புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
21 Posts - 4%
prajai
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_m10சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu 2 Feb 2012 - 14:24

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!
on Thursday, February 2, 2012 | 0 Comment

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரில் 'யாருக்கு முக்கியத்துவம்’ என்ற பஞ்சாயத்து தி.மு.க. மேலிடத்தில் நடப்பதைப் போலவே மாவட்ட செயலாளர் பெரியசாமி, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரில் யார் பெரிய ஆள் என்ற அதிகார யுத்தம் தூத்துக்குடியில் நடக்கிறது. திருச்செந்தூரில் கடந்த 25-ம்தேதி, வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.விழாவில் பேசிய என்.பெரியசாமி, வழக் கத்துக்கு மாறாக சொந்தக் கட்சிக்காரர்கள் மீதே பாய்ந்தார்.

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  So26
''தி.மு.க. என்றைக்குமே வீரமான கட்சி. வீரமாக இருக்கிறவனுக்குத்தான் இங்கே இடம் உண்டு. கோழைகளுக்கு இடமில்லை. கட்சிக்குச் சோதனையான காலங்களில் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் பங்கு கொள்ளவேண்டும். கஷ்ட காலங்களில் தாங்குகிற சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தி.மு.க-வில் இடம் உண்டு. அப்படி இல்லாதவர்களை நான் மதிப்பதே இல்லை. எனக்கு அவர்களைப் பிடிக்காது. திருச்செந்தூர் தொகுதியில் நாம் எப்போதும் சவால் விட்டு

வெற்றி பெற்று வந்திருக்கோம். இன்னமும் வெற்றி பெறுவோம். அது யாரோட தயவிலும் கிடையாது. யாரையும் நம்பி கிடையாது. ஜெயலலிதா அரசைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. துணிச்சலோடுதான் இருக்கிறோம். ஆனால், சிலர் பயப்படுறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு இங்கே இடம் கிடையாது. அவர்கள் இருக்கணும்னா இருக்கட்டும் போகணும்னா போகட்டும். எவரைப்பற்றியும் கவலை இல்லை. கூட இருந்துக்கிட்டே துரோகம் பண்ண வேண்டாம். துரோகம் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். கட்சிக்காரங்களைத் தாக்குறது, அடிக்கிறது இதெல்லாம் வேண்டாம். அப்படி செய்றதால் பயந்து போயிடுவாங்கன்னு மட்டும் யாரும் நினைக்க வேண்டாம். நான் கடவுளுக்கு அடுத்தபடியா என் தலைவர் கலைஞருக்கு மட்டும்தான் பயப்படுவேன். மற்றபடி யாருக்கும் பயப்பட மாட்டேன்'' என்று வீர வசனங்களைப் பொரிந்து தள்ளினார்.

அவருக்குப் பிறகு பேசத் தொடங்கிய அனிதா ராதாகிருஷ்ணன், ''எங்களுக்கு கலைஞர்தான் தலைவர். வேறு யாரும் பெரிய ஆள் இல்லை. கலைஞர் தலைமையில் தளபதி, அஞ்சாநெஞ்சன் வழிகாட்டலின்படி அவர்களைப் பின் தொடர்வோம். நான் வைச்சதுதான் சட்டம்னு வேறு யாரும் சொல்ல முடியாது. இருக்கக் கூடாது, போகக் கூடாதுன்னு சொல்றதுக்கு எவனுக்கும் உரிமை கிடையாது. நான் என்ன, அ.தி.மு.க-வோடு தொடர்பு வைச்சிக்கிட்டு மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் அவங்களுக்கு ஆதரவா வேட்பாளர் போட்டேனா? ஒரு ஆளுக்காக வேட்பாளரே போடாம கட்சிக்குத் துரோகம் செஞ்சேனா? நான் அ.தி.மு.க-வில் இருந்தப்ப அந்தக் கட்சிக்கு உண்மையாக இருந்தேன். இப்போ தி.மு.க-விலும் உண்மையாக இருக்கேன். நான் காட்டிக் கொடுக்க மாட்டேன். ஏமாத்த மாட்டேன்'' என்று படுவேகமாகப் பேசி முடித்தார்.

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  So27
அதிரடிப் பேச்சு குறித்து அனிதா ராதாகிருஷ்ண னிடம் பேசினோம், ''விரைவில், உட்கட்சித் தேர்தல் வர இருக்கிறது. அதை மனசுல வைச்சிக்கிட்டு என்னை மாதிரி ஆட்களை விரட்டுறதுக்காக இவர் இப்படிப் பேசுறார். பல வருஷங்களா இவர் படுத்துற அவமானம் தாங்க முடியாம பலர் கட்சியை விட்டே ஓடியிருக்காங்க. இவரோட வீரம் எங்களுக்குத் தெரியாதா? ஆளும் கட்சியா இருக்கிறப்போ எதிர்க்கட்சியா இருக்கிறவங்களை கடுமையா விமர்சிக்கிறவர்... எதிர்கட்சியா இருக்கிறப்போ ஆளும் கட்சித் தலைமையை விமர்சித்த வரலாறு உண்டா? ஏதாவது ஆர்ப்பாட்டம் என்றாலும் 10 நிமிடங்களில் முடித்து விடுகிறார். இவர்தான் வீரரா? கட்சியில் இவரைத்தவிர வேறு யாருமே வேகமாக இருக்கக்கூடாது. அவருக்கு ஜால்ரா போடுகிறவர் மட்டும்தான் இருக்கணும்னு நினைக்கிறார். நான் ஜெயிலில் இருக்கும்போது கட்சியினர் யாரும் என்னைப் பார்க்க விடாதபடி தடுத்தார். விசாரணை என்று வந்தால் அவ்வளவும் வெளிவரும்'' என்றார்.
இதற்கு பெரியசாமியோ, ''நான் அவர் பெயரை ஒரு இடத்தில்கூட சொல்லலை. ஆனா அவர் என்னைச் சொல்லியே பேசிட்டார். அந்தப் பகுதி பேரூராட்சி தலைவரை மனதில் வைத்துத்தான் நான் அப்படிப் பேசினேன். நான் சொன்னபடி கூட்டம் நடத்த அந்த ஆள் முன்வரவில்லை. ஆனால் அன்றைக்கு முதல் ஆளாக அந்த ஆள் வந்துவிட்டார். அதனால அவரைத்தான் நான் குறிப்பிட்டுப் பேசி னேன். பிரச்னையை பெரிதாக்கி விளம்பரம் தேடுறதுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறார். நான் கடந்த 27 வருஷமா மாவட்டச் செயலாளராக இருந்துட்டேன். அவர் தேர்தலில் போட்டி போட்டு ஜெயித்து வந்தா வரட்டும், யார் வேண்டாம்னு சொன்னது? அதை எப்படி நான் தடுக்க முடியும்? அதுக்காகத்தான் இப்படிப் பேசுறேன்னு சொல்றது தப்பு. இதுவரை இந்தக் கட்சியில் யாரும் இதுபோல் என்னை எதிர்த்துப் பேசியது கிடையாது. அதுக்காக நான் யாருக்கும் பயப்படுவதும் கிடையாது. இதுமாதிரி எத்தனையோ ஆட்களைப் பார்த்துவிட்டேன். அதனால இதை அப்படியே விட்டுட்டேன்'' என்றார் சாதாரணமாக.
சூப்பரப்பு!
- எஸ்.சரவணப்பெருமாள்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - vikatan.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக