புதிய பதிவுகள்
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
21 Posts - 4%
prajai
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_m10 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம்.


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 2:41 pm

ஜனவரி 30... ஆளும் கட்சியாக இருந்தால், செல்ல மகன் அழகிரி பிறந்த நாளுக்கு மதுரைக்கே வந்து கேக் ஊட்டுவார் தயாளு அம்மாள். ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்கள் மதுரைக்கு வந்து நிற்பார்கள். ஆனால், இந்த முறை நிலைமையே வேறு.

 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Resize_20120201191240
எவர் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பதற்கா கவோ என்னவோ, முன்னாள் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மைதீன்கான் போன்றவர்கள் முதல் நாளே அழகிரியைச் சந்தித்து 'அட்வான்ஸ்’ வாழ்த்தைச் சொல்லி விட்டார்கள். பிறந்த நாளன்று, தனது மனைவி, மகன், மருமகள், மகனின் மாமியார், மாமனார் மற்றும் கட்சிக்காரர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டினார் அழகிரி. மனைவி, மகன், மருமகள், சம்பந்திக்கு தனது கையால் 'கேக்’கை ஊட்டி விட்டவர், ''எல்லாருக்கும் கேக் குடு'' என, இலாகா பொறுப்பை மனைவி காந்தியிடம் ஒப்படைத்து விட்டு மீடியாக்களிடம் வந்தார்.



 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். P8

''தலைவர் கலைஞர், தான் முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனது பிறந்த நாளை ஏழைகளுக்கு உதவுகிற விதமாகக் கொண்டாடுகிறார். அதுபோலத்தான் நானும் கொண்டாடி வருகிறேன். எல்லாரும் நல்லா இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். நானே பதவியை விரும்பாதவன். நான் எப்படி என் மகனுக்குப் பதவி கேட்பேன்? எல்லாமே மீடியாக்கள் கிளப்பும் வதந்தி'' என்று சொன்ன அழகிரி, ''நலத்திட்ட உதவிகள் வழங்குற நிகழ்ச்சி இருக்கு; எல்லாரும் மண்டபத்துக்கு வந்துருங்க'' என்று சொல்லிவிட்டு விரகனூர் மஹாராஜா மண்டபத்துக்குப் புறப்பட்டார்.





கடந்த காலங்களில், 'பொட்டு’ சுரேஷ்தான் அழகிரியின் பிறந்த நாளுக்கு விழாத் தலைவராக இருப்பார். ஆனால், இம்முறை 'பொட்டு’ இல்லாதது சிலருக்கு அதிர்ச்சி; பலருக்கு மகிழ்ச்சி. குண்டாஸில் இருந்து வெளியில் வந்ததுமே அழகிரியை சந்திக்க அப்ளிகேஷன் போட்டாராம் பொட்டு. ஆனால், 'நோ ரெஸ்பான்ஸ்’. இதனால், அண்ணனின் சிந்தனை ஓட்டம் தெரிந்து ஓடும் உடன்பிறப்புகள், 'பொட்டு’ சுரேஷ் பெயரைப் போடாமலேயே பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்களை எழுதினார்கள். தப்பித் தவறி, ஒரே ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்த 'பொட்டு’ சுரேஷின் பெயரையும் தடம் தெரியாமல் அழித் தார்கள். இதனால் புழுங்கிக்கிடந்த பொட்டு, பிறந்த நாள் சாக்கில் மீண்டும் அழகிரி வீட்டுக்குள் நுழையத் துடித்தார். ஆனால், அதற்கும் இரண்டு பேர் அழகாய் அடித்தார்கள் ஆப்பு!


அழகிரி வீட்டுக்குள் சகஜமாய் வந்துபோகும் சில நபர்கள் நம்மிடம் சொன்ன தகவல்கள் இவை.


''ஐ.பெரியசாமி சிபாரிசு மூலமாக, கடந்த 28-ம் தேதி அதிகாலையில அண்ணன் வீட்டுக்கு வந்தார் பொட்டு. 'உங்கக்கிட்ட தனியா பேசணும்ணே’னு சொல்லி அண்ணனை உள்ளுக்குள்ள கூட்டிட்டுப் போன பொட்டு, உள்ள போனதுமே பொசுக்குன்னு கால்ல விழுந்து கதறி இருக்கார். பாக்கவே சங்கடமா இருந்ததால, அண்ணன் அவருக்கு ஆறுதல் சொல்லி தேத்தினார். ஆனா, அண்ணன் கொஞ்சம் கூலானதுமே தன்னோட வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார் பொட்டு. திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் தனபாண்டியன் மகன் திருமணமும், செல்லம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மகனின் காதுகுத்து வைபவமும் கடந்த 29-ம் தேதி நடந்துச்சு. அண்ணனைச் சந்திச்சப்ப, 'இவங்க ரெண்டு பேருமே நல்லவங்க இல்லண்ணே; நீங்க இவங்க வீட்டு விசேஷங்களுக்குப் போகக்கூடாது’ன்னு சொல்லிருக்கார் பொட்டு.


அன்னைக்கு சாயந்தரமே காந்தி சில்க்ஸ்ல காந்தி அக்காவையும் சந்திச்சுப் புலம்பி இருக்கார். அதையும் மீறி அந்த நிகழ்ச்சிகளுக்கு அண்ணன் போயிடக் கூடாதுன்னு வேற சில உத்திகளையும் செஞ்சிருக்கார். இதை எல்லாம் கேள்விப்பட்டதும் முன்னாள் துணை மேயர் மன்னனும் புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தியும் டென்ஷன் ஆகிட்டாங்க. அவங்க அண்ணன்கிட்ட நேரடியாவே வந்து, 'அந்தாளை நம்பிக் கெட்டது போதும்ணே. நிகழ்ச்சி வெச்சுருக்கது உங்களோட தீவிர விசுவாசிகள்; எந்தக் காலத்துலயும் கட்சிக்காக நிக்கிறவங்க. கான்ட்ராக்ட்காரன் முக்கியமா... கட்சிக்காரன் முக்கியமான்னு பாருங்க’னு சொன்னாங்க. அப்ப மன்னன் ஆத்திரத்தில் விட்ட சில வார்த்தைகளைக் கேட்டு மிரண்டுபோன அண்ணன், '2003-ல (தா.கி. கொலையான வருடம்) நடந்தது மாதிரி ஏடாகூடமா எதையாச்சும் பண்ணித் தொலைச்சிருவாங்க போலிருக்கு’ன்னு தன்னோட நண்பர் ஒருத்தர் கிட்ட போனில் வருத்தப்பட்டார்.


பொட்டு பேச்சைப் பெருசுபடுத்தாம, 29-ம் தேதி ரெண்டு நிகழ்ச்சிகள்லேயும் அண்ணன் கலந்துக்கிட்டார். இதுக்கு நடுவுல, 'பொட்டு இல்லாம எப்புடி அண்ணனோட பிறந்த நாள் விழாவை நடத்துறாங்கன்னு பாத்து ருவோம்’னு சிலர் சவால் விடுற மாதிரி பேசுனதால, மன்னனும் மூர்த்தியும் வரிஞ்சு கட்டிக்கிட்டு களத்துல இறங்கிட்டாங்க. மாநகரச் செயலாளர் தளபதி 'பொட்டு’வோட விசுவாசி. அதனால அவருகிட்ட பொறுப்பைக் குடுக்காம, நகருக்கு மன்னனும் புறநகருக்கு மூர்த்தியும் பொறுப்பை எடுத்துக்கிட்டாங்க. தொகுதிக்கு 200 வண்டி வீதம் ஆட்களைத் திரட்டி, அண்ணனோட பிறந்த நாளை அமர்க் களப்படுத்திக் காட்டிட்டாங்க. இதுக்கு நடுவுல, விழா மண்டபத்துக்கு பொட்டு வந்தாலும் வருவார்னு ஒரு பேச்சு இருந்துச்சு. 'அந்தாளு வந்தா செருப்பை எடுத்து வீசுவோம்’னு ஒரு கோஷ்டி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. விசுவாசிகள் இந்த விஷயத்தை பொட்டு காதுக்கு ரிலே பண்ணிட்டதால... கடைசி வரைக்கும் பொட்டு வரலை. மொத்தத்துல, அண்ணன் வீட்டுக்குள்ள பொட்டு ராஜ்ஜியம் ஒழிஞ்சு, மன்னன் ராஜ்ஜியம் தொடங்கிருச்சு'' என்று மகிழ்கிறார்கள்.


அழகிரியின் பிறந்த நாள் விழாவுக்கு ஆடம் பரமும் அலப்பறையும் கொஞ்சம் குறைவுதான் என்றாலும் கடைசி இரண்டு நாட்களில் நகர் முழுக்க போஸ்டர்களை ஒட்டிக் கலக்கி விட்டார்கள் உடன்பிறப்புகள். போதி தர்மரே, தி.மு.க-வின் வசிய மருந்தே, கழகத் தேர் முறியாமல் காக்கும் அச்சாணியே, தூங்கா நகரத்தின் தூயவரே, எதையும் தாங்கும் இதயமே, கழகத்தின் இரும்புக் கோட்டையே... என்பதோடு நிறுத்தாமல் ஹீரோ, சி.எம். ஆஃப் மதுரை, பார்ன் டு வின் என்று ஆங்கிலத்திலும் அண்ணன் புகழ் பாடியிருந்தார்கள்.


மதுரை என்றும் உமதே, வீண் புகாரை வென்ற பூம்புகாரே, வீழ்த்தப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறோம் உரமாக... வெயிட் அண்ட் சீ... என்று உசுப்பேற்றும் வாசகங்களுக்கும் பஞ்சம் இல்லை. அஞ்சாநெஞ்சரே என்ற அடைமொழியை மட்டும் அதிகம் பார்க்க முடியவில்லை. ஸ்டாலின் படங்கள் ஒப்புக்குக்கூட இல்லை. தி.மு.க. ஆட்சியில் இல்லாததால், தமுக்கம் மைதானமும் ராஜா முத்தையா மன்றமும் தப்பி விட்டது. அதற்குப் பதிலாக புறநகர்ப் பகுதியில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் நடந்தது பிறந்த நாள் விழா.


மண்டபத்தில் நடுநாயகமாக அழகிரி வீற்றிருக்க, பக்கத்தில் மூர்த்தி, தளபதி, மன்னன், எஸ்ஸார் கோபி, முபாரக் மந்திரி போன்ற 'தீரமிக்க’ நிர்வாகிகள் இருந்தார்கள். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து கூறினார்கள். மாலைகளும், சால்வைகளும் மலைபோல் குவிந்தன. ஆளுங்கட்சியாக இருக்கும் போது காக்கா பிடிப்பதற்காக வந்த அதிகாரிகள், கான்ட்ராக்ட் பார்ட்டிகளில் ஒருவர்கூட இந்த விழாவுக்கு வரவில்லை.


ரொம்ப நாளாக அண்ணனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்த அட்டாக் பாண்டி, வெள்ளி கதாயுதம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். பொட்டு சுரேஷ் விழாவுக்கு வராதது பற்றி கூறிய அட்டாக் பாண்டி, 'இவ்வளவு நாளாக தொண்டர்களை அண்ணனிடம் நெருங்கவிடாமல் தடுத்த துரோகிகள் துரத்தப்பட்டு விட்டார்கள். பாருங்கள் எவ்வளவு தொண்டர்கள் அண்ணனோடு கை குலுக்கி சந்தோஷமாகச் செல்கிறார்கள். துரோகக் கூட்டத்தை நெருங்கவிடாமல் தடுக்கும் ஆயுதமாகத்தான் அண்ணனுக்கு கதாயுதம் வழங்கியிருக்கிறேன்' என்றார்.


அலகு குத்துதல், பால்குட ஊர்வலம் போன்ற வழக்கமான விஷயங்களைத் தாண்டி இந்த ஆண்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய விஷயம் அழகிரி 'சாமி’ வீதி உலாதான். ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸில் செய்யப்பட்ட அழகிரி சிலையை பல்லக்கில் வைத்துக்கொண்டு தொண்டர்கள் வீதி உலா வந்தார்கள். 'எதிர்க் கட்சியா இருந்தாலும் நாங்க இப்படித் தான்’ என்று அ.தி.மு.க-வினரைக் கடுப்பேற்றி முடிந்தது அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டம்.


இத்தனை கொண்டாட்டங்கள் இருந்தாலும் அழகிரி மனதில் ஏதோ ஒரு வருத்தம் இருக்கிறதாம். ''ஸ்டாலினுக்கு முக்கியப் பதவி தரப் போகிறார்கள் என்ற தகவலைக் கேள்விப்பட்டுத்தான் அண்ணனுக்கு கோபம். அதனால நான் பிப்ரவரி 3ம் தேதி கூடும் பொதுக்குழுவுக்கு வரமாட்டேன்னு சொல்லப் போறார்'' என்று சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.


மறுபடியும் முதல்ல இருந்தா?

http://www.thedipaar.com/news/news.php?id=40670



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 2:50 pm

அடுத்த திமுக தலைவராக வரும் தகுதி முக அழகிரிக்கு மட்டுமே உள்ளது. எனவே ஸ்டாலினை அனைத்துப் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

(ஏதோ நம்மால முடிந்தது)



 பிறந்தநாள் விழாவில் அழகிரி விட்ட அடுத்த அஸ்திரம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 3:08 pm

சிவா wrote:அடுத்த திமுக தலைவராக வரும் தகுதி முக அழகிரிக்கு மட்டுமே உள்ளது. எனவே ஸ்டாலினை அனைத்துப் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

(ஏதோ நம்மால முடிந்தது)

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக