ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

Post by சார்லஸ் mc Sat Feb 11, 2012 12:52 pm

First topic message reminder :

“இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்”

ஒரு புதிய உடன்படிக்கையின் மூலமாக

வேதாகமத்திலுள்ள உடன்படிக்கைகள்


உடன்படிக்கை“ என்பது இரு சாரார் சில குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களையோ அல்லது நிபந்தனைகளையோ நிறைவேற்றுவதாக வாக்குக் கொடுத்து, செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும்.

1
“நிபந்தனைக்குட்பட்ட” உடன்படிக்கை என்றால், இருவரில் ஒருவர் சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் ஒன்றைச் செய்வதாக மற்றவர் கொடுக்கும் வாக்குத்தத்தம் ஆகும். “நீ அதைச் செய்தால் நான் இதைச் செய்வேன்”.

2
“நிபந்தனையற்ற” உடன்படிக்கை என்றால் எந்த நிபந்தனையுமில்லாத வாக்குத்தத்தம் ஆகும். “நீ என்ன செய்தாலும், அல்லது செய்யா விட்டாலும், நான் இதைச் செய்வேன்”.

வேதாகமத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பல சுவாரசியமான, முக்கியமான உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன:

1. ஏதேனில் - தேவனுக்கும் மனுக்குலத்துக்கும் இடையே

2. ஆதாமோடு - தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே

3. நோவாவோடு - தேவனுக்கும் நோவாவுக்கும் இடையே

4. ஆபிரகாமோடு - தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே

5. மோசேயோடு (பழையது) - தேவனுக்கும் .ஸ்ரவேலருக்கும் இடையே

6. தாவீதோடு - தேவனுக்கும் தாவீதுக்கும் இடையே

7. புதிய ஏற்பாடு - தேவனுக்கும் சபைக்கும் இடையே

“ஏற்பாடு” என்பதற்கும் “உடன்படிக்கை” என்பதற்கும் அர்த்தம் ஒன்றே.

வேதாகமம் பழைய மற்றும் புதிய “ஏற்பாடுகளாகப்” பிரிக்கப்பட்டிருப்பதை
நாம் அறிவோம்.

திட்டவட்டமாக குறிப்பிட வேண்டுமானால், “பழைய ஏற்பாடு” தேவனுடைய நியாயப் பிரமாணத்தை அடிப்படையக் கொண்டிருந்த, மோசேயின் உடன்படிக்கையை குறிப்பிடுகிறது.

“புதிய ஏற்பாடு” - தேவனுடைய கிருபையை அடிப்படையாகக் கொண்ட புதியதும் இன்னும் சிறப்பானதுமான உடன்படிக்கையை குறிப்பிடுகிறது.

இப்போது இந்த இரண்டு உடன்படிக்கைகளையும் விளக்கமாகப் காண்போம்.

தொடரும்...




Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 1:50 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

Post by சார்லஸ் mc Tue Feb 14, 2012 5:47 am

“புதிய உடன்படிக்கை செல்லத்தக்கதாக்கப்படுகிறது”



ஒரு உடன்படிக்கை அமுலுக்கு வர வ‌ேண்டுமானால், முதலில் அது செல்லத்தக்கதாக்கப்பட வேண்டும். அல்லது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
புதிய உடன்படிக்கை கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக மட்டுமே செல்லத்தக்கதாக்கப்பட முடியும் (உறுதிப்படுத்தப்பட முடியும்.).

மனிதன் வீழ்ச்சியடைந்த போது, பாவம் மற்றும் மரணத்தின் பிரமாணம் செயல்படத் துவங்கியது.

தேவனுடைய கிருபை மட்டும் இல்லாவிட்டால் இதன் பின் விளைவு மனுக் குலம் முழுமைக்கும் காலாகாலமான ஒரு சோகமாகவே நிலைத்திருந்திருக்கும் . ஆனால், அந்தக் கிருபை கல்வாரியில் கிறிஸ்துவின் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டது. அவரால் மட்டுமே தேவனுடைய புதிய உடன்படிக்கையின் மூலமாக, நமது இரட்சிப்பின் மீது இறுதி முத்திரையிட முடிந்தது.

இந்த சிந்தனையை இன்னும் விரிவாகக் காண்போம். ஒரு மனிதன் தன் இறுதி உயிலை எழுதும்போது, அவருடைய மரணத்துக்குப் பிறக‌ே அது அமுலுக்கு வரும் என்று பல நாடுகளின் சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

தேவனும் தமது உயிலை ஒரு புதிய ஏற்பாடு அல்லது உடன்படிக்கையின் வடிவில் நிறுவினார். அதை எழுதியவர் மரணமடையும் வரையில் அது அமுலுக்கு வர முடியாது.

இந்தக் காரணத்துக்காகத்தான், தேவன் தமது குமாரனை இந்த உலகத்தில் மனுஷகுமாரனாக வரும்படிச் செய்தார். புதிய உடன்படிக்கை - அவருடைய உயில் - அமுலுக்கு வரும்படியாக அவர் மாிக்கும்படி வந்தார்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 2:09 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

Post by சார்லஸ் mc Tue Feb 14, 2012 6:18 am

“பரிசுத்தாவியானவர்”

(புதிய உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்)
பகுதி: அ

ஒரு உயில் அல்லது இறுதி சாசனம் எழுதப்பட்டப் பிறகு, அதை எழுதியவர் மரிக்கும் போது, அந்த உயிலை அமுல்படுத்தி, அதிலுள்ள காரியங்களை நிறைவேற்றும்படி உயிரோடிருக்கும் ஒருவர் தேவைப்படுகிறார். எவரேனும் ஒருவர் உயிலிலுள்ள காரியங்களை நிறைவேற்ற வெண்டும்(செயல்படுத்த வேண்டும்).

இதைச் செய்யும் நபர் “நிறைவேற்றுபவர்” (Executor) என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால், அவர் உயில் கூறுபவைகளை நிறைவேற்றுகிறார்.

கிறிஸ்து மரித்ததோடு மட்டுமின்றி, உயிர்த்தெழுந்து, தமது பிதாவானவரின் வலது பாரிசத்துக்கு எழுந்தருளியிருக்கிறார். இப்படிச் செய்வதன் மூலம் அவர் பரலோகத்தில் தமது உயிலை, தமது உடன்படிக்கையை , “நிறைவேற்றுபவர்” ஆகிறார். இவ்வாறு அவர் தமது சொந்த உயிலின், தமது சொந்த உடன்படிக்கையின் (புது உடன்படிக்கை) ஷரத்துக்களைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியும்.

பரலோகத்தில் புதிய உயிலும் உடன்படிக்கையும் நிலைநிறுத்தப்பட்ட பிறகு பூமியில் அதைச் செயல்படுத்துவது, நிறைவேற்றுவது அவசியப்படுகிறது. அதற்காகவே, தெவன் பெந்தெகொஸ்தே நாளில் தமது பாிசுத்தாவியானவரைப் பரலோகத்திலிருந்து அனுப்பினார்.

தேவ ஆவியானவர் கிறிஸ்துவின் உயில் மற்றும் உடன்படிக்கைக்கு தெய்வீக “நிறைவேற்றுபவர்” ஆக இருக்கிறார். அவரே புதிய உடன்படிக்கையை அதன் ஆசீர்வாதங்கள் மற்றும் பயன்களோடு கூட செயல்படுத்துகிறவராக இருக்கிறார். “உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களை கைக் கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்” (எசேக்கியேல்: 36:27).

புதிய உடன்படிக்கையை நிறைவ‌ேற்றுபவராக பரிசுத்த ஆவியானவரின் பங்கை கிறிஸ்துதாமே தமது சொந்த வார்த்தைகளில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று முன்னர் தமது சீஷர்களைத் தாம் அவர்களை விட்டுச் செல்வதற்காக ஆயத்தப்படுத்தப்படும்படி இயேசுவானவர் முயன்றார். அவர் அவர்களை விட்டு செல்லப் போகிறார்; விரைவில் அவர்கள் தாங்களாகவே செயல்பட வேண்டியிருக்கும். என்றாலும், தாம் அவர்களை அநாதரவாக விட்டுச் செல்லப்போவதில்லை என்று அவர் அவர்களுக்கு வாக்குக் கொடுத்தார். அவர் தம்முடைய இடத்தில் வேறொருவரை அனுப்புவார்.

“நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவான்: 14:16,17).


தொடரும்....


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 2:14 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

Post by சார்லஸ் mc Tue Feb 14, 2012 7:22 am

“பரிசுத்தாவியானவர்”


(புதிய உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்)

பகுதி: ஆ

“தேற்றரவாளன்” என்பதற்கான கிரேக்கச் சொல் “பராக்ளிடோஸ்” (Parakletos) என்பதாகும். “ஆறுதல்படுத்தும் ஒருவர்” என்பதை விட இதற்கு இன்னும் விசாலமான அர்த்தம் இருக்கிறது. இது இரண்டு கிரேக்கச் சொற்களின் இணைப்பாகும்: “பாரா” (Para) என்பதற்கு “அருகே” என்பது பொருளாகும்; “காளியோ” (Keleo) என்பதற்கு “அழைப்பது” என்பது பொருளாகும். இந்த வார்த்தைகளைச் சோ்த்துப் பார்க்கும்போது, “ஒருவரின் அருகே இருக்கும்படி அழைக்கப்பட்டவர்” என்பது அர்த்தமாகிறது.

புதிய ஏற்பாட்டில் பல காரியங்களைக் குறிக்கிறது. “பரிந்து ப‌ேசுபவர்” , “ஆறுதலளிப்பவர்”, “உதவி செய்பவர்”, சார்பாகப் பேசுபவர்”, “ஆலோசகர்” போன்ற பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றொருவரின் சார்பில் நீதிமன்றத்திற்கு செல்லும் ஒரு வழக்கறிஞரைக் (Advocate) குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. இப்படி உபயோகப்படுவதை நாம் 1யோவான்: 2:1 ம் வசனத்தில் காண்கிறோம்: “ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்”.

இப்போதும் “பரிந்து பேசுகிறவர்” என்பவர் சட்டரீதியான வழக்கறிஞராக இருக்கிறார். நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரரின் சார்பாக அவர் வாதிடுகிறார். தனது கட்சிக்காராருக்கு ஆலோசனை வழங்கவும், அவருடைய சார்பாக பேசவும் வழக்கறிஞர் அவருக்கருகே நிற்கிறார். தனது கட்சிக்காரர் சட்டத்தின் அனைத்துப் பயன்களையும் பெறும்படி செய்வது வழக்கறிஞரின் பொறுப்பாகும்.

தனது உயிலாகிய புதிய உடன்படிக்கையை நிறைவேற்றும்படி பிதாவாகிய தேவன் நமக்காக இரண்டு வழக்கறிஞர்களை நியமிக்கும்படியாகத் தீர்மானித்தார். (நமக்கு இது தேறுதலை அளிக்க வேண்டும்).

ஒருவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். நாம் ஏற்கனவே பார்த்தபடி அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. எனவே, நாம் பாவம் செய்வோமானால், நமக்காகப் பரலோகத்தில் வாதாட ஒரு “வழக்கறிஞரை” நாம் பெற்றிருக்கிறோம்.

அவர் இதுவரை எந்த வழக்கிலும் தோற்றுப் போனதில்லை! மேலும், முக்கியமாக நினைவு கூர வேண்டிய காரியம் என்னவென்றால், அனைத்துக்கும் நியாயாதிபதியாகிய, பிதாவாகிய தேவன் முழுமையாக நமது பக்கத்தில் இருக்கிறார்! தேவன் நமக்காகவே இருக்கிறார்.(ரோமர்: 8:31-39).

என்றாலும், அவர் பாவத்துக்காகத் தண்டனையை வேண்டி பரிபூரண நீதியை காத்துக் கொள்ள வேண்டும். அவர் தமது நீதியை காத்தக் கொண்டார். ஏனென்றால், அவர் தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர்” (ரோமர்: 8:32).


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 2:18 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

Post by சார்லஸ் mc Wed Feb 15, 2012 7:04 am

“பரிசுத்தாவியானவர்”


(புதிய உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்)

பகுதி: இ


அகில உலகத்தின் நீதிபதியானவர் பாவத்துக்குத் தண்டனையளிக்க வேண்டுமென்று நீ எதிர்பார்த்தது; அந்த தண்டணை மரணமே. இதுவே மனிதனுக்குத் தகுதியானதும் நீதி எதிர்பார்த்ததுமாகும்.

ஆனால், பரிபூரண நீதியுள்ளவராகிய தேவன், பரிபூரண இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார். பரிபூரண நீதி பாவத்துக்கான கிரயத்தை எதிர்பார்த்தது:

ஆனால், பரிபூரண இரக்கம் மனிதனால் தனக்குத்தானே செய்து கொள்ள முடியாததை அவனுக்காகச் செய்தது.

“தேவனோ இரக்கத்தில் ஐசுவர்யமுள்ளவராய் நம்மில் அன்பு கூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவரிகளாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.”

“கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள்நம்மை அவரோடே கூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைப்பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” (எப‌ேசியர்: 2:4-10). தேவனுடைய மேன்மையான அன்புக்காக அவருக்கு நன்றி கூறுவோமாக!

பூமியிலும் நாம் நமக்காக ஒரு வழக்கறிஞரைப் பெற்றிருக்கிறோம். அவரே நமது தெய்வீக ஆலோசகராகவும் வழக்கறிஞராகவும் இருக்கும் பரிசுத்தாவியானவர்.

பிதாவானவர் நமக்கு வேறொரு “த‌ேற்றரவாளன்” - “பராக்ளிடோஸ்” - அனுப்புவார் என்று இய‌ேசுவானவர் கூறிய போது, அவர் இப்படித்தான் பொருள் கொண்டார்.

நமது இருதயத்திலும் நமது அன்றாட வாழ்க்கையிலும் பரிசுத்தாவியானவரின் கிரியையைப் பற்றி, செயல்பாடுகளைப்பற்றி மேலும் பார்ப்போமாக!


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 5:59 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

Post by சார்லஸ் mc Thu Feb 16, 2012 7:55 am

பரிசுத்தாவியானவர்: “நமது வாழ்க்கையை உள்ளாகக் கட்டுப்படுத்துபவர்”


நமது தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியானவர் நமக்காகச் செய்யப் போவது என்ன?
எசேக்கியேல் தீர்க்கதரிசி இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார்:
“உங்களுக்கு நவமான இருதயத்தை கொடுத்து... உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும், என் நியமங்களைக் கைக் கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்” (எசேக்கியேல்: 36:26,27).

அதாவது, தேவன் தமது “அன்பின் பிரமாணத்தை” உள்ளேயிருக்கும் பரிசுத்தாவியானவரின் பிரசன்னத்தின் மூலமாக நமது இருதயத்திலும் உள்ளத்திலும் வைக்கிறார். பிறகுதான் பரிசுத்தாவியானவர் “எல்லாவற்றையும் நமக்குப் போதிக்கிறார்” (யோவான்: 14:26); மேலும், “சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறார்” (யோவான்: 14:26).

நமக்குள்ளே உள்ள பரிசுத்தாவியானவரின் மூலமாகவே நாம் நமது இரட்சிப்பை நமது அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுகிறோம்.

பரிசுத்தாவியானவர் தேவனுடைய வார்த்தைக்கு மாற்றாக வருவதில்லை என்பதை நினைவில் வைத்திருப்பது முக்கியமான காரியமாகும்.

பரிசுத்தாவியானவர் தேவனுடைய வார்த்தையை நமக்கு விளக்கிக் கூறுவதற்காகவும், அதை நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டும்படிச் செய்வதற்காகவுமே வந்திருக்கிறார்.


தேவனுடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தவும், கிறிஸ்துவின் சாயலுக்கு மறுரூபமாக்கும் வல்லமையை நமக்கு அருளும்படிக்கும் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையோடு பங்குதாரராக இணைந்து செயல்படுகிறார்.

நமது வாழ்க்கையில் பரிசுத்தாவியானவரின் கிரியை எப்போதுமே தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தோடு ஒத்துப் போகும்

மேலும் பரிசுத்தாவியானவர் நமக்குத் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, பிதாவானவரின் சித்தத்தை நாம் செய்யும்படி, நம்மைப் பலப்படுத்தவும் செய்வார்.

நமது வாழ்க்கையை அவர் கட்டுப்படுத்தும்படி நாம் நம்மை அவருக்கு ஒப்புக் கொடுக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பதைப் பரிசுத்தாவியானவர் காட்டுவது மட்டுமின்றி, நம்மைச் சரியான பாதையிலும் வழி நடத்துவார்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:02 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2

Post by சார்லஸ் mc Thu Feb 16, 2012 8:28 am

பரிசுத்தாவியானவர்: “நமது வாழ்க்கையை உள்ளாகக் கட்டுப்படுத்துபவர்”
தொடர்ச்சி...

இப்போது சத்திய ஆவியானவரோடு பிணைக்கப்பட்ட இந்த “உள்ளான அன்பின் பிரமாணம்” கொஞ்சமும் பிசகாததாக இருக்கிறது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் ஒவ்வொரு கணத்தையும் அது கவனிக்கிறது.

உண்மையில், ஆவியானவரால் ஆளுகை செய்யப்படும்போது வாழ்க்கை மோசேயின் நியாயப்பிரமாணத்தைவிட இன்னுமதிகமாக எதிர்பார்க்கிறது. என்றாலும், ஒரு வேறுபாடு இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் இந்தப் புதிய வாழ்க்கையில் நாம் தேவனுடைய அன்பின் உள்ளான வல்லமையால் அசைக்கப்படுகிறோம்; தேவனுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை அவருடைய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்தி நம்மை வழி நடத்துகிறார். ஆவியானவரால் நிரப்பப்பட்ட வாழ்க்கை என்பது வெறும் கடமையல்ல; அது அன்பான கீழ்ப்படிதலைக் கொண்டதாகும்.

என்றாலும், பரிசுத்தாவியானவரால் வழிநடத்தப்படும்படுகிறபடியால், நாம் நியாயப்பிரமாணத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டிருக்கிறோம் என்று தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். நமக்குள்ளிருக்கும் தேவ ஆவியானவரின் பிரசன்னம் கற்பலகைகளில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்திலிருந்து நம்மை விடுவித்திருக்கிறது; ஆனால், நமது இருதயத்தில் எழுதப்பட்டுள்ள பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியும்படியாகவே அவர் நம்மை விடுவித்திருக்கிறார்.

கற்பலகைகளில் எழுதப்பட்ட எந்தப் பிரமாணமும் வாழ்க்கையில் நாம் எதிர் நோக்கியிருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையைப் பற்றியும் முழமையாகக் கூற முடியாது. தேவனுடைய வார்த்தையை நமக்கு விளக்கிக் காட்டும் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கிறிஸ்துவுக்குள் நமது சுயாதீனம் நாம் விருப்பப்படி செயல்படுத்துவதற்காக அல்ல. நாம் செய்ய வேண்டுவதை செய்யும்படியாகவும், நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படியும்படியாகவுமே நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம்.

நமது இருதயத்திலுள்ள தேவனுடைய அன்பின் வல்லமை வெறும் உணர்வு மட்டுமல்ல. இந்த “அன்பின் பிரமாணம்” நாம் பரிசுத்தமற்ற வகையில் பேசும்போதும், பரிசுத்தமற்றதை செய்யும் போதும் நமது குற்றத்தை உணர்த்துகிறதாகவும் இருக்கிறது. எந்த வகைப்பட்ட சூழ்நிலையிலும் அது செயல்படும்; அந்தச் சூழ்நிலைகளில் பலவற்றைப் பற்றி 10 கற்பனைகளில் கூறப்படவில்லை.

நமது அன்றாட வாழ்க்கையின் அலுவல்களை ஆளுகை செய்யும்படிக்கு நம் அனைவருக்கும் ஒரு “உள்ளான கட்டுப்பாடு” தேவைப்படுகிறது. இப்படித்தான் கிறிஸ்து தமது வாழ்க்கையை நம் மூலமாக வாழ்கிறார்.

ஆனால், மிகவும் சோகமான காரியம் என்னவென்றால், நம்மில் பலர் நமது இருதயத்திலிருக்கும் பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருப்பதில்லை. மாறாக, நமக்கு வெளிய‌ே “கற்பலகைகளைத்” தேடுகிறோம். நமது சொந்த பலவீனங்களின் மூலமாக தேவனுடைய பிரமாணங்களை கைக் கொள்ள முயலுகிறோம். வெளியேயுள்ள ஒரு ஆதாரத்தை கொண்டு நாம் பரிசுத்தமாக வாழ முடியும் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், அது செயல்படப் போவதில்லை.


தொடரும்...



Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:06 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2

Post by சார்லஸ் mc Thu Feb 16, 2012 8:43 am

பரிசுத்தாவியானவர்: “நமது வாழ்க்கையை உள்ளாகக் கட்டுப்படுத்துபவர்”

தொடர்ச்சி...

இப்போது நம்மால் இரண்டு உடன்படிக்கைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சிறப்பாக புரிந்து கொள்ள முடிகிறது. பழைய உடன்படிக்கையில் நியாயப்பிரமாணம் நமக்கு வெளியே கற்பலகைகளில் எழுதப்பட்டிருந்தது. புதிய உடன்படிக்கையில் பிரமாணம் நமக்குள்ளே இருக்கிறது - நமது இருதயத்திலும் உள்ளத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.

நியாயப்பிரமாணம் ஒரு வெளியரங்கமான மாற்றத்தை பலவந்தப்படுத்தலாம். ஆனால், அது நிலைத்திருப்பதில்லை. ஆனால், உள்ளேயிருக்கும் பரிசுத்த ஆவியானவரோ நம்மை நிரந்தரமாக உள்ளுக்குள் மாற்ற முடியும்.

நாம் தேவனுடைய சித்தத்தை நம்முடைய உள்ளத்தில் அறியும்படியாகவும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வல்லமையின் மூலமாக அவருடைய சித்தத்தை செய்யும்படி நமது இருதயத்தில் அசைக்கப்படும்படியாகவும், தேவன் நமக்குத் தமது பரிசுத்தாவியானவரைக் கொடுத்திருக்கிறார். இந்த வகையில், நியாயப்பிரமாணம் எதிர்பார்க்கும் நீதியானதும் சரியானதுமான வாழ்க்கை நமக்குள் நிறைவேற்றப்படுகிறது.

ஏனென்றால், நாம் இனிமேலும் மாமசத்தில் நடவாமல் ஆவியில் நடக்கிறோம். மெய்யாகவே பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையை உள்ளாகக் கட்டுப்படுத்துகிறார்!


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:07 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2

Post by சார்லஸ் mc Fri Feb 17, 2012 7:16 am

பிரமாணத்துக்கு அடிமையாதல்: “தொடர்ந்து வரும் அபாயம்”



நியாயப்பிரமாணத்தோடுகூட உண்மையற்ற உறவுக்குத் திருமப இழுக்கப்படுவது குறித்த அபாயத்தைப் பற்றி பவுல் அதிகமாகக் கரிசனை கொண்டிருந்தார். இந்தக் கடினமான வார்த்தைகளைக் கொண்டு அவர் கலாத்திய சபையை எச்சரிக்கிறார்.

“ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலை கொண்டிருங்கள்.”

“இதோ, நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்கு சொல்லுகிறேன்”

மேலும் விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்” (கலாத்தியர்: 5:1-4).

பவுலைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவில் தான் பெற்றிருக்கும் சுயாதீனத்தை விட்டு, நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்துக்குச் திரும்பும் கிறிஸ்தவனைப்போல சோகத்துக்குள்ளாகுபவர்கள் வேறொருவரும் கிடையாது.

ஆனால், தேவனுடைய மக்களை மறுபடியும் அப்படிப்பட்ட அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்லும் பரிசேயர்கள் எந்தவொரு யுகத்திலும் இருந்துதான் வந்திருக்கிறார்கள்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:08 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2

Post by சார்லஸ் mc Fri Feb 17, 2012 7:37 am

“பயத்தின் காரிருள்”


பிரமாணத்துக்கு அடிமையாக்கும் ஆவி சக்தி வாய்ந்ததாகவும், ஏமாற்றக் கூடியதாகவும் இருக்கிறது. தனது இரட்சிப்பின் மெய்யான அடிப்படையை புரிந்து கொள்ளாத உண்மையான கிறிஸ்தவர்களும் கூட அதன் வலையில் எளிதாக வீழ்த்தப்பட்டு வழி தவறும்படி செய்யப்பட முடியும்.

அப்படிப்பட்டதொரு நபர் மெய்யாகவே தேவனைப் பிரியப்படுத்தி, அவருடைய ஒப்புதலைப் பெற விரும்புகிறார். அதைச் செய்வதற்குச் சரியான வழி நியாயப்பிரமாணத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் வாழ முயலுவதுதான் என்றே தோன்றுகிறது. அது சரியாகத் தோன்றினாலும், உண்மையில் தவறானதே.

பிரமாணத்துக்கு அடிமையாவதற்குப் பின்னணியிலுள்ள அடிப்படை விசை (சக்தி) பயமே. நாம் ஒன்றைச் செய்யாவிட்டால் மரித்துப் போவோம் என்று நியாயப்பிரமாணம் திட்டவட்டமாக கூறுகிறது. ஆனால், அந்தப் பாதையில் செல்லத் துவங்கிய பிறகு ஒரு போதும் அதைப் போதுமான அளவு சரியாகச் செய்ய முடியாது என்பதை ஒருவா் கண்டு கொள்கிறார்.

எனவே, விசுவாசியின் தலைக்கு மேலாக பயத்தின் கருநிழல் தொங்குகிறது.

தேவனுடைய அன்பின் வெளிச்சமே - சுவிஷேசத்தின் ஒளியே - அந்த இருளை விரட்ட முடியும்.

விடுவிக்கப்படுகிறோம்!

இரட்சிப்பை ஒரு இலவச ஈவாக - முழுமையாக - நாம் ஏற்றுக் கொள்வோமானால், அது பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து மெய்யாகவே நம்மை விடுவிக்கும்!


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:10 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2

Post by சார்லஸ் mc Fri Feb 17, 2012 8:02 am

“நியாயப்பிரமானத்திலிருந்து நித்திய விடுதலை”

கிறிஸ்துவில் நமது பாவத்திற்கான தண்டனை ஏற்கனவே செலுத்தித் தீர்க்கப்பட்டிருக்கிறபடியால், நாம் ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். அவர் சிலுவையில் மரித்தபோது, நமது பாவத்தையும் - பாவத்திற்கான தண்டணையையும் - அவரே சுமந்தார்.

நமது இடத்தில் அவர் ஆக்கினைக்குள் தீர்க்கப்பட்டார். எனவே, நாம் பாவம், மரணம் இவைகளின் பிரமாணத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறோம்.

ரோமரில் அடுத்த வசனத்தில் பவுல் இதையேதான் கூறுகிறார்: “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” ‌(ரோமர்: 8:2).

“பிரமாணம்” என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் “கட்டுப்பாடு” என்ற சொல்லை மாற்றிக் கொள்வோமானால் நம்மால் இந்த வசனத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

அப்படியானால் வசனம் இப்படியாயிருக்கும்: “...ஆவியின் கட்டுப்பாடு என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையாக்கிற்றே.”

“பாவம் மரணம்” என்பது கற்பலகைகளில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தின் பின்விளைவுகளாக இருக்கிறது. எனவே, நியாயப்பிரமாணம் வெளியேயிருந்து நம்மைக் கட்டுப்படுத்துவதை விட, நமக்குள்ளிருக்கும் பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையின் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்று பவுல் கூறுகிறார்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:11 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் - Page 2 Empty Re: இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum