புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
2 Posts - 1%
prajai

Manimegala

Balaurushya

Saravananj
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
426 Posts - 48%

300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_m10ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு )

உங்கள் கருத்து ! [13Vote ]

  • ஆதரிக்கிறேன் !

    215%
  • எதிர்க்கிறேன் !

    1185%
  • கருத்து இல்லை !

    00%

You are not connected. Please login or register

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 24, 2012 8:54 am

ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Sopa-pipa-strike
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Stop_SOPA_Wikipedia
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) What-SOPA-and-PIPA
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) 2012-01-17_07-30-07_893.622x621

இணைய திருட்டை தடுப்பதற்கான சட்டம். இதுதான் சோபாவின் முழு விரிவாக்கம். ஆங்கிலத்தில் ஸ்டாப் ஆன்லைன் பைரசி ஆக்ட் (Stop Online Piracy Act - SOPA). அதாவது, அனுமதி இல்லாமல் பாடல்களை டவுண்லோடு செய்வது உள்ளிட்ட இணைய திருட்டுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பது தான் இந்தச் சட்டத்தின் நோக்கம்.

நோக்கத்தில் ஒன்றும் தவறு இருப்பதாக தோன்ற வாய்ப்பில்லை. மேலோட்டமாக பார்க்கும்போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும் என்கின்றனர், இதன் எதிர்ப்பாளர்கள். ஆனால், உண்மையில் இந்தச் சட்டம் இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரித்து விடக்கூடியது என்றே எச்சரிக்கின்றனர்.

இந்தச் சட்டத்தின் நோக்கம் இணைய திருட்டை தடுப்பதாக இருந்தாலும், அதற்காக முன் வைக்கப்படும் வழி இன்டர்நெட்டையே முடங்கிப் போகச் செய்யக்கூடியது என்கின்றனர்.
காப்புரிமை மீறலில் ஈடுபடும் அல்லது காப்புரிமை மீறலுக்கு துணைபோவதாக கருத்தக்கூடிய இணையதளங்களை முடக்கக்கூடிய அதிகார‌த்தை பொழுதுபோக்குத் துறையை சார்ந்த நிறுவன‌ங்களுக்கு வழங்க‌, இந்தச் சட்டம் வகை செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

காப்புரிமை மீறல் என்பது மிகவும் பொதுவான வார்த்தை. சட்டத்தை பிரயோகிக்க நினைப்பவர்கள் எதை வேண்டுமானாலும் காப்புரிமை மீறல் என கருதி புகார் தெரிவிக்க‌லாம். அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் முகவரி முடக்கப்படலாம்.

உள்ளபடியே இணையத் திருட்டில் ஈடுபட்ட இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். தப்பில்லை. ஆனால், இந்தச் சட்டத்தின்படி இணைய திருட்டில் ஈடுபடவே வேண்டாம்; ஏதாவது ஒரு வகையில் இணைய திருட்டுக்கு துணை போவதாக கருதப்பட்டால் கூட தொடர்புடைய தளத்தை முடக்கி விட‌லாம்.

திருட்டுக்கு துணை போக வேண்டும் என்று கூட இல்லை; அது தொடர்பான கட்டுரை இடம்பெற்றிருந்தால் கூட, அப்படி துணை போனதாக கருதப்படலாம். உதாரணத்துக்கு 'பாடல்களை டவுண்லோடு செய்வது சரியா?' என்று விவாதிக்கும் கட்டுரை கூட இவ்விதமாக கருதப்படலாம்.

கட்டுரை என்றில்லை பதிவுகள், பின்னூட்டங்களும் இதில் அடங்கும். ஒரு நியாயமான கட்டுரையை படித்த வாசகர்கள் பாடல் அல்லது திரைப்பட டவுண்லோடு சரியானதே என ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தாலும், அது தொடர்பாக வழக்கு தொடுக்கலாம்.

ஃபேஸ்புக்கில் யாராவது சிலர் டவுன்லோடு தவறில்லை என்று சொன்னாலே போதும் அதனை சாக்காக வைத்து ஃபேஸ்புக்குக்கு நோட்டீஸ் அனுப்பிவிடலாம் எனும் அளவுக்கு விபரீதத்தின் எல்லைக்கு செல்லகூடியது இந்தச் சட்டம் என்கின்றனர்.

இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடலாம் தான். ஆனால் வழக்கு என்று வந்துவிட்டால் நீண்ட நெடிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிவரலாம். எத்தனை நிறுவன‌ங்களுக்கு இது சாத்தியம். குறிப்பாக சிறிய நிறுவங்கள் வழக்கு என்று அலைவதைவிட சர்ச்சைக்குரிய சங்கதியை நீக்கிவிட ஒப்புக்கொள்ளலாம். இப்படி சில நிறுவனங்கள் பயந்து பின்வாங்கினால் போதும் அதையே சாக்காக வைத்து பொழுதுபோக்கு துறையினர் எதை வேண்டுமானாலும் காப்புரிமை மீறல் என கருதி மிரட்ட‌லாம்.

அதோடு இணைய சுதந்திரம் அதோகதிதான்!

அனுமதி இல்லாமல் பாடல்களும் படங்களும் கோப்புகளும் டவுண்லோடு செய்யப்பட்டு பரிமாரிக்கொள்ளப்படுவதை தடுக்க முடியாமல் ஹாலிவுட்டும் இசை உலகமும் திண‌றி வரும் வேளையில் அவற்றின் காப்புரிமையை காக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற‌த்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அறிமுக நிலையிலே இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இணைய திருட்டு என்று சொல்லப்படுவதை தடுக்கவோ தண்டிக்கவோ நட‌வடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இந்தச் சட்டம் முன்வைக்கும் தீர்வு.. அது தீர்க்க முற்ப‌டும் பிரச்னையை விட படுமோசமாக இருப்பதாக, இணையம் எப்போதுமே சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற‌வர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அது மட்டும் அல்ல, உலக முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் இணையத்தை கட்டுபாட்டில் கொண்டு வரும் முயற்சியில் அரசுகள் ஈடுப்பட்டிருக்கும் நிலையில், இந்தச் சட்டம் அத்தகைய முயற்சிக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்றும் அஞ்சப்படுகிறது.

தப்பித்தவறி இந்தச் சட்டம் அமெரிக்காவில் நிறைவேறினால், மற்ற நாடுகளிலும் இதே போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டு எதிர்ப்புக் குரலுக்காக இன்டர்நெட்டை பயன்ப‌டுத்துபவர்கள் மீது பிரயோகிக்க‌ப்படலாம்.

எனவே, 'அமெரிக்க சட்டம் தானே' என அலட்சியப்படுத்துவதற்கில்லை.

பைரசி என்று சொல்லப்படும் இணையத் திருட்டை சாக்காக வைத்து, எல்லையில்லா அதிகார‌த்தை பொழுதுபோக்குத் துறைக்கு வழங்கி, இணையத்தை முடங்கச் செய்யும் இந்தச் சட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என இணைய ஆர்வலர்கள் நினைப்பதில் வியப்பில்லை.

எனவே தான் இந்தச் சட்டம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள‌ப்படும் முன்பே அது எந்த அள‌வுக்கு ஆபத்தானது என புரிய வைத்து இணையவாசிகள் மத்தியில் விழிப்பு உண‌ர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற‌ன. மக்கள் மன்றத்தில் எதிர்ப்பு இருந்தால் எந்தச் சட்டம் தான் நிறைவேறும்?

இத்தகைய விழிப்பு உணர்வுக்காகவே எதிர்ப்புக் குரலும் தீவிரமாக எழுப்பப்பட்டு வருகின்றன.

பிரபலமான திரட்டியான ரெடிட் (reddit) தனது முகப்புப் பக்கத்திலேயே இந்தச் சட்டத்தின் தீமைகளை குறிப்பிட்டு, தனது பயனாளிகளை எதிர்ப்புக் குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது.

டிவிட்டர் பயனாளிகள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெர்விக்க விரும்பினால், ஸ்டாப் சோபா என்னும் வாசகம் தாங்கிய லோகோவை தங்கள் டிவிட்டர் பக்கத்தின் பின்னணியில் இடம் பெற வழி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 'இணையதளங்களின் கறுப்புக் கொடி போராட்டம்' என்று வைத்து கொள்ளுங்களேன்.

இந்தப் போராட்டத்தின்போது சட்டையில் கறுப்புக் கொடி குத்தி எதிர்ப்பு தெரிவிப்பது போல டிவிட்டர் பயனாளிகளும் தங்கள் பக்கத்தில் கறுப்புக் கொடியை பறக்க விடலாம்.

இதற்காக என்றே பிளாகவுட் சோபா என்னும் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் இந்த எதிர்ப்பு பட்டியை பயன்ப‌டுத்தும் வழிமுறை சொல்லப்பட்டிருப்பதோடு, இதுவரை எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்ற புள்ளிவிவரமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதோடு இதுவரை ஆதரித்துள்ள‌ டிவிட்டர் பிரபலங்களின் பட்டியலும் இடம்பெறுகிற‌து.

சட்டத்தின் தீவரத்தையும் தீமையையும் புரிந்துகொள்ள‌ உதவும் முக்கியத் தளங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், கூகுள் போன்ற இணைய ஜாம்பவான்களும் இதேபோன்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்தப் பின்னணியில் தான் ம‌க்கள் களஞ்சியமான விக்கிபீடியா, சோபா சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு நாள் முழு அடைப்பை மேற்கொண்டுள்ளது.

இது விக்கிபீடியா ஆசிரியர் குழுவினர் அதன் தீவிர உறுப்பினர்களோடு கலந்தாலோசித்து எடுத்துள்ள முடிவு. அதன் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் இந்த முடிவை ஆதரித்துள்ளார்.

சோபா ச‌ட்டத்தை முன்வைப்பவர்கள், இதனை எதிர்ப்பவர்கள், இணைய திருட்டை ஆதரிப்பவர்கள் என்று கூறி வந்தாலும் இந்தச் சட்டத்தின் வரம்புகள் எல்லையில்லாதவை மற்றும் இணைய திருட்டுடன் தொடர்பு இல்லாத விஷயங்களுக்கும் வேட்டு வைக்க கூடியது என்று ஜிம்மி வேல்ஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதார்வாக அமெரிக்க அதிபர் மாளிகை கருத்து தெரிவித்துள்ளது. காப்புரிமை மீறலை ஊக்குவிக்கும் அந்நிய தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை என்ற போதிலும், இணைய சத‌ந்திரத்தை பறிக்கும் ஒரு சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டம், அதிபர் ஒபாமாவால் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

எனினும் இதேபோன்ற மற்றொரு சட்டம் பிபா (PIPA - PROTECT IP Act - புரடக்ட் இன்டல்க்சுவல் பிராபர்டி ரைட்ஸ் - அறிவு சொத்துரிமை பாதுகாப்பு சட்டம்) அமெரிகக செனட்டில் கொண்டு வரப்பட்டிருப்பதால், இணைய சுதந்திரத்துக்கு சரியான‌ சோதனை என்றே சொல்ல வேண்டும்.

இந்த இரண்டு சட்டங்களுமே இணைய சுதந்திரத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னையின் அறிகுறிகளே என்று விக்கிபீடியா கூறியுள்ள‌து. அதற்காகவே போராட்டத்திலும் குதித்துள்ள‌து.

இந்தியாவிலும் அண்மைக் காலத்தில் இணையக் கட்டுபாடு மற்றும் சமூக வலைப்பின்னல் தளங்கள் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இணைய சுதந்திரத்துக்கு விடப்பட்டுள்ள சவாலை இணையவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

துனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் எல்லாம் சர்வாதிகார‌த்தை எதிர்த்து மக்கள் போராட இன்டர்நெட் துணை நின்றுள்ளது.

ஆனால், காப்புரிமையை காக்கும் பெயரில் அதன் ஆதார பலமான சுதந்திரம் மற்றும் கட்டற்ற தன்மைக்கே வேட்டு வைப்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல தான்.

எனவே தான் இணையத்தில் கறுப்புக் கொடி காட்டுவதற்கு நிகரான போராட்டம் நடைபெறுகிறது.

விக்கிபீடியாவும் கறுப்புக் கொடி காட்ட தீர்மானித்து, போராட்டத் தளத்தில் இறங்கியுள்ளது.

பிரபல வலைப்பதிவு சேவைத்தளமான வேர்ட்பிரசும் (Wordpress) இதேபோல கறுப்புக் கொடி காட்டுகிறது. அதன் சேவை தொடர்கிறது என்றபோதிலும் எல்லாம் கறுப்பு மயமாக காட்சி தருகிறது!

இணைய திருட்டை தடுப்பதற்கான சட்டம் என்ற பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ள 'சோபா'வுக்கு எதிரான இணையப் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்தவண்ணம் உள்ளது.

இதன் உச்சமாக, ஒரு நாள் முழுவதும் விக்கிபீடியாவின் ஆங்கிலப் பக்கங்கள் முழுமையாக மூடப்பட்டது. இப்படி பகிரங்கமான போராட்டத்தில் விக்கிபீடியா ஈடுபடுவது இதுவே முதல் முறை.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டாப் ஆன்லைன் பைரசி ஆக்ட் (Stop Online Piracy Act - SOPA) மற்றும் பிபா (PIPA - PROTECT IP Act - புரடக்ட் இன்டல்க்சுவல் பிராபர்டி ரைட்ஸ் - அறிவு சொத்துரிமை பாதுகாப்பு சட்டம்) ஆகியவை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்படவிருந்த இந்தச் சட்டங்கள், மறுதேதி குறிப்பிடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஹாரி ரெய்டு, இந்த மசோதாக்கள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, இணைய சுதந்திரம் உள்ளிட்ட விவகாரங்களைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையின் இந்த முடிவு, விக்கிபீடியா முன்னெடுத்த இணைய கறுப்புக் கொடி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

குறிசொற்கள் : சோபா , ஷோபா , SOPA , SOPA TAMIL MEANING ,

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 10:41 am

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

அனைத்து இணைய தளங்களும் வாசகர்களை குறி வைத்தே இயங்குகிறது. பெரும்பாலான வாசகர்கள் இணையத்தில் ஏதாவது இலவசமாக கிடைக்குமா என்று தான் வலம் வருகிறார்கள். இப்படி எதுவுமே கிடைக்காது என்று தெரிந்தால் அவர்களின் வலைத்தேடல் குறைந்துவிடும். இது பெரிய நிருவனங்களுக்கு வருமான இழப்பு. இதற்குத்தான் இவர்கள் சுதந்திரம், அது இது என்று கூக்குரலிடுகின்றனரோ என்று தோணுகிறது. நாம் பதிந்த ஒரு சிறு கவிதையும் நமக்கு தெரியாமல் ஒருவர் பயன்படுத்த கூடாது என்று நினைக்கும் நாம், காபிரைட் இல்லாமல் டவுண்லோட் செய்வதை விரும்புகிறோம். இது தடை செய்யப்பட வேண்டும். எந்தப் படைப்பாளிக்கும் இப்படி காப்பி செய்வது இழப்பது தான்.

இதை சுயநலம் கருதி எதிர்ப்பதை விட, மேலும் சில சட்ட திருத்தங்களைச் செய்து வெளியிட வேண்டும் என்பது என் கருத்து.

சதாசிவம்
ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 24, 2012 12:20 pm

பயனுள்ள தகவல். இதை நான் எதிர்க்கிறேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 12:27 pm

மெகா அப் லோட் இதே காரணம் தானே ... விரைவில் சோனியும் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 12:33 pm

அய்யய்யோ அப்படீன்னா இனிமே ஓசிப் படம், பாட்டு எல்லாம் போயே போச்சா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 12:35 pm

கொலவெறி wrote:அய்யய்யோ அப்படீன்னா இனிமே ஓசிப் படம், பாட்டு எல்லாம் போயே போச்சா?

போகாது வேறு ஒரு பெயரில் ஆரம்பிக்கபடும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 24, 2012 12:35 pm

இதுபோல இவர்கள் தடை செய்ய ஆரம்பித்தால் , இணைய உலகில் குறைந்தது 80% தளங்களை முடக்க வேண்டும்.

ஆனால் இத்துடன் இந்த பிரச்சினை ஓய்ந்துவிடாது , இவர்கள் இணையதளங்களை தடை செய்ய ஆரம்பித்தால் torrent , mirror technology அதிகரித்து விடும்.

ஒரேயொரு விக்கிலீக்ஸ் ஜூலியன் அஸ்ஸாஞ்சே அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டவில்லையா. அதுபோல இவர்கள் நன்றாக வாங்கி காட்டிக்கொள்ள போகிறார்கள்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 24, 2012 2:16 pm

புதிய வெப்சைட்கள் நிறயா முழைக்கும்,
நமக்கு சிரமம் என்னவென்றால் சுலபத்தில் நாம் தேடும் லிங்க் கிடைக்காது...
நாம் தேடல் அதிகரிக்கும்...

இதை நிறுத்துவது என்பது முடியாத காரியம்... impossible

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 24, 2012 2:18 pm

இதெல்லாம் பூச்சாண்டிதனம்

ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு ) Signaturexn
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 2:46 pm

இளமாறன் wrote:
கொலவெறி wrote:அய்யய்யோ அப்படீன்னா இனிமே ஓசிப் படம், பாட்டு எல்லாம் போயே போச்சா?

போகாது வேறு ஒரு பெயரில் ஆரம்பிக்கபடும் சிரி
பைரசி சங்கத்தின் தங்கத் தலைவர் இளமாறன் வாழ்க வாழ்க.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக