ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு உண்டு!

3 posters

Go down

தீர்வு உண்டு! Empty தீர்வு உண்டு!

Post by கோவைசிவா Wed Sep 30, 2009 11:28 pm

எங்கோ படித்தது தான், அந்த இக்கட்டான நேரத்திலும், என் நினைவுக்கு வந்தது...
சுதந்திரப் போராட்ட வீரன் ஒருவன். கர்னல் நீல் என்பவரின் காலத்தில் பிடிக்கப்பட்டான். மரண தண்டனை என்று முடிவாயிற்று. கைது செய்யப்பட்டு, கயிற்றால் கட்டி வைக்கப்பட்டான். அவன், உள் மூச்சை உள்ளே தேக்கி, மொத்தமாய் மூச்சை வெளியில் விட்டான். கட்டியிருந்த கயிறு பட்டென்று வெடித்ததாம்.
எனக்கும் அப்படியொரு உள் மூச்சு தேவைப்பட்டது. மொத்தமாய் வெளி வந்து எல்லாப் பிரச்னைகளையும், பட்டென்று வெடிக்க வைத்துவிடாதா என்றிருந்தது.
ஓடி வந்தாள் நர்மதா.
""என்ன செய்யறதுன்னு தெரியலே மேடம்... ஸ்டாப் பேமென்ட் நோட் பண்ண விட்டுப் போச்சு... செக் வந்து பாசாகிடுச்சு...'' என்று பரபரத்தாள்.
""மை காட்! என்ன அமவுன்ட்?'' என்றேன்.
""மூன்றரை லட்சம்...''
""அய்யோ... பார்ட்டி யாரு?''
""ஏக்நாத் எக்ஸ்போர்ட்ஸ் மேடம்...'' என்றாள்; அழுது விட்டாள்.
""வாட்... அந்த அக்கவுன்ட்டா? எப்படி நர்மதா... ஸ்டேட்மென்ட் அனுப்பலேன்னாலே, வந்து கழுத்தைப் பிடிக்கிற டைப்பாச்சே அவங்க?''
""ஆமாம், மேடம்... லெட்டர் என் கைல தான் கொடுத்தாங்க... நானும், சிஸ்டத்தில என்ட்டர் பண்ணினேன்... ஆனா, ரெகார்ட் ஆகல மேடம்.''


""அதெப்படி நர்மதா?''
""அதுதான் தெரியலே மேடம்... லெட்டரைக் கூட, உங்க டேபிள்ல தான் வெச்சேன் மேடம்...''
""இசிட்! என்னிக்கு?''
""முந்தா நாள் மேடம்... இருபத்துநாலு...''
""ஓ மைகாட்! அன்னிக்குதான் எல்லா சிஸ்டமும் கிராஷ் ஆச்சே... பேக்கப் வெச்சு தானே சமாளிச்சு, டே எண்ட் முடிச்சோம். நான் - பின்னான்ஷியல் என்ட்ரீஸ் எல்லாம் தானா டெலிட் ஆகியிருக்குமே...'' என்று என் ரத்தம் சூடானது.
""அய்யோ! தலை சுத்துது மேடம் எனக்கு...'' என அழத் துவங்கி விட்டாள்.
""சரி... நீ போய் வேலையை கவனி... பார்க்கலாம்... இன்றைய வேலைல தப்பு இல்லாம பாத்துக்க...'' என்று அவளை அனுப்பிவிட்டாலும், என் வயிற்றில், முதலைகளும், நண்டுகளும் ஊறத் தொடங்கிவிட்டன.


""மேடம்... இந்த லெட்டரைப் பிடிங்க... அஞ்சாவது ரிமைண்டர் டெல்லில இருந்து...'' என்று வந்து வைத்தார் ராமநாதன்.
""என்ன சார் இது?''
""பாரின் கரன்சி கன்வர்ஷன்ல ஏதோ பிரச்னை... கஸ்டமருக்கு ஜி.ஜி.பி., வாங்கி இருக்கிறோம்... அதுல வித்தியாசம் இருக்கு...''
""சார்! இது ரொட்டீன் சீட் சார்! ராமானுஜம் தானே பாரின் எக்ஸ்சேஞ்ச் பாக்கறார்... அவர்கிட்ட கொடுங்க சார்...'' என்று நீட்டினேன்.
""நோ, நோ... அவர் நாலு நாள் லீவு... நீங்க தான் பாக்கணும்... பிடிங்க...''
""என்ன சார் இது... இதைப் பத்தி எதுவுமே தெரியாது எனக்கு. எப்படி ரிப்ளை பண்ண முடியும்? பண்ணினாலும், எப்படி சரியா இருக்கும்?''
""ராமானுஜத்தை போன்ல பிடிங்க...'' என்றார் அலட்சியமாக.
""சார்... அவர் யூரோப் டூர்ல இருக்கார்... உங்களுக்கு தெரியாதா? எப்படி அவரை தொந்தரவு பண்றது, பாருங்க... எவ்வளவு கூட்டம்? லாக்கருக்கு, பென்ஷனுக்கு, செக்புக்குக்குன்னு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு... லீவ் மீ...'' என்று சொன்னதும், அவர் முகம் வெளுத்தது.
""மிசஸ் தேவிகா... இட்ஸ் மை ஆர்டர்... நீங்க தான் இந்த லெட்டரை டீல் பண்ணனும்... எனக்கு, எந்த சமாதானமும் தேவையில்லை... பிடிங்க, இதை...'' என்று தொப்பென்று வைத்து விட்டுப் போனார்.
இதென்ன புதுத் தலைவலி... எப்படி இதை சமாளிப்பது? சத்தியமாக எனக்கு, வெளிநாட்டு செலாவணி பற்றி அதிகம் தெரியாது. டாலருக்கும், பவுண்டுக்கும் இந்திய மதிப்பு என்ன என்று சரியாகச் சொன்னாலே அதிசயம். ஐந்து ரிமைண்டர்கள் வரும் வரை அமைதி காத்துவிட்டு, இப்போது தீயைப் போல என் கையில் திணித்தால், நான் மட்டும் என்ன செய்து விட முடியும்? ஆனால், வேறு வழியில்லை... ராமநாதன் என் பாஸ்... என் சுப்பீரியர்... பதில் சொல்லித்தான் தீர வேண்டும்...


எப்படி? எப்படி?
தலை வலித்தது. நாகம்மா வந்து நின்றாள்.
""போனஸ் சர்க்குலர் வந்துடுச்சா மேடம்?'' என்றாள் தழைந்த குரலில்.
""பாக்கணும்மா...'' என்றேன், கையில் பத்து லட்சத்திற்கான காசோலையை பாஸ் செய்தபடி.
""கொஞ்சம் போட்டுக் கொடுங்க மேடம்...'' என்று, இன்னும் பக்கத்தில் வந்தாள்.
""சனிக்கிழமைம்மா... அரை நாள்.... பாத்தியா கூட்டத்தை! இதுல ஏகப்பட்ட பிரச்னைகள்... ஞ்சம் வெயிட் பண்ணு நாகம்மா... திங்கட்கிழமை பார்க்கலாம்...''


""அய்யோ, எப்படி மேடம்... அவசரமா பணம் வேணும்... பையனுக்கு பீஸ் கட்டணும்...''
""திங்கட்கிழமை தானே ஸ்கூல்... பாக்கலாம்... இப்ப போய் வேலைய பாரு...'' என்றேன் கடுமையாக.
முணுமுணுத்தபடி நாகம்மாள் போனாள்.
பார்ட் டைம் ஸ்வீப்பர்களுக்கான யூனியன் தலைவரிடம் புகார் கொடுப்பாள்; தெரியும் எனக்கு.
பெருமூச்சு, எரிமலைக் காற்றாக வந்தது. ஏன் இந்த நாய்ப் பிறவி என்ற எரிச்சலும், பதவி உயர்வு என்ற கேரட்டுக்காக, ஏன் பன்றியாய் அலைந்தோம் என்ற சுயவிரக்கமுமாக என் நெஞ்சு வலித்தது. எல்லாவற்றையும் விட்டு, சகாரா பாலைவனத்திற்கு ஓடி, ஒட்டகம் மேய்க்கலாம் என்று தோன்றியது.
""அம்மா, உடனே வீட்டுக்கு வா...'' என்று சொல்லி, ப்ரீதி போனை வைத்துவிட்டதில் பதறி, ஆட்டோ பிடித்து வீடு நோக்கி பறந்தேன்.
என்ன விஷயம்? அவள் குரலில் ஏன் இத்தனை அழுத்தம்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இவ்வளவு உறுதிமிக்க ஆணை வெளிவருவது எப்படி?
அவர் இருக்கிறாரா, இல்லையா வீட்டில் என்று நினைக்கும் போதே, கண்கள் குளம் கட்டின. இருந்தால் மட்டும் என்ன வாழ்ந்துவிடப் போகிறது? வளையம், வளையமாக புகை விட்டுக் கொண்டு நிற்பார்.


"அய்யோ' என்று வாசலில் சொன்னால், கொல்லைப் பக்கத்திலும், "அடடா' என்று கொல்லைப் பக்கத்தில் சொன்னால், ஹாலிலும் வந்து நின்று புகைப்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை அவரிடம். சிகரட்... சிகரட்... என்று அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாது நிற்பவரிடம், எந்த அனுசரணையை, அன்பை, அந்யோன்னியத்தை எதிர்பார்க்க முடியும்?
வாசலில் ஜீப் நின்றிருந்தது.
திக்கென்றது. போலீஸ் ஜீப் ஏன் வந்திருக்கிறது?
அய்யோ... அவர் ஏதாவது குற்றமிழைத்து விட்டாரா? புகைப்பழக்கத்தின் போதை, அவரை குற்றவாளி ஆக்கி விட்டதா? "அய்யோ... வேண்டாம்' என்று எவ்வளவு அடித்துக் கொண்டேன்? கேட்கவில்லையே பாவி!
""வாங்க, மேடம்...'' என்றார் இன்ஸ்பெக்டர்... முகத்தில் புன்னகை...
""சார், என்ன இது இங்கே? வாங்க...'' என்று தடுமாறினேன்.
""தற்கொலை முயற்சி... உடனே வாங்கன்னு புகார் வந்தால், வராம எப்படி?'' என்று சிரித்தார்.
""தற்கொலை முயற்சியா! யார்... எங்கே... என்ன சார் சொல்றீங்க?'' என்று பதறினாள்.
""உங்க மகள் தான் புகார் கொடுத்தது... பயந்து போய் ஓடி வந்தோம். "சிகரட், ஒரு மனிதனை கொஞ்சம், கொஞ்சமாகக் கொல்லும் என்பது விஞ்ஞானம்! அதன்படி, என் அப்பா, தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர்... வந்து கேஸ் புக் பண்ணுங்க...'ன்னு சொல்றாள் உங்க மகள். பாருங்க... இந்த காலத்து குழந்தைகள் எவ்வளவு ஸ்மார்ட், எவ்வளவு ப்ரில்லியன்ட்?'' அவர் புன்னகைத்து விட்டு கிளம்பினார். மகளின் கைகளைப் பற்றி, கண்ணீர் விட்டு அழுத சங்கரை முதன் முதலாகப் பார்த்தேன். திகைப்பு, பரவசம், அதிசயம், அதிர்ச்சி, மகிழ்ச்சி என்று கவலையாக உணர்வுகள் சுழன்றன. சிந்தனை, அறிவுக் கூர்மை, சுய முயற்சி, கல்வியும், கவலையும் இணைந்து செயல்பட்டதில் வெளிப்படும் புத்திசாலித்தனம்... எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு தானா? சோர்வில்லாமல் சிந்தித்தால் பலன் கிட்டுமா? புதுமையும், புத்துணர்வும் வாய்க்குமா? இது நிஜம் தானா?
ஆமாம்... உண்மை தான்!
இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புப் பரிசான பகுத்தறிவால் மட்டுமே, இனி எதையும் அணுகுவது என்ற முடிவில், அவள் முகம் மலர்ந்தது.
* * *
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

தீர்வு உண்டு! Empty Re: தீர்வு உண்டு!

Post by மீனு Wed Sep 30, 2009 11:33 pm

இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புப் பரிசான பகுத்தறிவால் மட்டுமே, இனி எதையும் அணுகுவது என்ற முடிவில், அவள் முகம் மலர்ந்தது. தீர்வு உண்டு! 677196 நாம் கவலையாய் இருக்கும் போது எடுக்கும் முடிவுகள் அநேகமாய் குழப்பமான முடிவை தான் இருக்கும்..நல்ல குழப்ப மில்லா மனசுடன் சிந்தித்தது எடுக்கும் முடிவுகள் தான் சிறப்பானவை ..

மிக மிக நல்லதொரு கதை கோவை ஷிவா..பாராட்டுக்கள்.. ஆனா உங்கள் கதைகள் கொஞ்சம் சிறிதாக இருந்தால் இன்னும் நல்லது..என்பது மீனுவின் தனிப் பட்ட கருத்து ,


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீர்வு உண்டு! Empty Re: தீர்வு உண்டு!

Post by தாமு Thu Oct 01, 2009 4:44 am

நாம் கவலையாய் இருக்கும் போது எடுக்கும் முடிவுகள் அநேகமாய் குழப்பமான முடிவை தான் இருக்கும்..நல்ல குழப்ப மில்லா மனசுடன் சிந்தித்தது எடுக்கும் முடிவுகள் தான் சிறப்பானவை .. தீர்வு உண்டு! 677196 தீர்வு உண்டு! 677196 தீர்வு உண்டு! 677196

கோவை ஷிவா வாழ்த்துக்கள் தீர்வு உண்டு! 678642 தீர்வு உண்டு! 678642 தீர்வு உண்டு! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தீர்வு உண்டு! Empty Re: தீர்வு உண்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum