ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

Top posting users this week
ayyasamy ram
காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Poll_c10காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Poll_m10காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Poll_c10 
heezulia
காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Poll_c10காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Poll_m10காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!

2 posters

Go down

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Empty காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!

Post by பிரசன்னா Tue Jan 31, 2012 1:05 pm

‘சர்க்கரை, ரத்த அழுத் தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகி றார்கள். அவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த கர்ணன்.

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Evening-Tamil-News-Paper_23656427861

அவர் கூறியதாவது: 5ம் வகுப்பு வரை தான் படித்தேன். 15 வயதில் சென்னையில் ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு தொழிலை கற்றுக்கொண்டேன். உடல்நலம் பேணும் பிரத்யேக காலணிகளுக்கு கிராக்கி இருப்பதை அறிந்து, அதை தயாரிக்க தொடங்கினேன்.

பல்வேறு மருத்துவமனைகளை அணுகி எனது முகவரியை கொடுத்தேன். அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எனக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த தொழில் எளிதானது. சிறிய முதலீட்டில் துவங்க ரூ.40 ஆயிரம் போதும். இயந்திரங்கள் பொருத்தி பெரிய அளவில் துவங்க ரூ.3 லட்சம் தேவை. மருத்துவமனைகளில் டிஸ்பிளே செய்து ஆர்டர் பிடிக்கலாம். மருத்துவமனை ஸ்டோர்களுக்கு குறைந்த லாபத்தில் விற்கலாம்.

மருத்துவமனை அனுமதி பெற்று உள் நோயாளிகளிடம் நேரில் விற்கலாம். இந்த செருப்புகளை நோயாளிகள் மட்டுமல்ல; மற்றவர்களும் பயன்படுத்தலாம். செருப்பு கடைகளிலும் விற்கலாம். ஆர்டர் குறைவாக இருக்கும் போது மற்ற செருப்புகளையும் தயாரித்தால் லாபம் பெருகும்.

தேவையான பொருட்கள்

செருப்பின் அடிப்பாகத்துக்கு தேவையான ரப்பர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.450) அடிப்பாகத்தின் மேல் அடுக்காக பயன்படும் பாலிமர் கவர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.150), செருப்பின் ஸ்டிராப் செய்ய சிந்தடிக் ஷீட் (ஒரு ஷீட் ரூ.280) ஸ்டிராப்களை இணைக்கும் வெல் க்ரோவ் (மீட்டர் ரூ.30) செருப்பின் முன்பாகத்தில் மட்டும் ஒட்டும் ரப்பர் பீடிங் பன்வர் (ஒரு ஷீட் 800), பசை, நூல்.

கட்டமைப்பு: 10க்கு 16 அடி நீள, அகலம் கொண்ட இடம் போதுமானது.

கிடைக்கும் இடங்கள்

காலணி தயாரிக்க தேவையான பொருட்கள் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கிடைக்கின்றன.

பயன்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாது. காயம் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயளிகள் காலில் காயம் ஏற்படாமல் இருக்க பீடிங் பன்வர் பொருத்திய காலணிகள் உதவியாக இருக்கின்றன. எதன் மீதாவது மோதினால் காலில் அடிபடாமல் இவை காக்கின்றன.பிஸியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சையில் உள்ளவர்களின் பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பாலிமர் கவர் ஷீட் பொருந்திய காலணிகள் நல்லது. இதை அணிய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவற்றுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் இல்லை. கூலியாட்கள் வைத்து உற்பத்தியை அதிகமாக்கினால் வருவாய் பெருகும்.

முதலீடு

இட வாடகை அட்வான்ஸ்
ரூ.10 ஆயிரம், தையல் மெஷின்
(ரூ.6 ஆயிரம்), அலமாரி 2
(ரூ.8 ஆயிரம்), மரத்தால் ஆன
மாதிரி கால் 12 வகை அளவுகள், கொட்டல் 1, உளி 1,
கத்தரிக்கோல் 3, பல்வேறு
பாத அளவுகளை கொண்ட சார்ட்
ஆகிய மூலதன பொருட்கள் (ரூ.7 ஆயிரம்). மொத்த முதலீடு ரூ.31 ஆயிரம்.

உற்பத்தி செலவு

அறை வாடகை ரூ.3 ஆயிரம், மின் கட்டணம் ரூ.300, ஒரு நாளில் ஒரு நபர் 4 ஜோடி காலணிகள் தயாரிக்கலாம். மாதம் 25 நாளில் ஆண்களுக்கான காலணி 100 ஜோடி அல்லது பெண்களுக்கான காலணி 150 ஜோடி தயாரிக்கலாம். ஆண்கள் காலணி ஒன்று தயாரிக்க உற்பத்தி பொருள் மற்றும் உழைப்பு கூலி உள்பட ரூ.150 செலவாகும். பெண்கள் காலணி தயாரிக்க ரூ.100 செலவாகும். எந்த செருப்பு தயாரித்தாலும் ரூ.15 ஆயிரம் தேவை. மொத்த மாத செலவு
ரூ.18,300.

வருவாய்

ஆண்கள் காலணி குறைந்தபட்சம் ரூ.250க்கும், பெண்கள் காலணி ரூ.170க்கும் விற்கிறது. மாத வருவாய் ரூ.25 ஆயிரம். செலவு ரூ.18,300.
லாபம் ரூ.6,700. ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு தொழிலை விரிவுபடுத்தினால் அதிக லாபம் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

ரப்பர்ஷீட், பாலிமர் கவர் ஷீட் ஆகியவற்றில் தேவைப்பட்ட அளவில் அடிப்பாகத்தை வரைந்து, வெட்டி எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக ஒட்ட வேண்டும். இப்போது அடிப்பாகம் தயார். சிந்தடிக் ஷீட்டில் காலணியின் மாடலுக்கேற்ப இருபுற ஸ்டிராப்களை வெட்டி எடுக்க வேண்டும். அதை தையல் மெஷினில் வைத்து தைக்க வேண்டும். இப்போது மேல்பாகம் தயார். இதை அடிப்பாகத்தில் இணைக்க வேண்டும்.

அதற்கு அடிப்பாகத்தின் 2 அடுக்குகளுக்கு இடையில் பிளவு ஏற்படுத்தி உள்ளே பசை தடவி மேல் பாகத்தை திணித்து இறுக்க வேண்டும். பின்னர் காலணியின் முன்பாகத்தில் மட்டும் கீழ்பாகத்தின் 2 அடுக்குகளை இணைக்கும் இடத்தில் பீடிங் பன்வர் ஒட்டவேண்டும். கடைசியாக செருப்பின் மேல்பாகத் தில் வெல்க்ரோவ் ஒட்ட வேண்டும்.

பயிற்சி பெற...

டிப்ளமா இன் லெதர் டெக்னாலஜி படிப்பு உள்ளது. இதன் மூலம் தோல் பதப்படுத்துதல், காலணி தயாரிப்பு ஆகியவற்றை கற்று கொள்ளலாம். அல்லது காலணி உற்பத்தி கூடங்களில் 3 மாதத்தில் அனுபவ ரீதியாக கற்று கொள்ளலாம்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT ....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Empty Re: காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!

Post by ஜாஹீதாபானு Tue Jan 31, 2012 1:57 pm

சூப்பருங்க சூப்பருங்க நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Empty Re: காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!

Post by பிரசன்னா Tue Jan 31, 2012 1:58 pm

ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க சூப்பருங்க நன்றி

நன்றி நன்றி நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!  Empty Re: காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum