ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

+24
கா.ந.கல்யாணசுந்தரம்
ayyamperumal
T.PUSHPA
Dr.சுந்தரராஜ் தயாளன்
அதி
சதாசிவம்
பாலாஜி
உமா
சார்லஸ் mc
subhajothi
அல்கெனா ரிஷி
ஜாஹீதாபானு
கே. பாலா
ரேவதி
வின்சீலன்
பார்த்திபன்
உதயசுதா
அசுரன்
கோவிந்தராஜ்
இளமாறன்
பிஜிராமன்
மகா பிரபு
சிவா
yarlpavanan
28 posters

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Go down

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Poll_c1024%இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Poll_c10 24% 
[ 9 ]
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Poll_c1076%இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Poll_c10 76% 
[ 29 ]
 
Total Votes : 38
 
Poll closed

open இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Mon Jan 30, 2012 10:25 pm

First topic message reminder :

அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by வின்சீலன் Wed Feb 08, 2012 10:14 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வின்சீலன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வின்சீலன் wrote:மரபு கவிதை சுத்த தமிழில் இருக்கும் அது புரியாது அழுகை
வின்சீலன் அவர்களே, நீங்கள் எதைவைத்துக்கொண்டு இப்படி ஒரு பின்னுட்டம் இட்டீர்கள் அதாவது, பழைய தமிழ் இலக்கியங்களில் வருவதுபோல் மரபுக் கவிதைகள் செந்தமிழில் இருக்கும் புரிவதற்கு ஒரு ''கோனார் தமிழ் உரைநூல்'' தேவை என்று கருதுகிறீரா?

மரபுக்கவிதைக்கு மிக முக்கியமானது அது யாப்பிலக்கணம் வழுவாது இருத்தல் வேண்டும் என்பதே.
ஒரு வெண்பாவை எடுத்துக்கொண்டால் அதில் தேமா, புளிமா என்ற ஈரசைச் சீர்களும், காய்ச்சீர் ஆகிய மூவசைச் சீர்களும் மட்டுமே வர வேண்டும். கனிச்சீர்கள் வரவே கூடாது. கடைசி அடி சிந்தடி ஆகவும், கடைசிச் சீர், காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்ப்பாட்டில் ஒன்றில் முடிய வேண்டும்.

மேல்கண்ட விளக்கம் உங்களுக்கு மிகவும் மலைப்பாக இருக்கலாம். உங்களுக்கு யாப்பு சுத்தமாகத் தெரியவில்லை என்றால் சற்று பயமாகவும் இருக்கலாம். ஆனால் கீழ்க்கண்ட ஒரு வெண்பாவைப் பாருங்கள். இதை எழுதியவர் அகரம் அமுதா என்ற ஒரு சிறந்த கவிஞர். வெண்பா எழுதலாம் வாங்க போன்ற பல வலைப்பூகளை நடத்தி வரும் ஒரு இளைஞர். அவரின் இந்த நேரிசை வெண்பாவை ஒரு முறைக்கு இரு முறை படியுங்கள்.

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி
பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி - பார்க்கலாந்தான்
இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே
தம்மாத்துண் டேகணினி யில்

நீங்கள் நிச்சயமாக இரண்டு முறை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதில் நான் மேற்ச்சொன்ன வெண்பாவின் இலக்கணம் மாறாமல் வந்துள்ளது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை கலந்து வந்துள்ளது. முதல் மூன்று அடிகள் அளவடிகள் ஆகவும், கடைசி அடி சிந்தடியாகவும் வந்துள்ளது. கடைசிச் சீர் நாள் என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது.

சரி...இந்த வெண்பாவில் உங்களுக்கு என்ன புரியவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு சிறிய கணினியை வைத்துக்கொண்டு மிகப்பெரிய உலகத்தையும் நம் கண் முன்னே காணமுடியும். அதுவும் நாம் விரும்பிய படி, உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு, சோபாவில் படுத்துக்கொண்டு, சாய்ந்துகொண்டு எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று தானே சொல்கிறார்! அதுவும் அவர் சொல்வது, உலகிலேயே தலைசிறந்த வட்டார வழக்காகிய நம் சென்னை பாஷையில்!!

ஆகவே வின்சீலன் அவர்களே நீங்கள் நினைப்பதைப் போல் மரபுக்கவிதைகள் சுத்தத்தமிழில் இருக்கும், அது புரியாது என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். எளிமையான தமிழில், எல்லோருக்கும் புரியும்படியாக, அதேசமயம் யாப்பிலக்கணம் சிறிதும் மாறாமல் எழுதமுடியும், அப்படி எழுதுகிறவர்கள் எத்தனையோபேர் உள்ளார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். கீழே நான் எழுதிய ஒரு இன்னிசை வெண்பாவைக் கொடுத்துள்ளேன். அதில் சிரமமான சொற்களோ, பொருள் புரியவில்லையா தெரிவிக்கவும்.

கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்கரையில் ஓர்தீவின்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்

தவறான கருத்துக்களை நம்பாதீர்கள். புன்னகை

தங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி :வணக்கம்:
பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி
பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி - பார்க்கலாந்தான்
இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே
தம்மாத்துண் டேகணினி யில்

இது எனக்கு புரிகிறது
ஆனால் நீங்கள் சொன்ன

"அதில் தேமா, புளிமா என்ற ஈரசைச் சீர்களும், காய்ச்சீர் ஆகிய மூவசைச் சீர்களும் மட்டுமே வர வேண்டும். கனிச்சீர்கள் வரவே கூடாது. கடைசி அடி சிந்தடி ஆகவும், கடைசிச் சீர், காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்ப்பாட்டில் ஒன்றில் முடிய வேண்டும்"
இது எனக்கு ஒண்ணுமே புரியல , என்ன பண்றது நான் படிச்சது அப்படி அழுகை

நிஜமா எனக்கு இந்த அளவு எல்லாம் தெரியாது , அது ஈகரை உறவுகள் நிறையபேருக்கு தெரியும் ஓரக்கண் பார்வை

வாழ்க தமிழ்
குதூகலம்
மரபுக்கவிதை புரியாது என்று நீங்கள் சொன்னதால்த்தான் நான் ஒரு அரைமணி நேரம் செலவு செய்து இந்த விளக்கத்தை எழுதினேன். உங்களுக்கு தேமா, புளிமா தெரியாது என்பதற்காக தொல்காப்பியரால் உதாரணம் சொல்லப்பட்டதும், இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ந்து வருவதுமான யாபிலக்கணத்தை விட்டு விட வேண்டும் என்று கருதுகிறீர்களா? சோகம்

எனக்கு தெரியாது என்று தான் தெளிவாக சொல்லி இருக்கிறேனே தவிர
எந்த ஒரு இடத்திலும் நான் இது போன்று தெரிவிக்க வில்லை
இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ந்து வருவதுமான யாபிலக்கணத்தை விட்டு விட வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ஒருவருக்கு தெரிந்த ஒன்று எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. ரிலாக்ஸ்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பது Wed Feb 08, 2012 4:39 pm

இரண்டும் இல்ல தனுஷ்இன் தங்கிலிஷ் கவிதை தான்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Thu Feb 09, 2012 11:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வின்சீலன் wrote:மரபு கவிதை சுத்த தமிழில் இருக்கும் அது புரியாது அழுகை
வின்சீலன் அவர்களே, நீங்கள் எதைவைத்துக்கொண்டு இப்படி ஒரு பின்னுட்டம் இட்டீர்கள் அதாவது, பழைய தமிழ் இலக்கியங்களில் வருவதுபோல் மரபுக் கவிதைகள் செந்தமிழில் இருக்கும் புரிவதற்கு ஒரு ''கோனார் தமிழ் உரைநூல்'' தேவை என்று கருதுகிறீரா?

மரபுக்கவிதைக்கு மிக முக்கியமானது அது யாப்பிலக்கணம் வழுவாது இருத்தல் வேண்டும் என்பதே.
ஒரு வெண்பாவை எடுத்துக்கொண்டால் அதில் தேமா, புளிமா என்ற ஈரசைச் சீர்களும், காய்ச்சீர் ஆகிய மூவசைச் சீர்களும் மட்டுமே வர வேண்டும். கனிச்சீர்கள் வரவே கூடாது. கடைசி அடி சிந்தடி ஆகவும், கடைசிச் சீர், காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்ப்பாட்டில் ஒன்றில் முடிய வேண்டும்.

மேல்கண்ட விளக்கம் உங்களுக்கு மிகவும் மலைப்பாக இருக்கலாம். உங்களுக்கு யாப்பு சுத்தமாகத் தெரியவில்லை என்றால் சற்று பயமாகவும் இருக்கலாம். ஆனால் கீழ்க்கண்ட ஒரு வெண்பாவைப் பாருங்கள். இதை எழுதியவர் அகரம் அமுதா என்ற ஒரு சிறந்த கவிஞர். வெண்பா எழுதலாம் வாங்க போன்ற பல வலைப்பூகளை நடத்தி வரும் ஒரு இளைஞர். அவரின் இந்த நேரிசை வெண்பாவை ஒரு முறைக்கு இரு முறை படியுங்கள்.

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி
பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி - பார்க்கலாந்தான்
இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே
தம்மாத்துண் டேகணினி யில்

நீங்கள் நிச்சயமாக இரண்டு முறை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதில் நான் மேற்ச்சொன்ன வெண்பாவின் இலக்கணம் மாறாமல் வந்துள்ளது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை கலந்து வந்துள்ளது. முதல் மூன்று அடிகள் அளவடிகள் ஆகவும், கடைசி அடி சிந்தடியாகவும் வந்துள்ளது. கடைசிச் சீர் நாள் என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது.

சரி...இந்த வெண்பாவில் உங்களுக்கு என்ன புரியவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு சிறிய கணினியை வைத்துக்கொண்டு மிகப்பெரிய உலகத்தையும் நம் கண் முன்னே காணமுடியும். அதுவும் நாம் விரும்பிய படி, உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு, சோபாவில் படுத்துக்கொண்டு, சாய்ந்துகொண்டு எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று தானே சொல்கிறார்! அதுவும் அவர் சொல்வது, உலகிலேயே தலைசிறந்த வட்டார வழக்காகிய நம் சென்னை பாஷையில்!!

ஆகவே வின்சீலன் அவர்களே நீங்கள் நினைப்பதைப் போல் மரபுக்கவிதைகள் சுத்தத்தமிழில் இருக்கும், அது புரியாது என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். எளிமையான தமிழில், எல்லோருக்கும் புரியும்படியாக, அதேசமயம் யாப்பிலக்கணம் சிறிதும் மாறாமல் எழுதமுடியும், அப்படி எழுதுகிறவர்கள் எத்தனையோபேர் உள்ளார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். கீழே நான் எழுதிய ஒரு இன்னிசை வெண்பாவைக் கொடுத்துள்ளேன். அதில் சிரமமான சொற்களோ, பொருள் புரியவில்லையா தெரிவிக்கவும்.

கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்கரையில் ஓர்தீவின்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்

தவறான கருத்துக்களை நம்பாதீர்கள். புன்னகை

மரபுக் கவிதைகளை எடுத்துக்காட்டுகளுடன் விரும்பவைக்க, தாங்கள் கொடுத்த விளக்கம் போதுமானது. யாப்பிலக்கணம் தெரிந்தவர்கள், அதுவும் அசை, சீர், அலகிடுதல் எனப் புலமை இருக்கையில் சிக்கல் தமிழையும் இலகு தமிழாக இனம் காண்பரே! இந்தத் திரியில் தாங்களே அதிகம் கருத்துப் பகிர்ந்ததோடு, மரபுக் கவிதைகளை நாட வைக்க சிறந்த வழிகாட்டலையும் தந்துள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 10:06 am

மரபா?...புதிதா?...வடிவம் முக்கியமன்று...
எதில் வாழ்க்கை இருக்கிறதோ அது நேசிக்கப்படும்.
சில நேரங்களில் மரபுக்கவிதை மாபெரும் சொல்லாட்சிகளுடன் வந்து நம்மை சொக்கவைக்கும்...
வேறு சில நேரங்களில் புதுக்கவிதைப் பல புதிய பரிமாணங்களுடன் வந்து பரிபாலனம் செய்யும்...
எது சிறந்தது என்பது கேள்வியன்று-எழுத
எடுத்துக்கொண்டது சிறந்ததா என்பதே கேள்வி.

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 224747944

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Rஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Aஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Emptyஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Rஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Sat Feb 11, 2012 3:15 pm

RaRa3275 wrote:மரபா?...புதிதா?...வடிவம் முக்கியமன்று...
எதில் வாழ்க்கை இருக்கிறதோ அது நேசிக்கப்படும்.
சில நேரங்களில் மரபுக்கவிதை மாபெரும் சொல்லாட்சிகளுடன் வந்து நம்மை சொக்கவைக்கும்...
வேறு சில நேரங்களில் புதுக்கவிதைப் பல புதிய பரிமாணங்களுடன் வந்து பரிபாலனம் செய்யும்...

தங்கள் கருத்துக்களில் உண்மையிருக்கிறது. எவருக்கு எதில் நாட்டமோ, அதில் அவர் எழுதினாலும்; வாசகனை மகிழ்வூட்டவல்ல கவிதையே வெற்றி பெறுகிறது.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 3:17 pm

yarlpavanan wrote:
RaRa3275 wrote:மரபா?...புதிதா?...வடிவம் முக்கியமன்று...
எதில் வாழ்க்கை இருக்கிறதோ அது நேசிக்கப்படும்.
சில நேரங்களில் மரபுக்கவிதை மாபெரும் சொல்லாட்சிகளுடன் வந்து நம்மை சொக்கவைக்கும்...
வேறு சில நேரங்களில் புதுக்கவிதைப் பல புதிய பரிமாணங்களுடன் வந்து பரிபாலனம் செய்யும்...

தங்கள் கருத்துக்களில் உண்மையிருக்கிறது. எவருக்கு எதில் நாட்டமோ, அதில் அவர் எழுதினாலும்; வாசகனை மகிழ்வூட்டவல்ல கவிதையே வெற்றி பெறுகிறது.

நன்றி...
உண்மையும் உணர்வுமே எப்போதும் வெல்லும்...

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 224747944

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Rஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Aஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Emptyஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 Rஇன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 11 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum