புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
81 Posts - 68%
heezulia
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
1 Post - 1%
viyasan
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
273 Posts - 45%
heezulia
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
18 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_m10குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Sun Jan 22, 2012 10:51 am

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே

என்ன அற்புதமான வரிகள்; எத்தனை ஆழமான கருத்துகள். பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய வைக்க வேண்டியதை அழகாக இரண்டே வரிகளில் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியுள்ள கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியது.

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதல்ல. அது கலை, அது அறிவியல். இன்றைய சூழலில் அது பெரும் சவால். “என்னங்க பெரிய கலை; அறிவியல் – அந்தக் காலத்திலே எங்க தாத்தாவுக்கு 10 பிள்ளைகள். டாக்டர், வக்கீல்னு எல்லோரும் நல்ல நிலையிலேயே இருங்காங்க. என்கூடப் பிறந்தது 8 பேரு. நாங்க எல்லோரும் நல்லாத்தான் இருக்கோம். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி குழந்தை வளர்ப்பு சவால் அது இதுன்னு சொல்லிகிட்டு என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.

உண்மைதான். அந்தக் காலத்தில் ஏராளமான பிள்ளைகளை பெற்று நன்முறையில் வளர்த்தனர். ஆனால் இன்று காலம் மாறிப் போச்சு. வாழ்க்கை முறை மாறிப் போச்சு. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, சிதறி தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதென்பது உண்மைதான்.

“ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்; இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்‘. அது நேற்றைய தாரக மந்திரம். தற்போது ஒருபடி மேலே சென்று பெரும்பாலானோர் ஒன்றுடன் நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் 5 ஆண்டுகள் 7 ஆண்டுகள் கழித்து 2-வது குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று தனிக்காட்டு ராஜாவாக வளரும் குழந்தைகளுக்கு மிதமிஞ்சி செல்லம் கொடுக்கிறார்கள். சக்திக்கு மீறி செலவும் செய்கின்றனர். இங்குதான் பிரச்சினை உருவாகிறது. இப்படி இஷ்டம் போல் வளர அனுமதித்துவிட்டு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கும்போது முரண்டு பிடிக்கிறது.

இந்த அவசரகதி உலகத்தில் குழந்தை வளர்ப்பு பிரச்சினையாகி உள்ளது.

குழந்தைகள் வளர்ப்பு குறித்து விரிவான தகவல்கள்:-

பிரச்சினை எங்கே தொடங்குகிறது?

“அலுவலகத்தில் சோர்ந்து திரும்பிய மனைவி சாப்பாடு தயார் செய்யும்போதுதான் “அம்மா எனக்கு கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடு‘ என்று குழந்தை கேட்கும். “என்னங்க கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடுக்கக் கூடாதா‘ என்று மனைவி கேட்க, “எனக்கு வேறு வேலை இல்ல பாரு‘ என்று கணவர் உறும அங்குதான் உரசல் ஆரம்பிக்கும். இதுபோன்ற நேரங்களில் குழந்தையும் முரண்டு பிடிக்கும். இதனால் அம்மா தனது ஆத்திரத்தை, இயலாமையை குழந்தையிடம் வெளிப்படுத்துவாள். இந்த கலாட்டாக்களில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைதான்.

உணர்ச்சிகளைச் சமநிலையில் (Emotional Intelligence) வைத்து நிதானமாகச் செயல்படும் தன்மை பெரும்பாலான பெற்றோருக்கு இல்லை. எதிர்ப்பு இருக்காது. திருப்பிப் பேசாது என்ற தைரியத்தில் நமது ஆத்திரம், கோபம், இயலாமையை குழந்தைகளிடம் காட்டுகிறோம். நமது கோபத்தின் வடிகால் நமது குழந்தைகள் அல்ல.

குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடுவது இல்லை என்ற குறை பரவலாக உள்ளதே?

“என் குழந்தைக்கு பால் இல்லைன்னா எதுவுமே வாய்க்குள்ள இறங்காது. டாக்டர் அவன் சாதமே சாப்பிடுறது இல்லை டாக்டர். இப்படி புலம்பும் அம்மாக்கள் பலர். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் காரணம். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதை குழந்தை சாப்பிட்டுப் பழகும். அந்தந்த காலகட்டம், வயதுக்கு ஏற்ப எல்லா உணவுகளையும் கொடுத்துப் பழக்கவேண்டும்.

“ஐயோ என் குழந்தைக்கு அது சாப்பிட்டா பிடிக்காது, இது சாப்பிட்டா பிடிக்காது‘ என்று நாமே தடுத்துவிடுகிறோம். நாம் கொடுப்பதில்லை. சாப்பிடவில்லையா விட்டுவிடுங்கள். பசி வந்தால் தானாகச் சாப்பிடும். நிறைய நொறுக்குத் தீனி கொடுத்து பழக்கிவிட்டு பிறகு சாப்பிடவில்லை என்று புலம்புவதில் பலன் இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்து முறையான உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

டாக்டர், 10 வயசாகுது – இன்னும் நான்தான் ஊட்டி விடவேண்டியதிருக்கு – இது பல பெற்றோரின் புலம்பல்.

சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். குழந்தை தானாகச் சாப்பிடும். ஒரு நாள் அடம் பிடிக்கும்; இரண்டு நாள் அடம் பிடிக்கும். நீங்கள் உறுதியாக இருந்தால் வழிக்கு வரும். எதையும் கேட்டுச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

குழந்தைகள் தவறு செய்யும் நிலையில் கண்டிக்கலாமா? அடிக்கலாமா?

கண்டித்தே ஆக வேண்டும். ஆனால் கண்டிக்கும் அணுகுமுறையில்தான் நாம் தவறு செய்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் Negative Communication செய்கிறோம். பாலைக் கொட்டிவிட்டால் “ஏய் சனியனே நீ எதுக்கு அதைப் போய் தொட்டாய்‘ என்று எரிந்து விழுவதற்குப் பதிலாக “பால் கொட்டிருச்சா, சரி பரவாயில்லை, இனி பார்த்து, கவனமாக இருக்கனும் சரியா, என்று கனிவு கலந்த கண்டிப்போடு சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை பாலை எடுக்கும்போது குழந்தை கவனமாக எடுக்கும். எதையும் பாசிட்டிவாக அணுகுங்கள். தவறை உணர வைக்க (Realise) வேண்டும். அதைவிட்டு கத்துவதால் எந்தப் பலனும் இல்லை.

அடம் பிடிக்கும் குழந்தையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

குழந்தை அடம் பிடித்தால் நம்மில் பெரும்பாலோர் அடித்து, உதைத்து நம் வீர – தீரத்தைக் காட்டுகிறோம். சரி, அடிக்காவிட்டால் குழந்தை அடங்குமா என்று கேட்பீர்கள். “சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் நாம் சொல்வதை குழந்தை கேட்கும். கஷ்டப்பட்டால்தான் நாம் எதையும் அடைய முடியும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு உணர்த்துங்கள்.

100 ரூபாய் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரியவையுங்கள். நமது வாங்கும் சக்தி இவ்வளவுதான். நமது எல்லை எதுவரை என்பதை குழந்தை தெரிந்துகொள்ளவேண்டும். சில நேரங்களில் அடிப்பதுபோல் மிரட்டவேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த நிமிஷத்திலேயே அன்பாகப் பேசி, அரவணைத்து, இப்படிச் செய்யலாமா? என்று பேசி தவறை உணரவைக்கவேண்டும்.

பொத்தி பொத்தி வளர்ப்பது (Over Protection) சரியா?

இந்தப் போட்டி மிகுந்த உலகத்தை எதிர்கொள்ளும் ஆளுமை, தைரியம் குழந்தைக்கு வேண்டும். என் குழந்தையை சின்ன வேலையைக் கூட செய்ய விட்டதில்லை. அவனுக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்று பெருமை பேசும் அம்மாக்கள் உண்டு. பொத்திப் பொத்தி வளர்ப்பதால் வளர்ந்த பிறகு தனித்தன்மையோடு செயல்படும் திறன் இருக்காது. குழந்தைக்கு எல்லாவற்றையும் பழக்குங்கள். அவன் வேலையை அவனே செய்ய அனுமதியுங்கள். அப்படிச் செய்ய சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் எதிர்கால போராட்டங்களைச் சந்திக்கும் மனபக்குவம் வளரும்.

நன்றாகப் படிப்பதில்லையே?

படிப்பு என்றாலே வேப்பங்காயாகக் கசக்கிறது. எங்களுக்காகப் படிக்கிறான். ஆனா அவனுக்கு ஆர்வமே இல்லை என்பது பல பெற்றோரின் புகார். அவனைப் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. புத்தகத்தை எடுத்தாலே அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. படிப்புன்னா வேப்பங்காயா கசக்கிறது. இது பெற்றோர் பலரின் புலம்பல். குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெரிய கலை. பள்ளியில் இருந்து வந்தவுடன் குழந்தைகளிடம் பாசமாகப் பேசி இளைபாற விடுங்ள். விளையாட்டு போன்ற மனதுக்குச் சந்தோஷமான செயல்களில் ஈடுபட அனுமதியுங்கள். இயந்திரத்தனமாகச் செய்வதால்தான் சுமுகமான சூழ்நிலை மாறி படிப்பு கசப்பாகிவிடுகிறது. குழந்தை முரட்டுத்தனமாக செயல்படுவதற்கு இதுதான் காரணம்.

முதலில் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உனக்கு என்ன கஷ்டம் என்று அமைதியாகக் கேளுங்கள். அவனது பேச்சுக்கும் காது கொடுங்கள். கண்ணா படிப்புதான் உனக்கு வசதிகளை வாங்கித் தரும் என்று உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தை 50 மதிப்பெண் வாங்கியிருந்தால். பரவாயில்லடா கண்ணா 50 மார்க் வாங்கி பாஸ் செய்திருக்க, அடுத்த முறை 80 மார்க் வாங்கனும், உன்னால முடியும். “படிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சினை‘ என்று கனிவோடு அணுகுங்கள்.

குழந்தையின் சின்ன, சின்ன வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை ஏதாவது படம் வரைந்தால் அதைப் பாராட்டுவதை விட்டு சனியன் படிக்க துப்பு இல்லை, படம் வரையறான் என்று திட்டி குழந்தையின் திறமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள். எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதில் அவன் திறமையை வளர்ப்பதற்கு உதவுங்கள்.

என் மகன் டாக்டராக வேண்டும் என்று நினைப்பதில் தவறு என்ன?

நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக வேண்டும் என்று அவன் விரும்பினால் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவனை டாக்டராக்கிக் காட்டுங்கள். அவன் விளையாட்டு வீரராக வேண்டும், இசைக் கலைஞர் ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தடை போடாதீர்கள்.

5 விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பதில் குறைபாடுகள் (learning disablity) இருக்கும். அதைச் சரி செய்யுங்கள். எதில் திறமை உள்ளது எனக் கண்டறிந்து அதில் “நம்பர் ஒன்‘ ஆக்குங்கள். அதைவிடுத்து அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும்.

நமது குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகள் உண்டு என்பதை பெற்றோர் உணரவேண்டும். அட நாங்க என்ன, அவனுக்குக் கெடுதலா பண்ணப்போறோம் என்று பல பெற்றோர் சொல்கின்றனர்.

நிச்சயமாக எந்தப் பெற்றோரும் குழந்தைக்குக் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. குழந்தையின் அறிவாற்றல், இயல்பான திறமை, அவனது விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப பாதை அமைத்துக் கொடுங்கள். நிச்சயமாக சாதித்துக் காட்டுவான். இதில் தவறு செய்யும்போதுதான் பல குழந்தைகள் சரியாகப் படிக்காமல் போய்விடுகின்றனர்.

குழந்தை சரியாக படிக்காத நிலையில் பெற்றோர் அதிருப்தி அடைந்து வெறுப்பைக் காண்பிக்கின்றனர். பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.

தனித்துச் செயல்பட…: எல்லாக் குழந்தைகளுக்கும் தனிச்சையாக காரியங்களைச் செய்யும் திறமை உண்டு. ஆனால் நாம்தான் “என் செல்லத்தால் அதைச் செய்ய முடியுமா இதைச் செய்ய முடியுமா? என்று கூறி எதையும் செய்யவிடுவதில்லை. தனது தேவைகளை தானே செய்து கொள்ள பழக்க வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைத் தானே செய்யப் பழக்க வேண்டும். அதில் சில தவறுகள் செய்யும்போது பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். உனக்கு ஒன்னுமே வராது. நீ உருப்பட்ட மாதிரிதான் என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தை காயப்படுத்தாதீர்கள்.

குழந்தையைப் பற்றி கணவர் மனைவிடமும், மனைவி கணவரிடமும் குறை கூறி பேசக் கூடாது. கணவன் – மனைவி இருவரும் ஒருமித்து செயல்பட்டு உனது நலனுக்குத்தான் எல்லாம் செய்கிறோம் என்பதை குழந்தையிடம் புரிய வைக்க வேண்டும்.

பருவ வயது பிரச்சினைகளைச் சமாளிக்க வழி என்ன?

பருவ வயது மிகவும் ஆபத்தானது. நமது குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டிய காலம் அது. செலவு செய்ய ரூ. 100 கேட்டால், நியாயமாகப்பட்டால் கொடுங்கள். ஆனால் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். கணக்கு கேளுங்கள். பெண் – ஆண் நட்பு தவறில்லை. ஆனால் எல்லையைச் சுட்டிக்காட்டுகள்.

ஆரோக்கியமான செக்ஸ் கல்வி அவசியம். நமது குழந்தை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அதே நேரத்தில் ஏமாந்துவிடக் கூடாது. நாம் குழந்தை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குழந்தை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குறையும்போது பிரச்சினை ஏற்படுகிறது.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டி நெறிகள் சொல்லப்படுகின்றன அவை:

குயவர் (Potter): பெற்றோர் தொழில் திறன் மிக்க குயவர் போல் செயல்படவேண்டும். மண்ணைப் பிசைத்து, பக்குவப்படுத்தி அழகிய, கலைநயமிக்க மண் பாண்டங்களை உருவாக்குவது போன்று சமூகத்துக்குப் பயன்தரக் கூடிய சிறந்த குடிமகனாக குழந்தையை வளர்க்க வேண்டும்.
தோட்டக்கரார் Gardener மண்ணை சீர்படுத்தி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, பராமரித்து, களை எடுத்து, மரமாகி காய் காய்த்து கனி கிடைப்பது போல் குழந்தை நல் முறையில் வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். உடலுக்கும் உள்ளத்துக்கும் வளம் தரக்கூடிய சத்துப் பொருள்களை வழங்கவேண்டும். அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தீய விஷயங்களை நீக்கி ஒரு தோட்டக்காரர் போல் பெற்றோர் செயல்பட வேண்டும்.
வழிகாட்டி: குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக நல்ல ஆசானாக இருந்து நல்லது எது – கெட்டது எது, நற்குணங்கள் எவை, தீய குணங்கள் எவை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். வளைந்து கொடுக்கும் தன்மை. விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒட்டி வாழும் தன்மை ஆகியவற்றை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அதே வேளையில் நமது விருப்பு – வெறுப்புகளை அவர்களிடம் திணிக்கக்கூடாது.
ஆலோசகர்: குழந்தைக்கு நல்ல ஆலோசகராக இருக்கவேண்டும். நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும். உணர்ச்சிகளை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கவேண்டும். வெற்றி – தோல்வி கையாளும் பக்குவம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுங்கள்.
ரோல் மாடல் (Roll Model): உங்கள் குழந்தையின் நல்லது. கெட்டது எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் சிகரெட் பிடித்தால் உங்கள் குழந்தையும் சிகரெட் பிடிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் பொய் சொன்னால் உங்கள் குழந்தையும் பொய் சொல்லும். மொத்தத்தில் உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் ரோல் மாடல். அதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தவறுகளை, குறைகளைச் சரி செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் குழந்தை இச் சமூகத்தை வழி நடத்தும் குழந்தையாக வளரும்.

உங்கள் குழந்தை விரும்பும் சிறந்த பெற்றோரா?

நீங்களே முடிவு செய்யுங்கள்!

உங்கள் குழந்தையை நீங்கள் எப்படி வளர்க்கிறீர்கள்? நீங்களே தெரிந்துகொள்ள இதோ ஒரு பரீட்சை – கீழே உள்ள கேள்விகளுக்கு நான்கு வகையான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதோ அந்தப் பதிலை டிக் செய்யவும்.

கேள்விகள்

குழந்தை கேட்பதையெல்லாம் நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்களா?
உங்கள் குழந்தையை மிகவும் பொக்கிஷம்போல் (Possessive) வளர்க்கிறீர்களா?
குழந்தைகளின் அன்றாடக் காரியங்களை (குளிப்பது, ஆடை அணிவது, சாப்பிடுவது, ஷூ போடுவது போன்றவை) அவர்களே செய்து அனுமதிப்பீர்களா?
குழந்தை அழுது அடம்பிடித்தால் உடன் பணிந்துவிடுவீர்களா?
குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவீர்களா?
குழந்தைகளைத் தனித்துச் செயல்படவிடுவீர்களா (அருகில் உள்ள கடைக்குச் செல்வது போன்றவை)?
குழந்தைகளுக்கு வேண்டிய பொருள்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்குவதில் அவர்களின் விருப்பத்துக்கேற்ப செய்வீர்களா?
உங்கள் குழந்தையை இடம், பொருள், காலம் அறிந்து செயல்பட எடுத்துச் சொல்வீர்களா?
குழந்தையின் முன் நீங்கள் இருவரும் (தாய், தந்தை) சண்டை போட்டுக் கொள்வீர்களா?
தாய் பற்றி தந்தையோ, தந்தை பற்றி தாயோ குழந்தை முன் குறை கூறிப் பேசுவீர்களா?
டி.வி. பார்ப்பது, கதைப் புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிடுவீர்களா?
உங்கள் குழந்தைகளின் செயல்களை சந்தேக நோக்குடன் பார்ப்பீர்களா?
குழந்தைகளுக்கு வேண்டியவற்றைச் செய்துவிட்டு, வாங்கி கொடுத்துவிட்டு சொல்லிக்காட்டுவீர்களா?
உங்கள் குழந்தைக்கு அவர்கள் விரும்பும் வகையில் அன்பு, பாசம் காட்டுவீர்களா?
சகோதர, சகோதரியைப் பாராட்டி குழந்தையைக் குறை கூறுவீர்களா?
குழந்தையின் சிறிய தவறைப் பெரிதுபடுத்திப் பேசுவீர்களா?
நாம் கஷ்டப்பட்டாலும் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்று கருதி சக்திக்கு மீறி செய்வீர்களா?
குழந்தைகள் தங்கள் பிரச்சினைகளை, தேவைகளைச் சொல்லும்போது காது கொடுத்து அமைதியாகக் கேட்பீர்களா?
உங்கள் இருவரிடையே (தாய் – தந்தை) உள்ள மன வேற்றுமைகளை குழந்தை முன் காட்டுவீர்களா?
குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்து அவர்களைக் கண்காணிப்பீர்களா?
உங்களுடைய பதற்றம், பரபரப்பு, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளைக் குழந்தை மீது காட்டுவீர்களா?
குழந்தைகளிடம் குடும்பப் பிரச்சினைகளைக் கலந்து பேசுவீர்களா?
குழந்தைகளுக்கு சிறிய, சிறிய பொறுப்புகளைக் கொடுப்பீர்களா?
குழந்தையை பாராட்டும் நேரத்தில் பாராட்டி, கண்டிக்கும் நேரத்தில் கண்டிப்பீர்களா?
குழந்தைகளிடம் அன்பு, கண்டிப்பு, பாசம் காட்டிப் பழகுவீர்களா

நீங்கள் நல்ல பெற்றோரா என்ற புதிருக்கான விடை

எப்பொழுதும் இல்லை =1 சில நேரங்களில் = 2 அடிக்கடி = 3 எப்பொழுதும் =4

நீங்கள் டிக் செய்துள்ள எண்களை கூட்டி மொத்தத் தொகை என்ன என்று பாருங்கள். உங்கள் மதிப்பீடு 58-க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தை விரும்பும் பெற்றோர்.

உங்கள் மதிப்பீடு 58-க்கும் அதிகமாக இருந்தால் குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் சில மாற்றங்கள் செய்துகொள்ளவேண்டும். அதாவது குழந்தைகளைக் கண்டிக்க வேண்டும். ஆனால் அன்பு, பாசம் காட்டி கனிவோடு கண்டிக்கவேண்டும். பாராட்ட வேண்டிய விஷயங்களுக்கு குழந்தையைத் தக்க நேரத்தில் பாராட்டவேண்டும்.

தன் காரியங்களை (உதாரணம்: சாப்பிடுதல், ஆடை அணிதல் போன்றவை) குழந்தையே செய்ய பழக்கவேண்டும். குழந்தைகளைப் பொத்தி பொத்தி (Over protection) வளர்க்கக் கூடாது.

படிப்பில் பிரச்சினையா?

குழந்தை 51-க்குப் பதிலாக 15 என்று எழுதிவிட்டால், “மக்கு, படிப்பிலே கவனமே இல்லை‘ – எப்பவும் டிவி பார்த்துகிட்டு, கார்ட்டூன் பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி கவனம் இருக்கும் என்று பலர் திட்டித் தீர்க்கிறோம். சிலர் கோபத்தில் அடித்து, உதைத்து அக் குழந்தைக்கு படிப்பு என்றாலே வெறுப்பு ஏற்படும் அளவுக்கு நடந்துகொள்வார்கள். இது சரியல்ல. இதனால் குழந்தையின் படிப்புத் திறன் மேலும் பாதிக்கப்பட்டு அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் ஆபத்து உள்ளது.

இதை கற்றலில் குறை (Learning Difficulty) என்கிறோம். இக் குறையுள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அறிவுத்திறன், சிந்திக்கும் திறன் எல்லாம் நன்றாக இருக்கும். சிறு சிறு குறைகளால் தவறு செய்வார்கள்.

“படிப்பில் அதிகக் கவனம் செலுத்துவதே இல்லை; படித்த அனைத்தையும் உடனே மறந்துவிடுகிறான். அதிக எழுத்துப் பிழைகள், கல்வியில் சரிவரத் தேர்ச்சிஅடைய முடிவதில்லை, படிப்பைத் தவிர மற்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறான்‘ எனப் பெரும்பாலான பெற்றோர் புலம்புகின்றனர்.

மேற்கூறிய அனைத்தும் கற்றலில் உள்ள குறைபாட்டால் ஏற்படுவது அல்லது கற்கும் திறனில் உள்ள இயலாமையைக் குறிக்கும்.

கற்றலில் குறை (Learning Difficulty) என்றால் என்ன?
படிப்பதிலும் எழுதுவதிலும், உச்சரிப்பிலும் மற்றும் கணிதம் போன்றவற்றை கற்பதிலும் ஏற்படும் குறைகளையே கற்றலில் உள்ள குறைபாடு என்கிறோம்.
கற்கும் திறனில் உள்ள இயலாமைகளுக்கு மூளையில் ஏற்படும் ஒரு சில நரம்பியல் செயல் மாற்றங்களின் நிகழ்வே ஆகும்.
இது ஒரு குறைபாடு – நோய் அல்ல.ஊ குறைந்த மதிப்பெண்கள், எழுதுவதில் ஏற்படும் பிழைகள், எழுதுவதில் தாமதம் போன்றவற்றில் இக் குறை தெரியவரும்.
ஒரு குழந்தையின் இயலாமை மற்றும் அதன் பாதிப்பின் அளவை நரம்பியல் மருத்துவ உளவியல் சோதனை (Neuropsychological Assessment) மூலம் தெரிந்துகொள்ள இயலும். சிறப்புப் பயிற்சி முறைகள் மூலமே இக் குறைபாட்டை நீக்க முடியும்.

சிறப்புப் பயிற்சி முறைகள்: இது டியூஷன் வகுப்பு அல்ல.

மொழியின் அடிப்படை எழுத்து வரிசைகளைக் கற்றுக் கொடுத்தல்.
சொற்களின் உச்சரிப்பு முறைகளை கற்றுக்கொடுத்தல்
எண்களின் வரிசைககளைக் கற்றுக் கொடுத்தல்
கணிதத்தில் உள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றின் வழிமுறைகளைக் கற்றுக் தருதல்.
பெருக்கல் வாய்ப்பாடு கற்றுத் தருதல்.
எழுத்து – எண்வரிசை, வழிமுறை – எண்களைப் படிக்கவும் எழுத்து முறையில் எழுதவும் கற்றுக் கொடுத்தல்.
எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தல். ஆங்கிலப் பாடத்தில் கேபிட்டல் (Capital) ஸ்மால் (Small) எழுத்துகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுதல். சில குழந்தைகள் க்ஷ -க்குப் பதிலாக க் என்று எழுதுவார்கள். அதாவது ball என்பதற்குப் பதிலாக dall என்று எழுதுவார்கள். அதுபோல் ல் -க்குப் பதிலாக வ், த்-க்கு பதிலாக ண் என்று எழுதுவார்கள். அதுபோல் Pencil என்பதற்குப் பதிலாக Pencile என்று எழுதுவார்கள். Happily என்பதற்குப் பதில் Happly. இதுபோன்ற எழுத்துப்பிழைகள் இருக்கும். அதுபோல் படிக்கும் போது was என்பதை saw எனப் படிப்பார்கள்.தமிழ்: மாம்பழம் என்பதை “மாம்பலம்‘ என்றும் பள்ளிக் கூடம் என்பதை “பல்லிக்குடம்‘ என்றும் கண்ணாடி என்பதை “கன்னடி‘ என்றும் மந்திரம் என்பதை “மண்திரம்‘ என்றும் எழுதுவார்கள். இதுபோன்ற எழுத்துப் பிழைகளை வாக்கியம் எழுதும்போது பார்க்கலாம். சிலர் ஓ எழுத்தைத் தலைகீழாக எழுதுவார்கள்.
கணக்கு: கணக்கை எடுத்துக்கொண்டால் 39 உடன் 3-ஐ கூட்டச் சொன்னால், 9-ஐயும் 3-ஐயும் கூட்டி கீழே 12 என்று எழுதிவிட்டு, 12-க்கு முன்பு 3-ஐயும் போட்டு, “312′ எனத் தவறாக எழுதிவிடுவார்கள். இதுபோல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாவற்றிலும் பிரச்சினை வரும். இக் குறைகளை உரிய பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம்.

நன்றி தினமணி - chittarkottai.com



[You must be registered and logged in to see this image.] "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக