புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
63 Posts - 57%
heezulia
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
58 Posts - 56%
heezulia
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_m10ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 4:35 pm

ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்!
on Tuesday, February 7, 2012 | 0 Comment

ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   P14a

ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவர்; கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, நடிப்புத் துறையில் கால் பதித்து, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து, இன்று 'சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையோடு இருக்கிறார்.
ரஜினி என்கிற தனி மனிதனிடம் இருக்கும் குணாதிசயங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் வெற்றிச் சூத்திரங்கள். இந்த சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாக்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கும் பொருந்தி வரும். ரஜினியின் குணாதிசயங்களை முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்டு, பின்பற்றுவதன் மூலம் எப்படி வெற்றிகரமாக லாபம் ஈட்ட முடியும் என்பதை சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்.
நிதானித்து முடிவெடுங்கள்..!

ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   P15
'கண்ணா நா(ன்) யோசிக்காம எதையும் சொல்றது இல்ல. சொன்ன பின்னால யோசிக்கறதில்ல...’ - ரஜினியின் பாப்புலர் டயலாக் இது. எதைப் பற்றியும் ஆழ்ந்து யோசித்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய ஒரு உன்னதமான மனிதர் ரஜினி.

உதாரணத்துக்கு, ஒரு படத்தில் முழுமையாக நடித்து முடித்துவிட்டாலும் சரி, புதிதாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றாலும் சரி, தன்னை அமைதிபடுத்திக் கொள்ள இமயமலைக்குப் போவார். தெளிவான மனநிலையுடன் திரும்புவார். பதற்றமில்லாத, தெளிவான இந்த மனோபாவம் முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தேவை.
'முதலீட்டை ஆரம்பிக்க பணம் இருந்தால் போதும், மனோபாவம் எதற்கு?’ என்று சிலர் கேட்கலாம். வெற்றிகரமான முதலீட்டிற்குப் பணம் மட்டுமல்ல, அமைதியான, தெளிவான மனநிலையும் அவசியம் வேண்டும். அப்போதுதான் சரியான பங்குகளை தேர்வு செய்து சிறப்பானதொரு முதலீட்டை ஆரம்பிக்க முடியும். பதற்றமான மனநிலையில் எடுக்கும் முடிவு பெரும்பாலும் சரியாக இருக்காது.

எளிமை அவசியம்!

KISS - Keep It Simple -Silly என ஆங்கிலத்தில் சொல்வார்கள்; அதாவது, நம் செய்கைகள் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும். ரஜினி படங்களின் கதை அமைப்பைப் பாருங்கள்; எந்த படமும் தலையை பிய்த்துக் கொள்கிற மாதிரி இருக்காது. அவரது படங்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஜினி எளிமைதான். சாதாரண ஜிப்பாதான் போட்டுக் கொள்வார். சாதாரண நோக்கியா போன்தான் அவரிடம் இருக்கும்.
பங்குகளில் முதலீடு செய்யும் போதும் எளிமையாக, நமக்கு புரியும்படியான பங்குகளில் பணத்தைப் போடுவது நல்லது. அப்போதுதான் அதில் நம்மால் ஈடுபாட்டுடன் செயல்பட்டு அந்த பங்கை கண்காணித்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத நிறுவனங்களில் பணம் போட்டு பின்னர் வருத்தப்படுவதைவிட, பிஸ்கெட், சர்க்கரை, டீ போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இதற்கொரு உதாரணம், ஐ.டி.சி.

நேரத்தைக் கடைப்பிடியுங்கள்!

'எப்ப வருவேன் எப்புடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’. இது படத்திற்காக ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக் அல்ல. அவரது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றி வரும் நடைமுறை. ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்தாலும் சரி, விழா மேடையாக இருந்தாலும் சரி, 'இத்தனை மணிக்கு நீங்க வந்துடணும்’ என்று சொன்னாலும், 'இத்தனை மணிக்கு வரேன்’ என்று சொன்னாலும், சொன்ன நேரத்தில் சொன்னபடி இருப்பார்.
அதுபோல பங்குச் சந்தையிலும் நாம் நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 'டைமிங் தி மார்க்கெட்’ என்பார்கள். அதாவது, சரியான தருணத்தில் நுழைவதும் சரியான நேரத்தில் வெளியேறுவதும் சந்தையில் முக்கியம். நீண்ட நாள் முதலீட்டாளர்களைவிட டே டிரேடர்களுக்கு இது மிக முக்கியம்.

ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   P16
காலத்திற்கேற்ற மாற்றம்!

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்!’ - ரஜினியின் இன்னொரு பஞ்ச் டயலாக் இது. இந்த விஷயத்தில் வாரன் பஃபெட்டும் ரஜினியும் ஒரேமாதிரிதான். ஐ.டி. துறை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் அதில் முதலீடு செய்யாமலே இருந்தார் வாரன் பஃபெட். பிற்பாடு ஐ.டி. நல்ல வளர்ச்சி கண்டபோது தன் கருத்தை மாற்றிக் கொண்டு முதலீடு செய்தார்.

இதே கோட்பாட்டை ரஜினி தனது நடிப்பிலும் பின்பற்றி வருகிறார். அறுபது வயதானபிறகும் காலத்திற் கேற்றார்போல இளமைத் துள்ளலோடு நடிக்கிறார். இதற்கு சமீபத்திய உதாரணம், எந்திரனில் ரோபோவாக நடித்தது.
இந்த பாலிசியை முதலீட்டாளர்களும் பின்பற்ற வேண்டும். சிறிது காலம் டெலிகாம் துறை பங்குகள் நல்ல வருமானம் கொடுக்கும்; அடுத்த சில காலம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். காலத்திற்குத் தகுந்தாற்போல நம் முதலீட்டு முறைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் லேட்டஸ்ட்-ஆக இருக்க வேண்டும்.
என் வழி தனி வழி!
சிஷீஸீtக்ஷீணீக்ஷீவீணீஸீ ணீஜீஜீக்ஷீஷீணீநீலீ என சொல்வார்கள்; சந்தையில் எல்லோரும் செய்வதைப் போலில்லாமல், அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு லாபம் பார்ப்பது ஒரு யுக்தி. சென்ற வருடம் பங்குச் சந்தை சரிந்த சமயம், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டி.சி.எஸ். ஆகிய மூன்று பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. காரணம், டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்தது. ஆனால், இன்று சந்தை ஏற்றத்தில் இருக்கிறது. ஆனால், இந்த மூன்று பங்குகள் இறக்கத்தில் இருக்கின்றன. காரணம், டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. ஏற்றமோ, இறக்கமோ தெளிவான சிந்தனையுடன் தனித்திருந்து முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

தெரியாததைச் செய்யக்கூடாது!
தெரியாத விஷயம் எதுவாக இருந்தாலும் ரஜினி அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். இதற்கு ஒரு சின்ன உதாரணம் இயக்குநர்களின் நாற்பதாவது ஆண்டு விழா மேடையில் இயக்குநர் பாலசந்தருக்கும், ரஜினிக்கும் இடையேயான உரையாடல். அந்த உரையாடலில் பாலசந்தர், ரஜினியிடம் 'நீ இவ்ளோ பிரமாதமா நடிக்கிறியே, உன்னால ஒரு படத்தை டைரக்ட் பண்ண முடியுமா?’ என்றதற்கு, ''டைரக்ஷன் என்பது எனக்குத் தெரியாத விஷயம். அதனால் நான் அதைச் செய்ய மாட்டேன்'' என்றார்.
இதுபோல, சில பங்குகள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத போது அவற்றில் முதலீடு செய்யக் கூடாது. மற்றவர்கள் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதால் ஆட்டு மந்தை மாதிரி நாமும் ஒரு பங்கை வாங்கி முதலீடு செய்யக்கூடாது.

ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   P17a

உறவு முக்கியம்!
வாரன் பஃபெட்டிடம் 'ஒரு பங்கை எவ்வளவு நாட்கள் வைத்திருப்பீர்கள்?’ என்றதற்கு, ''என் வாழ்நாள் முழுவதும்'' என்றார். அதாவது, அத்தகைய நல்ல பங்குகளை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்பதுதான் அதன் அர்த்தம்!

இதேபோலத்தான் ரஜினியும். அவர் ஒருவருடன் பழகி, அந்த நபரின் குணாதிசயங்கள் அவருக்குப் பிடித்திருந்தால், அவரை நண்பராக ஏற்றுக் கொள்வதோடு, அந்த நட்பை தொடர்ந்து வைத்திருப்பார். இதற்குச் சரியான உதாரணம் ரஜினி - ராஜ்பகதூரின் நட்பு.
நாம் முதலீடு செய்திருக்கும் பங்குகளில் மிக நல்ல பங்கை நமது கடைசி காலம் வரை வைத்து இருந்தால் அது நிச்சயம் அள்ளித் தரும். உதாரணமாக, கோல்கேட்.

கடந்துவந்த பாதை!

'Rear view mirror is clearer than the wind shield' என முதலீட்டைப் பற்றிச் சொல்வார்கள். ரஜினி கடந்து வந்த பாதையை அடிக்கடி திரும்பி பார்த்து
உழைப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வதால்தான் அவருடைய எதிர்கால வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதுபோல, ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனத்தின் பின்புலன் என்ன, அந்த நிறுவனம் கடந்து வந்த பாதை எப்படி, நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் போன்றவற்றைப் பார்ப்பது அவசியம். நிதி செயல்பாடுகள் மட்டுமல்லாது அந்த நிறுவனம் நாணயமானது தானா, அதனுடைய தராதரம் என்ன என்பதைக் கவனிக்க தவறக்கூடாது.

பிற வழி வருமானம்!
நாம் செய்கிற தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்தைத் திரும்ப திரும்ப அதே தொழிலில் முதலீடு செய்யாமல் வருமானம் வரக்கூடிய மற்ற துறைகளில் முதலீடு செய்வது நல்லது. ரஜினி தனது நடிப்புத் தொழிலிருந்து கிடைக்கும் வருமானத்தை திரும்பத் திரும்ப நடிப்பு சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்யாமல் பல துறைகளில் முதலீடு செய்தார்.

தோல்வியைக் கண்டு துவளாமை!

ரஜினிக்கு படுதோல்வியைக் கொடுத்த படம் 'பாபா’. அதைக் கண்டு அவர் துவண்டு போகாமல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பிரச்னைகளை சமாளித்து மீண்டு வந்து சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தந்தார். வெற்றிக்கான விதை தோல்வியில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
அதுபோலத்தான் முதலீட்டிலும் ஏற்றமும் வரும்; பல சமயங்களில் பெரியதாக இறக்கத்தையும் சந்திக்க வேண்டி யிருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஏகப்பட்ட நஷ்டம் என்று புலம்புபவர்கள் ஏராளம். காரணம், தெளிவாக முடிவெடுக்க தெரியாததே! ஒரே துறையில் முதலீடு செய்யாமல் வேறுவேறு துறையில் முதலீடு செய்திருந்தால், பங்குச் சந்தையில் ஏற்படும் நஷ்டத்தை எளிதாகச் சமாளிக்க முடியும்.

கற்றுக் கொள்ளுங்கள்!

நடிப்பு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சினிமாவிற்கு வராமல் போயிருந்தால் ரஜினி இன்று இவ்வளவு பெருமைகளை அடைந்திருக்க முடியாது. தனக்குத் தெரியாத நடிப்பைக் கற்றுக்கொண்டார். வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. கடுமையான முயற்சியும் உழைப்பும் துவளாத மனமும் அவரிடம் இருந்ததால் இன்று சிகரம் தொட்டிருக்கிறார்.
எனக்குத் தெரியாது என நாம் பங்குச் சந்தையை விட்டு விலகியிருப்பதால் நஷ்டம் யாருக்கு? பணவீக்கத்தைத் தாண்டி நடுத்தட்டு மக்களுக்கு லாபம் தருவது பங்குச் சந்தை. அதனால், பங்குச் சந்தை பற்றி தெரியாது என்று சொல்லி வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பதைவிட, சின்னதாக அதில் ஒரு முதலீட்டை ஆரம்பித்து ரஜினி போல பெரிய வெற்றிகாணத் தயாராவோம்!
சந்திப்பு:- செ.கார்த்திகேயன்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 4:35 pm

இது சினிமா செய்தி இல்லை.... அய்யோ, நான் இல்லை

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 07, 2012 4:49 pm

நல்லா இருக்கே !!! நன்றி ! சூப்பருங்க

ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   599303
ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....   102564

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக