புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
1 Post - 20%
Manimegala
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
11 Posts - 4%
prajai
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
2 Posts - 1%
jairam
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_m10நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் ஏன் பாவம் செய்கிறோம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 6:31 am

நாம் ஏன் பாவம் செய்கிறோம்?

பாவம் குறித்த கேள்வியே நமது இரட்சிப்பு (பாவத்திலிருந்து விடுதலை பெறும் வழி) க்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

நமது பாவமே நமது வாழ்க்கைக்குரிய தேவனுடைய பரிசுத்த சித்தம் மற்றும் நோக்கத்திலிருந்து நம்மை பிரிக்கிறது.

நமது இரட்சிப்பின் மேன்மையை (பாவத்திலிருந்து விடுதலை பெறும் வழியின் உயா்வை) நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் ஏன் பாவிகளாக இருக்கிறோம்? நாம் ஏன் பாவம் செய்கிறோம்? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது:

1. நாம் பாவம் செய்வதால் பாவிகளாக இருக்கிறோமா?

2. அல்லது, நாம் பாவிகளாக இருக்கிறபடியால் பாவம் செய்கிறோமா?

இக்கேள்விகளுக்கு நாம் நமது பரிசுத்த வேதாகமத்திலிருந்தே பதிலை தேட வேண்டும்.

தேடுவோம்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 7:03 am

“ஒரே மனிதனால் பாவம் உலகத்தில் நுழைந்தது”


ரோமர் 5 ஆம் அதிகாரத்தில் பாவத்துக்கும் பாவிக்கும் இடையேயுள்ள உறவைப்பற்றி நாம் அறிந்து கொள்வதற்கான திறவுகோல் காணப்படுகிறது. பாவத்தின் துவக்கத்தைப் பற்றியும், அது எவ்வாறு நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது என்பதைப் பற்றியும் பவுல் கூறுகிறார்.

ரோமர்: 5:12 வசனத்தில் பவுலுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்:

“இப்படியாக ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று”

“உலகம்” என்ற சொல் யோவான்: 3:16 - ஆம் வசனத்தில் நாம் காணும் அதே சொல்லாகும். “...இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. இது “கோஸ்மாஸ்” என்ற கிரேக்க சொல்லிருந்து வந்தது. மானிட இனத்தை இது குறிப்பிடுகிறது.

மனித இனத்தின் தலைவனாக ஆதாம் தன் சொந்தப் பாவத்தால் மனுக்குலத்தையே கறைப்படுத்தி விட்டான் என்று பவுல் கூறுகிறார். பாவத்தின் இந்த பயங்கரமான கறையின் காரணமாக ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான மரணம் இரண்டும் வந்தது.

பவுல் இவ்வாறு இந்த சத்தியத்தை விளக்குகிறார்:

ஆதாமுக்கும் மோசேக்கும் இடைப்பட்ட காலத்தில் எவரும் தங்கள் பாவங்களுக்காகக் குற்றவாளிகள் என்று தீர்க்கப்படவில்லை. ஏனென்றால், அதுவரை நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. என்றாலும், அவர்கள் மரித்துப் போனார்கள். எனவே, அவர்களுடைய மரணம் நேரடியாக அவர்களுடைய பாவத்தின் விளைவாக இருக்க முடியாது. ஏனென்றால், அந்த நியாயத்தீர்ப்பை கொடுப்பதற்கு எந்த நியாயப்பிரமாணமும் இருக்கவில்லை.

எனவே, அவர்களின் மரணம் ஆதாமின் பாவத்தின் விளைவாகவே ஏற்பட்டது என்று பவுல் காரணம் கூறுகிறார். ஆதாம் தேவனுக்கு கீழ்படியாமற் போனபோது, நாம் “ஆதாமில்” இருந்தோம்.

எனவே, நாம் ஆதாமின் இனத்தின் உறுப்பினர்களாக (ஆதாமின் சந்ததிகளாக) இருக்கிறபடியால், அந்த பாவத்தின் தண்டனையை நாம் அனுபவிக்கிறோம். சங்கீதம்: 51:5 - “இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”.

ரோமர்: 5:13,14,17-19 - “நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்பட மாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ் செய்யாதவர்களையும் ஆண்டு கொண்டது... ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன் மூலமாய், மரணம் ஆண்டு கொண்டிருக்க... ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல...” என்று பவுல் கூறுவதை கவனிக்க வ‌ேண்டும்.

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 7:21 am

“ஆதாமில் அனைவரும் பாவம் செய்கிறார்கள்; ஆதாமில் அனைவரும் மரிக்கிறார்கள்”


சத்தியம் தெளிவாக இருக்கிறது: ஆதாமின் பாவத்தின் காரணமாக நாம் அனைவரும் பிறக்கும் போதே பாவிகளாக இரு(பிற)க்கிறோம்.

நாமாகவே செய்யும் எந்தப் பாவக்கிரியைக்கும் அப்பால், நாம் ஆதாமின் பாவத்துக்கும், அவன் பாவ இயல்புக்கும் சுததந்திரவாளிகளாக இருக்கிறோம்.

நாம் ஒரு போதும் பாவம் செய்திரா விட்டாலும், இன்னும் பாவிகளாகவே இருப்போம். ஒருவனின் மீறுதலினால் அனைவர் மீதும் நியாயத் தீர்ப்பு வந்தது. “(ஒரு) மனுஷனால் மரணம் உண்டானபடியால்... ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல...” 1கொரிந்தியர்: 15:21,22).

ஆதாமில் நாம் அனைவரும் பாவம் செய்து விட்டோம்; ஆதாமில் நாம் அனைவரும் மரித்து விட்டோம். “ஆதாமுக்குள்” இருப்பது என்ற கருத்து புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான சத்தியமாகும்.

இதே போல, “கிறிஸ்துவுக்குள்” நமது உறவைக் குறித்தும் இதே சிந்தனை விரிவுபடுத்தப்படுகிறது. நமது இரட்சிப்பின் விடுதலையை (பாவத்திலிருந்து மீட்பு பெறும் வழியை) இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள உதவும் சத்தியங்களில் இதுவும் ஒன்றாகும்.

தொடரும்...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 1:09 pm

அனைவரும் அவசியம் படித்துத் தெளிய வேண்டிய கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள் சார்லஸ்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நாம் ஏன் பாவம் செய்கிறோம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 7:28 pm

“ஆதாமின் அரைக்கச்சை” (Loin)

ஆதாம் பாவம் செய்த போது நாம் அவனுடைய அரையில் (சரீரத்தில்) இருந்தோம். நீங்களும் நானும் வந்த மானிட வித்து துவக்கத்திலிருந்தே ஆதாமில் இருந்தது.

அப்படியானால், ஆதாம் பாவம் செய்தபோது, உங்களுக்கும் எனக்கும் என்ன நேரிட்டது? நாம் பாவிகளானோம்.

“ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல...” (ரோமர்: 5:18) என்று வேத வாக்கியம் கூறுகிறது.

தாவீது இந்த சத்தியத்தை முழுமையாக உணர்ந்திருந்தான். அவன் தனது சங்கீதமொன்றில் இந்த கருத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறான். சங்கீதம்: 51:5 - “இதோ, நான் தூ்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந் தரித்தாள்”. தான் ஒரு பாவியாகப் பிறந்திருப்பதைத் தாவீது அறிக்கையிடுகிறான். ஒவ்வொரு மனிதரும் பாவியாக்கப்படுவது போல, அவன் ஆதாமுக்குள் பாவியாக்கப்பட்டான். தன் பாவங்களின் காரணமாக மட்டுமல்ல, உள்ளான பாவ இயல்பின் காரணமாகவும் தனக்குச் சுத்தமான இருதயமும், புதிய ஆவியும் தேவை என்பதை அவன் உணர்ந்தான்.

ஆம், நாம் ஆதாமுக்குள் இருந்தபடியால், பாவிகளாகவே பிறந்திருக்கிறோம். நமக்கு பாவ இயல்பு இருக்கிறபடியால், நாம் பாவம் செய்கிறோம்.

வாழ்க்கையின் துவக்கத்திலே‌யே இது தன்னைக் காட்டி விடுகிறது. நம்மில் பெற்றோராக இருப்பவர்கள் நமது சொந்த பிள்ளைகளில் இதைப் பார்த்திருக்கிறோம். நாம் பாவம் செய்யும்படி அவர்களுக்கு போதிக்க வேண்டியிருப்பதில்லை. தங்கள் பெற்றோரிடமிருந்து அவர்கள் இயல்பாகவே அதைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தில் நாம் குறுக்கிடும்போது, சிறிய பாவ இயல்பும் மிக வலுவாகவும் கவனிக்கும்படியும் அதிகரிக்கிறது. அவர்களைவிட அந்தப் பாவ இயல்பு வேகமாக வளருவதுபோல தோன்றுகிறது!

இது ஏன் இப்படி இருக்கிறது?

ஏனென்றால், நாம் அனைவரும் நமது முற்பிதாவாகிய ஆதாமைப் பின்பற்றுகிறோம். “ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல...” துவக்கத்திலிருந்தே நாம் அனைவரும் ஆதாமுக்குள் இருந்தோம்.

தொடரும்...






சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 7:31 pm

சிவா wrote:அனைவரும் அவசியம் படித்துத் தெளிய வேண்டிய கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள் சார்லஸ்!

நன்றி திரு.சிவா அவா்களே.

தங்களது ஊக்குவிப்பு என்னை மிகவும் களிகூரப்பண்ணுகிறது.

நன்றி அன்பு மலர்



நாம் ஏன் பாவம் செய்கிறோம்? 154550நாம் ஏன் பாவம் செய்கிறோம்? 154550நாம் ஏன் பாவம் செய்கிறோம்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நாம் ஏன் பாவம் செய்கிறோம்? 154550நாம் ஏன் பாவம் செய்கிறோம்? 154550நாம் ஏன் பாவம் செய்கிறோம்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 9:52 pm

“இயல்பிலேயே பாவிகளாகப் பிறந்தவர்கள்”


ஆம், நாம் அனைவரும் பாவிகளாகவே பிறந்திருக்கிறோம். ஆனால், நீங்கள் பாவம் செய்வதினால் பாவிகளாக இருக்கிறீர்கள் என்பதும் உண்மைதான். இதை நமது அநேகப் பாவங்களினாலும், திரும்ப திரும்ப செய்யும் பாவங்களாலும் நிரூபித்திருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை... எல்லோரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி ...” (ரோமர்: 3:10,23) என்று பரிசுத்த பவுல் மிகத் தெளிவாக கூறுகிறார்.

எனவே, எவராவது நம்மிடம் “நாம் பாவிகளாக இருப்பதால் பாவம் செய்கிறோமா? என்று கேட்டால், நாம் “ஆம்” என்றுதான் பதில் கூற வேண்டும். அதே வேளையில் நாம் பாவம் செய்கிறபடியால் பாவிகளாக இருக்கிறோமா? ” என்று அவர்கள் கேட்டாலும் நாம், “ஆம்” என்றே பதில் கூற வேண்டும்.

இரண்டுமே உண்மைதான். இது அல்லது அது என்பதல்ல. நாம் பாவிகளாகப் பிறந்திருக்கிறோம். நமது அதிகமான பாவங்களின் மூலமாக அதை நிரூபித்தும் இருக்கிறோம்.

எனவே, நாம் இரண்டு வகையிலும் - நமது பாவியான மூதாதையர் (ஆதாம்) மற்றும் நமது பாவகரமான செயல்கள் - நாம் பாவிகளாக நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறோம். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன.

ஆம். நாம் அனைவரும் “இயல்பிலேயே பாவிகளாகப் பிறந்தவர்கள்”. இருப்பினும், சமய நம்பிக்கையுள்ள அநேகர் இன்னும் தங்கள் இரட்சிப்புக்கான (மீட்புக்கான) தேவையை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். தங்களை அவர்கள் பாவிகள் என்று நினைப்பதில்லை.

அவர்கள் நல்ல, நோ்மையான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு சபைக்கோ அல்லது கோவிலுக்கோ ஒழுங்காக செல்லுகிறார்கள். பண உதவியளிக்கிறார்கள். தாங்கள் செலுத்த வேண்டிய தொகைகளை ஒழுங்காக செலுத்துகிறார்கள். அவர்கள் குடிப்பதுமில்லை, சபிப்பதுமில்லை. அவர்கள் பத்து கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறார்கள். தங்கள் சொந்த நீதியின் கிரியைகளால் பரலோகத்திற்கு செல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.

இது ஒரு தவறான எண்ணமாகும். ஏனென்றால், அவர்கள் நினைப்பது சரியல்ல. நாம் அனைவரும் இரண்டு வகைகளில் - பிறப்பு மற்றும் செயல்களின் மூலமாக - பாவிகளாக இருக்கிறோம். இதுவே வரலாறு மற்றும் வாழ்க்கையின் உண்மையாக இருக்கிறது.

நாம் எவ்வளவு நற்கிரியைகள் செய்தாலும், அது நமது பாவ இயல்பை மாற்ற இயலாது. முடியாது. அல்லது, நமது பாவங்களுக்கான தண்டனையை இரத்து செய்ய முடியாது.

நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நம்முடைய “நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது” என்று ஏசாயா: 64:6 ல் வேதாகமம் கூறுகிறது. நமது பாவத்தை மூடிவிட முடியும் என்று நம்பவும் முடியாது. “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே” என்று பவுல் கலாத்தியர்: 2:16 ஆம் வசனத்தில் அறிவிக்கிறார். நாம் தேவ‌னுடைய நியாயப்பிரமாணம் முழுமைக்கும் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருந்தாலும், நம்மை இரட்சிக்க (விடுவிக்க) அது போதாது.

தேவனுடைய பரிசுத்தத்தின் பிரகாசமான வெளிச்சத்தில் நாம் இருக்கிற வண்ணமாகப் பாவிகளாகவே காணப்படுவோம். நாம் ஒருபோதும் நல்லவராக இருக்க முடியும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியாது. தேவனுடைய கிருபையில் மட்டுமே நம்பிக்கை வைக்க முடியும். தேவனுடைய குணப்படுத்துதலை நாம் பெறுவதற்கு முன்பாக, நாம் ஆதாமின் பாவம் மற்றும் நமது சொந்த பாவங்களின் காரணமாக மரணத்துக்க‌ேதுவாக நோய்வாய்ப்பட்டிருக்கிறோம்.

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 10:54 pm

“பாவத்திற்கான தண்டனை மரணமாகும்! எந்த விதி விலக்கும் கிடையாது”


பாவத்தின் நிலை உலகளாவியது. எங்குமுள்ள எவரும் பாவிகளே! மேலும், பாவத்திற்கான தண்டனையும் உலகளாவியதாகும். அனைவரும் பாவத்தின் காரணமாக மரிக்க வேண்டியவர்களே! “எல்லோரும் பாவம் செய்து... பாவத்தின் சம்பளம் (தண்டனை) மரணம்” (ரோமர்: 3:23; 6:23).

ஒவ்வொரு மனிதனும் மரண தண்டனைக்குட்பட்டவனாக இருக்கிறான் என்று வேதம் விவரிக்கிறது. தேவனுடைய கிருபைக்கு அப்பால் எவருக்கும் விதி விலக்கு கிடையாது. துவக்கத்திலிருந்தே பாவத்துக்கான தண்டனையில் மாற்றமில்லை. கீழ்ப்படியாவிட்டால் மரணம் என்று தேவன் ஆதாமுக்கு ஏவாளுக்கும் உறுதியான தெளிவான ஒரு எச்சரிப்பைக் கொடுத்திருந்தார்.

“ஆனாலும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வ‌ேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம்: 2:17).

எசேக்கியேல் தீர்க்கதரிசியும் பாவத்துக்கான மரணதண்டனையை எளிய, ஆனால், உறுதியான வார்த்தைகளில் உறுதிப்படுத்துகிறார். “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக்கியேல்:18:4,20). வேறெதுவும் இதை விட நிச்சயமாக இருக்க முடியாது. பாவத்தின் சம்பளம், பின் விளைவு மரணமே.

இயல்பினாலும், செயல்களினாலும் நாம் பாவிகளாக இருக்கிறோம். தேவனுடைய வழிகளை விட்டு நமது சொந்த வழியில் செல்லுவதை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

“நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழி தப்பி திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்” (ஏசாயா: 53:6).

நமது சொந்த சித்தத்தை செய்து, நமது சொந்த வழியில் போனதின் விளைவு என்ன?

“மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” (நீதிமொழிகள்: 14:12).

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 11:22 pm

“ஓர் இருண்ட எதிர்காலம்”


மனிதனின் வழி - ஒரு முடிந்து விட்ட சந்தாகும் (Dead End). வேறெந்த வகையிலும் அது இருக்க முடியாது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசுவானவர் கூறியிருக்கிறார்.(யோவான்: 14:6).

பிதாவானவரின் சித்தமும், வாழ்வுக்கான வழியும் குமாரனை மையமாகக் கொண்டிருக்கிறது. வேறெந்த வழியும் மரணத்தை நோக்கியே வழி நடத்துகிறது.

நாம் தேவனுக்கு கீழ்ப்படியாமல் நமது சொந்த வழியில் செல்லுவதைத் தெரிந்து கொள்ளும்போது, அது ஒரேயொரு திசையில் மட்டுமே - அழிவை நோக்கியே நம்மைக் கொண்டு சோ்க்கும்.

“பாவம்” - என்பதை தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக செய்வது நமது சொந்த வழியில் செல்லுவது என்று கூறலாம். அதன் இயல்பின் காரணமாக, கீழ்ப்படியாமை மரணத்தை நோக்கி மட்டுமே நம்மை வழி நடத்தும்.

நாம் அனைவரும் விரும்பி தவறான பாதையைத் தெரிந்து கொண்டிருக்கிறோம். நாம் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருப்பது “ஆதாமுக்குள்” தெரிந்து கொண்டதிலிருந்து துவங்கியது.

நாம் அந்த தெரிந்து கொள்ளுதலினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி நமது சொந்த கீழ்ப்படியாமையின் செயல்களின் மூலமாக அதை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். தேவனும் அவருடைய கிருபையும் இல்லாமல், நாம் இந்த உலகத்தில் நம்பிக்கையிழந்து போனவர்களாக இருக்கிறோம். மரணமே நமது இறுதி முடிவாக இருக்கிறது.

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 11:32 pm

“தப்பிக்க நமக்கு ஒரே வழி”


இந்த முடிவிலிருந்து நாம் தப்பிக்க ஒரே வழிதான் இருக்கிறது. பாவமற்ற ஒருவர் நமது பாவத்திற்கான தண்டனையைச் செலுத்தித் தீர்க்க வேண்டும்.

தேவன் ஏற்கனவே, இதை நமக்காக செய்திருக்கிறார் - நமது பாவங்கள் அனைத்தின் குற்றப்பழியையும் தாமே ஏற்று, சிலுவையில் நம்முடைய இடத்தில் மரிக்கும் படி தமது ஒரே பேறான குமாரனை (இயேசுவை) அனுப்பியதன் மூலம் அவர் இதைச் செய்திருக்கிறார்.

தொடரும்...



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக