புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
19 Posts - 3%
prajai
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 01, 2012 11:50 am

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!

முப்பது ஆண்டுகளுக்கு முன்.

காரைக்குடியில் கம்பர் விழா; என் தலைமையில் கவியரங்கம்.இத்தகு சபையினில், சினிமாக்காரர்களை ஏற்ற மாட்டார் திரு.கம்பனடிப் பொடிகள் விதிவிலக்காக -

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Vikatan-Vali-Series-2

கண்ணதாசனைக் கவியரங்கத் தலைமைக்கு அழைத்தார். அடுத்த வருடம் அடியேனுக்கு வந்தது அந்த வாய்ப்பு.

‘வாலியைக் கூப்பிடலாம்; வாலியைக் கூப்பிடலாம்’ என்று கம்பனடிப் பொடிகளுக்கு விடாமல் வேப்பிலை அடித்தவர் - காரைக்குடி மக்கள் கவிஞர் திரு.அரு. நாகப்பன்.

ஒருவழியாக, என்னை ஏற்றுக்கொண்ட கம்பனடிப் பொடிகள் -

‘கவிதையை, வாலி முன்கூட்டியே அனுப்ப வேண்டும்’ என்று ஒரு கண்டிஷன் போட்டார்.

அதற்கு நான் ‘அது சாத்தியமில்லை’ என்று சொன்ன கையோடு -

‘நான் திருச்சியில் வந்து இறங்குவேன்; அங்கிருந்து என்னைக் காரைக்குடிக்குக் காரில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னேன்.

ஏனெனில், சென்னையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்வதானால் - அது மெயின் லைன் வழியாகத்தான் போகும்; தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்!

‘இப்படிக் கண்டிஷன் போடுகிறானே!’ என்றெண்ணாமல் -

கொஞ்சம் வெகுளியோடும் கொஞ்சம் வியப்போடும் -

என் வேண்டுகோள்களை ஏற்றார், சட்டையைச் சட்டை செய்யாத கம்பனடிப் பொடிகள்; ஆம்; அவர் சட்டை அணியாதவர்!

மயிலாசனத்தில் நான்; ம.வே.பசுபதி, மரியதாஸ், அரு.நாகப்பன், பெரி.சிவனடியான், தமிழவேள், கம்பராமன், பாவலர் மணிசித்தன் முதலிய மகாக் கவிகள் என் தலைமையில்!

முன் வரிசையில் - ம.பொ.சி; ஏ.என்.சிவராமன்; ஜஸ்டிஸ் மகாராஜன்; கி.வா.ஜ; அ.ச.ஞானசம்பந்தம், தெ.பொ.மீ; ஜி.கே.சுந்தரம் - என

முத்தமிழில் துறைபோன மூதறிஞர் பலர். தகவார்ந்த மனிதரும் தருக்கேறி என்னணம் தரைசேர்ந்தார் என்பது பற்றிப் பாடினேன்.

‘மனத்தாலே மனிதகுலம்
மேம்பா டெய்தும்; நல்ல
மனங்கெட்டால் மானுடம்தான்
மெல்லச் சாகும்; கொண்ட
தனத்தாலே கல்வியாலே
தருக்கு ஏறித் - தலை
கனத்தாலே கனத்த தலை
கவிழ்ந்து போகும்!’

- இப்படிப் பாடிவிட்டு, இதற்கு உதாரணமாய் இலங்கை வேந்தைச் சொன்னேன்.

‘விலங்கு மனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன்; அந்த
விலங்கு இனம் தன்னாலே
வீழ்ச்சி யுற்றான்; சிறு
குரங்கு என அதன் வாலில்
தீவைத்தானே - அது
கொளுத்தியதோ அவனாண்ட தீவைத்தானே!’

- இதைக் கேட்டு ‘தீவைத்தானே சிலேடை பிரமாதம்’ என வாய்விட்டுக் கூவிக் கை தட்டினார் சிலம்புச் செல்வர்!

கவியரங்கம் முடிந்த பின், முன் வரிசையில் அமர்ந்திருந்த கி.வா.ஜ. மேடைக்கு வந்து, என் முதுகில் தட்டிக் கொடுத்து ‘நீர் பாடியபடி - நீர் எந்தக் காலத்திலும் தருக்கில்லாமல் இருக்கக் கடவது!’ என ஆசீர்வதித்தார்.

நான் - அன்று முதல் ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்!

செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது. இதைத்தான் ‘விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!

ஒரு பழம்பாடல்.

’வால் நீண்ட கரிக்குருவி
வலமிருந்து இடம் போனால் - கால்நடையாய்ச்
சென்றவர்தாம்
கனக தண்டிகை ஏறுவாரே!’

- கனக தண்டிகை என்றால், தங்கப்பல்லக்கு. கரிக்குருவி என்பது ‘வலியன்’ எனும் பறவை. இதைத்தான் ஆண்டாள் ‘ஆனைச் சாத்தான்’ எனத் திருப்பாவையில் பாடுகிறாள்.

இந்த கரிக்குருவி - இடம் இருந்து வலம் போனால் - கனக தண்டிகை ஏறியோர் கால்நடையாய்ச் செலக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டும்!

இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்க வைக்கிறது!

‘இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’

இப்படி ஒரு கடித்தத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!

எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படி ஒரு சிரமம்?

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Vaali
ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி.யுடன் அமர்ந்திருக்கிறேன். அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்க சிரிக்க அளவளாவிவிட்டு, “வாலி!உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!”

எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் -

நான் நூறு சுக்களாய் நொறுங்கிப் போனேன்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருந்தார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.

நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான்; இப்போ, சினிமாவில் பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.

‘ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார்.

அவர் தொட மாட்டாரா என்று தமிழரர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!

காலம் எப்படி எல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை!

இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!

என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு.இளங்கோவன்!

என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு. சந்திரபாபு அவர்கள்.

நாடகம் எழுதித் தரக்கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி அவர்கள்!

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் -

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்:

அடக்கமாகும் வரை
அடக்கமாக இரு!

- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 01, 2012 11:54 am

மகிழ்ச்சி நல்ல பகிர்வு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 12:12 pm

உண்மையிலுமே நல்ல பகிர்வு இது.
யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை.
ஒரு காலத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் உயர்வான நிலைக்கு வருவார்கள்.உயர்வான நிலையில் இருப்பவர்கள் தாழ்வான நிலைக்கும் வருவார்கள்




அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Uஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Dஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Aஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Yஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Aஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Sஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Uஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Dஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Hஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 01, 2012 12:28 pm

மிகவும் அருமையான பதிவு...பிரசன்னா ...விரும்பினேன். எல்லோரும் இதில் அடக்கம். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக