புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Poll_c10தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Poll_m10தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Poll_c10தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Poll_m10தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 3:32 pm

1964ம் ஆண்டு டிசம்பர் 23ந்தேதி, தென் தமிழ்நாட்டை பயங்கர புயல் தாக்கியது. அப்போது தனுஷ்கோடி கடலில் மூழ்கிவிட்டது. 1,500 பேர் பலியானார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு சமயங்களில் பெரும் புயல் வீசியிருக்கிறது. எனினும், 1964 டிசம்பரில் வீசிய புயல், வரலாறு கண்டறியாத அளவுக்கு பயங்கரமாக இருந்தது.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது. புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது. தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின. திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள, தனுஷ்கோடிக்குள் புகுந்தது.

அந்த சமயத்தில், தனுஷ்கோடி ரெயில் நிலையத்திலும், சுங்க இலாகா பரிசோதனை நடைபெறும் இடத்திலும் சுமார் ஆயிரம் பேர்கள் இருந்தனர். அவர்களில் 500 பேர் செத்திருக்கவேண்டும் என்று முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால், தனுஷ்கோடி அடியோடு அழிந்து, கடலில் மூழ்கி விட்டதால், சாவு எண்ணிக்கை 1,000க்கு மேல் இருக்கும் என்று பின்னர் மதிப்பிடப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும். இந்த அதிசயப் பாலம், பலத்த சேதம் அடைந்தது. புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது.

தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கியபோது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர். கடலில் மூழ்கிய ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது. அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன. தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை.

கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள், மணல் திட்டுகளில் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. புயல், மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது. உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர்.

அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது. விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன. உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர். "சாரதா" என்ற கப்பல், தனுஷ்கோடிக்குச் சென்று 135 பேர்களை காப்பாற்றியது.

அவர்கள், மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கரையில் இறக்கி விடப்பட்டனர். தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு 4 நாட்கள் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும், பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. புயல், கடல் கொந்தளிப்பால் சேதம் அடைந்த பாம்பன் பாலம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

இதை, 1914ம் ஆண்டில், தென் இந்திய ரெயில்வே தலைமை என்ஜினீயராக இருந்த ஒசன்சே என்ற வெள்ளைக்காரர் அமைத்தார். இந்தப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம்தான் ராமேசுவரத்துக்கு போகவேண்டி இருந்தது. இந்தப்பாலம் 6,700 அடி நீளம் கொண்டது. இதை அமைக்க 2,600 டன் இரும்பு செலவாயிற்று.

கட்டி முடிக்க 1 ஆண்டு பிடித்தது. முன் காலத்தில், ராமேசுவரம் தனித்தீவாக இருக்கவில்லை. தமிழ்நாட்டுடன் சேர்ந்தே இருந்தது. 1573ம் ஆண்டில் பெரும் புயல் அடித்து, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது ராமேசுவரம் பகுதி துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறிவிட்டது. அதன்பின், பாம்பன் பாலம் கட்டப்படுகிறவரை, படகு மூலமாகவே மக்கள் ராமேசுவரம் போய் வந்தார்கள். பிணங்களை கழுகுகள் தின்றன தனுஷ்கோடிக்கு நேரில் சென்ற "தினத்தந்தி" நிருபர் தெரிவித்த தகவல் வருமாறு:-

"நானும், என் நண்பர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றோம். பல இடங்களில் நீந்திச் சென்றோம். கடலில் மூழ்கிய ரெயிலில் 300 பேர் இருந்ததாக தெரியவருகிறது. அவ்வளவு பேரும் பலியாகிவிட்டார்கள். என்ஜினுக்கு கீழே டிரைவரின் பிணம் கிடந்தது. கடலில் பிணங்கள் மிதக்கின்றன. நாங்கள் 50 பிணங்கள் வரை எண்ணினோம்.

பிணங்களை கழுகுகள் கொத்தித்தின்ற கோரக்காட்சியைக் கண்டு மனம் பதறியது. எங்கு போனாலும் பிண நாற்றம் தாங்க முடியவில்லை. தனுஷ்கோடியில் வசித்த சுமார் 2 ஆயிரம் பேரில், பாதிக்கு மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டார்கள். உயிர் தப்பியவர்கள் கதறி அழுவதைப் பார்க்கும்போது, நெஞ்சம் உருகுகிறது. சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

பலர் குடும்பத்தோடு ராமேசுவரத்தை நோக்கி நடந்து செல்கிறார்கள். ராமேசுவரம் தெருக்களில் உடைந்த படகுகள் கிடக்கின்றன. மழையில் உடைமைகள் அனைத்தையும் இழந்த ஒருவர், கட்டிக்கொள்ள வேட்டி இல்லாமல், இறந்து போன தன் மனைவியின் சேலையால் உடம்பை மூடி மறைத்துக்கொண்டு அழுத காட்சி கல் மனதையும் கரையச் செய்வதாய் இருந்தது."

இவ்வாறு நிருபரின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறந்தவர்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 100 பெயர்கள் அடங்கியிருந்தன. அடையாளம் தெரியாத, அழுகிப்போன பிணங்களை பெரிய குழிகளைத் தோண்டி புதைத்தார்கள். 28ந்தேதி வரை 150 பிணங்கள் புதைக்கப்பட்டன.

தனுஷ்கோடியை புயல் தாக்கிய அதே நேரத்தில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரப்புயல் வீசியது. (இந்தப் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.) தலைமன்னார் பகுதியில் 1,500 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களில் பலருடைய பிணங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கரை ஓரப்பகுதிகளில் ஒதுங்கிக் கிடப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

தனுஷ்கோடியில் கடும் புயல் வீசி, கடல் கொந்தளிப்பில் நூற்றுக்கணக்கான பேர் பலியான செய்தி அறிந்து, இங்கிலாந்து ராணி எலிசபெத் துயரம் அடைந்தார். ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு அனுதாப செய்தி அனுப்பினார். புயல் வீசிய நேரத்தில் நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் ராமேசுவரத்துக்கு சென்றிருந்தார்கள்.

அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர். சாவித்திரியும், ஜெமினிகணேசனும் அதிசயமாக உயிர் தப்பிய தகவல், மறுநாள்தான் தெரிய வந்தது.

மாலைமலர் - காலச்சுவடு பக்கத்திலிருந்து.

தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 3:32 pm

தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு: ஜெமினிகணேசன்-சாவித்திரி பேட்டி

தனுஷ்கோடியிலும், ராமேசுவரத்திலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட போது அங்கிருந்த நடிகர் ஜெமினிகணேசனும், நடிகை சாவித்திரியும் அதிசயமாக உயிர் தப்பினார்கள். "பெரிய கண்டத்தில் இருந்து உயிர் பிழைத்தோம்" என்று அவர்கள் நிருபரிடம் கூறினார்கள். ராமேசுவரம் தீவில் கடுமையாக புயல் வீசியதால் தனுஷ்கோடியை கடல் விழுங்கியது.

அந்த பகுதியில் கடல் நீர் புகுந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீராக காட்சி அளித்தது. புயலின்போது ராமேசுவரத்தில் சிக்கிக்கொண்ட ஜெமினி கணேசனும், சாவித்திரியும் என்ன ஆனார்கள் என்பது, இரண்டு நாட்கள் தெரியாமலேயே இருந்தது. சேதப்பகுதிகளைப் பார்வையிட மந்திரி கக்கன் பாம்பனில் இருந்து ரெயிலில் சென்றார்.

அவரை ஜெமினிகணேசன் சந்தித்தார். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் புயலில் இருந்து உயிர் தப்பிய தகவல் அப்போதுதான் தெரியவந்தது. மந்திரி கக்கனுடன் அவர்கள் இருவரும் ரெயிலில் பாம்பன் திரும்பினார்கள். அதன்பிறகு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் 26ந்தேதி இரவு சென்னை திரும்பினார்கள். "பெரிய கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தோம்" என்று இருவரும் தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் அவர்கள் இருவரையும் நடிகர்களும், சினிமா அதிபர்களும் வரவேற்றார்கள். ஜெமினிகணேசனைக் கண்டதும், அவருடைய நெருங்கிய நண்பரான நடிகர் பாலாஜி கட்டித் தழுவிக்கொண்டார். ஏ.பி. நாகராஜன், நடிகை சந்திரகாந்தா ஆகியோரும் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் பத்திரமாகத் திரும்பியது குறித்து மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

ஜெமினிகணேசன் விமான நிலையத்தில் இருந்து அவருடைய வீட்டுக்குச்சென்றார். அங்கு ஜெமினிகணேசனின் மனைவி பாப்ஜி ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றார். ஜெமினிகணேசனையும், சாவித்திரியையும் நிருபர் பேட்டி கண்டார். "ராமேசுவரத்தில் இருந்து எப்படி தப்பித்து வந்தீர்கள்?" என்று கேட்டதற்கு, ஜெமினிகணேசன் கூறியதாவது:-

"நாங்கள் சென்னையில் இருந்து கிளம்பியபோது, ராமேசுவரம் போகவேண்டும் என்று நினைக்கவே இல்லை. கொடைக்கானலில் தங்கி இருக்கும்போது, "ராமேசுவரம் போய் வருவோமே" என்று சாவித்திரி தெரிவித்தாள். ஒரே நாளில் போய்விட்டு திரும்பிவிடுவோம் என்று முடிவு செய்து, ராமேசுவரம் போனோம்.

நான் சாவித்திரி, மகள் விஜயா, குடும்ப டாக்டர்கள் ராமகிருஷ்ணா, லீலாவதி, ஜெயம்மா ஆகிய 6 பேரும் 22ந்தேதி காலை ராமேசுவரம் போய்ச் சேர்ந்தோம். ராமேசுவரத்தில் சாமி கும்பிட்டுவிட்டு தனுஷ்கோடி சென்றோம். அங்கு கடலில் குளித்தோம். குளித்ததும் ராமேசுவரத்துக்கு திரும்புவதற்கு தயாராகும்படி சாவித்திரியை துரிதப்படுத்தினேன்.

மேலும் ஒருநாள் இங்கேயே தங்கிவிட்டு, ராமேசுவரம் போகலாமே" என்று சாவித்திரி சொன்னாள். "வேண்டாம், இன்றே திரும்பி விடுவோம்" என்று நான் பிடிவாதமாகக்கூறி, எல்லோரையும் புறப்படச் செய்தேன். புறப்படுவதற்கு தயாராக நின்ற ரெயிலில் அவசரம் அவசரமாக ஏறி, பிற்பகல் 4 மணிக்கு ராமேசுவரம் போய்ச்சேர்ந்தோம்.

இரவு 8 மணிக்கு நான் படுத்து தூங்கிவிட்டேன்." இவ்வாறு ஜெமினிகணேசன் கூறியதும், நடிகை சாவித்திரி குறுக்கிட்டு, "அதன் பிறகு நடந்ததை நான் கூறுகிறேன்" என்று கூறி பேட்டியைத் தொடர்ந்தார்:-

"இரவு 8 மணிக்கு புயல் அடிக்க ஆரம்பித்தது. "ஓ...!" என்ற சத்தத்துடன் காற்று சுழன்று சுழன்று அடித்தது. "காற்று இவ்வளவு பலமாக இருக்கிறதே, என்ன ஆகுமோ!" என்று நானும், டாக்டர்களும் கவலையோடு பேசிக்கொண்டோம். இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வரவர புயல் அதிகமாகியது. அவர் (ஜெமினிகணேசன்) விழித்துக்கொண்டார்.

நள்ளிரவு 3 மணி இருக்கும். நரிகள் கூட்டமாக சேர்ந்து ஊளையிட்டன. நள்ளிரவு நேரத்தில் பயங்கர சூறாவளியுடன், நரிகளின் ஊளை சத்தமும் சேர்ந்து, எங்களை நடுநடுங்கச் செய்தன. சினிமாவில் வருவது போன்ற பயங்கர சம்பவம், வாழ்க்கையிலும் நடக்கிறதே என்று எண்ணினேன். இரவு 3 மணிக்கு புயல் உச்சகட்டத்தை அடைந்தது.

4 மணி வரையில் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு, பயங்கரப் புயல் வீசியது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள பிரயாணிகள் பங்களாவில் நாங்கள் தங்கி இருந்தோம். புயலில் அதன் கூரைகள் பறந்துவிட்டன. ஒருவாறாகப் பொழுது விடிந்தது. நாங்கள் பங்களாவுக்கு வெளியே வந்தோம்.

எங்கும் ஒரே வெள்ளக்காடாக கிடந்தது. "என்னம்மா, ரோட்டில் ஆறு மாதிரி தண்ணீர் ஓடுது" என்று என் மகள் விஜயா ஆச்சரியத்துடன் கேட்டாள். நாங்கள் ராமேசுவரம் கோவிலுக்குப் போனோம். வழியெல்லாம் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. வீடுகள் இடிந்து கிடந்தன. கோவில் நிர்வாக அதிகாரியை நாங்கள் சந்தித்தோம்.

"இவ்வளவு பயங்கர புயல் வீசி இருக்கிறதே நாங்கள் திரும்பிச் செல்ல ரெயில் கிடைக்குமா?" என்று கேட்டோம். "ரெயிலா? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய்விட்டதே! தனுஷ்கோடி கடலில் மூழ்கி கிடக்கிறது. அங்கெல்லாம் பலத்த சேதம்" என்று அவர் சொன்னார். தன்னுடைய தம்பியும் கடலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று அவர் கூறி கண்ணீர் விட்டார். புயலின் முழு பயங்கரத்தையும் அப்போது உணர்ந்தோம்.

நாங்கள் 1,000 ரூபாய் கொண்டு போயிருந்தோம். அதை அங்கு வீடு வாசல் இழந்து தவித்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம். வீடுகள் இடிந்து விழுந்ததால், பலர் காயம் அடைந்து கிடந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க என் வீட்டுக்காரர் உதவினார். அன்று முழுவதும் ராமேசுவரத்தில் தங்கி இருந்தோம்.

25ந்தேதி காலை எழுந்ததும், எப்படி ஊர் திரும்புவது என்ற கவலை ஏற்பட்டது. ராமேசுவரத்தில் ஒரு ரெயில் என்ஜின் மட்டும் நின்று கொண்டு இருந்தது. அதில் ஒரே ஒரு பெட்டியை மட்டுமாவது சேர்த்து, எங்களை பாம்பனில் கொண்டு போய் விடும்படி நாங்கள் டிரைவரிடம் கேட்டுக்கொண்டோம். "ரெயிலை ஓட்டுவதற்கு நிலக்கரி இல்லை. நான் பாம்பன் போய் கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு அவர் பாம்பன் போனார்.

வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. மாலை 4 மணிக்கு பாம்பனில் இருந்து ரெயில் வண்டி வந்தது. அதில் மந்திரி கக்கன் வந்தார். புயலில் வீடு வாசல் இழந்தவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்கள் கொடுத்தார். விமானத்தில் இருந்தும் சாப்பாடு பொட்டலங்கள் போட்டார்கள். அதை விஜயா ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

ஒவ்வொரு பொட்டலமும் கீழே விழும்போது ஒண்ணு, ரெண்டு என்று எண்ணினாள். 26ந்தேதி காலை 8 மணிக்கு மந்திரி கக்கன் வந்த ரெயிலில் ஏறி நாங்கள் பாம்பன் போய் சேர்ந்தோம். அங்கிருந்து மோட்டார் படகில் ஏறி மண்டபத்தை அடைந்தோம். மண்டபத்தில், எங்களுக்காக கார் காத்து இருந்தது. அதில் ஏறி மதுரை சென்றோம். மாலையில் விமானத்தில் ஏறி சென்னை வந்து சேர்ந்தோம்.

இவ்வாறு சாவித்திரி கூறினார்.

புயல் விழுங்கிய தனுஷ்கோடி சீரமைப்புக்காக நிதி திரட்டப்பட்டது. ஏராளமானவர்கள் நன்கொடை வழங்கினார்கள். புயலில் இருந்து உயிர் மீண்டு திரும்பிய ஜெமினிகணேசனும், சாவித்திரியும் செஞ்சிலுவை சங்கத்திடம் ரூ.10 ஆயிரம் வழங்கினார்கள். பிறகு காங்கிரஸ் தலைவர் காமராஜரை சந்தித்து மேலும் ரூ.5 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்கள்.

தனுஷ்கோடியை கடல் விழுங்கியது என்று கேள்விப்பட்டதும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் அதிர்ச்சி அடைந்தார். அவர் தனுஷ்கோடிக்கு சென்று அந்த பகுதிகளை சுற்றிப்பார்த்தார். பிறகு சென்னை திரும்பிய பெரியார் தான் கண்ட காட்சிகள் பற்றி கூறும்போது, "இதுபோன்ற கோர சம்பவத்தை என் வாழ்நாளில் கண்டதும் இல்லை.

கேட்டதும் இல்லை. என்றுமே மனதை விட்டு நீங்காத துயர சம்பவம் இது" என்று சொன்னார். தனுஷ்கோடியை புயல் தாக்கி பெரும் சேதம் விளைவித்தபோது, தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

தனுஷ்கோடி கடலில் மூழ்கிய தகவல் அறிந்ததும் காமராஜர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சென்னை வந்தார். தனுஷ்கோடி பகுதியை பார்ப்பதற்காக காமராஜர் விமானப் படை விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அந்த விமானத்தில் முதல் அமைச்சர் பக்தவச்சலம், தலைமை போலீஸ் அதிகாரி அருள் ஆகியோரும் சென்றார்கள்.

விமானம் திருச்சியை நெருங்கும்போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் இரண்டு இயந்திரங்களில் ஒன்றுதான் செயல்பட்டது. அந்த ஒரு இயந்திரத்தை வைத்தே சமாளித்து விமானத்தை இயக்கி திருச்சி விமான நிலையத்தில் இறக்கினார், விமானி. இந்த விவரம் பெங்களூருக்கு தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து வேறு விமானம் திருச்சிக்கு உடனடியாக வந்தது.

பிறகு அந்த விமானத்தில் காமராஜரும், மற்றவர்களும் ஏறி தனுஷ்கோடிக்கு பயணமானார்கள். தனுஷ்கோடியில் தவிக்கும் மக்களுக்கு போடுவதற்காக விமானத்தில் 6 ஆயிரம் உணவு பொட்டலங்களும், ரொட்டி, பிஸ்கட்டுக்கள் போன்றவைகளும் ஏற்றிச் செல்லப்பட்டன. கடலில் மூழ்கிய தனுஷ்கோடி மீது விமானம் தாழ்வாக பறந்தது.

சுமார் ஒரு மணி நேரம் விமானத்தில் பறந்தபடியே சேதங்களை காமராஜர் பார்வையிட்டார். விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட உணவு பொட்டலங்கள் போடப்பட்டன. பின்னர் சென்னை திரும்பிய காமராஜர் நிருபர்களிடம் கூறியதாவது:_

"பாம்பன் பாலத்தில் வெறும் தூண்கள் மட்டும்தான் நிற்கின்றன. மக்கள் தனுஷ்கோடியில் இருந்து நடந்தே வெளியேறி வருகிறார்கள். எங்கள் விமானத்தை பார்த்ததும் கை அசைத்தார்கள். நாங்கள் அவர்களுக்கு உணவு பொட்டலங்களை போட்டோம்.

தனுஷ்கோடி மக்களுக்கு குடிநீர் கொடுப்பதுதான் பெரிய பிரச்சினை. வழக்கமாகவே தனுஷ்கோடிக்கு ரெயில் மூலம்தான் குடிதண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இனி எப்படி அனுப்புவது என்பதை யோசிக்கவேண்டும். பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து படகுகள் மூலம் தண்ணீரை அனுப்பலாம்."

இவ்வாறு காமராஜர் கூறினார்.

தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 3:38 pm

நன்றி அண்ணா. இதை படிக்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது. இதை பற்றி என் தந்தை என்னிடம் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:42 pm

மகா பிரபு wrote:நன்றி அண்ணா. இதை படிக்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது. இதை பற்றி என் தந்தை என்னிடம் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார்.

எப்டினா, ரெண்டு நிமிசத்துல இத்தாம் பெரிய பதிவ படிச்சீங்க......சிட்டி கும் உங்களுக்கும் என்ன தொடர்பு....நீங்க யாரு........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 3:44 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:நன்றி அண்ணா. இதை படிக்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது. இதை பற்றி என் தந்தை என்னிடம் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார்.

எப்டினா, ரெண்டு நிமிசத்துல இத்தாம் பெரிய பதிவ படிச்சீங்க......சிட்டி கும் உங்களுக்கும் என்ன தொடர்பு....நீங்க யாரு........
நாங்கல்லாம் அப்பவே அப்படி. ஜாலி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:45 pm

நாங்கல்லாம் அப்பவே அப்படி.

உங்களுக்கு நான் கேட்ட கேள்வி புரியலையா, இல்ல அதுக்கு பதில் தெரியலையா......யென் அண்ணா......சம்பந்தமே இல்லாம ஏதோ சொல்றீங்க.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 02, 2012 3:47 pm

ஜெமினிகணேசன் சாவித்திரி கதையை எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 3:49 pm

பிஜிராமன் wrote:
நாங்கல்லாம் அப்பவே அப்படி.

உங்களுக்கு நான் கேட்ட கேள்வி புரியலையா, இல்ல அதுக்கு பதில் தெரியலையா......யென் அண்ணா......சம்பந்தமே இல்லாம ஏதோ சொல்றீங்க.......
கேள்வி புரியுது . எந்திரன் சிட்டிய தானே சொல்றே.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:52 pm

கேள்வி புரியுது . எந்திரன் சிட்டிய தானே சொல்றே.

இருங்க அவார்ட் கு ஏற்பாடு பண்ணிட்டு வரேன்...........அண்ணா, நீங்க யாரு...சொல்லுங்க சொல்லுங்க...........இது தான் என் கேள்வி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 3:53 pm

அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது 1357389தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது 59010615தமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Images3ijfதமிழ்நாட்டைத் தாக்கிய பயங்கர புயல்: தனுஷ்கோடியை கடல் விழுங்கியது Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக