ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரழிவு நோய்

+3
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரட்சகா
7 posters

Go down

நீரழிவு நோய் Empty நீரழிவு நோய்

Post by ரட்சகா Wed Feb 08, 2012 6:32 pm

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் போவதற்கு என்ன காரணம்?

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாகவும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக்குழாயில் பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்பு பகுதிகளே. தொடு உணர்வு, அழுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர்ச்சியானது எது? என அனைத்துவிதமான உணர்வுகளையும் நமக்கு உணரச் செய்யும் நரம்பு பகுதிகள் பாதிக்கப்படுவதால், சர்க்கரை வியாதிக்காரர்கள் உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் அனைத்துவிதமான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவேதான் டயாபடீஸ்காரர்களின் காலில் சிறிய கல்லோ, முள்ளோ குத்தி காயங்கள் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடுகிறது. மேலும் இரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கால் பாதங்களுக்குப் போதுமான இரத்தம் செல்லாமல் தடைபட்டு நிற்கும். இதனால்தான் சிறிய காயம் ஏற்பட்ட டயாபடீஸ்காரருக்கு அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் கிருமி தயக்கமின்றி உள்ளே நுழைந்து உடனடி தாக்குதலுக்கு ஆளாகின்றார்.


அதோடு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து கொண்டே இருப்பதால் சிறிய காயம் ஏற்பட்டாலும்கூட கிருமிகளின் பாதிப்பு அதிகமாகி காயத்தையும் சீக்கிரம் ஆறவிடாமல் செய்து விடுகிறது. இந்தப் பாதிப்பு ஆரம்பத்தில் டயாபடீஸ்காரர்களுக்கு உணரமுடியாமல் இருந்தாலும்
'காலை'யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, டயாபடீஸ்காரர்கள் அவரவர்களுக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனையின்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. எனவேதான் டயாபடீஸ்காரர்கள் சிறிய புண்ணோ காயங்களோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 08, 2012 9:21 pm

மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by பிஜிராமன் Wed Feb 08, 2012 9:29 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்


அதெல்லாம், ஒன்றும் ஆகாது, ஈகரையில் மகிழ்ச்சியுடன் இணைந்திருங்கள் ஐயா. அதுவே நம் நோயிக்கு மருந்து.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by செல்ல கணேஷ் Wed Feb 08, 2012 10:20 pm

தோழமைகளுக்கு,
சர்க்கரை நோயினால் எங்கள் பரம்பரையே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் என் தாய் வழியில் 99 % இறப்பு சர்க்கரை நோயினால் மட்டுமே (என் அம்மா உள்பட).
ஆக இந்த நோய் பற்றி பதிவு செய்ய நினைத்தேன். அதை தோழமை ரக்ஷா செய்து உள்ளார். சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறை பாடு. உடலில் ஏற்பட்ட ஒரு குறைதான் (கை, கால் இல்லாதது போல்) அதை புரிந்து கொண்டு முதலில் மனம் புரிதல் கொண்டு தேவை அற்ற அச்சம் தவிர்த்து. உணவு கட்டுப்பாடு, நல்ல உடற்பயிற்சி சிறந்த முறையில் எடுத்துக்கொள்ளும் ஒய்வு. கட்டாயம் எல்லோரையும் போல நூறாண்டு வாழ இயலும்.
உணவு விஷயத்தில், நமது மனம் எதை ஒன்றை விட நாம் நினைகிறோமோ அதையே அதிகம் பற்றி கொள்கிறது. ஆக சுவை என்பது மனதில் உள்ளது. உணவு பராமரிப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் இதில் சரியாக இருந்தால் 90 % வெற்றி.
பின் 5 % உடற் பயிற்சி. 5 % ஒய்வு.
கட்டாயம் நன்றாக வாழ முடியும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதற்கு இணங்க மிக கவனத்தோடு உடலை பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆம் சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறை பாடு புரிதல் இருந்தால் எல்லோரைவிடவும் நன்றாக வாழ முடியும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சர்க்கரை நோய் உள்ளவர், மிக தெளிவுடன் இயற்கை உணவிற்கு தன்னை மாற்றிக்கொண்டு சமைக்காத மற்றும் அதிகம் சமைக்காத (Semi cooked ) உணவை உட்கொண்டு மிக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார். மேலும் அவர் ரம்ஜானுக்கு கூட அசைவம் கிடையாது அன்றும் இயற்கை உணவுதானாம். அவரின் வயது 65 . இன்றும் உடற்பயிற்சி செய்ய வருவாராம்.
ஆக சர்க்கரை நோய் பற்றிய பயமே நம்மை அதிகம் துன்புற
செய்கிறது.
எப்போதும் குறைபாடு என்பது நிவர்த்தி செய்யக்கூடியதே !
சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல குறைபாடு!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by மகா பிரபு Wed Feb 08, 2012 10:55 pm

இது பரம்பரை நோயா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by சார்லஸ் mc Thu Feb 09, 2012 1:04 am

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி...ரக்ஷா அவர்களே...நல்ல பதிவு...நான் சக்கரை வியாதியால் கடந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். தினமும் மூன்று இன்சுலின் ஊசிகள், மற்றும் பத்து மாத்திரைகள் உட்கொள்கிறேன் . மூன்று மாதத்துக்கு முன்பு கிழே விழுந்ததால் என் காலில் முறிவு ஏற்ப்பட்டு இன்னும் சரியாக குணமாகவில்லை. ஆயினும் நான் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டு உள்ளேன். பின்னால் என்னாகும் என்று சொல்ல முடியாது. சோகம்


அதெல்லாம், ஒன்றும் ஆகாது, ஈகரையில் மகிழ்ச்சியுடன் இணைந்திருங்கள் ஐயா. அதுவே நம் நோயிக்கு மருந்து.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


டிவைன் நோனி - என்கிற ஊட்டச்சத்து மருந்து வாங்கி காலை மாலை இருவேளையும் பருகுங்கள் ஐயா.பலன் தொியும்.


இலவச வைத்தியம்:

தினமும் வெறும் வயிற்றில் கொய்யா மரத்தின் இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை சுடு நீரால் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் எப்போ்பட்ட சா்க்கரை வியாதியும் உடனடியாக நாா்மலுக்கு வந்து விடும்.


(இது இரண்டையும் நான் பயன்படுத்தி வருகிறேன்.)


நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by இளமாறன் Thu Feb 09, 2012 1:10 am

திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.

நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.

இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீரழிவு நோய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by சார்லஸ் mc Thu Feb 09, 2012 1:17 am

நல்ல பயன் தரும் தகவல் தந்தீா்கள். நீரழிவு நோய் 224747944 நீரழிவு நோய் 678642 நீரழிவு நோய் 154550


நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550நீரழிவு நோய் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நீரழிவு நோய் Empty Re: நீரழிவு நோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum