ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

Top posting users this week
ayyasamy ram
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
heezulia
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!

Go down

ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Empty ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!

Post by பிரசன்னா Thu 2 Feb 2012 - 14:22

ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!
on Thursday, February 2, 2012 | 0 Comment

ஒருவருட தாடி, மீசை, ஒட்டக நாற்றம், ஒருமாத அழுக்கு, பாதியாய் உருமாறிய உடம்பு, நிற்கக்கூட திராணியில்லாத கிறக்கத்தோடு வாசலில் வந்து நின்றார் இக்பால் பாஷா.


அவருடைய குரலைக் கேட்டுத் தான், அவரைத் தெளிவாக அடை யாளம் கண்டுகொண்டார்கள் மனைவி ஷாகினியும் குழந்தைகளும்.

கை நிறைய சம்பளம், கத்தார் நாட்டில் டெய்லர் வேலை என்று சொன்ன மோசடி ஏஜெண்டிடம் 70 ஆயிரம் கட்டி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் விமானம் ஏறியவர் சென்னை புளியந்தோப்பு இக்பால் பாஷா.

கத்தார் பாலைவனக் காட்டில் ஒட்டகப் பண்ணையில், ஒட்டகம் மேய்க்கும் வேலை. சம்பளம் இல்லை. தினமும் ஒருவேளை சாப்பாடு. ஒருவேளை குடிதண்ணீர். மாதம் ஒருமுறை குளியல். பாலைவனத்தில படுக்கை. குடும்பத்தோடு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலை... இப்படித் தான் கடந்த ஒருவருடமாக கத்தாரில் சித்ரவதைப்பட்டார் இக்பால் பாஷா.

""ஒட்டகப்பண்ணை முதலாளி யிடம் மொத்தமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு, என் கணவரை விற்றுவிட்டானே பாவி ஏஜெண்ட்'' என்று இக்பால் பாஷாவின் மனைவி ஷாகினி கதறிய கதறலை 29.10.2011 நக்கீரன் இதழில் "தமிழர்கள் விற்பனை! கதறும் பெண்!' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

அந்த இக்பால் பாஷாதான் 19.1.12 அன்று, ஒட்டக முதலாளியிடம் இருந்து தப்பிப் பிழைத்து வந்திருக் கிறார்.

சென்னை புளியந்தோôப்பில் உள்ள இக்பால் பாஷாவின் வீட்டிற்குச் சென்றோம். அப்போதுதான் ஆஸ்பிடலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து படுத்திருந்தார்.

""15 நாளாவே வயிற்றுப்போக்கு. கடந்த ஒருவாரமாக பிளட்டா போகுது. அதான் டாக்டர்ட்ட போய் ஊசி போட்டுட்டு வந்தேன்'' -இக்பாலின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவதுபோல மெதுவாக வந்தது.

""உயிரோட... இவரை பார்ப்போமா என்றே சந்தேகப்பட்டோம். அல்லாதான் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்'' -கசிந்த கண்ணீரோடுட சொன்னார் ஷாகினி.

மெதுவாக எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்த இக்பால் பாஷா, தான் பட்ட பாடுகளைச் சொல்லத் தொடங்கினார்.

""கத்தார் ஏர்போர்ட்டில் என்னைச் சந்தித்த ஏஜெண்டின் ஆள் யூனிஸ், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவிலிருக்கும் பாலைவனத்துக்குக் கூட்டிப்போய் கபில் என்ற ஒட்டகப்பண்ணை அரபியிடம் ஒப்படைத் தார். அங்குதான் தெரிந்தது, நான் செய்யவேண்டியது டெய்லர் வேலை இல்லை, ஒட்டகம் மேய்ப்பது, ஒட்டகத்திற்குச் சாப்பாடு கொடுப்பது போன்ற வேலை என்று. கபில் முதலாளியிடம் 250 ஒட்டகங்கள் இருந்தன. அந்த 2000 சதுர கிலோமீட்டர் பாலைவனத் தில் பல ஒட்டகப் பண்ணைகள் இருக்கின்றன. அவற்றில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்தான்.

எங்கள் பண்ணை முதலாளியிடம் நானும், தஞ்சாவூர் சலீமும் இரண்டு உ.பி.க்காரர்களும் வேலை பார்த்தோம். சலீம் பாதி மெண்டலாகிவிட்டான். 4 வருடமாக சம்பளம் இல்லாமல், மனைவி, மக்கள் தொடர்பில்லாமல் கஷ்டமான வேலையால் அரைப்பைத்தியமாகிவிட்டான். உ.பி.க்காரர்கள் இருவரும் 2 வருடமாக அடிமையானவர்கள்.

யாருக்குமே சம்பளம் கொடுக்கமாட்டான் முதலாளி கபில். ஆனால் ஒட்டகத்திற்கு ஒழுங்காக சாப்பாடு கொடுக்கவில்லையென்று சகட்டுமேனிக்கு லத்தியால் அடிப்பான்.

அந்தப் பண்ணையில் இருந்துகொண்டு முதலாளி எங்களையும் ஒட்டகங்களையும் கவனித்துக்கொள்வான். பிறகு, தான் வந்த டிரக்கை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குப் புறப்படுவான். வேறொரு டிரக்கில் எங்களுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய சாப்பாட்டையும், தண்ணீரையும் எடுத்துக்கொண்டு அவன் மகன் வருவான். அவன் இரண்டு நாள் இருப்பான். மறுபடி முதலாளி வருவான்.

சம்பளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கேட்டால் "உங்கள் ஏஜெண்டிடம் மொத்தமாகக் கொடுத்து உங்களை விலைக்கு வாங்கியிருக்கிறோம்' என்பான்.

நான் வேலை செய்த ஒட்டகப் பண்ணையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் சௌதி இருக்கிறது என்பது தெரிந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஒருநாள் இரவில் நானும் என்னோடு வேலை செய்யும் உ.பி.க்காரரும் வேகவேகமாக ஓட்டமும் நடையுமாகக் கிளம்பினோம். ஆனால் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரம் போகும் முன் இன்னொரு பண்ணை முதலாளியிடம் மாட்டிக்கொண்டோம். அவன் எங்களைப் பிடித்து வைத்துக்கொண்டு எங்கள் பண்ணை முதலாளிக்குத் தகவல் கொடுத்துவிட்டான். இழுத்து வந்து அடைத்து வைத்து, லத்தியால் பாடம் புகட்டியது அந்த மிருகம்.

மறுபடியும் ஒருநாள் காலையில் தப்பி ஓடி சௌதி போலீசிடம் அடைக்கல மானோம். எங்கள் நிலைமையைக் கண்ணீ ரோடு சொன்னோம்.

சௌதி போலீஸ் எங்களை கத்தார் போலீஸிடம் ஒப்படைத்தார்கள். எங்கள் இரண்டுபேருடைய பாஸ்போர்ட்களும் முதலாளி கபிலிடம் இருந்தன. அவனைக் கூப்பிட்டு விசாரித்தபோது, "ஒரு ஒட்டகத் தைக் கொன்றுவிட்டு பயந்து ஓடி வந்திருக்கிறார்கள்' என்று எங்களைக் குற்றவாளியாக்கி புகார் கொடுத்துவிட்டான். ஒட்டகத்தைக் கொன்றுவிட்டான் என்ற பொய்ப் புகாருக்காக என்னோடு வந்த உ.பி.க்காரனை கத்தார் சிறையில் அடைத்துவிட் டார்கள்.

வயிற்றுப்போக்கால் நான் கஷ்டப் படுவதை உணர்ந்து உன் சொந்தச் செலவில் போகலாம் என்று சொன்னது கத்தார் போலீஸ். கத்தாரில் வேலை செய்யும் என் உறவினர் ஒருவர்தான் எனக்கு டிக்கெட் போட்டு என்னை அனுப்பிவைத்தார்.

உண்மையைச் சொல்கிறேன். அந்தப் பாலைவன ஒட்டகப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொத் தடிமைகளாக வேலை செய்கிறார்கள். அவர்களுடைய அழுகைக் குரல் நம்ம எம்பசியின் காதுகளில் விழுவதே இல்லை'' -பெருமூச்சு விட்டபடியே முடித்தார் இக்பால் பாஷா.

இக்பால் பாஷாவிடம் 70 ஆயிரம் கமிஷனையும் வாங்கிக்கொண்டு இவரை ஏமாற்றி விற்பனை செய்த ஏஜெண்டும் இவருடைய உறவினர் என்பதுதான் கொடு மையிலும் கொடுமை.

-அரவிந்த்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒட்டகப் பாலில் விட்டமின் சி அதிகம்! ஆய்வு !!!!
» மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்
» "மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை
» குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் ! நாள் ஒரு சிந்தனை :வாழ்வியல் ! வா .செ.குழந்தைசாமி ! தொகுப்பு பேரா .இரா .மோகன் !! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வேலன்:-விவசாய பண்ணையில் பயிர்செய்யலாம் வாங்க - விளையாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum