புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_lcapபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_voting_barபங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 23, 2012 2:37 pm

பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..?

'பொற்காலமே இனிமேல்தான்’ என்கிற தலைப்பில் ஏழாம் ஆண்டு சிறப்பிதழில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில் பங்குச் சந்தை ஆலோசகர் ஸ்ரீராம், ''தற்போதைய நிலையிலேயே உங்கள் நீண்ட கால முதலீட்டை தொடங்கலாம். இருந்தாலும், சந்தை சரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். சிறிது சிறிதாக முதலீட்டை ஆரம்பித்துவிடுங்கள்'' என்று சொல்லி இருந்தார்.

பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? P9
மேலும், நீண்ட கால அடிப்படையில் சந்தை எந்த அளவில் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களையும் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு தெளிவாக எடுத்துச் சொல்லி இருந்தார்.


தற்போது சந்தையில் ஏற்பட்டிருக்கும் 'யூ டர்னை’ பார்த்தால் அந்த பொற்காலம் இப்போதே தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஜனவரி 1-ம் தேதியில் இருந்து சென்செக்ஸ் 1126 புள்ளிகள் (ஜனவரி 19 வரை) உயர்ந்திருக்கிறது. நிஃப்டி 382 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் தயாராகிவிட்டதா, மீண்டும் காளையின் பிடியில் சென்றுவிட்டதா, பொற்காலம் ஆரம்பமாகிவிட்டதா? என்று பங்குச் சந்தை ஆலோசகர் ஸ்ரீராமிடம் கேட்டோம்.

''சந்தை கிட்டத்தட்ட ஏற்றத்துக்குத் தயாராகி விட்டது போலவே தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதை உறுதி செய்துவிடலாம்'' என்று உற்சாகமாகச் சொன்னவர், அப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.


''கடந்த டிசம்பர் மாதத்தில் சந்தை ஏறும் என்று சொன்னபோது, பெரும்பாலான அனலிஸ்ட்கள் சந்தை இறங்கும் என்று சொன்னார்கள். மற்றவர்கள் சொல்வதற்கு நேரெதிராக இருக்கிறதே! சந்தை ஏறும் என நீங்கள் மட்டும் எப்படி சொல்கிறீர்கள்? என பலர் பேர் என்னிடம் கேட்டார்கள்.


அவர்களுக்கு அப்போது சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன். அனைவரும் ஒரேமாதிரி சிந்திக்க ஆரம்பித்துவிட்டதால் சந்தை தன் போக்கினை மாற்றிக் கொள்ளும். செய்திகள் சந்தையை மாற்றுவதில்லை; சந்தைக்கு ஏற்பவே செய்திகள் வெளிவருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்தை இறங்கும்போது இன்னும் இறங்கும் என்று காத்திருப்பதும், மேலே செல்லும்போது இன்னும் மேலே செல்லும் என்று காத்திருப்பதும் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத முக்கிய தவறுகள். நமக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொண்டால் எந்த விஷயத்திலும் நமக்குப் பிரச்னை இருக்காது.

சரி, விஷயத்துக்கு வருவோம். நிஃப்டி 5177 என்பது ஒரு முக்கியமான நிலை. அந்த நிலையை உடைத்துக் கொண்டு கீழே செல்லும் பட்சத்தில் சந்தை 4500-க்கு செல்லும் என்று சொல்லி இருந்தேன். அதுபோலவே நடந்தது. அதுபோலவே 5177 என்பது இப்போது ஒரு முக்கியமான நிலை. இந்த நிலையைக் கடந்து செல்லும்போது சந்தை இன்னும் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது.

இன்னும் டெக்னிக்கலாகச் சொல்வதென்றால், 5100 என்ற புள்ளியைக் கடந்து சந்தை முடிவடைந்தால், அன்று முதலே சந்தை மேலே செல்ல ஆரம்பித்துவிட்டது என்று சொல்லிவிடலாம்.இதற்கு முந்தைய சைக்கிளின் குறைந்தபட்ச புள்ளியைவிட சந்தை கீழே செல்லாமல் திரும்பி மேலே சென்றுவிட்டது. அதே போல, அந்த சைக்கிளின் அதிகபட்ச புள்ளியான 5100 என்ற புள்ளியைத் தாண்டி செல்லும்போது, சந்தை தொடர்ந்து மேலே செல்லும் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இது மட்டுமின்றி, இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ. என்று சொல்லக்கூடிய 'ரிலேட்டிவ் ஸ்டெரெங்த் இண்டெக்ஸ்’-ம் சந்தை மேலே செல்லும் என்று காண்பித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சந்தை இறங்கியபடியேதான் இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.ஐ. இண்டெக்ஸ் தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது.

பங்குச் சந்தை - மீண்டும் காளையின் பிடியில்..? P10
இப்போதைக்கு 70 புள்ளிக்கு அருகில் இந்த இண்டெக்ஸ் இருக்கிறது. 80 புள்ளியைத் தாண்டும்போது சந்தை தொடர்ந்து மேலே செல்லுமா, செல்லாதா என்பதை உறுதியாகச் சொல்லிவிடலாம்.

கடந்த சில மாதங்களாக சந்தை இறங்கிக் கொண்டு இருந்தாலும், ஆர்.எஸ்.ஐ. ஏன் ஏறுகிறது என்ற காரணத்தைப் புரிந்துகொண்டால் சந்தை மேல் நோக்கிய நிலையில்தான் இருக்கிறது என்று எளிதாகப் புரிந்துகொண்டு சொல்லிவிட முடியும். இரண்டு காரணங்களால் ஆர்.எஸ்.ஐ. ஏறுகிறது. தொடர்ந்து சந்தை இறங்கி வந்தாலும், விற்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பலம் குறைந்துகொண்டே இருக்கிறது. மேலும், சந்தை இறங்கும் அளவுக்கு விலைகளில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.

இவற்றை எல்லாம் ஒரு புள்ளிகளில் இணைத்துப் பார்த்தால், சந்தை மேல் நோக்கிய டிரெண்டில் காளையின் பிடியில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்யலாம். அதாவது, ஆர்.எஸ்.ஐ. 40 புள்ளிகளுக்கு கீழே செல்லாத வரை சந்தை காளையின் போக்கில் இருக்கிறது என்றும், ஆர்.எஸ்.ஐ 80 புள்ளிகளுக்கு மேல் சென்றுவிட்டால் துணித்து முதலீடு செய்யலாம் என்றும் அர்த்தம்.

சந்தை 5100 புள்ளிகளுக்கு மேல் சென்று திரும்பிவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு ஏற்படலாம். 5100 புள்ளிகளுக்கு மேல் சந்தை செல்லும்போது கொஞ்சம் 'பிராஃபிட் புக்கிங்’ நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது சந்தை சரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் விற்க வேண்டாம்.

சந்தை இறங்கும்போது இன்னும் முதலீடு செய்யுங்கள்; மேலே செல்லும்போது வேடிக்கை பாருங்கள். லாபத்தை அவசரப்பட்டு எடுத்துவிடாதீர்கள். இச்சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது இதுதான்.

என் கணிப்புப்படி, கடந்த டிசம்பர் 20-ம் தேதி நிஃப்டி அடைந்த குறைந்தபட்ச புள்ளியான 4531 என்ற நிலைதான் அடுத்த சில ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச புள்ளியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சந்தை இதையும் தாண்டி இறங்கும் என நான் நினைக்கவில்லை'' என்று முடித்துக் கொண்டார்.சந்தையைப் பொறுத்தவரை அதிகபட்ச புள்ளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், குறைந்தபட்ச புள்ளி எவ்வளவாக இருக்கும் என்பதைக் கணித்து, தெரிந்துகொள்வதில்தான் சுவாரஸ்யம் அதிகம்.

அடியைத் தொட்டுவிட்டோம். இனி அடுத்து முடிதான். இந்த பயணத்தில் பங்கேற்கத் தவறுபவர்கள், எல்லாம் முடிந்தபிறகு 'ஐ ஜஸ்ட் மிஸ்ட் த பஸ்’ என்று புலம்ப வேண்டாம்.

- வா.கார்த்திகேயன்.

சந்தை உயரும்!
அடித்துச் சொல்லும் எலியட்வேவ்!
அமெரிக்காவைத் தலைமை யாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலியட்வேவ் இன்டெர்நேஷனல் இணைய தளமும் இந்திய பங்குச் சந்தை மேலே செல்லும் என்றே சொல்லி இருக்கிறது. இந்திய பங்குச் சந்தை தன்னுடைய இறங்குமுகத்தின் இறுதிகட்டத்தில் இருக்கிறது. பலவிதமான பிரச்னைகள் இருந்தாலும் சந்தை மேலே செல்வதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறது.
2009, மார்ச்சில் 8000 புள்ளிகளுக்கு அருகில் இருந்த சென்செக்ஸ் அதற்கு கீழே செல்லும் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.
ஆனால், சந்தை மீண்டும் 20000 புள்ளிகளுக்குச் செல்லும் என்று எலியட்வேவ் கணித்து சொல்லியது. எலியட்வேவ்-ன் கணிப்பு இந்த முறையும் நடக்கிறதா என்று பார்ப்போம்!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக