ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_c10ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_m10ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_c10 
heezulia
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_c10ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_m10ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_c10 
Dr.S.Soundarapandian
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_c10ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_m10ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _

Go down

ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ Empty ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _

Post by பது Sat Feb 11, 2012 12:47 pm

தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ 300steve1
அமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ் தொடர்பில் விசாரணைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கென ஆவணங்கள் பலவும் திரட்டப்பட்டுள்ளன.

இவற்றில் ஜொப்ஸின் நண்பர்கள், அவரிடம் வேலைபார்த்த ஊழியர்கள் அவர் தொடர்பில் வழங்கிய செய்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த 1991 ஆம் ஆண்டுப்பகுதியில் தயாரிக்கப்பட்ட 191 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை தற்போது எப்.பி.ஐ. இன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தகவல்களுக்கான சுதந்திரம் (Freedom of Information Act) என்ற சட்டத்தின் அடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இவ் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் பல அரிய வெளியுலகினர் அறிந்திராத தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜொப்ஸ் தொடர்பில் ......

ஜொப்ஸ் நம்பத்தகுந்தவரோ, நாணயமானவரோ இல்லையென அவரின் நீண்டகால நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது இலக்குகளை எட்டுவதற்காக எதனையும் செய்யவார். நிஜத்தினைக்கூட மாற்றிவிடும் தன்மை கொண்டவர்.

தலைக்கனம் கொண்டவர் என்பதுடன் மற்றையோரை இலகுவில் மதிக்கும் தன்மை அற்றவர்.

ஜொப்ஸ் சட்டவிரோத போதைப் பொருட்களை உபயோகித்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1985 ஆம் ஆண்டு ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் போது குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனது உறவினர்கள் சிலருக்கு இவர் உதவிசெய்யவில்லை.

இவ்வாறான பல தகவல்கள் ஜொப்ஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள போதிலும் இவற்றில் சில தகவல்கள் ஏற்கனவே தொழில்நுட்ப உலகில் பரவலாகப் பேசப்பட்டன.

அவர் போதைப்பொருள் உபயோகித்ததனை அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.

குறிப்பாக ஜொப்ஸ் கடும் போக்குடையவர் எனவும் அவர் தனது ஊழியர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பதில்லையெனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுமட்டுமன்றி அப்பிளின் பொருட்களைத் தயாரிக்கும் சீனாவில் உள்ள 'பொக்ஸ்கோன்' நிறுவனத்தில் ஊழியர்களின் நலனில் ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிர்வாகம் சிறிதும் அக்கறை காட்டவில்லையென பல சர்ச்சைகள் எழுந்தன.

அந்நிறுவனத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள், மன உளைச்சலால் ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் ஸ்டீவுக்கு பலமுறை அறிவித்த போதிலும் அவர் அது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என அந்நிறுவனத்தின் ஊழியர்களும் மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்திருந்தன.

இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் ஜொப்ஸ் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொழில்நுட்ப உலகில் ஜொப்ஸிற்கு நிகர் என்றுமே ஜொப்ஸ்தான் என வாதாடும் ஒரு சாராரும் இருக்கவே செய்கின்றனர்.

ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின் ஐ பொட் முதல் ஐ போன் வரை உருவாகியமை யாரும் மறுக்கமுடியாது.

அவர் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அக்கறை கொண்டிருந்தார்.

அவர் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸிற்கு இருந்தாக அவரது நண்பர்களில் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஜொப்ஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்களில் பல அவரைச் சேர்ந்தவர்களால் வழங்கப்பட்டவையே.

இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம்.

எனவே ஒரு சிலரின் கருத்துக்களை வைத்து அவரைக் கெட்டவர் என முத்திரை குத்திவிட முடியாது.

எது எவ்வாறு இருப்பினும் தொழில்நுட்ப உலகில் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அப்பிளின் பெயரை அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது.

இசை முதல் ஸ்மார்ட் போன் வரை அனைத்துக்கும் முன்னோடியாகத் திகழும் அப்பிள் பொருட்களை உலகுக்குத் தந்த ஜொப்ஸை அவ்வளவு இலகுவாக மறக்கமுடியுமா என்ன? _
நன்றி வீரகேசரி இணையம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்
» ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
» இணையத்தில் கசிந்த பிளக்பெரி லண்டன் புகைப்படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum