ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:10 pm

First topic message reminder :

முதல் பரிசு பி.ஜி .ராமன்


அசையாதா அரசியல் தேர்

பயனர் பெயர்: பிஜிராமன்

சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்

தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்

இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்

எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்

பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:32 pm

1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?





ஈழமா இருளும்?

அறுத்து எறியப்பட்ட மார்புகளில் தானடா
உங்கள் அஸ்த்தமனம் தெரிகிறது
எங்கள் அடிவானம் சிவக்கிறது.
வெட்டி எறியப்பட்ட விரல்களில்தான்
உங்கள் வீரம் விலைபேசபட்டிருக்கிறது
எங்கள் வேட்கை விளைகிறது.
எறியப்பட்ட கொத்துக் குண்டுகள்தான்
உங்கள் பலவீனம் .
கொத்துக்கொத்தாய் நாங்கள் செத்ததுதான்
எங்கள் பலம்.
வெடித்த பீரங்கிகளில் இருந்தது கரிமருந்தல்ல
உங்களின் கர்வம்.
அதுதான் எங்களின் கௌரவம்.
பிணங்களின் நாற்றத்தில்
பூப்பரிக்கும் புல்லுருவிகளே
இறந்தது எங்களின் மனிதர்களல்ல
உங்களின் மனிதம்.
ஒளியாய் புறப்படும்
எங்கள் "ஈழமா இருளும்?".


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:34 pm

2. வித்யாசனின் காதல் எது வரை ?

இந்த காதல் எதுவரை ?

இரவெல்லாம்
செல்லில் செல்லப் பேச்சும்
எக்கச் சக்க எஸ்எம்எஸ்ஸூம்;

பகலெல்லாம்
ஹோட்டலில் வெட்டி அரட்டை
தியேட்டருக்குள் சில்மிச சேட்டை;


ஃபேஸ்புக், டுவிட்டர்
இணையதள இதய இணைப்பு ;
மணிக்கணக்கில்
முகம் பாராது சாட்டிங் தவிப்பு;

அழகின் மையத்தில்
ஆரம்பமான சங்கமம்;
அணைப்பின் கதகதப்பில்
ஆதாயம் தேடும் காமம்;


நீ பாதி; நான் பாதி
முதல் சந்திப்பில்;
நான் அப்பாவி; நீ பாவி
பிரிவின் முடிவில்;

காசு இருக்கும் வரை
சுற்றிடுவோம் பார்க், பீச்;
காலியான பின்
சொல்லிடுவோம் பிரண்ட்சிப்;


பிடித்தால் மட்டுமே
வெட்டிங்
அதுவரை செய்வோம்
டேட்டிங்;

இந்த காதல் எதுவரை ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:36 pm

3.அதிப்பொண்ணு அவர்களின் தூரத்து உறவுகள்

தூரத்து உறவுகள்


கதைகள் சொல்லி தாலாட்டு பாடி
மடிசாய்த்து உறங்க வைத்த பாட்டி
யானையாய் தவழ்ந்து என்னை சுமந்து
குறும்புகளை இன்பமென அனுபவித்த தாத்தா

சுருங்கிப் போன இதயத்தில் இடம் இல்லாததால்
ஒதுக்கப்பட்டு விட்ட அவர்கள்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!

ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மகிழ்ந்து
கல்விளையாட்டும் பாண்டியும்
எனக்கு கற்றுக்கொடுத்த எதிர்வீட்டு தோழிகள்

நாகரீகத்தோடு ஜீன்சும் அணிந்துவந்த
நகர யுவதிகளாய் மாற விரும்பாத அவர்களும்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!

பண்டிகைக்கால பலகாரம் செய்து
பகிர்ந்துக்கொடுத்த காலம் மாறி
பக்கத்து வீட்டுக்காரர்களும் கூட
இப்போது என் தூரத்து உறவுகளாய்!

அன்னைத்தந்தை மட்டுமே இருக்கின்றனர்
இப்போதைய இதயத்தில் வாடகைக்கு!
நாளை கணவனும் குழந்தையும் வந்தபின்பு
அவர்களும் ஆகிப்போவர் என் தூரத்து உறவுகளாய்!


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:38 pm

4.திரு நாகாவின்

பெண்ணே ஏழு நீ இடியாக

கோதை பெண்ணிருந்தாள் காலையிலே எழுப்பிவிட்டாள்
பாதை காட்டிவிட்டாள் பெண்ணே எழுந்துவிடு இடியாக !
வாதை அகன்றுவிடும் வாழ்க்கை சிறந்துவிடும்
போதை கணவருக்கு புத்தியும் வந்துவிடும் !

சண்டைபோட்டதெல்லாம் சரித்திரமாய் போகட்டும் !
மாமியாரும் மருமகளும் மங்களமாய் வாழட்டும் !
பெண்ணே பெண்ணடிமை பேய்த்தனங்கள் ஓயட்டும் !
பெண்ணே எழுந்துவிடு இடியாக இனியேனும் !

தாய்குலம் நீ என்பார் பொறுமையின் சிகரம் என்பார்
பேயும் இரங்கும் என்பார் பின்னரோ அடிமை செய்வார்
உண்மை உணர்ந்து விடு உன்னை உணர்ந்து விடு
பெண்ணே எழுந்துவிடு இடியாக இனியேனும் !

ஏட்டில் உயர்த்திவிட்டு இல்லத்தில் அடிமை செய்வார் !
விட்டில் பூச்சியாக விழுந்திடாதே அடிமையாக !
தட்டில் சோறு விழ தாய் உந்தன் தயவு வேண்டும் !
அட்டிகை மனம் வெறுத்து அடிமைதனம் விலக்கு !

காதல் இன்றேல் சாதல் என்று பாரதியை துணைக்கழைப்பார்
மோதலிலே போய்முடிய பாதியிலே விலகிடுவார்
பார்த்து பழகு நீயும் பயந்தன்னை போக்கிவிடு !
சார்ந்து வாழாதே சொந்தமாக சுமந்துவிடு !

வார்த்த சிலை என்பார் வார்த்தையில் மயங்காதே
வேர்த்து விருவிருக்க உழைப்பென்னவோ உன்னதுதான் !
நாரின்றி மலரினை நாம் கோற்பதெவ்வாறு ?
நாரி உன் பெயர்தான் நலம் உன்னால் விளைவதுதான் !

தமிழ்கவிஞன் நான் என்று தலைநிமிர்த்தும் தரணியோரே
தமிழ் அமுது உண்ணவைத்த தாய் அமுதை மறக்காதீர்
தாரமதை தாயாக மதித்து வாழ்ந்திடுவீர் இல்லையென்றால்
பெண்ணே எழுந்துவிடு இடியாக (என) எழுதப் பணித்துவிடு !

விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !

உந்தன் வீரத்தால் பெண்ணடிமை அழியட்டும் !
சிந்தனை உயர்த்தி நீயும் சீக்கிரம் எழுந்துவிடு !
சந்தத்தில் பாடிவிட்டோம் சாத்திரமாகி விடு !
விந்தைதான் இன்னும் நீ எழுவதற்கு எழுதுவது !


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:40 pm

5.திரு.நியாஸ் அஷ்ரஃப்

விடியலைத் தேடும் விடிவெள்ளி
நிசப்தம் தாலாட்டும்
நித்திரையின் நடுவிலொரு
நிதர்சனக் கனவு !

அங்கே..
ஒரு விடியல்
பெயர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
இருளின் குவியலில் இருந்து.

பணக்காரன் படித்தவன்
பாமரன் இவனென
பாகுபாடெதுவுமின்றி
பரவியிருக்கிறது பேரிருள் !

இருளுக்கெதிராய்
ஏதேனும் செய்துகொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொருவரும்..
சிலர் தீக்குச்சி கிழிக்கிறார்கள்
சிலரோ தீப்பந்தங்களோடு
சிகரெட் வெளிச்சமே போதுமென்று
சில பேர்,
இன்னும் சிலருக்கு
இருள்தான் இன்பமாம்

தமக்கொளி கிடைக்க
அடுத்தவரை எரிக்கிறார்கள் சிலர்
அடுத்தவருக்கு ஒளிகொடுக்க
தம்மையே எரிப்பவரும் அங்குண்டு.

உங்கள்
விளக்குகள் அத்தனையும் கொடுங்கள்
விடியல் தருகிறோம் நாங்கள்
என்றொரு கூட்டம்
பிரச்சாரம் செய்கிறது
சம்மதம் என்கிறது
விடியலுக்காய் விழையும் கூட்டம்

இறுதியில்..
இதோ இப்போது அவர்கள்
வெளிச்சம் தொலைத்தவர்கள்
மீண்டும் இருளில்
விடியலை விதைக்கிறார்கள்
நாளையேனும்
விளையும் விடியலென்று !


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:42 pm

6.பார்த்தி 28

ஈழமா இருளும்?

அங்கு எங்கள் சகோதரர்களின் சடலங்கள் புதையுண்டிருக்கலாம்
ஆனால் எங்கள் சபதங்கள் இன்னும் புதைபடவில்லை!

அங்கு எங்கள் குடும்பங்கள் கொளுத்தப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் கொள்கைகள் இன்னும் கொளுத்தப்படவில்லை!

அங்கு எங்கள் போராட்டங்கள் பொசுக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் போர்க்குணம் இன்னும் பொசுக்கப்படவில்லை!

எங்கள் வீரர்கள் அங்கே வீழ்ந்துபோயிருக்கலாம்
ஆனால் எங்கள் வீரம் இன்னும் வீழ்ந்துவிடவில்லை!

முள்வேலி முகாம்களில் எங்கள் முன்னோடிகளை முடக்கியிருக்கலாம்
ஆனால் எங்கள் முயற்ச்சிகள் இன்னும் முடங்கிவிடவில்லை!

எங்கள் வெற்றியின் கிளைகள் அங்கு வெட்டப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் வேர்கள் இன்னும் வெட்டப்படவில்லை!

தனிஈழம் நோக்கித் தளராமல் நடப்போம்!
தமிழ்த்தேசம் அமைய தடையனைத்தும் கடப்போம்!

நம் இனமழிக்க வருவோரின் இருதயங்கள் பிளப்போம்!
சகுனிகளைச் சங்கறுத்துச் சாக்கடையில் கலப்போம்!

புரட்சிப் புற்கள் மேயக்கிடைத்தால் புள்ளி மான்களும் புலியாகும்!
நாம் புரட்டிப்போடும் புயலாய் எழுந்தால் பகைவர் கூட்டம் பலியாகும்!

பொழுது ஒருநாள் புலரும் என்று பொறுத்திருந்தால் பொருளில்லை!
இறுதித் தமிழன் இருக்கும்வரையில் ஈழத்திற்கு இருளில்லை!


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:45 pm

7.கார்த்திக் எம் ஆர்


வேரை மறந்த விழுதுகள்
அப்பாவின் பெயருக்கு என்றோ வந்து பிரிக்கப்படாத
செல்லரித்த கடிதம் கண்டு, சொத்துக்கள் இருக்கும் என்ற
சந்தோசத்தில் படிக்கப் போனான்..
"நல்லா இருப்ப என்ற நம்பிக்கையில
முதலும் முடிவுமா ஒரு கடுதாசி எழுதறேன்..
பாசத்தையும் கலந்து தான் பாலா உனக்குக் கொடுத்தேன்,
ஆனா தங்கத்தாலி மஞ்சக் கயிறா மாறிடுச்சு,
வாழ்ந்த வீடும் முதியோர் இல்லமா மாறிப்போச்சு,
நீ விட்டுப் போனபோதே பாதி உயிரு போயிருச்சு,
இப்ப மீதியையும் எடுத்துகிட்டு
உன் படத்த பாத்துகிட்டே உங்கப்பாவும் போய்ட்டாரு..
நீ இத படிக்கிறேனா, என் உயிரு எப்பவோ போயிருச்சு,
கண்ண கசக்கிட்டே என் கல்லறைக்கு வந்திராத,
துடைக்க முடியாம தாங்காது என் நெஞ்சு,
சம்பாதிக்க உனக்கு சொல்லிக் கொடுத்தோம்,
சேத்தி வெக்க சொல்றதுக்குள்ள சொல்லாம போய்டியே,
அத மட்டும் கத்துகிட்டு நல்ல இருடா என் மவனே..!!"
இப்படிக்கு இறப்பின் நுனியில் உன் அம்மா,
கண்டவுடன் கண்ணீருடன் கூட்டி வர சென்று விட்டான்,
முதியோர் இல்லத்திலிருந்த தன்
அப்பாவையும் அம்மாவையும்..!!


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 7:46 pm

வார்த்தைகளில் பாத்திக் காட்டும் பார்த்திக்கு வாழ்த்துகள்.


 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 224747944

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 7:46 pm

கார்த்திக் எம்.ஆர்.க்கும் வாழ்த்துகள்.


 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 224747944

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:47 pm

8.விஷ்வா32

துரத்து உறவுகள்

சொந்த ஊர் திருவிழா ...

14 வருட வனவாசத்திற்கு
(நரக வாழ்கைக்கு ) பிறகு ,,
பிறந்த ஊருக்கு பயணம் .....

கையில் ரௌத்திரமும் , கண்ணில் கருணையும் ,,
கொண்டு முதல் ஆளாக வரவேற்றார் ,,
எல்லை தெய்வம்
அய்யனார்...

நான் ஊஞ்சல் ஆடிய ஆழ மரமும் ,,
நான் கில்லி ஆடிய கருவேலங்காடும் ,,
அடுத்த தலைமுறை பிள்ளைகளோடு
விளையாடி கொண்டிருந்தன....

நான் ஒற்றை சக்கர வண்டி ஓட்டிய மண் ரோடு ,,
இப்போது தார் ரோடு ஆகா மாறி இருந்தது ...

எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தக் கிணறு ,,
தடுப்பு சுவர் வைத்து பூட்டப் பட்டு இருந்தது ..

திண்ணை வைத்து கட்டப் பட்டு இருந்த வீடுகளில் ,,
புதியதாய் காம்பவுண்ட் சுவர் முளைத்து இருந்தது ...

ஊருகண்ணு , உறவுகண்ணு, பேய்கண்ணு,
பிசாசுகண்ணு எல்லாகண்ணும் ஒழுஞ்சு போக,,
என ஆரத்தி எடுத்த அத்தை ....

கோவிலுக்கு போறப்ப ,,
பேண்ட்டு சட்டைல வர ,,
போய் வேட்டி கட்டிட்டு வா ,,
என அதட்டிய பெரியப்பா ...

என்ன கொழுந்தனாரே இந்த திருவிழால,,
எனக்கு தங்கச்சி பாத்திடலாம என ,,
கிண்டலடித்த அண்ணி .

வாடா வளந்தவனே என்று ,,
பழைய பட்ட பெயரை மறக்காமல் ,,
இருக்கும் பால்யவயது தோழர்கள் ..

என்ன விசு நல்லா இருக்கியா ,,
ஆளே மாறிட்ட, என இடுப்பில்
கை குழந்தையுடன் நலம் விசாரித்த
பால்யவயது தோழி...


சாந்தமாய் நலம் விசாரித்துவிட்டு,
உடுக்கை சத்தம் கேட்டவுடன் ,
கருப்பன்னசாமியாய் அவதாரம் எடுத்த சித்தப்பா ..

என் பேராண்டி டவுன் ல
என்ஜினியர் வேல பாக்குறான்
என சக வயது தோழியிடம்
பெருமை பீத்திகொண்ட
ஆத்தா .....

எலேய் உனக்கு ஆறு வயசுல
வெவரம் தெரியாதப்ப
இந்த திருவிழால தான்
தொலஞ்சு போய் எங்கள பாடாப் படுத்தன...
என்ற தாத்தா...

எல்லோருக்கும் கை அசைத்துவிட்டு
காரின் இருக்கையில் அமர்ந்து கண்களை முடிய போது
விவரம் தெரிந்தும் தொலைந்தே போய் இருந்தேன்
இந்த திருவிழாவில் .......


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum