ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!

3 posters

Go down

சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்! Empty சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!

Post by சிவா Tue Feb 07, 2012 4:14 pm



"தலைப்பைப் பார்த்தாலே, என்னது இது என அழுத்தமாகக் கேள்வி கேட்கத் தோன்றும். ஆனால், சிறிதளவு அழுத்தம் அதாவது மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் வெற்றி கொள்ளத் தேவைதான்,' என்கிறார் மனநல மருத்துவர் ஆனந்த்பாலன்.

"மன அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருப்பதுதான். அதற்கு எல்லோருமே ஆளாகிறோம். மிதமான மன அழுத்தம் இருக்கும்போது, அவர்கள் செய்யும் வேலையைத் துரிதமாகவும், அற்புதமாகவும் செய்து முடிக்க அது உதவுகிறது. உதாரணத்துக்கு, நாளைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும் என்று இருந்தால், இன்று தோன்றும் அந்த மிதமான மன அழுத்தம் அவரை நேர்முகத் தேர்வுக்குச் சரியாகத் தயார் செய்ய வைக்கவும், உடைகளை கசங்கல் இல்லாமல் அணிந்து கொள்ளவும் ஊக்குவிக்கும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவனுக்கு, இந்த மிதமான மன அழுத்தம், காலையில் சீக்கிரம் எழுந்து, படிக்க வைக்க உதவும். மன அழுத்தம் என்பது இரண்டு நிலையில் வரும். முதலாவது eustress என்போம்; இது மிக மிக நல்ல மன அழுத்தம். ஒருவரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது இது தான். மற்றொன்று, disstress இதைத்தான் வரம்பு மீறிய சங்கடமான மன அழுத்தம் என்கிறோம்' என மனஅழுத்ததின் வகைகளைப் பற்றிக் கூறிய மருத்துவர், "மன அழுத்தம் எல்லாருக்குமே வரக்கூடியது. இதை எப்படிச் சமாளிப்பது என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, எப்படித் தவிர்ப்பது என்பது எடுத்துக் கொள்ளக்கூடாது' என்கிறார்.

"மன அழுத்தம் ஒருவருக்குச் சமாளிக்கவே முடியாத அளவு அதிகமாகி விட்டால், அவருக்கு மன பதற்றம் (anxiety) அல்லது மனச்சோர்வு (depression) வருவதற்கு வாய்ப்பு அதிகமாகி விடும். தினம் 45 நிமிடம் காலையில் நடைப் பயில்பவர்களுக்கும், யோகா, பிராணாயாமம் செய்பவர்களுக்கும், சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியாகத் தூங்கி எழுந்து கொள்பவர்களும் தங்களை அறியாமல் தாங்களே மன அழுத்தத்தை மிக அழகாகச் சமாளித்து வருகிறார்கள்.

மனச் சோர்வை வெவ்வேறு சூழலில் எல்லோருமே அனுபவிக்கிறோம். ஆனால், காரணமே இல்லாமல், மனச்சோர்வு வரும்போது அது மனச்சோர்வு நோயாகவே மாறி விடுகிறது. பரீட்சையில் மதிப்பெண் குறைந்து விட்டால் மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. அதைப்போலவே வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டாலும் மனச்சோர்வு வரும். ஆனால், தன் வீட்டு நாய்க் குட்டி இறந்து விட்டதற்காக ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முற்பட்டால், அது மனச்சோர்வு நோயின் வெளிப்பாடு என்பதை உணர வேண்டும்.

அடுத்தது, மனப்பதற்றம். இதுவும் எல்லோருக்கும் தோன்றுவது இயற்கையே. திடீரென்று "டமால்' என சத்தம் கேட்டால், நம்மை அறியாமலேயே நம் கை கால் உதறுவது, இதயம் வேகமாகத் துடிப்பது, வியர்த்துக் கொட்டுவது எல்லாம் நடக்கும். ஆனால், காரணமே இல்லாமல், இனம் புரியாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவதும், நாள் பூரா, ஞாயிற்றுக் கிழமைகளில் கூடப் பட பட என இருப்பதை anxiety disorder அதாவது மனப்பதற்ற நோய் என்று சொல்லுவோம்.

மன நோயின் தீவிரத்தைப் பொறுத்து stress management செய்யச் சொல்லிக் கொடுப்பது அல்லது மன வழி (counselling) சிகிச்சை கொடுப்பது அல்லது மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து அவர்களின் மன நோயைக் குணமாக்க முடியும்' என்கிறார் டாக்டர் ஆனந்த் பாலன்.

- நளினி சம்பத்குமார்


சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்! Empty Re: சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!

Post by ஜாஹீதாபானு Tue Feb 07, 2012 4:17 pm

பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்! Empty Re: சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!

Post by sshanthi Tue Feb 07, 2012 4:17 pm

அளவோடு இருந்தால் அது அமிர்தம்தான் இல்லையா சிவா அண்ணா


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்! Empty Re: சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum