புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
91 Posts - 67%
heezulia
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
3 Posts - 2%
prajai
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
3 Posts - 2%
Barushree
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
1 Post - 1%
nahoor
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
145 Posts - 74%
heezulia
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
8 Posts - 4%
prajai
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
3 Posts - 2%
Barushree
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
2 Posts - 1%
nahoor
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_m10வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1

rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Postrathnavel Thu Jun 07, 2012 7:38 am

பேராசிரியர் திருமதி மோகனா அவர்களின் வெள்ளி மறைப்பு நிகழ்வு – பாகம் 1 – கட்டுரையை அவர்களின் அனுமதியின் இன்று பதிவாக வெளியிட்டிருக்கிறேன். பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வ நன்றிகளும் வாழ்த்துகளும்.

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள்..!.. Historical episodes of transit of venus..! ..PART I
--பேரா.சோ. மோகனா

வெள்ளி மறைப்பு என்றால் என்ன?
வானில் வளைய வரும் வான் பொருட்களான சூரியன், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் போன்றவை ஒன்றை ஒன்று தொட்டு விளையாடுகின்றன. அவற்றின் உருவம் பெரிதாக இருந்து, ஒன்றை ஒன்று முழுமையாக மறைத்தால், அது கிரகணம். மறைக்க முயலும்/சூரிய பிம்பத்துக்குள் வரும் பொருள் சிறிதாக இருந்தால், அதனை மறைப்பு என்கிறோம்.

வெள்ளி மறைப்பு என்பது கிட்டத்தட்ட சூரிய கிரகணம் போலத்தான். எப்படி சூரிய கிரகணத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வருகிறதோ, அது போலவே, வெள்ளி மறைப்பில், இதில் வெள்ளி சின்ன கரும்புள்ளியாக சூரியனின் ஒரு ஓரத்தில் குறுக்கு மூலை பாய்ந்து ஓடும். இதனை நாம் பார்க்க முடியும். மறைப்பு என்பது குறைந்தது 6 மணி நேரம் நடைபெறும்.. வெள்ளி மறைப்பு என்பது சிறிய கடுகு ஒரு பெரிய தட்டின் ஓரத்தில் மெதுவாக ஓடுவதைப் போலிருக்கும். இந்த வெள்ளி மறைப்பை கவனித்ததின் மூலமாகத்தான், இடமாறு தோற்றப்பிழை கருத்தின் அடிப்படையிலேயே விஞ்ஞானிகள், சூரியனுக்கும், பூமிக்கு இடையிலுள்ள தொலைவைக் கணிக்கப் பயன்படுத்தினர்

வெள்ளி யார்..?

வெள்ளி சூரியனை இரண்டாம் இடத்திலும், பூமி மூன்றாம் இடத்திலும் இருந்து சுற்றுகின்றன. இவை இரண்டும் அளவு, ஈர்ப்புத்தன்மை, வேதிப்பொருட்கள், மற்றும் உருவம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட சம அளவுள்ளவை. எனவே வெள்ளியை பூமியின் சகோதரி என்றும் குறிப்பிடுவதுண்டு. வெள்ளிக்கு துணைக் கோள் கிடையாது.

வெள்ளி கோள் ரோமானிய நாட்டில், அழகு தேவதை , அன்பின் கடவுள், உற்பத்திக் கடவுள், வளமைக் கடவுள், வெற்றிக் கடவுள் என்று அழைக்கப்படுகிறது. மேற்கில் உதித்து, கிழக்கில் மறையும் ஒரே கோள் வெள்ளி மட்டுமே. இதன் நடுக்கோட்டில் சுற்று வேகம், மணிக்கு 6.5 கி.மீ . ஆனால் பூமியில் நில நடுக்கோட்டின் சுற்று வேகம், மணிக்கு 1,670 5 கி.மீ .இதன் நிறை பூமியைப்போல 0.815 மடங்கு ((0.815 Earth masses), பூமிக்கும் மட்டுமே. சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் (ஒரு வானவியல் அலகு) போல, இது சூரியனிலிருந்து 0.7 வானவியல் அலகு தொலைவில் உள்ளது. வெள்ளியின் விட்டம், 12,092 கி.மீ. வெள்ளியின் மையத்தில் சுமார் 3,000 கி.மீ ஆரத்துக்கு இரும்பும், (Venus has an iron core about 3,000 kilometers, in radius.) சிலிகேட்டும் உள்ளது. இதன் வளிமண்டலம், பூமியை விட 90 மடங்கு மிகவும் அடர்வாக உள்ளது. வெள்ளியின் மேற்பரப்பு எரிமலைப் பாறைகளால் ஆனது. வளிமண்டலத்தில் 96.5% கரியுமிலவாயுவே உள்ளது. மீதி 3.5% நைட்டிரஜன். சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் வெள்ளிதான்.

ஆண்டைவிட அதிக காலம் கொண்ட நாள்..!

வெள்ளியின் விட்டம் 12,092 கி.மீ. (650 km less than the Earth's) /0.949 9 Earths ) சந்திரனை (3476 km /(0.273 Earths )/விட 4 மடங்கு அதிகம். ஆனால் வெள்ளி சந்திரனை விட மிகத் தொலைவில் (356400 - 406700 கி.மீ) உள்ளதால் பார்வைக்குச் சிறியதாகத் தெரிகிறது. மேலும் வெள்ளி மிக மிக மெதுவாகவே பயணிக்கும். சூரிய குடும்பத்தில் மெதுவாக நகரும் கோள் இதுதான். இதன் ஒரு நாள் என்பது 244 பூமி நாட்கள். அதாவது தன்னைதானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 244 நாட்கள் ஆகின்றன. ஆனால் சூரியனை ஒரு கோள் சுற்றி வரும் காலம் என்பதே ஓர் ஆண்டும். இங்கே வெள்ளி சூரியனைச் சுற்றிவர 224.7 பூமி நாட்கள் ஆகின்றன. எனவே வெள்ளியின் ஒரு நாள் என்பது ஓர் ஆண்டைவிட அதிகம். வெள்ளிக் கோளில், பகல் நேரம் 122 நாட்கள்; அதன் இரவும் 122 நாட்கள். எனவே இதன் ஒரு வருடம் என்பது ஒரு நாளைவிட அதிகம்.

எப்போது வெள்ளி மறைப்பு நிகழும்?

வெள்ளி மறைப்பு என்பது அறிவியலில் கணிக்கப்படும் வானவியல் நிகழ்வுகளில் மிகவும் அரிதானதும் அற்புதமானதும் கூட. வெள்ளி கோள் சூரியனை, 224.7 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. 584 நாட்களுக்கு ஒரு முறை, பூமிக்கு அண்மையில் வெள்ளி வருகிறது. இருப்பினும் எல்லாக் காலங்களிலும், சூரியனில் வெள்ளி கோள் மறைப்பு ஏற்படுவதில்லை. இது வெகு அரிதானது. வெள்ளியின் பாதை 3.4 டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. இப் பாதை பூமி சூரியனை வலம் வரும் தளத்தினை ஜூன் முதல் வாரத்திலும் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரத்திலும் கடக்கும். அப்போது வெள்ளி மறைப்பு நடக்கும். 243 ஆண்டுகளில் வெள்ளி இடைமறிப்பு, 8 ஆண்டு இடைவெளியில் ஜோடியாக ஏற்படும். அடுத்த ஜோடி இடை மறிப்பு, 121.5 ஆண்டு காலம் அல்லது 105.5 ஆண்டு கால இடைவெளியில் ஏற்படும் இந்த நிகழ்வு ஒவ்வொரு 243 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சுழற்சி. இதில் ஒவ்வொரு 8 ஆண்டுக்கு ஒரு முறையும் ஜோடி வெள்ளி மறைப்புகள் வரும். இந்த இரட்டை வெள்ளி மறைப்பு என்பது நீண்ட இடைவெளியில் அதாவது 121 .5 ஆண்டுகள் மற்றும் 105 .5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நிகழ்கிறது. இப்போது 2012, ஜூன் 6 ம் நாள் வெள்ளி மறைப்பு/இடை நகர்வு நிகழ்வுள்ளது. இது போலவே ஒரு வெள்ளி மறைப்பு 2004 , ஜூன் 8 ம் நாள் ஒன்று நிகழ்ந்தது. இதற்கு முன், இது போல ஜோடி வெள்ளி மறைப்புகள், 1874 , டிசம்பர் மற்றும் 1882 டிசம்பரில் ஏற்பட்டன.. அடுத்து இனி 2012 க்குப் பிறகு, இதைப் போன்ற ஜோடி வெள்ளி மறைப்புகள் , 2117 டிசம்பர் 10 மற்றும் 2125 டிசம்பர் 8 ம் நாள் வந்து போகும். எனவே இதனைக் கணக்கிட்டால் ஆயிரம் ஆண்டுகளில் சராசரியாக 14-18 முறை வெள்ளி மறைப்பு நிகழும். ஆனால், புதன் மறைப்பு என்பது 100 ஆண்டுகளில் 13-14 வருகை புரிகிறது.

During the six millennium period 2000 BCE to 4000 CE1, Earth experiences 81 transits of Venus across the Sun. These events can be organized into two groups:

All Transits = 81 = 100.0%
June (Descending Node2) = 44 = 54.3 % December (Ascending Node3) = 37 = 45.7 %
When a transit of Venus occurs, a second one often follows eight years later. This is because the orbital periods of Venus (224.701 days) and Earth (365.256 days) are in an 8 year (2922 days) resonance with each other. In other words, in the time it takes Earth to orbit the Sun eight times, Venus completes almost exactly thirteen revolutions about the Sun. As a result, Venus and Earth line up in the same positions with respect to the Sun. Actually the two orbital periods are not quite commensurate with each other since Venus arrives at the eight year rendezvous about 2.45 days earlier that Earth. After the third eight-year cycle, Venus arrives too early for a transit to occur.

The next transit season occurs either 105.5 years or 121.5 years later at the opposite node of Venus' orbit. Once again, a pair of transits will often occur separated by eight years. This recurrence pattern of 8 + 105.5 + 8 + 121.5 years can be seen repeating itself in the catalog of Venus transits. An example of the pattern can be seen in the transits of 1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 and 2012. Occasionally, one of the eight year "double-transits" may disappear from the catalog for several centuries because one of them is a near miss. For instance, note the "missing" transits of 1388, 1145, 0902, 0659, 0416, etc..

மனித இனம் எப்போதிலிருந்து வானைக் கவனித்தது?

மனிதன் தோன்றியது முதல் வானைக் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறான். வானின் பொருள்கள் அவனுக்கு அதிசயமாகவே இருந்தன. அவனுக்கு சூரியன் என்றோ சந்திரன் என்றோ பெயர் எதுவும் தெரியாது. அதே போல மாலை/காலை வேளைகளில் வானில் பளிச்சென்று ஒளி வீசும் ஒரு பொருள் வெள்ளி என்றும் தெரியாது. ஆனால் இவைகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறான். பார்த்த விஷயங்களைப் பதிவும் செய்து வைத்திருக்கிறான். பழங்கால இந்தியர்கள், கிரேக்கர்கள், பாபிலோனியர்கள் மற்றும் சீன வான் நோக்காளர்கள் இந்த வெள்ளி பற்றி அறிந்ததுடன், அதன் நகர்வு பற்றியும் பதிவு செய்துள்ளனர். காலையிலும், மாலையிலும் தெரியும் வெள்ளிக் கோளை விண்மீன் என்று நினைத்தனர். அதனால் மாலையில் தெரியும் விண்மீனுக்கு/வெள்ளி கோளுக்கு Hesperus என்றும், காலையில் காணப்படும் விண்மீன்/வெள்ளிக் கோளுக்கு Eosphorus என்றும் பெயரிட்டனர்.

காலையிலும்,மாலையிலும் தெரிவது ஒரே கோள்தான் என்ற உண்மையை துல்லியமாய் கணித்த பெருமை கணிதமேதையும், தத்துவஞானியும், வானவியலாளருமான பித்தாகரசுக்கே போய்ச்சேரும்.

வெள்ளிக் கோள்/சூரிய கிரகணம் எப்போதிலிருந்து பார்க்கப்பட்டது?

குறிப்பிட்ட பழங்கால நாகரிகங்களில் இந்த வெள்ளியின் மறைப்பு வந்து போனது பற்றி எதுவும் குறிப்பிட்டதற்கான சான்றுகளே இல்லை. ஆனால் ஆதிகால அமெரிக்க நாகரிகங்களில் குறிப்பாக மாயன் நாகரிகத்தில் வெள்ளியைப் பற்றி சிறப்பாக பெரிய விண்மீன் மற்றும் வண்டு விண்மீன்(Wasp Star) என்று குறிப்பிடுகின்றனர். வெள்ளியை அவர்கள் குல்குல்கன் (Kukulkán) கடவுள் என்றும் அழைக்கின்றனர். மெக்சிகோவின் மற்ற பகுதிகளில் வெள்ளியை குகுமாட்ஸ் (Gukumatz) & க்வெட்ஸால்கோயட்ல் (Quetzalcoatl ) என்றும் சொல்லப் படுகின்றது. டிரெஸ்டன் விதிகள் என்ற மாயன்களின் புத்தகத்தில் மாயன்கள் வெள்ளியின் முழு சுழற்சி (cycle of venus) பற்றியும் அட்டவணைப் படுத்தியும் இருக்கின்றனர். அஸ்டெக் நாகரிகத்தில் மாண்டிசூமா (Montezume) சூரியன் பற்றிப் பதிவும், வெள்ளியின் வரவுகளை மிகத் துல்லியமாகக் கூறியுள்ளனர். அந்த தலைவர் மாண்டிசூமா, 1518, மே 25 ல், வந்த வெள்ளி மறைப்பைப் பார்த்திருக்க வேண்டும் என்றே கணிக்கின்றனர். அஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்களில் சூரியன் மற்றும் சூரிய கிரகணம் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. வானவியல் நிகழ்வுகளைக் கண்டறிந்த போதுதான், கணிதம் மூலம் கோள்களின் சுற்றுப்பாதை பற்றி விவரித்தனர். பின் கோள்கள் சூரிய விட்டம், வட்டத்தில் நுழைவதைப் பற்றி ஆராய்ந்தனர். முதல் சூரியப் புள்ளியை தொலை நோக்கி கண்டுபிடிக்கு முன், இங்கிலாந்தில் வோர்ஷ்டர்ஷிரின் சகோதரர், பிரியர் பிரதர் ஜன என்பவர் 1128, டிசம்பர் 8ம் நாள் பார்த்தார்.

பாபிலோனும் வெள்ளி மறைப்பும்..!

பாபிலோனியர்கள் வானவியல் பற்றிய பழமையான பதிவுகளைச் செய்து வைத்துள்ளவர்கள். பாபிலோனியர்கள் காலத்தில் 4 வெள்ளி மறைப்புகள் வந்துள்ளன. மே 20, கி.மு, 1641, நவம்பர் 20, கி.மு. 1520, நவம்பர் 18, கி.மு. 1512, மே 23, கி.மு. 1426 என அவர்களின் ஆட்சிக்காலத்தில் வெள்ளி மறைப்புகள் வந்துள்ளன. இவற்றைப் பார்த்தார்களா, இல்லையா என்பதும் தெரியவில்லை. ராயல் வானவியல் கழகத்தின் ஒரு பிரிட்டிஷ் பத்திரிக்கையில் ஜான்சன் என்பவர் ஆசிரியர்கள் வெள்ளி மறைப்பைப் பார்த்தார்கள் என்றே குறிப்பிடுகிறார். ரெவரெண்ட் சாய்ச் என்பவரும், ஆசிரியர்களின் உடைந்த குயூனிபாரம் களிமண் பலகை உடைந்து கிடைத்தது என்றும், அதில் உடைந்த இடத்தில், ”வெள்ளிக் கோள் கடந்து சென்றது, சூரியனை சூரியன் முகத்தைக் கடந்தது” என்று கூறுகிறார். இதிலிருந்து பாபிலோனியர்கள் கி.மு 1520 களில் சூரியனும், வெள்ளியும் அருகில் வந்ததைப் பார்த்து பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் பாபிலோனியர்களின் வானவியல் பதிவுகளைப் படித்த ஹென்றியும், ஜார்ஜ் ஸ்மித்தும், வெள்ளி நகர்வு பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் பாபிலோனியர்களின் பதிவில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

வெள்ளி மறைப்புக் காணுவதன் முக்கியத்துவம் என்ன?

வெள்ளி மறைப்பு என்பது ஓர் அரிதான வானியல் நிகழ்வு, வெள்ளி நகர்வினால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை இடமாறு தோற்றப்பிழை மூலமும், கெப்ளரின் மூன்றாம் விதி மூலமும் அறிவது என்ற ஒரே குறிக்கோள் தான் இருந்தது. இதிலுள்ள யுக்தி என்னவென்றால், வெள்ளிக் கோள் சூரிய பிம்பத்தில் நுழையத்துவங்கும் நேரத்தையும், அதிலிருந்து வெளியேறும் நேரத்தையும் கணக்கிட்டு, அதிலுள்ள மிக மெலிதான நேர வேறுபாட்டைத் துல்லியமாக அறிந்து, பூமியின் மேற்பரப்பிலிருந்து இவை எவ்வாறு பிரிந்துள்ளன என்பதை அறிவதே. வடிவியல் மூலம் சாய்கோணம் அறிந்து அதன் வழியே நூலேணியில் ஏறுவது போன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலுள்ள தூரத்தை துல்லியமாக அளப்பது தான்.

ஐரோப்பாவில் காணப்பட்ட வெள்ளி மறைப்பு நிகழ்வு..!

நிகோலஸ் கோபர்நிகஸ் (Nicolus Copernicus , 1473 -1543) என்ற போலந்து நாட்டு வானவியலாளார் வெள்ளி மறைப்பு பார்த்திருக்கிறார். ஆனால் அதனை அவர் பதிவு செய்யவில்லை. பிறகு மற்றொரு வெள்ளி மறைப்பு நிகழ்வு 1526 ல் வந்திருக்கிறது. அதனையும் கூட கோபர்நிகஸ் பதிவு செய்யாமால், போலந்து அரசனுக்கு வரைபடம் போட்டுக் கொடுப்பதிலேயே தன் காலத்தைக் கழித்திருக்கிறார். பிறகு ஜெர்மானிய வானவியலாளர் ஜோஹான்னஸ் கெப்ளர், 1631 , நவம்பர் 7 ம் நாள் புதன் மறைப்பு சூரியனில் நிகழும் என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து அடுத்து டிசம்பர் மாதம் வெள்ளி மறைப்பு வரும் என்றார். ஆனால் 1631 ஏற்பட்ட வெள்ளி மறைப்பினை யாரும் பார்த்ததாக பதிவு செய்யப்படவில்லை. காரணம் என்னவெனில், அன்று ஐரோப்பா முழுமைக்கும் பெரிய சூறாவளி வீசி, சூரியனைக் காணமுடியாமல் மறைத்துவிட்டது. ஆனால் அடுத்த வெள்ளி மறைப்பு 1756 ல் வரும் எனத் தவறாகக் கணித்தார் கெப்ளர்.

இருபது வயதில் வெள்ளி மறைப்பு ரசித்த ஜெரேமையா ஹோரோக்ஸ்..!

சூரியனிலிருந்து ஒவ்வொரு கோளும் எத்தனை தொலைவில் உள்ளது என 17 ம் நூற்றாண்டு வானவியலாளர்கள் கணக்கிட்டனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் ஒரு வானவியல் அலகு (an astronomical unit) என்றும் அறியப்பட்டு கணக்கிடப்பட்டது. வெள்ளி மறைப்பை முதன் முதல் பார்த்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஜெரேமையா ஹோரோக்ஸ் (Jeremiah Horrocks) என்ற இருபதே வயது நிரம்பிய இங்கிலாந்தின் இளம் விஞ்ஞானிதான். இவர் இங்கிலாந்தில் உள்ள பிரிச்டனுக்கு(Preston in England) அருகிலுள்ள மூச் ஹூல் (Carr House in Much Hoole) என்னும் ஊரிலுள்ள அவரது வீட்டிலிருந்து 1639 , டிசம்பர் 4 ம் நாள் வெள்ளி மறைப்பைக் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அவரது நண்பர் வில்லியம் கிராப் த்ரீ ( William Crabtree) இதே வெள்ளி மறைப்பை மான்செஸ்டருக்கருகில் பொரௌக்டனில் ( Broughton, near Manchester) கண்டு களித்தார். ஆனால் இதில் ஒரு துரதிருஷ்டம் நிகழ்ந்தது. என்ன தெரியுமா? 1631 ல் வருகை தரப்போகும் வெள்ளி மறைப்பையும், 1761 ல் தெரியப்பட இருக்கும் வெள்ளி மறைப்பையும் கணித்துச் சொன்ன ஜோஹான்னஸ் கெப்ளர், 1639 ல் வரப்போகிற வெள்ளி மறைப்பை எப்படியோ கணிக்கத் தவறி விட்டார். ஜெரேமையா ஹோரோக்ஸ், கெப்ளரின் வெள்ளி மறைப்பு பற்றிய கணக்கீட்டை சரி செய்தார். அவரே, இந்த வெள்ளி மறைப்பு 121 ஆண்டுகளுக்கிடையிலும் , ஒரு முறை ஜோடி மறைப்புகளாக 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து குதிக்கிறதே என்றும் பல கணக்குகள் போட்டு எப்படியோ மண்டையைக் குடைந்து கண்டறிந்து சொன்னார். ஹோரோக்ஸ்தான் ஆங்கிலேய வானவியல் விஞ்ஞானிகளின் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

வில்லியம் கிராப்த்ரீ:

FMB Mural Crabtree Watching The Transit Of Venus File Name : DSC_0340.TIF File Size : 17.0MB (17774746 bytes) Date Taken : Wed, Feb 4, 2004 3:46:25 pm Image Size : 3008 x 1960 pixels Resolution : 300 x 300 dpi Bit Depth : 8 bits/channel Protection Attribute : Off Camera ID : N/A Camera : NIKON D1X Quality Mode : HI (RGB Uncompressed) Metering Mode : Matrix Exposure Mode : Manual Speed Light : No Focal Length : 32.0 mm Shutter Speed : 1/4 seconds Aperture : F5.6 Exposure Compensation : 0.0 EV White Balance : Incandescent Lens : 28-105 mm F3.5-F4.5 Flash Sync Mode : N/A Exposure Difference : +0.5 EV Flexible Program : No Sensitivity : ISO250 Sharpening : Normal Image Type : Color Color Mode : Mode I (sRGB) Hue Adjustment : 3 Saturation Control : N/A Tone Compensation : Normal Latitude(GPS) : N/A Longitude(GPS) : N/A Altitude(GPS) : N/A Manchester City Council

பிட்டர்ஸ்பர்க் (Petersburg ) வானோக்கத்திலிருந்து 1761 ல் வெள்ளி மறைப்பைப் பார்த்ததின் அடிப்படையில் மிக்கைல் லோமொனோசொவ் (Mikhail Lomonosov ) என்ற விஞ்ஞானி , வெள்ளிக் கோளில் வளிமண்டலம் இருப்பதை உறுதி செய்தார். மேலும் வெள்ளி மறைப்பின் போது நிகழ்ந்த சூரியக்கதிர்களின் ஒளி விலகலினால் வெள்ளியின் பகுதியும், அதன் மேல் வளையமான வளிமண்டலமும் தெரிந்தன. பின்னர் 1769 ல் நடைபெற்ற வெள்ளி மறைப்பில், கனடாவிலுள்ள ஹட்சன் வளைகுடா, பாசா கலிபோர்னியா மற்றும் நார்வே பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்து வெள்ளி மறைப்பைப் பார்த்தனர். அது மட்டுமல்ல, முதல் கப்பல் பயணம் செய்த கேப்டன் குக்கும்(Captain Lieutenant James Cook) கூட தஹிதியிலிருந்து (Tahiti ), அவருடன் HMS Endeavour கப்பலில் பயணித்த சார்லஸ் கிரீனுடன் சேர்ந்து (Charles Green) வெள்ளி மறைப்பைப் பார்த்தார். குக் பார்த்த இடம் இன்றும் கூட, வெள்ளியின் முனை ("Point Venus") என்றே அழைக்கப்பட்டு, அங்கே அதன் அடையாளச் சின்னமாக ஒரு தூண் வைக்கப்பட்டுள்ளது. அப்போதே, செக்கோஸ்லோவாக்கிய விஞ்ஞானி கிறிஸ்டியன் மேயர் கேத்தேரினால் அழைக்கப்பட்டு, செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் அன்டெர்ஸ் ஜொஹான் லேக்செல், ருஷ்ய அறிவியல் கழக உறுப்பினர்கள் போன்றோர் மேலும் 8 இடங்களுக்கு சென்று வெள்ளி மறைப்பைப் பார்த்தனர். பிலடெல்பியாவிலும், வெள்ளி மறைப்பைக் காண மூன்று தாற்காலிக வானோக்கு இடங்களும், மற்றும் இதனைப் பார்வையிட டேவிட் ரிட்டன்ஹௌஸ் தலைமையில் ஒரு குழுவும் இதற்காக அமைக்கப்பட்டு வெள்ளி மறைப்பைப் பார்க்க பிரமாதமான ஏற்பாடு செய்யப் பட்டது. இந்தப் பார்வையாளர்களின் கருத்துக்கள், பதிவுகள், தகவல்கள், முடிவுகள் போன்றவை 1771 ல் தான் முதன் முதல் அச்சில் ஒரு தொகுப்பாக வந்தன; சாதாரண மக்களுக்கும் வெள்ளி மறைப்பு பற்றி அறிந்து கொண்டனர்.

வெள்ளி மறைப்பைப் பார்த்த முதல் மன்னர் மூன்றாம் ஜார்ஜ்..!

ரிச்மன்ட் என்ற இடத்திலுள்ள ராயல் வான் நோக்ககம், சர் வில்லியம் சாம்பர்ஸ் என்பவரால் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்காக வடிவமைக்கப்பட்டது. மன்னர் அறிவியலின் பல விஷயங்களிலும் குறிப்பாக வானவியலிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் தான் அரச குடும்பத்தில் உள்ளவர்களில், 1769 ல் வந்த வெள்ளி மறைப்பைப் பார்த்து பரவசப்பட்டவர். அதன் பின் மன்னரும், அவரது அரச குடும்பமும் வெள்ளி மறைப்பு பற்றி விரிவாக தகவல் எழுதி வைத்தனர். அப்போது தொலை நோக்கியும், கடிகாரமும் இருந்ததால் 1769 ல் வந்த வெள்ளி மறைப்பைப் பற்றி நல்ல பதிவினைச் செய்தனர். அரச குடும்ப வான் நோக்ககம் மூடிவிட்டதால் ஆர்மாக் வான்நோக்ககத்திற்கு விக்டோரியா மகாராணி 1840 ல், 1769 ல் வந்த வெள்ளி மறைப்பை எழுதித் தந்தார்.

வெள்ளி மறைப்பும், சோக சித்திரமான கெல்லாமே லே ஜென்டிலும் ..!

கெல்லாமே லே ஜென்டில் என்ற பிரெஞ்சு விஞ்ஞானியின் முழுப்பெயர் Guillaume Joseph Hyacinthe Jean-Baptiste Le Gentil de la Galaisière (September 12, 1725 – Paris, October 22, 1792). அவர் வெள்ளி மறைப்பைப் பார்க்க சுமார் 8 ஆண்டுகள் கப்பலில் பயணம் செய்தார். அவர் வான நிகழ்வைப் பார்த்தாரோ இல்லையோ, நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்தார் விஞ்ஞானி ஜென்டில். 1760 மார்ச்சில் பாரிசிலிருந்து புறப்பட்டு ஜூலை மாதம் மொரீஷியஸ் தீவை அடைந்தார்; பின் பாண்டிச்சேரி போனார். 1761 ல் மீண்டும் பயணம். ஆனால் அப்போது பிரிட்டிஷ்காரர்கள் பாண்டியைப் பிடிக்க, பிரான்ஸ் நோக்கியே வந்தனர். அப்போதும் ஜூன் 6 ம் நாள் வெள்ளி மறைப்பு வந்தது. அப்போது வானம் நிர்மலமாய், மேகமின்றி சூரியப் பிரகாசத்துடன் காணப்பட்டது. ஆனால் அவர் வைத்திருந்த பாத்திரம் அப்போது உருண்டதால் அதிலேயே கருத்தினை சிதறவிட்டு, வானியல் தகவல்களை எடுக்க முடியவில்லை. அதனால் ஜென்டில் அடுத்த 8 ஆண்டுகளில் வரவுள்ள வெள்ளி மறைப்பு வரை காத்திருந்து அதைப் பற்றி தகவல் சேகரிக்க எண்ணினார். ஆனால் நிகழ்ந்ததோ வேறு? விஞ்ஞானி ஜென்டில் மடகாஸ்கரில் தங்கி இருந்து, 1769 ம் ஆண்டின் வெள்ளி மறைப்பை பிலிப்பைன்சின் மணிலாவிலிருந்து பதிவு செய்ய திட்டமிட்டார். ஸ்பானிஷ்ய பிரச்சினையினால், மீண்டும் பாண்டிச்சேரி செல்ல நேர்ந்தது. 1769 ஜூன் 4 ம் தேதி நிகழவுள்ள வெள்ளி மறைப்பு காண்பதற்காக அங்கே சின்ன வானோக்ககம் அமைத்தார். 1769, ஜூன் 4 ம் நாள் காலை முழுவதும் வானம் பளிச்சென்று துடைத்துவிட்டது போன்று இருந்தது. ஆனால் அன்று திடீரென்று வானம் மக்கர் செய்துவிட்டது. ஜென்டிலால் எதனையும் பார்க்க முடியவில்லை. தனது துரதிருஷ்டம் எண்ணி மனம் நொந்து பிரான்ஸ் செல்ல முடிவு செய்தார். பயணத்தின் முதல் நாள் அவருக்கு வயிற்றுப்போக்கு. எனவே பயணம் தள்ளிப்போனது. பின்னர் அவரது கப்பல் புயலால் போர்பனில் மாட்டிக் கொண்டது. அங்கேயே ஸ்பானிஷ் கப்பல் வரும்வரை காத்திருந்தார். முடிவாக ஜெண்டில் 1771, அக்டோபரில் பாரிசுக்கு திரும்பினார், ஆனால் அங்கே ஜென்டில் சட்டப்படி இறந்தவராக அறிவிக்கப்பட்டிருந்தார். என்ன கொடுமை..! அவரது மனைவியும் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து, மறுமணம் செய்து கொண்டார். அதன்பின் ஜெண்டில் வெகுவாக முயற்சி செய்து அறிவியலின் ராயல் கழகத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் ஜென்டில் அங்கேயே மறுமணம் செய்து கொண்டு, அடுத்து 21 ஆண்டுகள் வரை உயிருடன் வாழ்ந்த பின்னரே உயிர் நீத்தார். ஆனால் ஆயுளில் அவர் 8 ஆண்டுகள் வெள்ளி மறைப்பைப் பார்க்க முயற்சித்தும், அதனைக் காணாமலேயே போன துரதிருஷ்டக்காரர் ஜென்டில்தான். அவரை மையமாக வைத்து வெள்ளி மறைப்பு என்ற படம் மௌரீன் ஹன்டர் என்ற கனடா நாட்டுக்காரரால் எடுக்கப்பட்டு, 1992 ல் வெளியிடப்பட்டது.

வெள்ளி மறைப்பும், கருப்பு பின்புல விளைவும்..!

ஜெரோம் லலாண்டி என்ற பிரெஞ்சு விஞ்ஞானி 1761 & 1769 ஆண்டுகளின் வெள்ளி மறைப்பு பதிவுகளைக் கொண்டு, ஆய்வு செய்து ஒரு வானியல் அலகின் தொலைவு 15 . 3 கோடி கி,மீ (±1 மில்லியன் கி.மீ) என 1771 ல் கணித்தார். இதன் துல்லியத் தன்மை என்பது அதன் வளிமண்டலத்தால் தெரியும் கருப்பு பின்புல விளைவால் (Black back drop) கொஞ்சம் குறைவாகவே உள்ளது. ஆனால் பின்னர் வந்த ஹாரோக்ஸ் கணக்குப்படி கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தது. 1769 ல் பெஞ்சமின் பிராங்க்ளினும் வெள்ளி மறைப்பை அமெரிக்காவிலிருந்து பார்த்த்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி மறைப்பில் பிரெஞ்சு விஞ்ஞானி ஜீனின் வேதனைகள்.!

பிரெஞ்சு கடல் பயணத்தை மேற்கொண்ட, ஜீன் சாபி டி ஆடோடோக் தலைமையிலான குழு ஒன்று 1761 ல் நிகழவுள்ள வெள்ளி மறைப்பினைக் காண சைபீரியாவிலுள்ள டோபோல்ச்க் நோக்கி பயணித்தது. ஆனால் அந்தக் குழு ஒரு ஆற்றைக் கடக்கும் போது பெரிய பிரச்சினையில் சிக்கித் தப்பித்தது. அது ஒரு நீண்ட, துன்பங்கள் பலவற்றைச் சந்தித்த, மோசமான பாதைகளில் மேற்கொண்ட கடினமான பயணம். இருப்பினும் கூட வெள்ளி மறைப்பின் 6 நாட்களுக்கு முன்பே அங்கு சென்றுவிட்டனர். வெள்ளி மறைப்புக்குக் கொஞ்ச நேரம் முன்பு, ஜீன் சாபி அங்குள்ள உள்ளூர் மனிதர்களால் தாக்கப்பட்டார். காரணம் என்ன தெரியுமா? ஜீன் சாபி சூரியனின் கதிர்களை ஏதோ செய்து தடை செய்யப் போகிறார் என்றும், அதனால் அவர்களுக்கு வரவிருக்கும் வசந்தகால நீரூற்றுக்கள் தடைபடப் போகிறது என்றும் மக்கள் நம்பியதால் ஜீன் சாபியை உள்ளூர் மக்கள் செமத்தியாய் மொத்திவிட்டனர். ஆனால் இறுதியில் வானவியல் குழுவினர். ஜீனைக் காப்பாற்றிவிட்டனர். பின்னர் குழுவினர் அனைவரும் அருமையான வெள்ளி மறைப்பை தரிசனம் செய்தனர். பிரெஞ்சு கழகம் 1761 ல் கிடைத்த வெற்றி கொண்டு மகிழ்ந்தது. மீண்டும் 1769 ல் நிகழவுள்ள வெள்ளி மறைப்பைக் காண ஜீனை அனுப்பியது. அதற்காக ஜீன் உலகின் எந்த மூலைக்கும், உறைபனிக்கு கீழுள்ள பகுதிக்குக் கூட செல்லத் தயாரானார். ஆனால் மீண்டும் சோகத்தின் விளிம்பை அந்தக் குழு தொட்டது. அவர்கள் மெக்சிகோவிலுள்ள வீரக்ரூஸ் என்ற இடத்திற்குப் போனார்கள், அங்கு மக்கள் பிளேக் நோய் வந்து மிகவும் அல்லலுற்றனர். அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லாமல், மக்களுடன் தங்கி அவர்களுக்கு உதவி செய்தனர். ஜீனும் உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஜீன் சாபி இறப்பின் எல்லை வரை சென்று அதன்பின் வெள்ளி மறைப்பை எந்த அட்ச ரேகையில் எந்த தீர்க்க ரேகையில் நிகழ்ந்தது என்றும் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜீன் சாபியின் பதிவுதான் 1769 ல் நிகழ்ந்த வெள்ளி மறைப்பின் மிக நல்ல பதிவென்றும் பாராட்டப்படுகிறது. பின்னர் வெள்ளி மறைப்பு நடந்த கொஞ்ச நாளிலேயே தனது 41 வயதில் காய்ச்சலினால் காலமானார்.

..தொடர்ச்சி. அடுத்த கட்டுரையில்..

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.பேராசிரியர் திருமதி மோகனா அவர்களின் வெள்ளி மறைப்பு நிகழ்வு – பாகம் 1 – கட்டுரையை அவர்களின் அனுமதியின் இன்று பதிவாக வெளியிட்டிருக்கிறேன். பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வ நன்றிகளும் வாழ்த்துகளும்.

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள்..!.. Historical episodes of transit of venus..! ..PART I
--பேரா.சோ. மோகனா

வெள்ளி மறைப்பு என்றால் என்ன?
வானில் வளைய வரும் வான் பொருட்களான சூரியன், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் போன்றவை ஒன்றை ஒன்று தொட்டு விளையாடுகின்றன. அவற்றின் உருவம் பெரிதாக இருந்து, ஒன்றை ஒன்று முழுமையாக மறைத்தால், அது கிரகணம். மறைக்க முயலும்/சூரிய பிம்பத்துக்குள் வரும் பொருள் சிறிதாக இருந்தால், அதனை மறைப்பு என்கிறோம்.

வெள்ளி மறைப்பு என்பது கிட்டத்தட்ட சூரிய கிரகணம் போலத்தான். எப்படி சூரிய கிரகணத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வருகிறதோ, அது போலவே, வெள்ளி மறைப்பில், இதில் வெள்ளி சின்ன கரும்புள்ளியாக சூரியனின் ஒரு ஓரத்தில் குறுக்கு மூலை பாய்ந்து ஓடும். இதனை நாம் பார்க்க முடியும். மறைப்பு என்பது குறைந்தது 6 மணி நேரம் நடைபெறும்.. வெள்ளி மறைப்பு என்பது சிறிய கடுகு ஒரு பெரிய தட்டின் ஓரத்தில் மெதுவாக ஓடுவதைப் போலிருக்கும். இந்த வெள்ளி மறைப்பை கவனித்ததின் மூலமாகத்தான், இடமாறு தோற்றப்பிழை கருத்தின் அடிப்படையிலேயே விஞ்ஞானிகள், சூரியனுக்கும், பூமிக்கு இடையிலுள்ள தொலைவைக் கணிக்கப் பயன்படுத்தினர்

வெள்ளி யார்..?

வெள்ளி சூரியனை இரண்டாம் இடத்திலும், பூமி மூன்றாம் இடத்திலும் இருந்து சுற்றுகின்றன. இவை இரண்டும் அளவு, ஈர்ப்புத்தன்மை, வேதிப்பொருட்கள், மற்றும் உருவம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட சம அளவுள்ளவை. எனவே வெள்ளியை பூமியின் சகோதரி என்றும் குறிப்பிடுவதுண்டு. வெள்ளிக்கு துணைக் கோள் கிடையாது.

வெள்ளி கோள் ரோமானிய நாட்டில், அழகு தேவதை , அன்பின் கடவுள், உற்பத்திக் கடவுள், வளமைக் கடவுள், வெற்றிக் கடவுள் என்று அழைக்கப்படுகிறது. மேற்கில் உதித்து, கிழக்கில் மறையும் ஒரே கோள் வெள்ளி மட்டுமே. இதன் நடுக்கோட்டில் சுற்று வேகம், மணிக்கு 6.5 கி.மீ . ஆனால் பூமியில் நில நடுக்கோட்டின் சுற்று வேகம், மணிக்கு 1,670 5 கி.மீ .இதன் நிறை பூமியைப்போல 0.815 மடங்கு ((0.815 Earth masses), பூமிக்கும் மட்டுமே. சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் (ஒரு வானவியல் அலகு) போல, இது சூரியனிலிருந்து 0.7 வானவியல் அலகு தொலைவில் உள்ளது. வெள்ளியின் விட்டம், 12,092 கி.மீ. வெள்ளியின் மையத்தில் சுமார் 3,000 கி.மீ ஆரத்துக்கு இரும்பும், (Venus has an iron core about 3,000 kilometers, in radius.) சிலிகேட்டும் உள்ளது. இதன் வளிமண்டலம், பூமியை விட 90 மடங்கு மிகவும் அடர்வாக உள்ளது. வெள்ளியின் மேற்பரப்பு எரிமலைப் பாறைகளால் ஆனது. வளிமண்டலத்தில் 96.5% கரியுமிலவாயுவே உள்ளது. மீதி 3.5% நைட்டிரஜன். சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் வெள்ளிதான்.

ஆண்டைவிட அதிக காலம் கொண்ட நாள்..!

வெள்ளியின் விட்டம் 12,092 கி.மீ. (650 km less than the Earth's) /0.949 9 Earths ) சந்திரனை (3476 km /(0.273 Earths )/விட 4 மடங்கு அதிகம். ஆனால் வெள்ளி சந்திரனை விட மிகத் தொலைவில் (356400 - 406700 கி.மீ) உள்ளதால் பார்வைக்குச் சிறியதாகத் தெரிகிறது. மேலும் வெள்ளி மிக மிக மெதுவாகவே பயணிக்கும். சூரிய குடும்பத்தில் மெதுவாக நகரும் கோள் இதுதான். இதன் ஒரு நாள் என்பது 244 பூமி நாட்கள். அதாவது தன்னைதானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 244 நாட்கள் ஆகின்றன. ஆனால் சூரியனை ஒரு கோள் சுற்றி வரும் காலம் என்பதே ஓர் ஆண்டும். இங்கே வெள்ளி சூரியனைச் சுற்றிவர 224.7 பூமி நாட்கள் ஆகின்றன. எனவே வெள்ளியின் ஒரு நாள் என்பது ஓர் ஆண்டைவிட அதிகம். வெள்ளிக் கோளில், பகல் நேரம் 122 நாட்கள்; அதன் இரவும் 122 நாட்கள். எனவே இதன் ஒரு வருடம் என்பது ஒரு நாளைவிட அதிகம்.

எப்போது வெள்ளி மறைப்பு நிகழும்?

வெள்ளி மறைப்பு என்பது அறிவியலில் கணிக்கப்படும் வானவியல் நிகழ்வுகளில் மிகவும் அரிதானதும் அற்புதமானதும் கூட. வெள்ளி கோள் சூரியனை, 224.7 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. 584 நாட்களுக்கு ஒரு முறை, பூமிக்கு அண்மையில் வெள்ளி வருகிறது. இருப்பினும் எல்லாக் காலங்களிலும், சூரியனில் வெள்ளி கோள் மறைப்பு ஏற்படுவதில்லை. இது வெகு அரிதானது. வெள்ளியின் பாதை 3.4 டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. இப் பாதை பூமி சூரியனை வலம் வரும் தளத்தினை ஜூன் முதல் வாரத்திலும் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரத்திலும் கடக்கும். அப்போது வெள்ளி மறைப்பு நடக்கும். 243 ஆண்டுகளில் வெள்ளி இடைமறிப்பு, 8 ஆண்டு இடைவெளியில் ஜோடியாக ஏற்படும். அடுத்த ஜோடி இடை மறிப்பு, 121.5 ஆண்டு காலம் அல்லது 105.5 ஆண்டு கால இடைவெளியில் ஏற்படும் இந்த நிகழ்வு ஒவ்வொரு 243 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சுழற்சி. இதில் ஒவ்வொரு 8 ஆண்டுக்கு ஒரு முறையும் ஜோடி வெள்ளி மறைப்புகள் வரும். இந்த இரட்டை வெள்ளி மறைப்பு என்பது நீண்ட இடைவெளியில் அதாவது 121 .5 ஆண்டுகள் மற்றும் 105 .5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நிகழ்கிறது. இப்போது 2012, ஜூன் 6 ம் நாள் வெள்ளி மறைப்பு/இடை நகர்வு நிகழ்வுள்ளது. இது போலவே ஒரு வெள்ளி மறைப்பு 2004 , ஜூன் 8 ம் நாள் ஒன்று நிகழ்ந்தது. இதற்கு முன், இது போல ஜோடி வெள்ளி மறைப்புகள், 1874 , டிசம்பர் மற்றும் 1882 டிசம்பரில் ஏற்பட்டன.. அடுத்து இனி 2012 க்குப் பிறகு, இதைப் போன்ற ஜோடி வெள்ளி மறைப்புகள் , 2117 டிசம்பர் 10 மற்றும் 2125 டிசம்பர் 8 ம் நாள் வந்து போகும். எனவே இதனைக் கணக்கிட்டால் ஆயிரம் ஆண்டுகளில் சராசரியாக 14-18 முறை வெள்ளி மறைப்பு நிகழும். ஆனால், புதன் மறைப்பு என்பது 100 ஆண்டுகளில் 13-14 வருகை புரிகிறது.

During the six millennium period 2000 BCE to 4000 CE1, Earth experiences 81 transits of Venus across the Sun. These events can be organized into two groups:

All Transits = 81 = 100.0%
June (Descending Node2) = 44 = 54.3 % December (Ascending Node3) = 37 = 45.7 %
When a transit of Venus occurs, a second one often follows eight years later. This is because the orbital periods of Venus (224.701 days) and Earth (365.256 days) are in an 8 year (2922 days) resonance with each other. In other words, in the time it takes Earth to orbit the Sun eight times, Venus completes almost exactly thirteen revolutions about the Sun. As a result, Venus and Earth line up in the same positions with respect to the Sun. Actually the two orbital periods are not quite commensurate with each other since Venus arrives at the eight year rendezvous about 2.45 days earlier that Earth. After the third eight-year cycle, Venus arrives too early for a transit to occur.

The next transit season occurs either 105.5 years or 121.5 years later at the opposite node of Venus' orbit. Once again, a pair of transits will often occur separated by eight years. This recurrence pattern of 8 + 105.5 + 8 + 121.5 years can be seen repeating itself in the catalog of Venus transits. An example of the pattern can be seen in the transits of 1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 and 2012. Occasionally, one of the eight year "double-transits" may disappear from the catalog for several centuries because one of them is a near miss. For instance, note the "missing" transits of 1388, 1145, 0902, 0659, 0416, etc..

மனித இனம் எப்போதிலிருந்து வானைக் கவனித்தது?

மனிதன் தோன்றியது முதல் வானைக் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறான். வானின் பொருள்கள் அவனுக்கு அதிசயமாகவே இருந்தன. அவனுக்கு சூரியன் என

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக