புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
91 Posts - 67%
heezulia
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
3 Posts - 2%
prajai
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
3 Posts - 2%
Barushree
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
2 Posts - 1%
sram_1977
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
1 Post - 1%
nahoor
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
1 Post - 1%
kavithasankar
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
145 Posts - 74%
heezulia
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
8 Posts - 4%
prajai
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
5 Posts - 3%

Tamilmozhi09
“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_m10“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!”

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 29, 2012 4:28 pm

அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு...

வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்த இரண்டு கடிதங்களை ‘முரசொலி’ இதழின் பக்கத்தில் வெளியிட்டு ‘நன்றி’ மறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் ‘வாழ்த்தி’ இருக்கிறீர்கள். பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவாலயம் எழுப்பிய உங்கள் பெருந்தன்மைக்கு இன்றும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Manian
காமராஜர் பிறந்த நாளை மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்த தங்கள் அரசியல் பகையற்ற அன்பின் விரிவை என்றும் நினைத்து, நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி மலர்களை உங்களுக்குக் காணிக்கையாக்குவேன்.

‘நான் கேட்காமலே எனக்கு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் பதவியும், பாரதி விருதும் மனமுவந்து அளித்து என்னைத் தாங்கள் பெருமைப்படுத்தியதையும், வீடற்ற எனக்கு வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் ஒரு வீடு கொடுத்து என் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததையும் என் இறுதிநாள் வரை நன்றியுடன் நினைத்து தங்கள் அன்பைப் போற்றுவேன்’ என்று உங்களுக்குத் தீட்டிய கடிதத்தில் நான் குறிப்பிட்டு இருந்தது முற்றிலும் உண்மை. ஆனால், ஒருவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்தி, அவர் பின்னாளில் செய்து முடித்த தவறுகள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பதுதான் நன்றியின் நல் அடையாளம் என்று நீங்கள் நினைத்தால், அந்த நன்றியை நான் செலுத்தத் தவறியது உண்மைதான். அந்த வகையில் நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்.

நீங்கள் மாநிலத் திட்டக் குழு உறுப்பினராக என்னை நியமித்தீர்கள். அந்தப் பதவியை எள்ளளவும் என் சுயநலத்துக்கு நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அரசின் சார்பில் எனக்கு, ‘பாரதி விருது’ வழங்கினீர்கள். என் 40 ஆண்டுப் பொதுவாழ்வில் வீதிதோறும் வெகு மக்களிடம் பாரதியின் பெருமையைக் கொண்டு சேர்த்தவன் நான். பாரதியைப் பற்றி ஆய்வு செய்து நான் எழுதிய ‘ கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற நூல் விருதுக்கான தகுதியைத் தமிழிரிடையே நன்கு வெளிப்படுத்தும். ‘தன்னுடை ஆற்றல் உணரார் இடையில் தன்னைப் புகழ்தலும் தகும்’ என்கிறது நன்னூல்.

“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” LfobJ4iffac
பாரதி விருதுடன் அரசுக் கருவூலத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பரிசாக நீங்கள் வழங்கினீர்கள். இன்றவுளவும் அதை நான் எனக்கென்று பயன்படுத்தியது இல்லை. கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கியில் வைப்பு நிதியாக உள்ள அந்தப் பணத்துக்கான வட்டித் தொகையும், இலக்கியம் பேசுவதில் கிடைக்கும் மதிப்பூதியமும் வறுமைப் பள்ளத்தில் வாடிக்கிடக்கும் ஏழைப் பிள்ளைகள் உயர் கல்வி பெறுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் விரும்பினால், அதனால் பயன்பெறும் பிள்ளைகளை நேரில் கொண்டு வந்து நிறுத்துகிறேன்.

‘மனித ஜாதிக்குத் தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம் இறங்காத விஷம். இதன் பெயர் பணம். இப்பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டிவிடுவது விருப்பம். அதாவது அறிவற்ற விருப்பம்’ என்றான் பாரதி. அந்தப் பேயாகிய அறிவற்ற விருப்பம் என்னிடம் படிந்துவிடாதபடி பார்த்துக்கொளவதுதான் என் வாழ்காலத் தவம். பொய்மை, இரட்டுற மொழிதல், நடிப்பு, வஞ்சனை ஆகியவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப்பிழைப்பு என்ற மகாகவியின் வார்த்தைகளே என்னளவில் நெஞ்சுக்குள் நேர்ந்துகொண்ட வேதம். இந்த என் வாழ்க்கைப் பண்புகளால்தான் உங்களிடம் நான் முரண்பட்டு விலக நேர்ந்தது.

ஆயிரக்கணக்கில் அரிய புத்தகங்களை ஒரு கருமியின் கவனத்துடன் சேர்த்து வைத்திருக்கும் நான், அவற்றை ஒழுங்காகப் பராமரித்துப் பாதுகாக்கவும் இறக்கும் வரை நிலையாக ஓர் இடத்தில் தங்கி வாழவும் வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கித் தரும்படி உங்களிடம் விண்ணப்பித்தது உண்மை. நீங்களும் அன்புடன் என் கோரிக்கையை நிறைவேற்றியதும் உண்மை. ஆனால், ஈழ மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு எதிராகவும், இந்திய அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் நீங்கள் நாற்காலி மனிதராய் மெளனத் தவம் இருந்தபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், திட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி, உங்களையும், காங்கிரஸையும் விமர்சிக்க நான் எழுதுகோல் ஏந்தியதும், வாடகைக்கு வழங்கிய வீட்டில் இருந்து என்னை வெளியேற்றி வீதியில் நிறுத்த முனைந்தது உங்களது பெருந்தன்மை!

முல்லை-பெரியாறு, காவிரி நீர்ப் பிரச்னையில்கூட இவ்வளவு தீவிரத்தை நீங்கள் காட்டியது இல்லை. ஒரு சாதாரண வாடகைதாரரை வெளியேற்றும் வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை மாநில அரசின் அடிஷனல் அட்வகேட் ஜெனரலை நிறுத்தி வாதாடச் செய்து பழிவாங்கும் படலத்தில் புதிய வரலாறு படைத்தீர்கள். நீதியரசர் மாண்புமிகு சந்துரு அவர்கள் நியாயத்தின் நிறம் அறிந்து எனக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்தீர்கள். மதுரை வீதியில் பட்டப்பகலில் சொந்தக் கட்சிக்காரரான தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாத நீங்கள், வீடற்ற ஓர் எளியவனை வீதியில் நிறுத்த இறுதி வரை களம் இறங்கினீர்கள். ஜனநாயகத்தின் உயிர்நாடியான கருத்து சுதந்திரத்துக்கு நீங்கள் நிர்ணயித்த வரையறை நன்றிக்குரியதுதான்(!)

இன்றும் அந்த வழக்கு நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. உங்கள் ஆட்சியின் தவறுகளுக்கு எதிராக, எழுத்திலும் பேச்சிலும் கருத்துப்போர் நிகழ்த்திய நான் அந்த வீட்டைக் காப்பாற்றிக்கொள்ள இன்றைய முதல்வரிடம் மனுப்போட்டு நிற்கவில்லை. அது என் வாழ்க்கை முறையும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி நான் யாரையும் ‘திட்டுபவன்’ இல்லை. தமிழாய்ந்த உங்களுக்கு வசைபாடுபவனுக்கும், தவறுகளைத் தறுக்கண் ஆண்மையுடன் விமர்சிப்பவனுக்கும் இடையிலுள்ள வேற்றுமை விளங்காமற் போனது எனக்கு வியப்பைத் தருகிறது.

கலைஞரே... இப்போது ஓய்வாக அமர்ந்து சிந்திப்பதற்கு உங்களுக்குக் காலத்தின் கருணையால் நிறைய நேரம் வாய்த்திருக்கிறது. பதவி நாற்காலியின் மீதிருந்த பற்றினால் ஈழப் பிரச்னையில் நீங்கள் நடந்துகொண்ட விதம் நியாயமா என்று யோசியுங்கள். அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு உங்களைச் சார்ந்தவர்கள் கழகத்தின் மீது என்றும் நீங்காத களங்கச் சேற்றைப் பூசியது சரிதானா என்று சிந்தியுங்கள். உங்கள் குடும்ப அரசியலால் நேற்று ஆட்சியும் இன்று கட்சியும் நிலைகுலைந்தது எந்த வகையில் ஏற்கத்தக்கது என்று ஆய்ந்து பாருங்கள். உங்கள் ஆற்றலில் அணுவளவும் இல்லாத, கழகத்தை வளர்க்க உங்களைப் போல் கடும் உழைப்பைத் தராத, வாசக ஞானமும் சமுதாயப் பொறுப்பு உணர்வும் சிறிதும் இல்லாத மிகச்சாதாரண மனிதர்கள் உங்களுக்குத் துதிபாடி, உங்கள் கொற்றக் குடை நிழலில் இடம் பெற்ற ஒரே காரணத்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடித்த கொள்கைகளின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். உங்கள் வீழ்ச்சிக்கான காரணங்கள் அப்போது புரியும்.

‘தேவைக்கு மேல் பொருளும், திறமைக்கு மேல் புகழும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமானதாகத்தான் தோன்றும் கூட்டம் கூட்டுவதிலும், கூவி அழுவதிலுமே களத்தின் விடுதலை அடங்கிக்கிடப்பதாக நீங்கள் முடிவு கட்டிவிட்டீர்கள். நீங்கள் நூலேணி கட்டி ஆகாயம் போக முயன்றீர்கள். போர்க் கருவி செய்வதற்காகச் சமைக்கப்பட்ட மண்டபம், போக மண்டபமாயிற்று. ஆத்திரம் கொண்டிருந்த மக்களின் நடுவே கூத்தர்கள் குடியேறினர். ஆரவாரமும் போர் முரசும் கேட்டுக்கொண்டிருந்த மாளிகையில் ராகமும் தாளமும் கேட்கத் தொடங்கிற்று’ என்று உங்களிடமிருந்து பிரிந்தபோது கண்ணதாசன் எழுதினார்.

பெரியார் மண்ணில் மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்வதற்கு நீங்கள் குஷ்புவை நியமித்திருப்பதைப் பார்க்கும்போது, அன்று முதல் இன்று வரை உங்கள் அணுகுமுறையில் மாற்றமே நிகழவில்லை என்பது புரிகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, முகவரியே இல்லாத திருக்குவளை என்னும் சாதாரண கிராமச் சூழலில் வளர்ந்து, ஏழ்மையின் பிடியில் உழன்று, தன் அரிய முயற்சியாலும், அளப்பரிய ஆற்றலாலும், சோர்வறியா உழைப்பாலும், தமிழன்னை உறவாலும் புகழின் சிகரத்தை எட்டிய உங்கள் சாதனை என்றும் என் ஆராதனைக்கு உரியவை. உங்கள் சந்தர்ப்பவாத சாகசங்களும், சொல் ஒன்று செயல் ஒன்றாக நீங்கள் நடத்தி வரும் அரசியல் நாடகங்களும், எண்ணற்ற தொண்டர்களின் வியர்வை நீரில் விருட்சமாக வளர்ந்த கழகத்தை உங்கள் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட சுயநலமும், ஊழலைத் தமிழினத்தின் பொதுப் புத்தியாக்கிவிட்ட உங்கள் அறம் பிறழ்ந்த அரசியலும் என்றும் என் நேர்மையான விமர்சனத்துக்கு உரியவை.

உங்கள் மீது வியப்பும் விமர்சனமும்

அன்பும் நன்றியும் நிறைந்த
தமிழருவி மணியன்.

நன்றி : ஜூனியர் விகடன்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்...ARRKAY BLOGSPOT ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 29, 2012 4:42 pm

இதெல்லாம் இவருக்கு புதுசு. தமிழக மக்கள் இது மாதிரி எத்தனை பேரை நன்றி கொன்றவர்களாக மாற்றியவர் கருணாநிதி என்பதை பார்த்தவர்கள் தான். ஆனாலும் வேறு வழி இல்லை எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று தான் பார்க்க வேண்டி இருக்கிறது. ஒண்ணு ஜெயலலிதா இல்லை என்றால் கருணாநிதி இந்த இரண்டு திராவிட கட்சிகளை விட்டால் வேறு கட்சி இல்லையே என்ன செய்வது

“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” U“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” D“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” A“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” Y“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” A“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” S“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” U“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” D“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” H“நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!” A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 29, 2012 4:53 pm

மிகவும் அருமையான கட்டுரை...பதிவுக்கு நன்றி பிரசன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 29, 2012 5:06 pm

தமிழருவி மணியனுக்கு: மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிரசன்னாவுக்கு : நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 29, 2012 7:19 pm

நன்றி கொண்டவரை நன்றி கொன்றவராக்குதே கொள்கை எனக்
கொண்டிருக்கும் தலைவர்களை என்னவென்று சொல்வது?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக