ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

+6
ரட்சகா
sshanthi
ரேவதி
dhilipdsp
ayyamperumal
T.PUSHPA
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by T.PUSHPA Sun Feb 05, 2012 12:15 pm

அம்மா...!
அம்மா... அ...!
அம்மா... ஆ...!
எனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா?

உன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது
எனது நீண்ட கால ஆசை அம்மா!
அதனால் தான் அழைத்துப் பார்த்தேன்!
அதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம்
என்று நினைத்து விடாதே!

நான் உனது வயிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்...
எனது இயலாமையை நினைத்து
நான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...!
என் உடன் பிறந்த தம்பிகள்
இன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா?

இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...!
ஆனால், நீ என்னை ஒதுக்கியதில் என்ன காரணம் அம்மா இருந்தது?..
இந்த 30 வருட சுழற்சியில்... காலம் உன்னை எப்படி
திருப்பி அடிக்கிறது என்று பார்த்தாயா அம்மா?...

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி
நான் உன்னைப் பழி தீர்ப்பதற்காக
இதை சொல்லவில்லை அம்மா...
என்னால் உன்னைக் காப்பாற்ற முடிய வில்லையே...
அதற்கு நீயே காரணமாகவும் இருந்திருக்கிறாயே...
என்ற ஆதங்கத்தில் தான்
அதை உனக்கு நினைவு படுத்துகிறேன்...!

ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு புரிகிறதா அம்மா?!

இந்த வெயில் பொழுதில் நீ இப்படி அலைந்து திரிவதை
என்னால் தாங்க முடியவில்லை அம்மா!
ஆனாலும், எனது வீட்டிற்கு வந்து என்னோடு வந்து தங்கிவிடு
என்று சொல்லவும் நான் விரும்பவில்லை!

அதனால்...
என் வீட்டு வாசல் அருகில் நான் ஒரு மரம் வளர்த்து வருகிறேன் அம்மா...
வேண்டுமானால் அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு
வெய்யில் குறைந்தவுடன் வேறு எங்காவது போய் விடு அம்மா!
நீ என்னைப் பெற்ற கடனுக்காகது
என்னால் இதை மட்டும் தான் செய்ய முடியும்!

பல காலங்களாக கிடைக்காத உனது அரவணைப்பு
இப்போதாவது எனக்கு கிடைக்காதா என்று தான் தோன்றுகிறது...
அப்படி உனது அரவணைப்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால்
நீ என்னுடன் அல்லவா தங்க வேண்டியிருக்கும்?!...
அதனால் என் வீட்டிலும் உனக்கு இடம் இல்லை அம்மா!
நீ வேறு எங்காவது போய்விடு!

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா...ஆ...!
நான் இப்போதும் உனக்காக அழுகிறேன்
என்பது உனக்குப் புரிந்ததா அம்மா...?!
ம்கும்... பிறந்த போது நான் கதரியதே உனக்குக் கேட்கவில்லை...
இன்று மட்டும் எப்படி கேட்டுவிடப் போகிறது?

நீ மட்டும் அன்று என்னை உதாசீனப் படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று நான் உன்னை மகாராணி போல் பாதுகாத்திருப்பேனே அம்மா!...

ஏன் அம்மா அழுகிறாய்?
என் வீட்டு வாசல் வரை வரச்சொன்ன நான்
ஏன் உன்னை எனது வீட்டிற்குள் அழைக்க வில்லை
என்று வருந்துகிறாயா...?

எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!

உன்னை அழைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை தான்
இருந்தாலும் கேட்கிறேன்...
என்னோடு வந்து விடுகிறாயா அம்மா?

அம்மா...!
அம்மா...அ...!
அம்மா... ஆ...!
நான் பேசுவது உனக்கு கேட்கிறதா அம்மா?
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by ayyamperumal Sun Feb 05, 2012 12:36 pm

T.PUSHPA wrote:
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா
!

ஏன் இப்படி எல்லாம் ஆழ வைக்கிறீர்கள் ? இந்த வரிகளை படித்தவுடன் தான் இது பெண்ணிய பார்வையில் அம்மாவிற்கு எழுதப்பட்ட படைப்பு என உணரமுடிகிறது. வெகுநாட்களுக்கு பின்பு மனதை உருகவைக்கும் ஒரு பதிவினை ஈகரையில் படித்தது மகியாச்சி அளிக்கிறது.

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by T.PUSHPA Mon Feb 06, 2012 7:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
T.PUSHPA wrote:
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா
!

ஏன் இப்படி எல்லாம் ஆழ வைக்கிறீர்கள் ? இந்த வரிகளை படித்தவுடன் தான் இது பெண்ணிய பார்வையில் அம்மாவிற்கு எழுதப்பட்ட படைப்பு என உணரமுடிகிறது. வெகுநாட்களுக்கு பின்பு மனதை உருகவைக்கும் ஒரு பதிவினை ஈகரையில் படித்தது மகியாச்சி அளிக்கிறது.

ஆமாம் அண்ணா,
பெண் சிசு கொலை மற்றும் ஆணாதிக்கம் மற்றும் பெற்றோரை கை விடுவோர் ஆகிய மூவருக்கும் சாட்டையடி கொடுக்கம் காரணங்களோடு எழுதப்பட்ட வசன நடை புதுக்கவிதை அண்ணா இது!

புரிந்து கொண்டீர்கள். நன்றி அண்ணா! நன்றி .

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by dhilipdsp Fri Feb 17, 2012 9:33 am

T.PUSHPA wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
T.PUSHPA wrote:
ஆமாம் அம்மா! அவ்வளவு பெரிய நமது வீட்டில்
எனக்கு வாழ இடம் இல்லை என்று தானே
நீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்
நானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...
மகிழ்ச்சி

அன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...
அதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...
இதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா
!

ஏன் இப்படி எல்லாம் ஆழ வைக்கிறீர்கள் ? இந்த வரிகளை படித்தவுடன் தான் இது பெண்ணிய பார்வையில் அம்மாவிற்கு எழுதப்பட்ட படைப்பு என உணரமுடிகிறது. வெகுநாட்களுக்கு பின்பு மனதை உருகவைக்கும் ஒரு பதிவினை ஈகரையில் படித்தது மகியாச்சி அளிக்கிறது.

ஆமாம் அண்ணா,
பெண் சிசு கொலை மற்றும் ஆணாதிக்கம் மற்றும் பெற்றோரை கை விடுவோர் ஆகிய மூவருக்கும் சாட்டையடி கொடுக்கம் காரணங்களோடு எழுதப்பட்ட வசன நடை புதுக்கவிதை அண்ணா இது!

புரிந்து கொண்டீர்கள். நன்றி அண்ணா! நன்றி .

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by dhilipdsp Fri Feb 17, 2012 9:36 am

அழுகை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by ரேவதி Fri Feb 17, 2012 11:53 am

T.PUSHPA wrote:
எப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...?
பிறந்த நாளில் இருந்து-நான்
கல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!!!
பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக
நீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்!

கண்ணீரை வரவழைக்கும் வரிகள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by sshanthi Fri Feb 17, 2012 3:54 pm

மனதை வருடிய (வாடிய) அருமையான கவிதை மகிழ்ச்சி

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by ரட்சகா Fri Feb 17, 2012 4:11 pm

உணர்ச்சிமயமான கவிதை புஷ்பா ....
சூப்பருங்க

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by sinthiyarasu Tue Feb 28, 2012 8:49 pm

மனதை உருக்கும் வரிகள். எனது அறிவுக்கு தெரிந்தவரை, அம்மா அப்பாவை அன்புடன், உண்மையான பரிவுடன் கவனிப்பதில், பெண் குழந்தைகள் ஒருபடி மேல் தான்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 11:01 pm

அற்புதமான மனம் நெகிழும் மாபெரும் உணர்வு பொதிந்தக் கவிதை...
வடிவம்-வார்த்தை அமைப்பையெல்லாம் தூக்கி உடைப்பில் போடுங்கள்...
இலக்கணம் இல்லைதான் இந்தக் கவிதையில் இதயம் இருக்கிறதே...
அது போதுமே ஆயிரம் உணர்வுகளை அள்ளி அள்ளி அனைவரின் மனதிலும் இறைக்க-இளக்க...

பிரமாதம் புஷ்பா...சிசுக் கொலையானப் பெண்ணொருத்திப் பேசுவதுபோல் எழுதிப் பிய்த்து எடுக்கிறீர்கள் கல் நெஞ்சக் காரர்களின் உறுப்புகள் ஒவ்வொன்றையும்....
பலமானப் பாராட்டுகள் புஷ்பா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? 224747944

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Rஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Aஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Emptyஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Rஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Empty Re: எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum