புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 12, 2012 1:04 pm

12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!


12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும் TN_120210151814000000

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1) திருப்தி

துடிப்புடன் உழைத்து வாழ்வில் முன்னேறும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட குணத்துடன் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். செவ்வாய்க்கு இடம் தந்த சூரியனும், பாக்கியாதிபதி குருவும் செவ்வாயைப் பார்க்கின்றனர். இதனால் நேர்மையான செயல்பாடுகளை திறமையுடன் நிறைவேற்றுவீர்கள். சூரியன், புதன், சுக்கிரனின் நல்லருள் பலமாக துணை நின்று உதவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைத்திடும். புத்திரர்கள் மன குழப்பத்தால் படிப்பில் பின் தங்கலாம். பூர்வ சொத்தில் தாராள வருமானம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். முக்கிய கடன்களை அடைப்பீர்கள். அரசு தொடர்பான உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். நண்பர்களிடம் அதிக கண்டிப்புடன் பேசவேண்டாம். தம்பதியர் அன்புடன் நடந்து திருப் தியான சூழ்நிலையை உருவாக்குவர்.

தொழிலதிபர்கள் உற்பத்தி உயர்வும் புதிய ஒப்பந்தமும் கிடைத்து உபரி பணவரவு காண்பர். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும். லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்தி கரமான பணவரவு அடைவர். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியில் பாராட்டு, சலுகை பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை சிறக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் பதவி பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படித்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 14.2.12 இரவு 10.11 - 17.2.12 அதிகாலை 1.22 மற்றும் 13.3.12 காலை 6.46 - நள்ளிரவு 1.22.
வெற்றி நாள்: மார்ச் 2, 3, 4 நிறம்: மஞ்சள், சந்தனம் எண்: 3, 6



ரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி

எதிலும் புதுப்பாணியை கடைபிடிக்க விரும்பும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்ச பலத்துடன் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளார். இதனால் உங்களின் செயல்பாடுகளில் வசீகரத்தன்மை வளரும். கூடுதல் நற்பலன் தரும் கிரகங்களாக சனி, சூரியன், புதன் செயல்படுகின்றனர்.வெற்றியும். பணவரவும் கிடைக்கும். இடம், பொருள் அறிந்து பேசி நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியிருக்கும். புத்திரர் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். புதியசொத்து சேர்க்கை கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். உடல்நலம் சீராக இருக்க கேளிக்கை விருந்துகளில் அளவுடன் பங்கேற்பது நல்லது. தம்பதியர் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாக இருப்பர்.

தொழிலதிபர்கள் இடையூறு தருகிற விஷயங்களை ஆராய்ந்து சரிசெய்வர். தொழில் வளர்ச்சியும் திட்டமிட்ட பணவரவும் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். கூடுதல் பணவரவு, சலுகை கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். பணிபுரியும் பெண்கள் இலகுவான மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். ஓய்வுநேரம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனை அதிகமாகப் பெறுவர். அரசியல்வாதிகள் தலைமையிடமும், மக்களிடமும் மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் வளரும். மாணவர்கள் நல்ல தரதேர்ச்சி பெறுவர். விளையாட்டு பயிற்சியில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் துன்பம் நீங்கும். உஷார் நாள்: 17.2.12 அதிகாலை 1.23 - 19.2.12 அதிகாலை 5.36.
வெற்றி நாள்: மார்ச் 4, 5, 6 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 2, 9



மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஆர்வம்

நியாயத்தை ஏற்கும் மனப்பக்குவம் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலக் குறைவாகவும் மாத பிற்பகுதியில் நற்பலன் வழங்கும் வகையிலும் உள்ளார். செவ்வாய், ராகு, குரு நல்ல இடங்களில் உள்ளனர். குடும்ப செலவுக்கான பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். மனதில் ஆர்வமும், நம்பிக்கையும் வளரும். வீடு, வாகன வகையில் அளவான நன்மை உண்டு. புத்திரரின் பிடிவாத குணம் குடும்பத்தில் சிறு அளவில் சிரமம் தரும். சொத்து தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலம் சீராக இருக்கும். நிலுவைப்பணம் சிறிய முயற்சியினால் எளிதில் வசூலாகும். தம்பதியர் தமது பொறுப்பை உணர்ந்து பாசத்துடன் நடந்துகொள்வர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதே நிறைவேறும். நண்பர் சொல்லும் ஆலோசனை உங்கள் வாழ்வில் புதிய பாதையை உருவாக்கும்.
வெளியூர் பயணம் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்.

தொழிலதிபர்கள் தரத்தை உயர்த்தி புதிய ஒப்பந்தங்களைக் காண்பர். தாராள பணவரவில் கடன்களை அடைப்பீர்கள். பணியாளர்கள் சலுகைகளைப் பெறும் ஆர்வத்தில் லட்சிய மனதுடன் செயல்படுவர். வியாபாரிகள் கூடுதல் விற்பனை, உபரி பணவரவு, தகுந்த சேமிப்பால் மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பயன்படுத்தி பணியை எளிதாக்குவர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நற்பெயர் பெறுவதில் அதிக கவனம் கொள்வது நல்லது. பயன்பாடு இல்லாத வீட்டு சாதனம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி புதிய சந்தைவாய்ப்புக்களை பெறுவர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர் களிடம் நன்மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சராசரி அளவில் இருக்கும். மாணவர்கள் சோம்பலைத் தவிர்ப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தொழில்வளம் சிறக்கும். உஷார் நாள்: 19.2.12 காலை 5.37 -21.2.12 காலை 11.15
வெற்றி நாள்: மார்ச் 7, 8 நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 4, 9



கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உஷார்

பரந்த மனமும் உழைப்பில் ஆர்வமும் நிறைந்த கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன், மாத துவக்கத்தில் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் உள்ளார். இதனால் சிந்தனையில் விவேகமும் செயல்திறனும் அதிகரிக்கும். நற்பலன் தரும் கிரகங்களாக புதன், சுக்கிரன், கேது உள்ளனர். ராசிக்கு தர்ம அதிபதியான குரு, செவ்வாயின் வீட்டில் அமர்ந்து கர்ம அதிபதியான செவ்வாயை பார்க்கிறார். இந்த நிலை உங்கள் வாழ்வில் தர்ம, கர்ம யோக பலன்களை பெற்றுத்தரும். வரம்பு மீறி பேசுவதை தவிர்க்கவும். தைரியம், நம்பிக்கை மிகவும் தேவை. பயணத்தில் மிதவேகம் வேண்டும். வீட்டில் பராமரிப்பு, பாதுகாப்பு அவசியம். புத்திரர் ஆடம்பர உணவு வகைகளை உண்பதில் விருப்பம் கொள்வர். குடும்பச்செலவு அதிகரிக்கும். தம்பதியர் குடும்பத்தேவை, சூழ்நிலை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவர். நண்பர்களால் உதவி உண்டு. வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்ளலாம்.

தொழிலதிபர்கள் அரசின் தொழிலியல் சட்டதிட்டங்களை கவனத்துடன் பின்பற்றுவது நலம்தரும். உற்பத்தி, பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரிகள்விற்பனை இலக்கை அடைந்தாலும்ஓரளவுக்கே லாபம் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது. சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை நிறைவேற்றுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான பணமின்றி தவிப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான விற்பனை, சுமாரான லாபம் அடைவர். அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் தான் தேர்ச்சி பெற முடியும். கவனம் சிதறும். உஷாராக இருக்கவும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் பாதுகாப்பும், நற்பலனும் கிடைக்கும். உஷார் நாள்: 21.2.12 காலை 11.16 - 23.2.12 இரவு 9.31.
வெற்றி நாள்: மார்ச் 9, 10 நிறம்: ரோஸ், இளஞ்சிவப்பு எண்: 1, 7



சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) இனிமை

துணிச்சலும், செயல்திறனும் மிக்க சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் ஏழாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் புதனுடன் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ராசியில் உள்ள செவ்வாயை ராசிநாதன் சூரியன் மற்றும் குரு பார்க்கின்றனர். மொத்தத்தில் இனிமையே. குடும்ப உறுப்பினர்கள் மாத முற்பகுதியில் உங்கள் செயல்பாடுகளுக்கு உதவ தயங்குவர். பிற்பகுதியில் நிலைமை சரியாகும். இளைய சகோதரர்களுக்கு தேவையான பணஉதவி செய்வீர்கள். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை அறிந்து நல்லவிதமாக நடந்துகொள்வர். உடல்நலம் சீர்பெற தகுந்த ஓய்வு, மருத்துவ சிகிச்சை பலன் தரும். மாத முற்பகுதியில் தாமதமான பணவரவு, பிற்பகுதியில் வந்துசேரும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். நண்பர்களிடமும் அளவுடன் பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி உண்டு.

தொழிலதிபர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். லாபம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி செய்வர். விற்பனை அதிகரித்து லாபம் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை புதிய உத்திகளை பயன்படுத்தி நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகை மாத
பிற்பகுதியில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப் பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவதால் நன்மதிப்பு பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், சச்சரவு இல்லாத நன்னிலை தொடரும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய முயற்சியால் கூடுதல் வாய்ப்புபெறுவர். அரசியல்வாதிகள் இதமான அணுகுமுறையால் அரசின் சலுகைகளைப் பெறுவர். சமூக அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு நடைமுறை செலவு கூடினாலும் மகசூல் அதிகரித்து தாராள பணவரவு இருக்கும். மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து தரத் தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். உஷார் நாள்: 23.2.12 இரவு 9.32 - 26.2.12 காலை 7.32.
வெற்றி நாள்: பிப்ரவரி 13, 14 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 5



கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) வளர்ச்சி

தாய் மீது அன்பு மிக்க கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலமாகவும் மாத பிற்பகுதியில் பலம் குறைந்தும் கும்ப, மீன ராசிகளில் இடம்பெறுகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக ராகு, சூரியன் செயல்படுகின்றனர். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு,வாகனத்தில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புத்திரர்களின் செயல்பாடு திருப்தி தரும். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் குறையும். எதிரிகள் தானாகவே விலகிச் செல்வர். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. உடல்நலம் சுமார். வருமானம் சிறப்பாக அமையும். பழைய கடன் அடைபட வாய்ப்புண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து நடந்தால் மட்டுமே வீட்டில் அமைதி நிலைத்திருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது.

தொழிலதிபர்கள் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவர். தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டவசமாக புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெற்று லாபம் கூடும்.வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பர். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்தினரிடம் பாராட்டு காண்பர். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு குறித்த காலத்தில் பணியை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்படுவது நல்லது. பிறரது அவதூறு பேச்சைப் பொருட்படுத்தக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்கச் செய்வர். புதிய ஆர்டர் கிடைக்கும். அரசியல்வாதிகள் அந்தஸ்தை உயர்த்த அதிக பணம் செலவழிப்பர். புத்திரர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சல் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் நன்கு படிப்பர்.

பரிகாரம்: விநாயகரை வழிபாடு நன்மை தரும். உஷார் நாள்: 26.2.12 காலை 7.33 - 28.2.12 இரவு 7.12
வெற்றிநாள்: பிப்ரவரி 15, 16 நிறம்: சிவப்பு, மஞ்சள் எண்: 3,5



துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சுமார்

கலை உணர்வுடன் எச்செயலிலும் ஈடுபடும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று மாறுபட்ட குணத்துடன் செயல்படுகிறார். இந்த மாதம் நல்ல பலன் வழங்கும் கிரகங்களாக குரு, செவ்வாய் உள்ளனர். உங்களுக்கு சம்பந்த மில்லாத விஷயங்களில் ஈடுபடுவதால் வீண்செலவு, அவப்பெயர் உண்டாகலாம் கவனம். வீடு, வாகனத்தில் பராமரிப்புச்செலவு கூடும். தாயின் தேவையை நிறைவேற்ற தாமதிப்பீர்கள். புத்திரர்கள் பிடிவாதமாக நடந்து கொண்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் நிலைமை சரியாகும். சொத்தின் பேரில் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை அதிருப்தி தரும். அலைச்சலால் அசதி உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

தொழிலதிபர்கள் எதிர்வரும் தடைகளை சரிப்படுத்தினால் மட்டுமே உற்பத்தி சிறக்கும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணியில் குறுக்கீடுகளைச் சந்திப்பர். பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். வியாபாரிகள் கூடுமான வரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. பணிபரியும் பெண்கள் பணிச்சுமையை சந்திப்பர். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. குடும்பப் பெண்கள் குடும்பநலன் சிறக்க பாடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம், கடின உழைப்பின் மூலம் சுமாரான விற்பனை காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற பெரும் பொருள் செலவழிப்பர். அரசியலில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஓரளவு விளைச்சலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபாடு நன்மை தரும். உஷார் நாள்: 28.2.12 இரவு 7.13 - 1.3.12 காலை 6.07.
வெற்றிநாள்: பிப்ரவரி 17, 18 நிறம்: ஊதா, ஆரஞ்ச் எண்: 1, 8



விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) கவனம்

எந்தச் சூழலையும் தைரியமாய் எதிர்கொள்ளும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடமான சிம்மத்தில் அனுகூலக்குறைவாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன் உள்ளனர். உங்கள் செயல்திறமையில் பொறாமை கொண்ட சிலர், உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பர் கவனம். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு தேவை. வாகனம் இயக்கும் போது மிதவேகம் அவசியம். புத்திரர்கள் மாத முற்பகுதியில் உங்கள் சொல்படி நடந்தும் பிற்பகுதியில் முரண்பட்ட குணத்துடனும் செயல்படுவர். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன், மனைவி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். மனைவி, மகளின் ஜாதக யோக பலன் குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். வெளியூர் பயணங்களை அவசியம் இருந்தால் மட்டும் மேற்கொள்வது நல்லது.

தொழிலதிபர்கள் போட்டியாளர்களின் குறுக்கீடுகளை தவிர்க்க தகுந்த மாற்று நடவடிக்கை எடுப்பர். வியாபாரிகள் லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவர். பணியாளர்களுக்கு சோம்பல் அல்லது உடல்நிலை காரணமாக பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். சலுகைகளை கேட்பதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் உடல்நலம் பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு விற்பனை மற்றும் லாபம் சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளால் வரும் தொல்லையைச் சரிசெய்ய கூடுதல் பணம் செலவழிக்கும் நிலை உண்டு. முக்கியஸ்தர்களின் சிபாரிசால் பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சாகுபடி செலவு கூடுதலாகும். வருமானம் சுமார். மாணவர்களுக்கு வெளிவட்டார பழக்கத்தால் படிப்பில் கவனம் சிதறும். உஷாராக இருங்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை ஏற்படும். உஷார் நாள்: 2.3.12 காலை 6.08 - 4.3.12 பிற்பகல் 2.56 .
வெற்றி நாள்: பிப்ரவரி 19, 20 நிறம்: மஞ்சள், நீலம் எண்: 3, 4



தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) உற்சாகம்

நம்பிக்கையுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார். நவக்கிரகங்களில் ராகு, செவ்வாயைத் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் இந்த மாதம் உங்களுக்கு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். சமூகப்பணியில் விருப்பத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். கவுரவம் மிக்க மனிதராக வலம் வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் மனதில் உற்சாகம் கரை புரளும். வீடு, வாகனத்தில் தேவையான புதிய மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய சொத்து வாங்கும் சூழல் உருவாகும். இஷ்டதெய்வ வழிபாடு சிறக்கும். எதிரிகள் கூட உங்களின் வளர்ச்சியைக் கண்டு வியப்பர். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர்.

தொழிலதிபர்கள் அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காண்பர். வியாபாரிகள் விற்பனையில் வளர்ச்சி காண்பதுடன் விரிவாக்கப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். பணிபுரியும் பெண்கள் சகபணியாளர்களின் நட்புறவைப் பெறுவர். பதவி உயர்வு, விரும்பியஇடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத் தேவைக்கான பணவசதி கிடைத்து இனிய வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கையும் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் திட்டமிட்டு செயல்பட்டு உற்பத்தியைப் பெருக்குவர். அமோக விற்பனையால் லாபம் கூடும். வருமானம் உயர்வதால் மனதில் நம்பிக்கை வளரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நல்ல ஆதரவுடன் திட்டங்களை நிறைவேற்றுவர். அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூலும் கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் விதத்தில் நன்கு படிப்பர். விளையாட்டிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் பலன்கள் மேலும் அதிகரிக்கும். உஷார் நாள்: 4.3.12 பிற்பகல் 2.57 - 6.3.12 இரவு 9.19.
வெற்றி நாள்: பிப்ரவரி 21, 22, 23 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 9



மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) செலவு

ஆர்வத்துடன் கடமையாற்றும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவான் பத்தாம் இடத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். இந்த மாதம் நற்பலன் தருகிற கிரகங்களாக சுக்கிரன், ராகு உள்ளனர். உங்கள் செயல்திறன் மேம்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடு கண்டு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் பிடிவாதத்துடன் செயல்படுவர். சொத்து தொடர்பான ஆவணம், விலை மதிப்புள்ள பொருள்களை மற்றவர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது. உடல்நலம் சுமாராக இருக்கும். பணவரவு சுமார் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் நடந்து கொள்வர்.

தொழிலதிபர்கள் விடாமுயற்சியுடன் உற்பத்தியை சீராக்கி லாபம் காண்பர். வியாபாரிகள் சந்தையில் மறைமுகப் போட்டிகளைச் சந்திப்பதுடன், நடைமுறைச் செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்கள் குறுக்கிடும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவர். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களின் பாராட்டைப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான விற்பனையும், அதற்கேற்ற வருமானமும் காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பொது விவகாரங்களில் தலையிடும் போது அதிக கவனம் அவசியம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் வீண்பொழுதுபோக்கை குறைத்துக் கொள்வது நல்லது. கவனமுடன் படித்தால் மட்டுமே தேறுவர்.

பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உஷார் நாள்: 6.3.12 இரவு 9.20- 9.3.12 அதிகாலை 1.31
வெற்றி நாள்: பிப்ரவரி 24, 25 நிறம்: வெள்ளை, ஆரஞ்ச் எண்: 2, 9



கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நிதானம்

சாதனை நிகழ்த்தி முன்னேறத் துடிக்கும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவான் பாக்ய ஸ்தானம் துலாத்தில் உச்சம் பெற்று அனுகூலக்குறைவாக உள்ளார். இந்தமாதம் நவக்கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டி உதவுகிறார். சமூகத்தில் இருக்கும் நற்பெயரைப் பாதுகாக்க முயற்சிப்பது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மை தரும். பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை குறைவான யாருக்கும் இடம்தருவது கூடாது. புத்திரர்கள் தகுதிக்குறைவான நபர்களிடம் பழகுவதற்கான கிரகநிலை உள்ளது. தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது அவசியம். வயிறு தொடர்பான தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து செயல்பட்டால் நிம்மதி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.

தொழிலதிபர்கள் மூலதனத் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் சுமார். வியாபாரிகள் சந்தையில் போட்டிகளைச் சந்திப்பர். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் தாமதமாக பணிகளைச் செய்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாவர். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது நல்லது. சலுகைகளைப் பெற காத்திருக்க நேரிடும். குடும்ப பெண்கள் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சீரான வளர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயிகளுக்கு மிதமான மகசூலும் அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியோடு கலைத்துறையில் ஈடுபாடு கொள்வர். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவது சிறப்பு. உஷார் நாள்: 9.3.12 அதிகாலை 1.32- 11.3.12 அதிகாலை 4.23
வெற்றி நாள்: பிப்ரவரி 26, மார்ச் 12, 13 நிறம்: ஊதா, சிவப்பு எண்: 1, 8



மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஜாதகம்

பணிகளை ஆர்வமுடன் செய்யும் மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு, ராசிக்கு இரண்டாம் இடத்தில் அனுகூலத்தன்மையுடன் உள்ளார். கேது, செவ்வாய், சுக்கிரன் தங்கள் பங்கிற்கு கூடுதல் நற்பலன்களை வழங்குவர். புதிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். சகோதர வகையில் சுபமங்கல நிகழ்வு உண்டு. வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே, திருடுபோவதை தவிர்க்கலாம். தாயாருக்கு சிகிச்சை தேவைப்படும். புத்திரர்கள் மந்தகதியில் இயங்குவர். கடன் கொடுத்த பணம் வசூலாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.குடும்பத்தின் முக்கிய தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்களுக்கு இயன்ற உதவி செய்வீர்கள். சொத்து வாங்க விரும்புபவர்களுக்கு சாதகமான காலம். வெளியூர் பயணத்தால் கூடுதல் பணச்செலவும் கால விரயமும் ஏற்படலாம். பயணங்களை முக்கியத்துவம் கருதி ஏற்பது நல்லது.

தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணிபுரிவர். உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் இடையூறு அணுகாத சுமூகநிலை அடைவர். ஓரளவுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை உயரும். லாபவிகிதம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். குடும்ப பெண்கள் கணவரின் கருத்து, எண்ணங்களை மதித்து நடப்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு தொழிற்கருவிகள் வாங்க அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் பின்தங்கலாம். கவனம்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் தொழில் சிறந்து சொத்து சேர்க்கை கிடைக்கும். உஷார் நாள்: 13.2.12 காலை 6.01 - 14.2.12 இரவு 10.10
மற்றும் 11.3.12 அதிகாலை 4.24 - 13.3.12 காலை 6.45 .
வெற்றி நாள்: பிப்ரவரி 28, மார்ச் 7, 8 நிறம்: நீலம், ரோஸ் எண்: 4, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக