Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
4 posters
Page 1 of 1

இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.
ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்குப் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் பெரியார் குரல்தான்.
நம்முடைய பருவத்தில் பார்க்காவிட்டாலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றைக்குக் கூட்டமென்றால் மக்கள் திரளாகக் கூடுகின்றார்கள். பலமாகக் கை தட்டுகிறார்கள். ஆனால் பயங்கர வைதீகம் தலை விரித்தாடிய நாளில், ஆண்டவனைப் பற்றிப் பேசினால் அம்மை வரும், காலரா வரும், என்று பயமுறுத்திய நாடகளில் கடவுளைப் பற்றி அடிமுதல் நுனிவரை பேச ஆரம்பித்தது பெரியார்தான். முடங்கிக் கிடந்த இனத்தின் வளர்ச்சிக்கு முதற் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.
தந்தை பெரியார் போட்ட பாதையில் இன்று பலபேர் கார் விடுகிறார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த அந்த நாளில், எந்த வழியாய்ப் பாதை வெட்டுவது என்பது கூட அறியாதிருந்த நேரத்தில், செருப்பு வீச்சு, சாணியடி, பன்றி விரட்டு , பாம்பு விடுதல் போன்ற வைதீக வெறியாட்டங்களுக்கு நடுவில், சாதியின் பல்லைப்பிடுங்கப் படாதபாடு பட்டவர் ஐயா அவர்கள்தான், நேற்று மதுரையில் பேசிய நேரு சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். வடநாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசாமல் தமிழகத்தில் அவர் பேசியதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உழைப்புதான்.
இன்றைக்கு அரசியல் பேசுவது மிகச் சாதாரணம்; சுலபமானது. காதல் கதை பேசி அரசியல்வாதியாகி விடலாம். கடுமையான அரசியல் தொண்டைவிட அலங்காரப் பேச்சால் சுலப வியாபாரம் நடக்கிறது. ஆனால் அன்று ஐயா எடுத்துக் கொண்ட பணி பயங்கரமானது. காங்கிரஸ் கண்ட ஆதிக்க சக்தியினையும் அதனால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு வெளியேறினார். காங்கிரசிற்குள்ளேயும் பேத உணர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது. ஆச்சாரியார் - காமராசர் போர் நடக்க ஆரம்பித்தது. ஆரம்ப முதலே பெரியார் காமராசரை ஆதரிக்கத் தயங்கவில்லை. காங்கிரசிலேயும் ‘பெரியார் வெளியே இருக்கிறார்; இங்கு ஏதாவது நடந்தால் பெரியார் மடியில் விழலாம்’ என்ற துணிச்சல்தான் ஆச்சாரியாரை எதிர்க்கும் துணிவு பிறந்தது.
அக்கிரகாரத்தில் நடக்கக்கூட முடியாமலிருந்த நிலையை அடித்துத் தகர்த்தவர் பெரியார், தண்ணீர்ப் பந்தல்களில் பிற்பட்ட மக்களுக்கு மூங்கில் குழாய் மூலந்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அது இன்று மாறியது ஐயாவால்தான். ஓட்டல்களில் வேலை பார்ப்பவனைச் சாமி என்று அழைத்தனர் அப்போது, ‘ஆண்டவனும் சாமி இவனும் சாமியா? எனக் கேட்டு, இன்று அதிகாரம் செய்யுமளவுக்கு உணர்ச்சியூட்டியவர் பெரியார். பெரியார் முன்பு பேசிய பேச்சுத்தான் சமுதாய சீர்திருத்தம் பற்றி பேச மற்றவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது, ஐயா அவர்கள் அரசியலைப் பற்றி ஒரு வரையறை வகுத்தார். சட்டசபை செல்வது பொறுக்கினத்தனம் எனக் கூறி, அங்கு நுழையாமல் துணிந்து நல்ல கருத்துகளைச் சொல்பவர் ஐயா ஒருவர்தான்.
தி.மு.க. பிறந்த நேரத்தில், “எங்களுக்கென்று யாரும் தலைவர் கிடையாது. தலைவர் நாற்காலி காலியாகி இருக்கிறது. ஐயாவின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்,” என்று பேசி முழங்கினர். நான் கட்சிக்கு சென்ற நேரத்தில்கூட தி.மு.க.வில் கடவுள் எதிர்ப்பு கோஷம், பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி காணப்பட்டன.
“சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளப்பதுதான் எந்நாளோ? பெண் கேட்டு சேய் கேட்டுப் பித்தான சாமிகளை மண்போட்டு மூடுவதும் எக்காலம்” என்று பாடியவர்கள், திருச்சியில் கூடித் தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தவுடன் முழு நாத்திகத் தன்மையிழந்து, ‘பார்ப்பனீயம் போனால் போதும்; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே முழங்கும் எங்கள் கழகம்’ என முழங்கத் தொடங்கினர். ஆனால் ஐயா அவர்கள் என்றும் தன் பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை.
மக்களைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள் எனக் கூறும் துணிச்சல் படைத்தவர் ஐயா ஒருவர்தான். ஐக்கோர்ட் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் பேசும்போது ‘இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை’ எனத் துணிந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான். அவர் கட்டுப்பாடு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதில்லை; கண்ணியம் பற்றி ஒரு மணி நேரம் முழங்குவதில்லை; ஆனால் கட்சியில் கட்டுப்பாடு குலைந்தால் அந்தக் கிளை அப்போதே கலைக்கப்படும். அத்தகைய இராணுவத் தலைவருக்குரிய தகுதி ஐயா ஒருவரிடந்தான் உண்டு.
வீரம், குருதி, என்றெல்லாம் அவர் ஒரு நாள் கூடப் பேசியதில்லை, அவர் ஒரு செயல் வீரர். வணங்குவதற்குரிய தேசியக் கொடி என்றனர் காங்கிரசார்! அது வெறும் துணி என்றார் ஐயா. சட்டம் என மிரட்டினார்கள்; அது வெறும் காகிதம் என்றார்!
சட்ட எரிப்புப் போரில் 9 மாத காலம் சிறை சென்றிருந்தார்; பல திராவிடர் கழக வீரர்கள் சிறை சென்றனர். 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் பல்வேறு தண்டனைகள் பெற்றனர். போர்க்களம் சென்ற திராவிடர் ‘மாண்டாயா?’ என அழுவதைப் பார்க்கிறோம். திராவிடர் கழக வீரர்களில் 15 பேர் மரணமடைந்தனர்.
அந்தப் பிணங்களைக் காட்டி ஐயா அவர்கள் தன் பிரசாரத்தைச் செய்யவில்லை. சொந்தப் பிணங்களைப் பற்றியே ஐயா அவர்கள் பிரமாதப்படுத்தவில்லை. சில கட்சியினர் சாலைப்பிணங்களைச் சபையில் தூக்கிவைத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பார்கள். உண்மையில் யார் வீரர்? எது படை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எதிர்த்தவர் பகுதிகளில் நின்றவன் நான். இன்று என் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐயாவை ஆம்பூரில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் இன்னும் 80 ஆண்டு வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை தோழர் சம்பத் அவர்கள் 60 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். திரும்பிவரும்போது 8 பவுண்ட் எடை குறைந்து வந்தார். ஆனால் ஐயாவின் உடல் எவ்வளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தளராத தன்மை படைத்தது. பக்கத்து நாட்டுக்காரன் அவருடைய போட்டோவைப் பார்த்தால் கூட மதிக்கக்கூடிய கம்பீரம் வாய்ந்த தலைவர் ஐயா அவர்கள்.
பெரியாரிடம் உத்தமமான தொண்டர்கள்தாம் இருக்க முடியும். காலணாக்கூட சம்பாதிக்க முடியாது. கட்டுப்பாடு மீற முடியாது; இருந்தாலும் எண்ணற்ற தொண்டர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஐயாவின் தன்னலமற்ற பணியையே குறிக்கிறது.
(பெரியார் அவர்களுக்கு 8.10.61 அன்று சிதம்பரத்தில் கார் பரிசளித்த நிகழ்வில் நிகழ்த்திய உரை)
- ஆர்.பி. சங்கரன்
(சம்பத் கண்ணதாசன் பார்வையில் பெரியார்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
சீனா, இந்தியா மீது போர் தொடுத்த நேரம், இவர் நான் கோயிலுக்குள் என் மக்களை அழைத்துக் கொண்டு செல்வேன் எனப் போராடினாராம்.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.

zazgopi- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 03/01/2012
Re: பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
கோவில் கூடாது என்று சொல்லவில்லை கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட கூடாது என்று நினைதவர் பெரியார கோவில் நுழைவு போராட்டம் நடதியதும் தப்பு என்று சொல்லலாமா ?பெரியார் மட்டும் இல்லையென்றால் தமிழ் சமூகம் இன்னும் மதம் ஜாதி என்கிற புதை மணலில் சிக்கியிருக்கும் ........................
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
ஜாதி மதம் என்று இந்தியாவின் பிற மாநிலத்தை ஒப்பிடும் பொது தமிழ்நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கு காரணம் பெரியார் தான்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
இப்ப நாம பப்புக்குள்ளையும், டாஸ்மாக்கிற்குள்ளையும் தான் நுழைவதற்கு தயாரா இருக்கிறோம். அவரோ ஒரு சமூகமே சீர்படzazgopi wrote:சீனா, இந்தியா மீது போர் தொடுத்த நேரம், இவர் நான் கோயிலுக்குள் என் மக்களை அழைத்துக் கொண்டு செல்வேன் எனப் போராடினாராம்.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.
கோவில் நுழைவு போராட்டம் செய்தார். குறை இல்லாத மனிதனே இல்லை.
அவரிடம் இருந்த நிறைகள் சமூகத்திற்கு நன்மை பயத்ததை மட்டும் பாருங்களேன்.
உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் படிக்காதீர்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
» 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
» 1000 அநாதை பிணங்களை நல்லடக்கம் செய்த தோழர்! காணொளி இணைப்பு
» சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு-- வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால்
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum