புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
96 Posts - 49%
heezulia
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
7 Posts - 4%
prajai
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
223 Posts - 52%
heezulia
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
16 Posts - 4%
prajai
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_m10தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 24, 2012 9:07 am

ஒருவர் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்கும் தந்திரம் ஒட்டுமொத்த இனத்தையே அழித்துவிடும். பாரம்பரியமிகு தமிழினத்திற்கு இக்கேடு நிகழ்ந்துவிடக்கூடாதென்கிற நோக்கில் சமீபத்தில் ஒரு கட்டுரையை தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அவர்கள் எழுதியிருந்தார்.

அக்கட்டுரையின் தலைப்பு என்னவென்றால் “தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்?" இக்கட்டுரையை ஒவ்வொரு தமிழனும் வாசித்து சிந்தித்து செயற்படுவது இக்காலத்தின் இன்றியமையாத கடமையாகும்.

நெடுமாறன் அவர்களின் கட்டுரையை சற்று அலசுவதற்காகவே இக்கட்டுரை எழுதுவதற்கான காரணம். பழ நெடுமாறன் அவர்கள் தனது கட்டுரையில் வட இந்திய ஆதிக்க சக்திகளையும் தற்காலத்து தமிழக அரசியல்வாதிகளையும் விமர்சித்து எழுதியுள்ளார். ஒவ்வொரு செய்கைக்கும் எதிர்வினை உண்டு. ஒருவரின் ஆக்கத்தை விமர்சிப்பதன் மூலமாக நல்லதொரு சமூகத்தை உருவாக்கலாம்.

தனது கட்டுரையில் நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ளதாவது: “இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை."

நாம் சோம்பேறிகளாக இருக்கும்போது மற்றவன் எம்மை சீண்டிப் பார்த்துக்கொண்டேதான் இருப்பான். அந்த வகையில் தமிழ் அரசியல்வாதிகளே தமது சுகபோக வாழ்விற்காக தமது குரல்களை எழுப்பாமல் இருக்கும்போது எப்படி நாம் இந்திய மத்திய அரசையோ அல்லது அகில இந்திய அரசியல் கட்சிகளையோ ஆதரவளிக்கும்படி கேட்க முடியும்?"

வெறும் அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் மாதிரி தமிழ் மக்கள் இருந்தால் எப்படி நீதியைப் பெற முடியும். நீதியைப் பெற வேண்டுமாயின் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டால் அனைத்து அரசியல்வாதிகளும் எமக்குப் பின் வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு வேண்டியதெல்லாம் மக்களின் வாக்கே. மக்கள் தெளிவாக ஓரணியில் திரண்டால் அரசியல்வாதிகள் எமக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்கள் சார்பு தன்னலமற்ற அமைப்புக்கள் மற்றும் தமிழ் மக்களின் உயர்வில் அக்கறை கொண்ட அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து மக்களை ஓரணியில் திரட்டி போராடினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

மற்றவர்களை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழினம்

சீனத்து மக்கள் தமக்குள் அதீத ஒன்றுமையைக் கடைப்பிடிப்பவர்கள். தமது இனத்தவர் ஒருவருக்கு தீங்கு விளைந்தால் ஒட்டுமொத்த சீனத்தவர்களும் ஓரணியில் திரண்டு விடுவார்கள். தமிழர்கள் அப்படியல்ல. இன்னொரு தமிழன் அடிவாங்கும் போது மற்றவர்களுடன் இணைந்து தானும் அடித்தே பழக்கப்பட்டுவிட்டான் தமிழன் என்பதே உண்மை. தமிழீழ விடுதலைப் போர் ஆரம்பித்த பின்னர்தான் ஓரளவிற்கு தமிழர்களுக்குள் ஒன்றுமை வந்தது. இவ் ஒற்றுமை என்பது பரிதாபத்தினால் வந்ததே. பரிதாபத்தினால் வந்த ஒற்றுமை காலப்போக்கில் இல்லாமல் போய்விடும்.

தமிழகத் தமிழர்கள் சினிமா மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை. குடிசையில் வாழ்ந்தாலும் ஒரு வேளைக்கு சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து நாடகங்கள் திரைப்படங்கள் மற்றும் வெள்ளித்திரை நிகழ்ச்சிகளைப் பார்த்து ஆனந்தம் அடையும் நிலையே தமிழகத்தில் பட்டிதொட்டி அனைத்தும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கிறது.

ஏழு கோடித் தமிழர்களில் எத்தனை பேர் செய்திகளைப் பார்க்கிறார்கள் என்கிற கேள்வி எழும்போது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே செய்திகளை பார்க்கிறார்கள் என்கிற பதில் வருகிறது. செய்தி நேரம் வந்துவிட்டால் தமக்கு இடைவேளை வந்துவிட்டதாக எண்ணி தமது அன்றாட வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள் பலர். இதற்கு ஒரு முடிவுகட்ட தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்ட தலைவர்கள் யாராவது முன்வருகிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வருகிறது.

மக்களை வழிநடத்த வேண்டிய அரசியல்வாதிகளே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துவதென்பது வெட்கக்கேடான இன்னொரு விடயம். கேட்டால் தமது கட்சிக் கொள்கையை மக்கள் அறியும் வண்ணம் செய்யவே தொலைக்காட்சிகளை ஆரம்பிப்பதாக கூறுகிறார்கள் குறித்த அரசியல்வாதிகள். குறித்த தொலைக்காட்சிகளில் தமிழரின் கலாச்சாரத்திற்கு எதிரான நிகழ்ச்சிகளை பல மணித்தியாலங்களாக ஒளிபரப்படுகிறது. இதனை யாராலும் மறுக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் வருகிறது.

பழ நெடுமாறன் தனது கட்டுரையில் எழுதியுள்ளதாவது “தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள் துணி சிமெண்ட் மின்சாரம் போன்ற பலவற்றை எவ்விதமான தங்குதடையுமில்லாமல் பெற்றுக்கொள்கின்றன. இயற்கையிலேயே தண்ணீர்ப் பற்றாக்குறையான தமிழகத்துக்குத் தங்களிடம் மிகையாக உள்ள தண்ணீரைக்கூடத் தர அவர்களுக்கு மனமில்லை. பிடிவாதமாக மறுக்கின்றன."

நெடுமாறன் அவர்களுக்குத் தெரியாத பல விடயங்கள் இருக்க முடியாது. இந்திய அரசியலில் விதை விதைத்து பழம் சாப்பிட்டவர்தான் அவர். ஆகையினால் இவருடைய ஆதங்கங்களுக்கு காரணம் உண்டு. யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் பல தமிழக தொழில் நிறுவனங்கள் இருக்கிறதென்று நெடுமாறன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழக மக்கள் இன்றும் தமது மாநிலத்திலேயே அடிமைகளாகத்தான் வாழ்கிறார்கள் என்பதனை யாராலும் மறுக்க முடியுமா?

யூதர்களின் கட்டுப்பாட்டின் கீழ்த்தான் பல நிறுவனங்கள் மேற்கத்தைய நாடுகளில் இருக்கின்றன. அதன் காரணத்தினால் பல உலக நாடுகள் யூதர்களைப் பகைக்க விரும்பவில்லை. சிறிய நாடான இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக பல காலங்களாக போரைச் செய்து வருகிறது.

பாலஸ்தீனர்களின் தாயகப் பூமியை அபகரிக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் அறிந்தும் யூதர்களைப் பகைக்கக்கூடாது என்கிற காரணத்தினால் இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அதைப்போலத்தான் யாரின் கையில் அதிகாரங்கள் இருக்கிறதோ அவர்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்தையும் கண்டும் காணாமல் இருந்தால்த்தான் தமிழகத் தமிழர்கள் வாழலாமென்கிற நிலையே இன்று தமிழகத்தில் நிலவுகிறது.

தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள் துணி சிமெண்ட் மின்சாரம் போன்ற பலவற்றை எவ்விதமான தங்குதடையுமில்லாமல் அண்டை மாநிலங்களுக்கு செல்வதை தமிழக மக்கள் தடுக்க முடியாது. ஆதிக்கத்தை தம் கையில் வைத்துள்ளவர்கள் இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரைக் கூட தடை செய்யலாம்.

அண்டை மாநில மக்களே முன் நின்று தடுக்கும் நிலை வந்ததற்கு காரணம் குறித்த மாநிலங்களில் இயங்கும் வல்லாதிக்கம் படைத்த நபர்களே. தமிழகம் சொல்வதைக் கேட்க வேண்டிய அவசியம் மத்திய அரசிற்கு இல்லை. கேரளம் என்ன சொல்கிறதோ அதனை உடனேயே அமுல்ப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. மலையாளிகளின் ஆதிக்கம் இந்திய நடுவன் அரசில் மித மிஞ்சிப்போய் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? சீக்கியர் சொல்வதை மத்திய அரசு கேட்டே ஆக வேண்டிய சு10ழ்நிலை. சீக்கியர் இல்லையென்றால் இந்திய இராணுவம் பலமற்றதாகப் போய்விடும்.

வந்தோரை வாழ வைப்பதே தமிழ் நாடென்று பழமொழிகளைக் கூறிக்கொண்டு சோம்பேறிகளாக வாழ்பவர்களே தமிழர்கள் என்றால் மிகையாகாது. மக்களை வழி நடத்த முற்போக்கு சிந்தனையாளர்கள் முன்வர வேண்டும். மக்களுக்கு தகுந்த படிப்பினைகளைக் கொடுத்து அவர்களைச் சிறந்த பிரஜைகளாக ஆக்க வேண்டிய பொறுப்பு முற்போக்குவாதிகளுக்கு உண்டு.

நெடுமாறன் போன்றவர்களின் தலைமையில் இளைஞர் மற்றும் யுவதிகள் பட்டாளம் ஒன்றிணைய வேண்டும். திருவள்ளுவர் போன்ற மகான்களைப் போற்றுவதற்குப் பதில் ஷேக்ஸ்பியர் போன்றவர்களை புகழ்பாடுவதுதான் தமிழர்களின் வழக்கம். இதன் மூலமாக தமிழையும் தமிழர்களையும் நாமே ஓரம் கட்டுகிறோம் என்றே பொருள். அனைத்தையும் அறிவதில் எந்தவிதமான பிழையும் இல்லை. எம்மை நாம் தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை உயர்த்திக் காட்டுவதுதான் நமது பண்பாடாக இருக்கிறது.

தமிழர்களின் பங்கு அளப்பரியதே

இந்திய விடுதலைப் போரில் தமிழகம் செலுத்தியிருக்கிற பங்கு அளப்பரியதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார் நெடுமாறன். அவர் மேலும் கூறுகையில் “தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.”

“தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி சத்தியமூர்த்தி காமராஜ் போன்ற பல தலைவர்களும் எண்ணற்ற தொண்டர்களும் காந்தியடிகளை உளமாறப் பின்பற்றி எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். அண்ணலின் அழைப்பையேற்று அறப்போரில் தடியடிக்கு ஆளாகி உயிர்நீத்தான் திருப்பூர் குமரன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் முதலாவது இந்திய சுதந்திர அரசை நிறுவி இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது அவருக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்."

நெடுமாறன் அவர்களின் கூற்றுக்கள் அனைத்துமே உண்மையே. இருப்பினும்இ தமிழர்கள் அன்றும் காந்தி போன்றவர்களுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்பதே உண்மை. நேரு இரண்டாம் நிலையில் இருந்து போராடினார். காந்திக்கு பல வழிகளில் உதவிய தமிழர்களை நேரு இருந்த இடத்திற்கு அண்மையில் கூட வைத்திருக்கவில்லை காந்தி. வெறும் போராட்ட சக்திகளாகவே தமிழர்களைப் பாவித்தார்களே தவிர தமிழர்களை உயர் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக வைத்திருக்கவில்லை.

நெடுமாறன் மேலும் எழுதியுள்ளதாவது “முதலாவது சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டபோது நிதியமைச்சர் பொறுப்பைத் தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம் பிரதமர் நேரு ஒப்படைத்ததைத் தொடர்ந்து முதலாவது கவர்னர் ஜெனரலாக ராஜாஜி மத்திய அமைச்சர்களாக டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் ஓ.வி. அளகேசன் ஆர். வெங்கட்ராமன் சி. சுப்பிரமணியம் போன்ற பலர் பெரும் பொறுப்புகள் வகித்துச் சிறப்பாகத் தொண்டாற்றி தமிழகத்துக்குப் பெருமை ஈட்டிக்கொடுத்தார்கள்.”

“அவர்களுடன் நமக்குக் கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தமிழுக்கோ தமிழினத்துக்கோ தமிழகத்துக்கோ சிறுமை தேடித் தரவில்லை. அகில இந்திய கட்சிகளின் தலைவர்களாகவும் பல தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். காங்கிரஸ் தலைவராகக் காமராஜ் முஸ்லிம் லீக் தலைவராக "காயிதே மில்லத்' முகமது இஸ்மாயில் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத்தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் போன்ற பலர் பொறுப்பு வகித்து அந்த பதவிகளுக்குப் பெருமை தேடித் தந்தார்கள்."

நெடுமாறன் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே. எதற்காக தமிழர்களுக்கு நேரு அவர்கள் முக்கியத்துவதத்தை தனது அரசாங்கத்தில் அளித்தார் என்பதை ஆராய வேண்டும். சீக்கியர் மற்றும் மலையாளிகளின் அதிகாரங்கள் இன்று எந்தவகையில் அகில இந்திய அளவில் இருக்கிறதோ அதைப்போலத்தான் அன்று தமிழர்களின் பலம் இருந்தது. தமிழர்கள் பல நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய செல்வாக்கு இந்திய நாட்டிற்கு அன்று தேவைப்பட்டது.

நேரு அவர்கள் பரந்த சிந்தனையுடனேயே அவ்வாறான நிலையை அன்று எடுத்தார். இந்து சமுத்திரத்தின் குரல்வளையாக இருப்பது தமிழகம். பூகோள அரசியல் மற்றும் இராணுவ நலன்களுக்கு ஏற்ற இடமாகவே தமிழகம் இன்றும் இருக்கிறது. இந்திய இராணுவப் பலத்தை அதிகரிப்பது என்பது இன்றியமையாத தேவையாக அன்று இந்திய நடுவன் அரசிற்கு இருந்தது.

ஒட்டுமொத்த இந்து சமுத்திரத்தையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பது நேருவின் கனவு. இதனை நிறைவேற்ற தமிழகத்தின் ஆதரவு தேவை. இலங்கை சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியா பிஜி மொரிசியஸ் பர்மாஇ தென் ஆபிரிக்காஇ அந்தமான்ஃநிகோபார் போன்ற இடங்களில் தமிழர்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. அவர்களின் கடினமான உழைப்பினால் குறித்த நாடுகள் பொருளாதார ரீதியில் பல அனுகூலங்களை அனுபவித்தார்கள். இவ் மக்களின் செல்வாக்கை வைத்தே இந்தியாவின் உலக நாடுகளுடனான இராஜதந்திர நல்லுறவை மேம்படுத்தலாம் என்பதை அன்று நன்கே உணர்ந்தார் நேரு.

காலம் இன்று மாறிவிட்டது. உலகின் முக்கிய சக்தியாக இன்று இந்தியா வளந்துள்ளது. தமிழர்களின் தயவின்றி தனது செல்வாக்கை உலக அளவில் இன்று இந்தியா வைத்துள்ளது. தமிழர்களின் கடின உழைப்பு இன்று இந்திய அரசிற்கு தேவையில்லை. அன்று மக்கள் செய்த வேலைகளை இன்று இயந்திரங்கள் செய்கின்றன.

தமிழர்கள் இன்று வேண்டப்படாத இனத்தவராகவே இந்திய நடுவன் அரசினால் பார்க்கப்படுகிறார்கள். இவர்களின் வாக்குகள் கூட இந்திய தேசியக் கட்சிகளுக்கு இல்லையென்கிற நிலையே தமிழகத்தில் நிலவுகிறது. ஆக தமிழர்களை முன்னர் நன்றாகவே கசக்கி பிழிந்து அனைத்து சக்திகளையும் எடுத்துவிட்டு அவர்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் பிற இனத்தவர்கள் என்பதே உண்மை. தமது இனத்தின் மீது பற்று அற்றவர்களாகவேதான் இன்றும் பல கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள்.

தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள் பல. இந்திய அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறிவிட்டு நாம் தப்பிக்க முடியாது. நமக்கு புண் வந்துவிட்டால் நாமேதான் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும். நாம் வீட்டிற்குள் சோம்பேறிகளாக தூங்கிக் கொண்டிருந்துவிட்டு மருத்துவர் நமது வீடு வந்து புண்ணுக்கு மருந்து கொடுப்பாரென யதார்த்தத்திற்கு ஒத்துவராத கனவைக் காண்பது முட்டாள்த்தனம். நமது உரிமைகளை நிலைநாட்ட நாமே களம் காண வேண்டும். மற்றவர்கள் அதனை நமக்கு கொண்டுவந்து தரமாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.


avatar
Guest
Guest

PostGuest Tue Jan 24, 2012 9:08 am

மக்கள் விழிப்படைந்து தமது சுய சிந்தனையின் அடிப்படையில் எப்போது முடிவுகளை எடுக்கிறார்களோ அப்போதுதான் அந்தச் சமூகம் வெளிச்சத்திற்குள் வந்துள்ளது என்று பொருள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு மகுடிக்கு அடங்கிய பாம்பு போன்று இருந்தால் மற்றவர்கள் ஏளனமாகத்தான் பார்ப்பார்கள். ஒரு காலத்தில் தூணாக நின்று மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழர்களை ஏறி மிதிப்பதில் புதினம் ஒன்றுமில்லை.

தம்மைத் தாம் மேலிடத்தில் வைத்துக்கொண்டுதான் மற்றவர்களையும் தாம் இருக்கும் இடத்திற்கு உயர்த்த முற்பட வேண்டும். அதைவிடுத்து, தாம் அடித்தளத்தில் இருந்துகொண்டு மற்றவர்களை உயரத்தில் வைக்க விரும்பினால் இவர்களை மற்றவர்கள் ஒருபோதும் மதிக்கமாட்டார்கள். கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்கூட தமிழ் அரசர்கள் தமது சொந்த நலன்களுக்காகவே போராடினார்கள். தாம் அனைவரும் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்களென்று ஒருபோதும் ஒன்றாக நின்று போராடியதில்லை.

சேர்ந்து இயங்காத காரணத்தினால் படையெடுத்துவந்த பிற இனத்தைச் சேர்ந்த அரசர்கள் இலகுவாக தமிழ் அரசாட்சிகளைக் கைப்பற்றினார்கள் என்பது வரலாறு. தமிழ் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் தாம் ஆதரித்த அரசர்களின் துதிகளைப் பாடிக்கொண்டேதான் இருந்தார்களே ஒழிய அவர்கள் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்ட முன்வரவில்லை.

தமது சுக போக வாழ்விற்காக அரசர்களுக்கு மக்கள் ஆதரவாக இருந்தார்கள். மக்கள் தமது பக்கமே என்கிற மமதையில் அரசர்களும் தமது சுய வேலைத்திட்டங்களுக்கே முன்னுரிமை அளித்தார்கள். அக்கால கட்டத்தில் இருந்த நிலையே இன்றும் நிலவுகிறது. உதாரணத்திற்கு தமிழக அரசியலை எடுத்தால் கலைஞர் கருணாநிதிக்கு பின்னால் ஒரு கூட்டம். அவரின் ஆதரவாளர்கள் அவரை துதிபாடுகிறார்கள். கலைஞர் செய்யும் அனைத்து தவறுகளையும் தெரிந்தும் தெரியாமல் அவரைப் போற்றியே உலாவருவார்கள் அவரது ஆதரவாளர்கள். இதைப் போன்றே அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களின் நிலையும்.

ஒருவர் குற்றம் செய்தால் அதனைச் சுட்டிக்காட்டுவதன் மூலமாகத்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும். தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்தால் தொடர்ந்தும் அதே தவறுகளைச் செய்துகொண்டே இருப்பார்கள். தாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக மக்கள் ஏன்தான் தமது பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரத்தைக்கூட பாவிக்காமல் இருக்கிறார்களென தெரியாமல் இருக்கிறது. இப்படி இருந்தால் ஆளும் வர்க்கம் ஏழை எளிய மக்களை வஞ்சித்துக்கொண்டே இருப்பார்கள்.

கல்வித் துறையில் ஏற்றம் வேண்டும்

எந்தவொரு இனமும் சுயமாக முடிவு எடுக்க வேண்டுமாயின் கல்வியறிவைப் பெற்றிருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களின் மூலமாகத்தான் உயர்வு பெறுகிறது. பல்துறை சார் கல்வியறிவு ஒரு மனிதனை சுயமாக சிந்திக்க வழிவகுக்கிறது. கேரளாவை எடுத்துக்கொண்டால் இவ்விரு துறைகளிலும் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் விளைவாக மலையாளிகள் இந்தியாவின் பல அரச மற்றும் தனியார் துறைகளில் அதிகமாக பங்குபற்றியுள்ளர்கள்.

அரசியல்வாதிகள் போராட்டங்களை அறிவிக்கும் முன்னரே பஞ்சில் பத்திய தீ போன்று தாமே முன்வந்து போராட்டங்களில் பங்குபற்றுவதன் மூலமாக தமது சுய செயற்பாடுகளை நிரூபிக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை யார் ஒருவேளை சாப்பாடு போடுகிறார்களோ அவர்கள் பின்னால் சென்று கொடி தூக்குகிறார்கள். மற்றவர்கள் சொன்னால் உடனையே பேருந்துகளை உடைக்கிறார்கள். இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளை செய்பவர்களினால் எப்படி சமூகத்தில் வளர முடியும் என்கிற கேள்வி எழுகிறது.

தமிழக மக்கள் அனைவருமே அடக்குமுறை வாழ்வையே எதிர்நோக்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தமிழக மக்களின் பெரும்பான்மையினர் சுய புத்தியில் இயங்குபவர்கள் இல்லை என்பதே உண்மை. பழ நெடுமாறன் அவர்கள் தனது கட்டுரையில் எழுதியுள்ளதாவது, “தமிழகத்தை வாட்டி வதைத்து வரும் பல்வேறு உயிர்நாடியான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வழிதெரியாமல் தமிழன் திகைத்துக் கிடக்கிறான். அவன் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மற்ற மாநிலங்கள் செய்கின்றன. 30 ஆண்டு காலத்துக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உறுதியாக நிற்கும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என கேரள அரசியல்வாதிகள் இணைந்து நின்று பொய்மைக் கூப்பாட்டைக் கிளப்பி தமது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள்."

நெடுமாறனின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே. தமிழர்கள் சுய நினைவற்று இருந்தால் மற்றவர்கள் அவர்களின் தலைகளில் மிளகாய்தான் அரைப்பார்கள். 30 ஆண்டுகளாக இருந்துவரும் அடிப்படை பிரச்சினையைக்கூட தீர்க்க முடியாமல் 40 தமிழக மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிற போது வெட்கமாக இருக்கிறது. தமது குடும்பப் பிரச்சினை என்று வந்துவிட்டால் டெல்லி சென்று மத்திய அரசை வற்புறுத்தி வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமையுடைய தமிழக அரசியல்வாதிகளுக்கு மாநிலத்தின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர முடியாமல் போயுள்ளது என்கிறதை நினைக்கும் போது மனதிற்கு வருத்தமாகத்தான் உள்ளது.

தமிழக மக்கள் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டாலே போதும் தம்மை வதைப்பவர்கள் யாரென்று அடையாளம் காண. மக்கள் சுயமாக சிந்திப்பதன் மூலமாகத்தான் நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவை பிரச்சினைகள். அதன் மூலமாகத்தான் தமது அரசியல் எதிகாலத்தை நிர்மாணிக்க முடியும். மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டால் எதைச் சொல்லி வாக்குக் கேட்பது என்கிற நிலையே அரசியல்வாதிகளுக்கு எழும்.

மக்களின் தெளிவற்ற நிலையே பல பிரச்சினைகளுக்கு காரணம்

பழ நெடுமாறன் அவர்கள் மேலும் தனது கட்டுரையில் எழுதியுள்ளதாவது, “2009-ஆம் ஆண்டில் ஈழத்தில் விமானக் குண்டு வீச்சுக்கும், பீரங்கித் தாக்குதலுக்கும், சிங்கள ராணுவ வெறியாட்டத்துக்கும் ஆளாகி மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் தவித்தபோது அவர்களைக் காப்பாற்றத் தமிழகம் எவ்வளவோ போராடியும்கூட மத்திய அரச அலட்சியம் செய்தது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல சிங்கள இனவெறி அரசின் கொலைவெறி ராணுவத்துக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து இந்திய அரசு துணைநின்றது. இதன் விளைவாக, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்க படுகொலை செய்யப்பட்டார்கள். மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள்ளே அடைபட்டுப் போதுமான உணவு, தண்ணீர், மருந்து இல்லாமல் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்திய அரசைத் தடுக்க வேண்டிய தமிழக தி.மு.க. அரசு இரட்டை வேடம் பூண்டது. அப்போது மன்மோகன் சிங்கின் அரசு தி.மு.க.வின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில்தான் பதவியில் இருந்தது என்பதுதான் அதைவிடக் கொடுமை."

நெடுமாறன் அவர்களே தனது கேள்விக்கும் பதிலை அளித்துவிட்டார். 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று பதவி துறந்திருந்தால் இந்திய மத்திய அரசு கவிழ்ந்திருக்கும். இப்படியான ஒரு சூழ்நிலை வந்திருந்தால் எத்தனை கோடி ரூபாய்கள் தேர்தலுக்காக செலவிடப்பட்டிருக்கும் என்பதனை உணர்ந்தாவது ஏதாவது பிரயோசனமான காரியத்தை அன்று நடுவன் அரசு செய்திருக்கும். அத்துடன் அப்படியான ஒரு சூழ்நிலையை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு விரும்பவில்லை. அப்படி வந்துவிட்டால் தனது குடும்ப வாரிசுகள் அனைத்துமே கம்பி எண்ண வேண்டிவரும் என்கிறதை உணர்ந்துதான் அன்று கலைஞர் அவர்கள் அப்படியான ஒரு காரியத்தை செய்யவில்லை. ஆக, தமது இனத்தின் விடுதலையை விட தமது குடும்ப பொருளாதார வளர்ச்சியியே முக்கியமென கலைஞர் அவர்கள் கருதினார்.

தமிழக மக்கள் அன்று ஓரணியில் திரண்டு கலைஞருக்கு தக்க பாடத்தை ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு போராட்டங்களை நடத்தியிருந்தால், கலைஞர் அவர்களின் நேரடி வற்புறுத்தலின் அடிப்படையில் இந்திய நடுவன் அரசை ஈழத்தமிழர் விடுதலைக்கு ஆதரவாக திசை மாற்றி இருக்க முடியும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் சென்னைக் கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதம் என மூன்று மணி நேர நாடகம் ஒன்றை கலைஞர் அரங்கேற்றினார்.

நெடுமாறன் மேலும் எழுதியுள்ளதாவது, “ஈழத் தமிழர்களை மட்டுமா, தமிழக மீனவர்களை ஒரேயடியாகக் கைகழுவிவிட்டது மத்திய அரசு. 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை வேட்டையாடுகிறது. விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படையோ வேடிக்கை பார்க்கிறது. இதுவரை 500-க்கு மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாக் இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமாக்கப்பட்டு இருக்கின்றன. இத்தனைக்கும் மௌன சாட்சியாக மத்திய அரசு விளங்குகிறது. உலகில் எந்த நாட்டிலும் கடலில் எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சுட்டுத்தள்ளுவதில்லை. உலகத்திலேயே அவ்வாறு செய்கிற ஒரே நாடு இலங்கைதான். தன்னுடைய குடிமக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் ஒரே நாடும் இந்தியாதான். நமது மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உண்டு. தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் குடிமக்களாகவே அரசு கருதவில்லை என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை."

ஒரு உண்மையை மட்டும் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். வட இந்தியர்கள் என்றுமே தமிழர்களை மதித்ததில்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றால் அடிமைகள். தமிழர்கள் அப்படியான கீழ்த்தரமான மனப்பாண்புடனேயே தமது பெற்றோர்களினால் வழர்க்கப்படுகிறார்கள். வட இந்தியருக்கு இல்லாத திறமை தமிழருக்கு உண்டு. தம்மிடம் எந்த வகையான திறமைகள் இருக்கிறது என்பதை அறியாமல் காலத்தை வீணடிக்கிறார்கள் தமிழக மக்கள் என்பதே உண்மை.

தாம் வாழ்ந்தால் போதும் என்கிற நோக்கிலேயே இருக்கிறார்கள் பல தமிழர்கள். என்று தனது இனம் வளர்ச்சியடையுதோ அன்றுதான் பிற இனத்திவர்களின் செல்வாக்கை தாம் பெறமுடியும் என்கிற வாதத்தை சிந்திக்காமல் இருக்கிறார்கள் தமிழர்கள். சிறு மழைத்துளிதான் பெருவெள்ளம் என்பதை என்றுதான் தமிழ் மக்கள் உணர்வார்களோ? கட்சிகளுக்குள் வேறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். தேசியப் பிரச்சினை என்று வந்துவிட்டால் ஒரே குடையின்கீழ்த்தான் இணைய வேண்டும். ஒரே கட்சிக்குள் பல்வேறுபட்ட கொள்கை உடையவர்களே தமிழர்கள் என்றால் மிகையாகாது.

சமீபத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு வைபவத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றுக்கு பின்னான கருத்துக்களை முன்வைத்தார்கள். முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் பேசியதாவது, “காங்கிரஸ் வருத்தப்படக்கூடாது, மத்திய அரசு வருத்தப்படக்கூடாது, ஈழத் தமிழர்கள் வருத்தப்படக்கூடாது என்று கத்தி மேல் நிற்பது போல புத்தகம் ஒன்றை சுதர்சன நாச்சியப்பன் எழுதி இருக்கிறார். புத்தகங்களை வேகமாகப் படித்து முடிப்பவன் நான். ஆனால், இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. படிக்கும் போதே தூக்கம் வந்துவிட்டது” என்று எக்குத்தப்பாகத் தொடங்கியவர் திடீரென திசைமாறி, “எந்த ஓர் இனமும் நசுக்கப்படும் போது, போராடத்தான் செய்வார்கள். விடுதலைப்புலிகள் மட்டும் இல்லை என்றால் 30 ஆண்டு காலத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்பது உண்மை. என்ன காரண காரியம் இருந்தாலும் ராஜீவ் காந்தியை அவர்கள் கொன்றது தவறு. அந்தத் தவறு இப்போது வேறு ஒரு தவறில் போய் முடிந்தது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக 10 லட்சம் தமிழர்களைச் சுட்டுக் கொல்ல ராஜபக்சேவுக்கு அதிகாரம் கொடுக்க முடியாது. சுதர்சன நாச்சியப்பன் அடுத்து எழுதப்போகும், ‘ஈழத் தீவிற்கோர் பாலம் அமைப்போம்’ என்ற புத்தகத்தில் பிரபாகரன் செய்த நல்லது, கெட்டதுகளையும் எழுத வேண்டும்” என்று திருநாவுக்கரசு சொன்னபோது சில காங்கிரஸ்காரர்கள் தரப்பில் மெல்ல சலசலப்பு தொடங்கியது.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேச்சு இருந்தது. “ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்ததைப் போன்று வேறு யாரும் உதவிகள் செய்தது இல்லை. யாழ்ப்பாணத்தில் முன்பு ஈழத் தமிழர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை இருந்தது. இப்போது அவர்களும் மீன் பிடித் தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். யாழ்ப்பாணப் பகுதிக்குப் போய் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால், அது ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள்தான் நமது மீனவர்களைத் தாக்குகிறார்கள். சிங்கள மீனவர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை. இது, விவாத மேடை அல்ல. ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல தமிழக நலனுக்காகவும் காங்கிரஸ் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கும்” என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார் ஞானதேசிகன்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ஈழத்தின் வரலாறு இன்றுவரை தெரியாமல் இருக்கிறது போலும். ஈழத்தமிழர்கள் அன்றும் மீன் பிடித்தார்கள், இன்றும் மீன் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்று சிங்களக் கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மீன்பிடிக்கிறார்கள், அன்றோ சுதந்திரமாக மீன் பிடித்தார்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் பல பகுதிகள் இருந்த காலத்தில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்தார்கள் என்பதனை காங்கிரஸ்காரர்கள் அறியாமல் இருந்துள்ளார்கள் போலும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர்தான் கொன்றும், காயப்படுத்தியும் வருகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட மீனவர்களே கூறும்போது மீனவர்களின் பிரச்சினை என்னவென்றே தெரியாத ஜானதேசிகன் போன்றவர்கள் கூறுவது அருவருக்கத்தக்க விடயம். கோலைகாரர்களை தப்பிக்கவிட்டு மற்றவர்களைப் பழி போட்டே பழகினவர்கள்தான் ஜானதேசிகன் போன்ற காங்கிரஸ்காரர்கள்.

தமிழரின் நலன்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய தமிழர்களே அவர்களுக்கு எதிராக இருக்கும் போது தமிழர்கள் நிச்சயமாக துரும்பாகத்தான் போக வேண்டும். இவைகள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்ட வேண்டுமாயின், தமிழக மக்கள் அனைவரும் தமிழர் நலன் சார்பு விடயம் என்று வந்துவிட்டால் ஒன்றிணைந்து போராடினால் எட்டப்பர்கள் அனைவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள். வந்தேறி குடிகளெல்லாம் நம்மையாள அவர்களுக்கு தூணாக இருந்தால் நாம் நிச்சயம் துரும்பாகத்தான் வேண்டும்.

வன்னி ஆன்லைன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 10:52 am

வெறும் அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் மாதிரி தமிழ் மக்கள் இருந்தால் எப்படி நீதியைப் பெற முடியும்.


மக்கள் விழிப்படைந்து தமது சுய சிந்தனையின் அடிப்படையில் எப்போது முடிவுகளை எடுக்கிறார்களோ அப்போதுதான் அந்தச் சமூகம் வெளிச்சத்திற்குள் வந்துள்ளது என்று பொருள்

தமிழக மக்கள் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டாலே போதும் தம்மை வதைப்பவர்கள் யாரென்று அடையாளம் காண. மக்கள் சுயமாக சிந்திப்பதன் மூலமாகத்தான் நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

மக்களின் தெளிவற்ற நிலையே பல பிரச்சினைகளுக்கு காரணம்


அறிவுபூர்வமான வார்த்தைகள்.

மக்கள் மேலும் தெளிவு பெற வேண்டும், எந்த ஒரு தகவலையும் அதன் இரு புறங்களிலும் இருந்து பார்த்து முடிவு எடுக்கும் திறன் வளர வேண்டும்.

அழகிய கட்டுரை பதிந்தமைக்கு நன்றி சூப்பருங்க



சதாசிவம்
தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக