அடைக்க வேண்டியிருக்கிறது. வாகனம் வாங்க வேண்டியிருக்கு, குழந்தைகளின் எதிர்காலத்துக்கு, "பிளான்' செய்ய வேண்டியிருக்கிறது...' என, வாயடைத்து விடுகின்றனர். இப்போ அபூர்வமாய் நீ வந்திருக்கே. உனக்கு, என்னால் டிபன் வாங்கித் தரக்கூட முடியாது...' என, கண்கலங்கினாள் சினேகிதி.

அவளுக்கு ஆறுதல் சொல்லி, விடை பெற்று திரும்பியதிலிருந்து, மனம் பாரமாகி விட்டது. ஓரளவே படித்த நான், வேலைக்கு செல்லாமல், ஹவுஸ் ஒய்ப்பாக இருக்கிறேன். என் கணவர் சம்பாதிக்கிறார் என்றாலும், வீட்டு நிர்வாகம், என் கையில் இருக்கிறது; சுதந்திரமாக இருக்கிறேன்.

என் தனிப்பட்ட விருப்பங்களில், என் கணவரோ, குடும்பத்தினரோ குறுக்கிடுவதில்லை. அதற்காக நானும் வீண் செலவு செய்யவோ, அனாவசியமாக ஊர் சுற்றவோ மாட்டேன்.

படித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்ணுக்கு, ஒரு சேலை எடுக்கும் சுதந்திரம் கூட கொடுக்காத, அந்தக் குடும்பத்தார் போன்றோர் எப்போது திருந்துவர்?

என் தோழி போன்ற நாகரிக அடிமைகள் எப்போது மீள்வர் என்று யோசிக்கும் போது, அயர்ச்சி ஏற்படுகிறது.


பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Empty Re: பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 1:58 pm

தகவல்கள் அனைத்தும் நம் சமுதாய சீர்கெடையே தெளிவுபடுதுகிந்த்ரன்
ஆனால் நம்மால் ஏதும் செய்ய இயலாதே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Empty Re: பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

Post by அகிலன் Sun Feb 12, 2012 4:31 pm

குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி காரணமாக, என் தோழிக்கு, 35 வயதில்
தான் திருமணம் நடந்தது. சமீபத்தில், அவளை பிரசவத்துக்காக அரசு
மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஒரு பெண் டாக்டரும், இரண்டு நர்சுகளும்
பரிசோதித்துவிட்டு, "ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும்...'
என்றதுடன், போனசாக, "ஏன் காலாகாலத்துல கல்யாணத்தை பண்ண வேண்டியது தானே...
ஒருத்தன் கூடவா கிடைக்கல... இந்த வயசுலயா குழந்தை பெத்துப்பாங்க?' என்று
கடுகடு குரலில், "அட்வைஸ்' மழையும் பொழிந்தனர்.

உடனே நான், "அவள் ஏழை... இப்ப கல்யாணம் ஆனதே கடவுள் புண்ணியம்...' என்றேன்.

அதற்கும்
சளைக்காத அந்த டாக்டர், "ஏழையா பிறந்தா, எவனையாவது காதலிச்சு கல்யாணத்தை
பண்ணி, சிக்கல் இல்லாம குழந்தையை பெத்துக்க வேண்டியது தானே... இப்ப எங்க
உயிரை எடுக்கறீங்களே...' என்றார் கோபமாக. மேற்கொண்டு என்ன பேசுவதென்று
தெரியாமல், வாயடைத்து நின்றேன்.

பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணின்
மனதை, இந்தப் பேச்சு எவ்வளவு பாதிக்கும் என்பதை, அவர் புரிந்து கொள்ளாததை
நினைத்த போது, ஆத்திரம் தான் பொங்கியது.

பெண்மைக்கு மதிப்பு கொடுப்பரா அரசு மருத்துவமனை பெண் டாக்டர்கள்?


அண்மையில் மருத்துவமனையில் பெண் டாக்டர் கொலை என்று ஒரு செய்தி வந்தது.
இப்போது காரணம் புரிகிறது.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்? Empty Re: பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» பெண் மூக்கில் சிக்கிய பல்செட் அகற்றம் பாளை. ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
» பெண்மையை மதிப்போம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum