ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
வாசித்ததும் நேசித்ததும்... Poll_c10வாசித்ததும் நேசித்ததும்... Poll_m10வாசித்ததும் நேசித்ததும்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசித்ததும் நேசித்ததும்...

Go down

வாசித்ததும் நேசித்ததும்... Empty வாசித்ததும் நேசித்ததும்...

Post by சிவா Wed Jan 18, 2012 6:34 am

தமிழண்ணல் - தமிழறிஞர்

நான் இளைஞராக இருந்த காலத்தில், நல்ல நடையுடன் கூடிய புத்தகங்களை, குறிப்பாக திரு.வி.க.வின் நூல்களை ஆர்வத்துடன் படிப்பேன். மு.வ. வின் நூல்களிலும் ஆர்வம் அதிகம். கதைகளில் புதுமைப்பித்தன், நா.பார்த்தசாரதி போன்றோர் என்னை அதிகம் ஈர்த்தவர்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என் பார்வை சங்க இலக்கியங்களின் பக்கம் சென்றது. மு.வ., வ.சுப.மாணிக்கம் போன்றோரின் தூண்டுதலால் சங்க இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன். ஆழ்ந்த ஆய்விலும் ஈடுபட்டேன். சங்க இலக்கியம் குறித்த சிறந்த ஆய்வு நூல்களையும் வாங்கிப் படித்தேன். குறிப்பாக தமிழ் இலக்கண நூல்களில் எனக்கு ஆர்வம் அதிகம்.

இப்போதுள்ள இளைஞர்களுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் சற்றுக் குறைவாகத்தான் உள்ளது. பல்கலைக்கழக மாணவர்களாகட்டும், தமிழ்த்துறை மாணவர்களாகட்டும் ஓரளவு பழைய நூல்கள் மற்றும் கட்டுரைக் குறிப்புகளை மட்டுமே படித்துவிட்டு தேர்வு எழுதிவிடலாம் என்று நினைக்கிறார்கள். முழு நூலையும் பயிலுவதில்லை. ஆய்வு நூல்களையும் வாங்கிப் படிப்பதில்லை.

தமிழ்ப் படைப்பிலக்கியத்துறை, உலக இலக்கியங்களுடன் போட்டியிடும் அளவுக்கு வளர வேண்டும். அது குறிப்பிட்ட எல்லையோடு முடிந்துவிடக் கூடாது. மலையாள மொழியில் ஒரு நாவல் வெளிவந்தால், உடனே அந்நாவல் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிடுகிறது. அந்நிலை தமிழ் நூல்களுக்கும் வர வேண்டும். தமிழிலும் மொழிபெயர்ப்பு நூல்கள் உடனுக்குடன் வெளிவர வேண்டும். படைப்புலகைப் பொருத்தவரையில், கவிதை, கட்டுரை, ஆய்வு போன்ற தளங்களில் மலையாளம், இந்தி மொழிக்காரர்கள் நம்மை முந்துகிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்நிலை மாறவேண்டும்.

மாணவர்கள் அதிகம் சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவற்றை தொடர்ச்சி அறாமல் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். மரபு வழிப்பட்ட தொடர்ச்சி இருக்க வேண்டும். தற்போதைய படைப்பிலக்கியவாதிகளிடம் மரபு வழிப்பட்ட தொடர்ச்சி இல்லை. அந்தத் தொடர்ச்சியோடு எழுதினால்தான் பல கிளைக்கதைகள் வெளிவரும். பாரதியைப் படிக்கிறார்கள்; ஆனால், முழுமையாகப் படிப்பதில்லை.

பல இடங்களில் மாநாட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், சொற்பொழிவுகள் போன்றவை கட்டுரை எழுதுபவர்களுக்கு பணம் கொடுத்து ஊக்கப்படுத்துவதால் பல இளைஞர்கள் கட்டுரை எழுதி வருகின்றனர். அதனால் மூல நூல்களை அதிகம் படிக்கிறார்கள். மூல நூல்களைப் படிக்கும் ஆர்வம் இதனால் ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.


வாசித்ததும் நேசித்ததும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாசித்ததும் நேசித்ததும்... Empty Re: வாசித்ததும் நேசித்ததும்...

Post by சிவா Wed Jan 18, 2012 6:34 am

பேரா. தேவ.பொ.சோமசுந்தரம் - கல்வியாளர்

படிப்பதற்கு நேரம் காலம் கிடையாது. "கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்' என்று கூறுவார்கள். ஆர்வம் இருந்தால் படிக்கத் தோன்றும்.

என் இளமைக் காலத்தில், சரித்திர நாவல்களில் "பார்த்திபன் கனவு', "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' ஆகிய நாவல்கள் என் மனதைக் கவர்ந்தவை. அதுபோல கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்', தேவனின் "கோமதியின் காதலன்' போன்றவை என் மனதைக் கவர்ந்தவை. வாழ்க்கை வரலாற்று நூல்களில் மகாவித்துவான் "மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு', உ.வே.சா.வின் "என் சரித்திரம்', "தியாகராசச் செட்டியார் வரலாறு' ஆகியவை இளம் வயதில் என் மனதை மிகவும் கவர்ந்த நூல்கள்.

கற்க வேண்டிய நூல்கள் எவ்வளவோ உள்ளன. எல்லாவற்றையும் எல்லோராலும் படிக்க முடியாது. தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னப்பறவை நீரை மட்டும் விட்டுவிட்டு, பாலை மட்டும் பருகுமாம். அதைப்போல, எவ்வளவு நூல்கள் இருந்தாலும் நமக்குத் தேவையான பல நல்ல நூல்களைக் குறைந்த காலத்தில் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

தேவையானவற்றைப் படிக்க வேண்டும் என்பதை, ""பால் உண் குருகின் தெளிந்து'' என்று ஒரு பாடல் குறிக்கின்றது. உலகத்தில் பிறந்ததன் பயன் அறம், பொருள், இன்பம், வீடு என்பதை நன்னூல் என்ற இலக்கண நூல் தெரிவிக்கிறது. இதனையே வடமொழியில் "நான்கு புருஷார்த்தங்கள்' என்று சொல்கிறார்கள்.

"பொறாமை' கொள்வது நல்லது என்று குமரகுருபரர் கூறியதை என் இளமைக் காலத்தில் படித்திருக்கிறேன். யாரைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டும்? என்ற கேள்விக்கு தன்னைவிட அதிகம் படித்தவரைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டும்; தன்னைவிட குறைந்த செல்வம் உடையவரைக் கண்டு ஒப்பிட்டு தம்முடைய செல்வம் மிக்கது என்று மகிழ்ச்சியடைய வேண்டும் என்று "நீதிநெறி விளக்கம்' என்ற நூலில் கூறியுள்ளார்.

இன்றைய இளைய தலைமுறையினர் பிழையற்ற வாக்கியங்கள் அமைந்த நூல்களைப் படிக்க வேண்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் பிழையுற வாக்கியங்களை எழுதத்தான் செய்கிறார்கள். மொழியில் புலமை பெற விரும்புபவர்கள் செந்தமிழ்ச்செல்வி, குமரகுருபரர், ஞானசம்பந்தர் ஆகிய மாத இதழ்களைப் பயில்வது நல்லது. என்னதான் பிறமொழியில் புலமை இருந்தாலும், நம் தாய்மொழியில் பிழையற எழுதுவது மிகச் சிறந்தது.


வாசித்ததும் நேசித்ததும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாசித்ததும் நேசித்ததும்... Empty Re: வாசித்ததும் நேசித்ததும்...

Post by சிவா Wed Jan 18, 2012 6:35 am

பழ.கருப்பையா - சட்டமன்ற உறுப்பினர்

சிறுவயதில் துப்பறியும் கதை போன்றவற்றைப் படித்ததைத் தவிர வேறு படிப்புப் பழக்கம் இல்லாதிருந்த நிலையில், 24 - 25 வயதில் லூயிபிஷர் எழுதிய காந்தியின் வாழ்க்கை (Life of Mahatma Gandhi) என்கின்ற நூலை முதன்முதலாக படிக்க நேரிட்டு, மனம் அதிர்ந்து போனது.

இரண்டு நாள் விட்டு விட்டு மீண்டும் அந்தப் புத்தகத்தையே இன்னொருமுறை படித்தபோது, இன்னும் கூடுதலாகக் காந்தியைப் பற்றி விளங்கியது. காந்தி என்னுடைய மனத்தில் பூமிக்கும் வானத்துக்குமாகப் பேருருக் கொண்டார்.

இவர்தான் என் எஞ்சிய வாழ்க்கையை வழிநடத்தப் போகிறவர் என்கிற அளவுக்கு ஒரு காதல்... ஒரு பக்தி... என்னுள் முளைத்தது.

பிந்திய காலம் முழுவதிலும் ஏதாவது ஒரு செய்தி அல்லது நிகழ்வு குறித்த சிக்கல் மனத்தினில் தோன்றுமானால் ஒன்று அதற்கான தீர்வை திருக்குறளிடமோ, அல்லது புத்தனிடமோ அல்லது நவீன அரசியலாக இருந்தால் காந்தியிடமோதான் தேடியிருக்கிறேன்.

ஒரு புத்தகம் என் வாழ்வின் போக்கை மாற்றியது. நான் அரசியல்வாதியாக ஆவதற்கு அந்த நூல்தான் அடித்தளம் அமைத்தது.

நேரம் கிடைக்கின்றபோது படிக்கிறவன் இல்லை நான். நேரத்தை உண்டாக்கிக் கொண்டு படிக்கிறவன்.

இன்றைய தலைமுறைக்கு படிக்கின்ற பழக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம், தொலைக்காட்சியில் எண்ணிலடங்காத சேனல்கள், அவரவர் விருப்பத்துக்கு தீனி போடுகின்ற வகையில் அமைந்திருக்கின்ற காரணத்தால், படிக்கும் பழக்கம் அற்றுப் போய்விட்டது. படிப்பது என்பது டிஸ்கவரி சேனலைப் பார்ப்பது போலவோ அல்லது கார்ட்டூன் படம் பார்ப்பதுபோலவோ எளிதானதில்லை. Mind resist every new thing. அதனால் படிப்பது என்பது உண்மையிலேயே சிரமமானதுதான். ஆனால் கள் புளிப்பானதாகவும், பழக்கமில்லாதவர்களுக்கு உமட்டல் உணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் குடித்துப் பழகியவன் வாழ்க்கை முழுவதும் அதற்கு அடிமையாகிவிடுவதுபோல, படிப்பதும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டால், அவனை ஆட்கொள்ளும் தன்மை வாய்ந்தது.

ஒரு தனித் தீவுக்கு ஒரு பெண்ணோடு செல்வதும், சில அறிவார்ந்த நூல்களோடு செல்வதும் ஒருதன்மையானதுதான்.

நான் அண்மையில் டில்லிக்கு சென்றபோது, ஹாப்ஸ்வாம் எழுதிய How To change the world - Reflections on Marx and Marxism என்ற நூலை வாங்கி அதனிடமிருந்து மனதைப் பெயர்க்க முடியாமல், அதிகாலை நான்கு மணிக்குத் தூங்கச் சென்றேன்.

மார்க்சிசம் தோற்றுவிட்டதாக மேலுக்குத் தோன்றுகிறதே தவிர, சில மாற்றங்களோடு அது மீண்டும் ஆதிக்க நிலைக்கு வரும் என்பனவற்றையெல்லாம் அந்த நூல், வரலாற்றை ஆராய்ந்து சொல்கிறது. ஹாப்ஸ்வாம் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அது போகட்டும்,. எல்லாரும் படிப்பதற்கு ஏற்ற புத்தகங்கள் என்று சொன்னால் டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, ஷேக்ஸ்பியரைப் படித்தால் கலைச் சுகமும், அறிவுச் சுகமும் சேர்ந்து கிடைக்கும்.

இன்னொரு வகையாகப் பார்த்தால், மகாபாரதம், ராமாயணம், திருக்குறள் இவற்றுக்கு நிகரான படைப்பு உலகத்தில் இல்லை என்பதுதான் என் கருத்து. திருக்குறள் நமக்குக் கைவிளக்கு.

மகாபாரதம், ராமாயணம் எண்ணற்ற பாத்திரங்களையும், எண்ணற்ற வாழ்க்கைச் சிக்கல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் சொல்லுகிறது.

இளையவர்கள் இந்த மூன்றையும் திரும்பத் திரும்பப் படித்த பிறகும் நேரம் மிஞ்சியிருக்குமானால் பிற நூல்களும் பயனுடையவே.


வாசித்ததும் நேசித்ததும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாசித்ததும் நேசித்ததும்... Empty Re: வாசித்ததும் நேசித்ததும்...

Post by சிவா Wed Jan 18, 2012 6:35 am

பா.செயப்பிரகாசம் - எழுத்தாளர்

மூன்றாவது, நான்காவது படிக்கும்போதே எனக்குப் படிக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் எனது பாட்டி. பாட்டி நிறையக் கதைகள் சொல்லுவார். புராணக் கதைகள் மட்டுமல்ல, அந்தக் காலத்தில் வெளிவந்த "காண்டீபம்' போன்ற இதழ்களில் வெளிவந்த கதைகளையும் சொல்வார். பாட்டிக்குப் படிக்கத் தெரியாது. எனது உறவுக்கார மாமா ஒருவர் பாட்டிக்கு இதழ்களில் வெளிவந்த கதைகளைப் படித்துக் காட்டுவார். பாட்டியிடம் கதை கேட்ட அந்த கேள்விப் பழக்கம், சிறுவயதிலேயே என்னைப் படிக்கும் பழக்கம் உள்ளவனாக ஆக்கிவிட்டது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் நூலகத்தில் என்ன நூல்கள் இருந்தாலும் படிப்பேன். தேர்வு செய்து படிப்பது என்பது அந்த வயதில் இல்லை. உயர்நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்பை மதுரையில் படித்தேன். மதுரை மேலமாசி வீதியில் ஒரு பொது நூலகம் இருந்தது. அது தலைமை நூலகமும் கூட. பள்ளி, கல்லூரி முடிந்ததற்கப்புறம் இரவு எட்டு மணி வரை படிப்பேன். அப்போது நூலகத்துக்கு வெள்ளிக்கிழமைதான் விடுமுறையாக இருந்தது. எனவே சனி, ஞாயிறுகளில் நூலகத்தில் படிக்க வசதியாகப் போய்விட்டது.

ஆரம்பத்தில் காண்டேகரின் புத்தகங்களைப் படித்தேன். ஆனால் அவருடைய கதைகளில் காணப்பட்ட லட்சிய வாழ்க்கை ஒரே மாதிரியான வார்த்தைகளால் வடிக்கப்பட்டிருந்தது. நாம் பார்க்கும் மனிதர்களை அவருடைய கதைகளில் பார்க்க முடியவில்லை. எனவே காண்டேகர் என்னைத் தன்வசம் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டார்.

அதற்குப் பிறகு நான் சரத் சந்திரர் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். சரத்சந்திரர் புத்தகங்கள் தவிர, பிற வங்க நாவல்களையும் சிறுகதைகளையும் படித்தேன்.

நூல்களைத் தேர்வு செய்து படிப்பது என்பது அதற்குப் பின்புதான்.

கன்னடத்தில் நிரஞ்சனா எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "நினைவுகள் அழிவதில்லை' எனக்கு மிகவும் பிடித்த நாவலாக இருந்தது. மாக்ஸிம் கார்க்கியின் "தாய்', ஜூலியஸ் ப்யூசிக்கின் "நீல சீஸô' எனக்குப் பிடித்த நூல்கள்.

சமீபகாலத்தில் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்னைக் கவர்ந்த நூல்.

"மரணத்தில் வாழ்வோம்' ஈழத் தமிழ்க் கவிதைத் தொகுதி, "அந்தோனி கிராம்ஸ்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்', கல்வி தொடர்பாக பிரபா கல்விமணி எழுதிய "கல்வி உரிமை: நாம் ஏமாற்றப்பட்ட கதை', "பள்ளிக் கல்வி பிரச்னைகளும் தீர்வும்' ஆகிய புத்தகங்கள், "இந்து மகாசமுத்திரமும் இலங்கை இனப் பிரச்னையும்', "வாழ்புலம் இழந்த துயர்', "அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு', "கசற கணம்' ஆகியவற்றை எல்லாரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.


வாசித்ததும் நேசித்ததும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாசித்ததும் நேசித்ததும்... Empty Re: வாசித்ததும் நேசித்ததும்...

Post by சிவா Wed Jan 18, 2012 6:35 am

லிங்குசாமி - இயக்குநர்

நான் அடிப்படையில் ஒரு புத்தகப் பிரியன். இப்போது உங்களிடம் பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணமே நான் புரட்டிய, என் வாழ்க்கையைப் புரட்டிய ஒரு புத்தகம்தான். ராபின் சர்மா எழுதிய "நீ உயிர் துறந்தால் அழுபவர் யாரோ?' (ஆங்கிலத்தில் ‘Who will cry when you die?‘ என்ற புத்தகம்தான் அது!

நான் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலம் அது. அப்போதே வீட்டில் திருமணம் முடித்து வைத்துவிட்டார்கள். பணப் பற்றாக்குறை, வாய்ப்பு இல்லாத சூழல் என பல பிரச்னைகள். பல நாள்கள் தூங்கவேயில்லை. என்ன செய்யப்போகிறோம்? எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்ற எண்ணத்திலேயே கிட்டத்தட்ட மனநிலை பாதித்தது போல் ஆகிவிட்டது. இதே சமயம் நான் வைத்திருந்த கதையை அப்படியே இன்னொருவரும் எடுத்துக்கொண்டிருக்கிறார். இறந்துவிடலாமா? என்று கூட நினைத்திருக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் மனைவியை எப்போது சென்னைக்கு அழைத்துப் போகப் போகிறாய்? என என் வீட்டிலும் பெண் வீட்டிலும் என்னைக் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.

அப்போதுதான் "நீ இறந்தால் அழுபவர் யாரோ?' மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. எழுத்தாளர் ராபின் சர்மா, காந்திய சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர். மிகச் சிறந்த நிர்வாகி. அந்தப் புத்தகத்தில் அவர் சொல்லும் சாரம் இதுதான்... "உங்களுடைய பிரச்னைகள் எவையாக இருந்தாலும் அவற்றை முதலில் பட்டியலிடுங்கள். அதன் பிறகு அவற்றில் தலையாயதாகக் கருதும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுங்கள். அதுதான் வெற்றிக்கு வழி' என்கிறார்.

இது போன்ற விஷயங்களைப் பலர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் ராபின் சர்மா அவற்றை வெளிப்படுத்திய விதம், அந்தப் புத்தகத்தோடு நமக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. மீண்டும் மீண்டும் புத்தகத்தைப் படித்தேன். என்னைப் பற்றியிருந்த குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு ஏற்பட்டது. அவர் கூறியபடி, என் பிரச்னைகளைப் பட்டியிலிட்டேன். ஆயிரம் பிரச்னைகள் இருந்தது போல் தெரிந்தாலும் முடிவாக மூன்றுதான் முக்கியமாகப் பட்டது. அவை

1. மனைவியை சென்னைக்கு அழைத்துப் போகிறோமா? 2. படம் எப்போது செய்யப்போகிறோம்?

3. அதே கதையா அல்லது வேறு புதிய கதையா?

நன்கு யோசித்துப் பார்த்ததில் முதலில் படம் செய்தால் போதும். மற்றவையெல்லாம் தாமாக அமைந்துவிடும் என தெரிந்தது. எந்தெந்த கம்பெனிகளில் கதை சொல்லியிருக்கிறோம். எங்கு சொல்லவில்லை என இன்னொரு பட்டியலைத் தயாரித்துவிட்டு முயற்சி செய்தேன். கடும் முயற்சி செய்தேன். அடுத்த இருபதாவது நாளில் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் இயக்குநராக அமர்ந்துவிட்டேன். "ஆனந்தம்' படம் வெளிவர, என் வாழ்வில் ஆனந்தம் உட்புகுந்தது.

இந்தப் புத்தகத்தை நான் வாசித்தேன் என்று சொல்வதைக் காட்டிலும் நேசித்தேன் என்று சொல்வதைக் காட்டிலும் சுவாசித்தேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம் இந்தப் புத்தகத்தின் பெருமைகளைப் பற்றிக் கூறி அவர்களையும் படிக்கச் செய்துகொண்டிருக்கிறேன்.

இது தவிர, மிக்கைல் நெய்மா எழுதிய The book of Mirdad--ன் மொழிபெயர்ப்பான "மிருதாதின் புத்தகம்' படித்தேன். இதை கவிஞர் புவியரசு மொழிபெயர்த்திருந்தார். மலை மேல் ஏறிச்சொல்லும் ஒருவனைப் பற்றிய பதிவு இது. வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஞானத்தையும் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அறிந்துகொள்ளலாம். சுமார் 1000 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள ஓஷோவே இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு "இதுபோன்ற ஒரு புத்தகத்தை நான் எழுதாமல் விட்டுவிட்டேனே' என வருத்தப்பட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழின் சிறந்த மொழிபெயர்ப்புப் புத்தகங்களைப் பட்டியலிட்டால் முதல் 10 இடங்களுக்குள் இந்தப் புத்தகமும் இடம்பெறும்.

நான் பொதுவாக படப்பிடிப்பு முடித்துவிட்டு இரவு உறங்குவதற்கு முன்பு படிப்பது வழக்கம். ஒரு படம் முடிந்தவுடன் நான்கு, ஐந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தொடர்ச்சியாகப் படித்து முடித்துவிடுவேன்.

என் படங்களில் நான் படித்த விஷயங்களை அவ்வப்போது அழகியல் ரீதியாக வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன்.


வாசித்ததும் நேசித்ததும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாசித்ததும் நேசித்ததும்... Empty Re: வாசித்ததும் நேசித்ததும்...

Post by சிவா Wed Jan 18, 2012 6:36 am

சஞ்சய் சுப்பிரமணியம் - வாய்ப்பாட்டுக் கலைஞர்

நான் உள்ளூரில் படிப்பதை விட, கச்சேரிகளுக்காக வெளியூர்களுக்குப் போகும்போது படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும். நான் தற்போது படித்துவரும் புத்தகம், அம்பர்டோ ஈகோ எழுதிய "ஃப்யூகாட்ஸ் பெண்டுலம்' என்னும் நூல். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். நான் அடிப்படையில் மெதுவாகப் படிக்கும் பழக்கம் உள்ளவன். பொதுவாக இரவு நேரத்தில் புத்தகம் படிப்பதற்கு எனக்குப் பிடிக்கும்.

ஃபிக்ஷன் புத்தகங்கள் படிப்பதற்கு நான் விரும்புவேன். நான்-ஃபிக்ஷனில் ஒருவரின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிப்பதற்கு பெரிதும் விரும்புவேன். தமிழில் கடைசியாக நான் படித்தது சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்'.

"தவுசண்ட் ஸ்பெலண்டிட் சன்ஸ்' ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை விவரிக்கும் நாவல். இதை மிகவும் ரசித்துப் படித்தேன். வாசகர்களுக்கு நான் பரிந்துரைக்க நினைப்பது, "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' தொகுப்பை. இந்தத் தொகுப்பு, இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும் வலைப்பூக்களுக்கு முன்னோடி என்பேன்! அதனால் கணையாழியின் கடைசிப் பக்கங்களை இன்றைய இளம் தலைமுறை அவசியம் படிக்கவேண்டும்.

தினமணி


வாசித்ததும் நேசித்ததும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாசித்ததும் நேசித்ததும்... Empty Re: வாசித்ததும் நேசித்ததும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum