ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

+24
கா.ந.கல்யாணசுந்தரம்
ayyamperumal
T.PUSHPA
Dr.சுந்தரராஜ் தயாளன்
அதி
சதாசிவம்
பாலாஜி
உமா
சார்லஸ் mc
subhajothi
அல்கெனா ரிஷி
ஜாஹீதாபானு
கே. பாலா
ரேவதி
வின்சீலன்
பார்த்திபன்
உதயசுதா
அசுரன்
கோவிந்தராஜ்
இளமாறன்
பிஜிராமன்
மகா பிரபு
சிவா
yarlpavanan
28 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Poll_c1024%இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Poll_c10 24% 
[ 9 ]
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Poll_c1076%இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Poll_c10 76% 
[ 29 ]
 
Total Votes : 38
 
Poll closed

open இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Mon Jan 30, 2012 10:25 pm

First topic message reminder :

அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by சதாசிவம் Tue Jan 31, 2012 6:48 pm

அழகான கருத்து பதிக்கும் திரியை தொடங்கிய தங்களுக்கு நன்றி. நீண்ட நாட்களாக இது குறித்து பெரிய விவாதம் நடத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

மரபுக் கவிதைகள் வைரம் போல்,

அதை எடுப்பது கடினம், பட்டை தீட்டுவது அதைவிட கடினம். சந்தைக்கு கொண்டு வருவது அதை விடக் கடினம். வைரத்தின் தன்மைகளை வைத்து அது பல வகைபடுகிறது. அனைவராலும் வாங்க முடியாது, சிலரால் பார்க்கவோ தொடவோ முடியாது. இதன் விலை மதிப்பற்றது. அனைவராலும் வாங்க, அணுக முடியாது என்பதால் இது விலை குறைந்தது இல்லை. இது போல் தான் மரபுக் கவிதை. அதை எடுப்பது, தொடுப்பது எல்லாம் கடினம். அனைவருக்கும் புரியவில்லை என்பதால் மத நூல்களை நாம் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது. அதை எடுத்துச் சொல்ல சரியான ஆளைத் தேட வேண்டும். சரியாக படிக்கப் பழக வேண்டும். மரபுக் கவிதைகளை இப்படி தான் அணுக வேண்டும். எப்படி மத நூல்கள் படிப்பவரின் பக்குவத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தருகிறதோ, அது போல் தான் மரபுக் கவிதையும், இதில் உட்பொருளை ஒளித்து வைக்கலாம். அதை உடைத்து வெளியில் எடுப்பது அவர் அவர் திறமை. மொழியின் வலிமை இந்த பாடல்களில் தான் வெளிப்படும். தமிழை தாய்மொழியில்லாமல் படிப்பவருக்கு நம் மொழியில் உள்ள அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். இவர்களுக்கு இவர் படித்த முறையில் ஒரு கவிதை வரும் போது அதை மதிப்பீடு செய்வது சுலபம். இப்படி ஒரு முறை இல்லாமல் வரும் புதுக் கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது அது படிப்பவரின் மனதையும், புரிந்து கொள்வதையும் பொறுத்து மாறலாம். உதாரணமாக கவிதைப் போட்டிக்கு 200 கவிதைகள் வருகிறது என்றால், நடுவர் குழுவை பொறுத்து தேர்வுகள் மாறலாம், விலை மகளை பற்றி ஒரு புதுக் கவிதை எழுதினால் அது பரிசீலிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.

இதே போட்டி மரபுக் கவிதைகளுடன் நடுத்தும் போது தமிழை முறையாக அறிந்த எந்த நடுவர் குழுவும் சரியாக எழுதப்படும் கவிதைக்கு மட்டுமே தேர்வு. இதில் பெரிய வித்தியாசம் இருக்காது. விலைமகளைப் பற்றி இலக்கணம் வழுவாது, தமிழின் அழகைக் கையாண்டு எழுதினால் அது சபையேறும், வெல்லும்.

வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை. எதுகை இல்லை இயைபு இல்லை என்று மண்டை முழுதும் இலக்கணம் மட்டுமே இருக்கும், இயல்பான ரசிப்பு இருக்காது.

இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. அது அனைவருக்கும் கைக்கு எட்டுவதில்லை.

புதுக்கவிதை தங்கம் போல், இதுவும் மதிப்பானது, ஆனால் வைரம் போல் இல்லை. அனைவராலும் வாங்க முடியும். இதில் கருத்தை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் எழுதும் முறையில் பல வகையாக பிரிக்க முடியுமா என்று தெரியவில்லை, இதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு/இலக்கணம் இல்லை. சுலபமாக இருப்பதால் கவி புனைவது எளிது. மேலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் கவிஞர் சொல்ல வருவதை இயல்பான வார்த்தைகளில் கூறமுடியும். மரபுக்குள் கட்டுபடாததால் இதை பலரும் விரும்புவர், எப்படி கட்டுபாடில்லாமல் விளையாட குழந்தை விரும்புகிறதோ அது போல் இதுவும் .மழையில் நனைந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவதைப் போல். இது குழந்தைக்கு சரி, பெரியவர்களுக்கு சரியா ?

ஆனால் பெரியவர்கள் எப்படி குழந்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அது போல் தான் மொழிவல்லுனர்கள், மொழி அறிந்தவர்கள். நாம் மொழியின் குழந்தைகள், வளர விரும்பாமல் இருப்பதில் சுகம் காண்கிறோம், அது சரி என்கிறோம். ஆனால் மொழி வல்லுனர்கள் மொழியில் முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகாது. ஒரு சில வரையறை தேவை என்று நினைக்கின்றனர்.

இப்படி யாரோ ஒருவர் அவ்வப்போது போடும் இலக்கண வரையறை /கட்டுப்பாட்டில் தான் மொழி இன்னும் வாழ்கிறது. இது அனைத்து மொழிக்கு பொருந்தும். எப்படி வேண்டுமானால் பேசலாம், எழுதலாம் என்று இருந்தால் ஒரு மொழியையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர முடியாது.

நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.

சதாசிவம்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் Tue Jan 31, 2012 7:33 pm

மிகவும் உண்மையான ஒன்று ஐயா.

மிக மிக அருமையான உரை ஐயா...மிக்க நன்றிகள்.......

வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை.

இதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா, அதாவது, சுப்புடுவை அழைத்து கச்சேரி, இதன் வரலாறு எனக்கு தெரியவில்லை, விளக்குங்கள் ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by சதாசிவம் Tue Jan 31, 2012 7:54 pm

ராமன் சுப்புடு என்பவர் ஒரு மிகச்சிறந்த, மிகவும் ஞானமுள்ள ஒரு இசைவிமர்சகர். தள்ளாத வயதிலிலும் மார்கழி மாத கச்சேரிகளில் வந்து கேட்டு இசை விமர்சனம் எழுதுவது அவருடைய வேலை. ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் அவர் விமர்சனக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரிடம் பாராட்டு வாங்க தவம் கிடந்தனர். இவர் சுமார் என்று எழுதினாலே, பெரிய விஷயம். இவரின் கணக்குப்படி இன்றைக்கு அருமையாகப் பாடும் பல சங்கீத வித்துவான்களில் சிலர் ஜஸ்ட் பாஸ், பலர் பெயில்.

சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.

புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.

அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Subbudu1

சதாசிவம்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் Tue Jan 31, 2012 8:00 pm

சதாசிவம் wrote:ராமன் சுப்புடு என்பவர் ஒரு மிகச்சிறந்த, மிகவும் ஞானமுள்ள ஒரு இசைவிமர்சகர். தள்ளாத வயதிலிலும் மார்கழி மாத கச்சேரிகளில் வந்து கேட்டு இசை விமர்சனம் எழுதுவது அவருடைய வேலை. ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் அவர் விமர்சனக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரிடம் பாராட்டு வாங்க தவம் கிடந்தனர். இவர் சுமார் என்று எழுதினாலே, பெரிய விஷயம். இவரின் கணக்குப்படி இன்றைக்கு அருமையாகப் பாடும் பல சங்கீத வித்துவான்களில் சிலர் ஜஸ்ட் பாஸ், பலர் பெயில்.

சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.

புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.

அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Subbudu1

மிக்க நன்றிகள் ஐயா, இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது ............

ஜோடி என்ற படத்தில், விஜயகுமார், இவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிதிருக்கிறார் என்று.

அந்தப் படத்தில், விஜயகுமார், இசைக் கலைஞர்களை விமர்சனம் செய்வது தான் அவருடைய கதாபாத்திரம். நிச்சயம் அது இவருடைய வாழ்க்கையை தான் எடுத்திருப்பார்கள் பெயர் கூடு சுப்புடு என்று தான் வரும் சரியாக நியாபகம் இல்லை.

மிக்க நன்றிகள் ஐயா. புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by அசுரன் Wed Feb 01, 2012 12:46 am

பிஜிராமன் wrote:
ஜோடி என்ற படத்தில், விஜயகுமார், இவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிதிருக்கிறார் என்று.

மிக்க நன்றிகள் ஐயா. புன்னகை நன்றி

க.க.க.போ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by சதாசிவம் Wed Feb 01, 2012 5:39 am

நன்றி ராமன்
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.

பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.

உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்

ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118

அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112

அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124

மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.

பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.

அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.

உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.

கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.

கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.

சதாசிவம்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by கே. பாலா Wed Feb 01, 2012 6:37 am

நன்றி சதாசிவம் ...இந்த ஒப்பீடு தவறு என்ற காரணத்தால்தான் நான் எனக்கு பிடித்தது கவிதைகள் என்று பின்னூட்டம் இட்டிருந்தேன். நீங்கள் கொடுத்தது ,தெளிவான , , அழகாக விளக்கம் சூப்பருங்க:

எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by அதி Wed Feb 01, 2012 7:47 am

எனக்கு இன்னும் புதுக்கவிதை மரபு கவிதைன்னா என்னனே விளங்க மாட்டேங்குது.சுதாக்கா சொன்னது போல படிக்க புரியும் கவிதை தான் எனக்கும் பிடிக்கும்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by சதாசிவம் Wed Feb 01, 2012 2:44 pm

கே. பாலா wrote:நன்றி சதாசிவம் ...இந்த ஒப்பீடு தவறு என்ற காரணத்தால்தான் நான் எனக்கு பிடித்தது கவிதைகள் என்று பின்னூட்டம் இட்டிருந்தேன். நீங்கள் கொடுத்தது ,தெளிவான , , அழகாக விளக்கம் சூப்பருங்க:

எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...

நன்றி பாலா சார்,
:நல்வரவு:
நீங்கள் கூறுவது உண்மை, ஒரு நல்ல வாசகனால் கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்

சதாசிவம்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 2:57 pm

சதாசிவம் wrote:நன்றி ராமன்
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.

பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.

உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்

ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118

அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112

அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124

மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.

பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.

அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.

உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.

கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.

கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.

சுப்புடு அவர்கள் மூலம் கதாபாத்திரம் உருவாகியதே தவிர அந்த காதாபாத்திரத்தின் மூலம் அவர் அறியப் படவில்லை. அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே, அந்தப் படத்தை பார்த்தால், தெரிந்து கொள்வார்கள். ஐயா.

மிக மிக அருமையான, உவமையை கையாண்டுள்ளீர்கள் ஐயா.

மரபுக் கவிதை, நாளெல்லாம் தொடரும் என்று அதன் பெயரிலையே உள்ளது.
புதுக் கவிதை, அன்றன்று பூப்பவை. நீண்ட நாட்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான். இதுவும் அதன் பெயரிலேயே உள்ளது.

மிக்க நன்றிகள் ஐயா....... நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum