ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைமகள்

3 posters

Go down

கலைமகள் Empty கலைமகள்

Post by கவினா Fri Jan 27, 2012 10:32 pm

வெள்ளைத்தாமரை நடுவினிலே
வீற்று இருக்கும் கலைமகளே
கொள்ளை போகுது உன் செல்வம்
கூறுகட்டித் தெருவெங்கும்.

கல்விகூடமா கடைத்தெருவா?
கல்வியென்ன கடைசரக்கா
எல்லோருக்கும் கல்வியெனும்
திட்டம் எரிந்து போனதுவா?

கலைமகள் நீ விலைமகளாய்
கடையில் ஏனோ சரக்கானாய்?
விலைக்குதான் நீயென்ற
நிலைக்கு ஏனோ உருவானாய்?

வாடிப்போயே பிறந்தாயோ?
வற்றியகுளத்தில் மலர்ந்தாயோ?
தேடிய செல்வம் யாவையுமே
தெருவில் போட்டு உடைத்தாயோ?

இல்லாத ஏழை உன் வீட்டுக்கு
வருவதைகூட தடுக்கின்றாய்.
எல்லாம் உள்ள செல்வந்தனிடமோ
படுக்கையில் கூடப்படுக்கின்றாய்.

சமுதாய வீனையினை
குழந்தையைபோல கையிலேந்தி
அமுதாயும் அழகாயும்
கல்வியென்ற இசை இசைத்தாய்.

இசைத்து நீ பாடுகையில்
பலருக்கு காதில் கேட்கலையாம்
அசைந்து ஆடும் அனைவருமே
செல்வ செழிப்பில் உள்ளவராம்.

வீசும் காற்றில் கலந்திருக்கும்
கல்வியென்கிற கானத்தை
காசும் பணமும் இருந்தால்தான்
காதுகளாலே கேட்கனுமாம்.

கம்பள ஆடை நெய்கின்ற
மீர்ஜாபூர் பதோலியிலே
சம்பளமைந்தே பெறுகின்ற
சிறுவர்களுக்கு கேட்கலையாம்.

சிறுசிறு தொழிலும் கைத்தொழிலும்
செய்துவாழ்க்கை நடத்துகிற
சிறுவர்களுக்கும் மாதர்களுக்கும்
உனது கீதம் கேட்கலையாம்.

உணவு விடுதியில் உணவாகும்
உதிரிக்குழந்தைகள் அவர்களுக்கும்
கனவு நிலையிலும் உனது கீதம்
காதுகளில் போய் விழவில்லையாம்.

குட்டி ஜப்பான் என்று அழைபடும்
சிவகாசி மாநகரினிலே - தீப்
பெட்டி பட்டாசு சிறையிலிருக்கும்
சிறுவர்களுக்கும் கேட்கலையாம்

வானம் அதனை பார்த்தாயா?
சாதியின்றி இனமின்றி - அஞ்
ஞானம் மதமும் இன்றி
ஏழை செல்வர் பிரிவின்றி

எல்லோருக்கும் குடைபோலிருக்கும்
வானபகவான் அவனைப்போல
கல்லாமை இருளை அகற்றும்
கல்விகானம் இசைத்திடு தாயே.

இல்லை இனிமேல் பழையவானம்.
இசைத்திடுவோமா புதிய கானம்
எல்லோருக்கும் கல்வியென்றால்
அதுதான் சமூக விஞ்ஞானம்.




நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by அசுரன் Fri Jan 27, 2012 11:23 pm

எல்லோர்கும் கல்வி கிடைக்க தடையாக இருக்கும் கல்வி வியாபாரிகளை தங்கள் அக்னிப்பார்வையால் சுடும் கவிதை அருமை.

எல்லாருக்கும் உணவு எனும் திட்டம் இப்ப வந்திருக்கே ?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Fri Feb 03, 2012 7:46 pm

அசுரன் wrote:எல்லோர்கும் கல்வி கிடைக்க தடையாக இருக்கும் கல்வி வியாபாரிகளை தங்கள் அக்னிப்பார்வையால் சுடும் கவிதை அருமை.

எல்லாருக்கும் உணவு எனும் திட்டம் இப்ப வந்திருக்கே ?
கல்வி மறுக்கப் பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்களே தோழரே?
நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கபாலி Fri Feb 03, 2012 9:52 pm

தற்சமயம் இந்தியா முழுவதும் இந்த நிலை மாறத்தொடங்கிவிட்டது. கல்வி என்னும் அடிப்படை மிக அவசியம் என்பதை கல்லாதோரும் உணரத்தொடங்கிவிட்டனர். அவ்வாறிருக்க சுமார் முப்பது நாற்பது வருடத்திற்கு முன் வந்திருக்க வேண்டிய கவிதையை இக்காலத்தில் வழங்கியிருக்கிறீர்கள்.

மேலும் இக்கவிதையில் கலைமகளைப் போற்றி எழுதுவதாக எண்ணி விலைமகள் என்னும் இழிவான வார்த்தைகளால் சித்தரித்திருக்கிறீர்கள்.

படுக்கையில் கூடப்படுக்கிறாய் என்பது எத்தனை மிக மோசமான எண்ணம் என்பதைச் சற்றே யோசியுங்கள்.

கவிதையில் மாட்சிமை இருக்கவேண்டும். எள்ளல் இருக்கலாம். கேவலப்படுத்துதல் இருத்தல் ஆகாது.

புரிந்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Fri Feb 03, 2012 10:03 pm

கபாலி wrote:தற்சமயம் இந்தியா முழுவதும் இந்த நிலை மாறத்தொடங்கிவிட்டது. கல்வி என்னும் அடிப்படை மிக அவசியம் என்பதை கல்லாதோரும் உணரத்தொடங்கிவிட்டனர். அவ்வாறிருக்க சுமார் முப்பது நாற்பது வருடத்திற்கு முன் வந்திருக்க வேண்டிய கவிதையை இக்காலத்தில் வழங்கியிருக்கிறீர்கள்.

மேலும் இக்கவிதையில் கலைமகளைப் போற்றி எழுதுவதாக எண்ணி விலைமகள் என்னும் இழிவான வார்த்தைகளால் சித்தரித்திருக்கிறீர்கள்.

படுக்கையில் கூடப்படுக்கிறாய் என்பது எத்தனை மிக மோசமான எண்ணம் என்பதைச் சற்றே யோசியுங்கள்.

கவிதையில் மாட்சிமை இருக்கவேண்டும். எள்ளல் இருக்கலாம். கேவலப்படுத்துதல் இருத்தல் ஆகாது.

புரிந்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்..
நண்பர் கபாலியின் கருத்துக்களை கவனமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன்.
மாற்றாக சில நியாயமான கருத்துக்கள் இருந்தும் இதை ஒரு விவாத மேடையாக்க விரும்பவில்லை.
தங்களின் நல்லெண்ணத்துடன் கூடிய கருத்துக்களை கவனத்தில் கொண்டுள்ளேன் நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum