ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம்

4 posters

Go down

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Empty டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம்

Post by ராஜ்அருண் Sat Jan 28, 2012 10:46 am

இணையத்திலும் சரி பல புத்தகங்களிலும் சரி, சில புகைப்படங்கள் நமது கவனத்தை ரொம்பவே ஈர்க்கும்.
சாதாரணமாய் நாம் எடுக்கும் புகைப்படங்களிலிருந்து இவையின் தரம் ரொம்பவே அதிகமாய் இருப்பது ஒரு காரணம்.

ஒரு கவித்துவமான காட்சி அமைப்பும், ஒவ்வொரு 'பிக்ஸலின்' ஜொலிப்பும் இந்த படங்களின் ப்ரத்யேகதைகள்.


சாதாரணமா ஒரு படத்த எடுக்கும்போது, அந்த காட்சியில் இருக்கும் வெளிச்சத்தின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு மலையும், அதன் பின்னணியில் இருக்கும் வானத்தையும் சேத்து படம் பிடிக்கணும்னு முயற்சி பண்ணீங்கன்னா, வானம் ரொம்ப பளிச்னு இருக்கும், மலை இருட்டா இருக்கும். இது ரெண்டுத்தையும், அதன் தன்மை பிசகாமல் படத்தில் கொண்டு வருவது ரொம்ப கடினம்.

வானம் எடுக்க exposure கம்மியா வைக்கணும், சற்றே இருண்ட மலையை எடுக்க அதிக exposure வைக்கணும். குத்து மதிப்பா வெச்சு எடுத்தீங்கன்னா, ரெண்டுல ஒண்ணு, கொஞ்சம் அழுத்தம் கம்மியா தான் படத்தில் பதியும்.

என்ன மாதிரி கத்துக் குட்டிகளுக்கு, இது ஒரு பெரிய விஷயம் இல்ல. வந்த வரைக்கும் போதும்னு க்ளிக்கிட்டு வந்துருவோம்.
ஆனா, இதே தொழிலா செய்றவங்களும், அதீக ஆர்வம் உள்ளவங்களும், ஒரு படி மேல போய் முயற்சி பண்ணுவாங்க.
இவங்க, வானத்தை தனியா ஒரு படம் பிடிப்பாங்க, அதுக்கு தேவையான exposure வச்சு. அடுத்து, மலைய தனியா அதுக்கு தேவையான exposure வச்சு படம் புடிப்பாங்க.
அப்பரம் ரெண்டையும் ஒட்டி ஒரு படம் ஆக்குவாங்க. exposure-blending எனப்படும், இந்த யுக்தி அருமையான படங்களைத் தரும்.

இதே வரிசையில், டிஜிட்டல் உலகில் உபயோகப்படுத்தும் இன்னொரு யுக்திக்கு HDR என்று பெயர். High Dynamic Range என்பதன் சுருக்கமே HDR. நான் கொடுத்துள்ள படங்கள் HDR நுட்பம் உபயோகித்து 'செய்யப்பட்டவை'யே.

HDR நுட்பம், 1997 வருடத்திலிருந்து இருந்தாலும், டிஜிட்டல் ப்ரபலம் அடைந்த பின்னர், இதன் உபயோகம் அதிகரித்துள்ளதாம்.

ஒரு காட்சியை, பல விதமான exposureல் எடுத்துவிட்டு, எல்லா படத்தையும் சேர்த்து கலந்து, 'நச்'னு ஒரு படம் உருவாக்கும் முறையே HDR.



சரி, இனி HDR உபயோகித்து, 'படங்கள் எடுப்பது எப்படீன்னு பாக்கலாம்.

இதுக்கு கைவசம் என்னென்ன தேவை?
1) DSLR camera (மற்ற டிஜிட்டல் கேமராவில் AEB வசதி இருந்தால் அதையும் உபயோகிக்கலாம்).
2) Tripod - முக்காலி
3) PhotoMatix மாதிரி ஒரு மென்பொறுள்

இனி எப்படி படம் எடுப்பதுன்னு பாப்போம்.
எடுக்க நினைக்கும் காட்சிக்கு ஏற்றார் போல் முக்காலியை வைத்து, அதற்கு மேல் கேமராவை வைக்கவும்.
கேமராவில், AEB modeஐ தேர்ந்தெடுத்து, exposure -2, 0, +2 என்று வைத்துக் கொள்ளவும். (Program modeல், menu வுக்கு போனால், AEB தென்படும்).
இப்படி பண்ணா என்னாகும்னா, ஒரு காட்சிய முதல் முறை க்ளிக்கும்போது, அந்த காட்சிக்கு கம்மியான exposure கொடுத்து பிடித்துக் கொள்ளும். அடுத்த முறை க்ளிக்கும் போது, 'சாதாரண' exposureல் பிடித்துக் கொள்ளும். அதற்க்கு அடுத்த முறை, ஜாஸ்தியான exposure வைத்து எடுத்துக் கொள்ளும்.

இனி, உங்க காட்சிய, மூணு தடவ படம் புடிங்க.
முதல் படம் இருட்டாவும், ரெண்டாவது சுமாராவும், மூணாவது வெளிச்சமாவும் வரும். இந்த மாதிரி.

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் 20973753661782997b6a


டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் 2096597903ca4e24fe57


டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் 20965978152ce1cfe327





இதுவரை புரிஞ்சுதா?
கம்மியான exposureல் எடுக்கும்போது, படத்தில் அதீக வெளிச்சமான 'பல்பு' வெளிச்சம், நல்ல படியா படத்தில் பதியும்;
அதே மாதிரி, ஸோஃபாவின் பின் புறம், இருண்டிருப்பதால், அதீக exposure வைத்து எடுக்கும்போது, ஸோஃபாவின் முழு விவரமும் படத்தில் பதியும்.

சரி, இப்ப மூணு படத்த வச்சுக்கிட்டு என்ன பண்றது?
அதுக்குத் தான் PhotoMatix செஞ்சு வச்சிருக்காங்க.

PhotoMatixஐ தொறங்க.
Menuல் 'HDR - Generate' க்ளிக்கி, உங்கள் மூன்று படங்களையும் தெரிவு செய்து, OK கொடுங்கள்.
கொடுத்தாச்சா?
PhotoMatix இந்த மூணு படத்தையும், ஆராஞ்சு, ஒவ்வொரு பிக்ஸலிலும் (pixel) 'சிறந்த' pixelஐ தேர்ந்தெடுத்து, எல்லா விவரங்களும் பளிச்சென தெரியும் விதத்தில், ஒரு படத்தை உருவாக்கித் தரும்.
இப்படி வரும் படத்தை, PhotoMatixல் உள்ள Tone-Mapping என்ற option உபயோகித்து, மேலும் மெருகேற்றி, ஒரு நல்ல படத்தை உருவாக்கலாம்.

மேலே உள்ள மூணு படமும், கலந்து கலக்கி, மசாலா போட்டு, Tone Mapping பண்ணா இப்படி கிடைச்சுது.

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் 209659802919b0f2a0a3o



ஒரே காட்சியை மூன்று முறை எடுத்துக் கலப்பதால்,இந்த நுட்பம், அசையும் பொருளுக்கு உபயோகித்தல் கடினமானது.

மத்தபடி, ப்ரொஃபஷனலா ஒரு படத்த மாத்தணும்னா, இந்த யுக்தி கை கொடுக்கும்.


ஜாம்பவான்களின், மேலும் சில படங்கள் கீழ போட்டு, நிறைவு செய்கிறேன்.

போட்டோமாட்ரிக்ஸ் http://www.mediafire.com/?zw15ndzu2nu

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Img4167982

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Creative1z

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் 800pxromanianathenaeumh

நன்றி

கம்ப்யூட்டர் காலேஜ்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Empty Re: டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம்

Post by ந.கார்த்தி Sat Jan 28, 2012 10:47 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Empty Re: டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம்

Post by ராஜா Sat Jan 28, 2012 11:14 am

ஏற்கனவே நான் DSLR பித்து பிடித்து அலைகிறேன் , நீங்க இத வேற போட்டு என்னை brainwash பண்ணுறீங்க அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Empty Re: டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம்

Post by யினியவன் Sat Jan 28, 2012 11:32 am

ராஜா wrote:ஏற்கனவே நான் DSLR பித்து பிடித்து அலைகிறேன் , நீங்க இத வேற போட்டு என்னை brainwash பண்ணுறீங்க அழுகை
ராஜா wrote:ஏற்கனவே நான் DSLR பித்து பிடித்து அலைகிறேன் , நீங்க இத வேற போட்டு என்னை brainwash பண்ணுறீங்க அழுகை
நல்ல எளிய விளக்கத்திற்கு நன்றி ராஜா அருண்.

பித்து பிடித்து அலையக் கூடாது ராஜா - பித்துப் பிடிக்கும் படங்களை எடுத்து எங்களை அலைய விடனும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Empty Re: டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம்

Post by யினியவன் Sat Jan 28, 2012 11:39 am

தரவிறக்கம் செய்து ரெஜிஸ்டரும் செய்து விட்டேன்.
இனி படம் எடுத்து உபயோகிக்க முயலுகிறேன்.

நன்றி ராஜா அருண்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் Empty Re: டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum