புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
85 Posts - 77%
heezulia
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
250 Posts - 77%
heezulia
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
8 Posts - 2%
prajai
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_m10எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழிலகம் விபத்து - சதியா? விதியா?


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 12:08 pm

சென்னை: சேப்பாக்கில் உள்ள அரசு அலுவலகம் இயங்கும் எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை எதுவும் அறியப்படவில்லை. இருப்பினும் இந்த தீயில் சதிச்செயல் இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவில் தங்கியிருந்து பணியாற்றும் ஊழியர்கள் கூட யாரும் இல்லை. இந்நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து நடந்திருக்கிறது.தீ பிடித்த இந்த கட்டடத்தில் காவலர்கள் யாரும் இருந்தனரா, இல்லையா என்றும் தீ பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சேப்பாக்கில் உள்ள எழிலகம் என்றால் அனைவருக்கும் தெரியும். இந்த அளவிற்கு பழங்கால கட்டடம். இங்கு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தொழில் வணிக வரி அலுவலகத்தில் இருந்து திடீர் தீ கிளம்பியிருக்கிறது. பின்னர் அருகில் இருந்த சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தீ பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படு வேகமாகவும், கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கட்டடத்திற்குள் நுழைந்து தீயை அணøக்கும் பணியில் இருந்த மூத்த தீயைணப்பு வீரர் அன்பழகன் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானார். மத்திய கோட்ட அலுவலர் பிரியா , தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், மற்றும் பிரபாகர் ஆகியோர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Dinamalar

எழிலகம் விபத்து - சதியா? விதியா? சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது



எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Signaturexn
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:33 pm

எழிலகம் விபத்து - சதியா? விதியா?  First



எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:33 pm

எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Ms04



எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:33 pm

எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Ms05



எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:35 pm

சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் உள்ள எழிலகம் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து. தீயணைப்பு வீரர் பலி


சென்னையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் எழிலகம் வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். ஒரு பெண் அதிகாரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை நகருக்கு அடையாளம் சொல்லும் எல்.ஐ.சி., சென்டிரல் ரெயில்நிலையம் போன்று பிரம்மாண்ட கட்டிடங்களை கொண்டது எழிலகம்.

சென்னை சேப்பாக்கத்தில் கடற்கரை சாலையில் எழிலக வளாகம் அமைந்துள்ளது.

பழமையான கட்டிடம்

முகப்பில் இருக்கும் 6 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட புதிய கட்டிடத்தையொட்டி 200 ஆண்டு பழமையான கட்டிடங்களும் உள்ளன. எழிலக வளாகத்தில் நிலவரித்திட்ட இயக்குனரகம், நில அளவை கூடுதல் இயக்குனர் அலுவலகம், மத்திய நில அளவை அலுவலகம் மற்றும் வேளாண்மை ஆணையரகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்ககம், அரசு போட்டோ சிங்கோ அச்சகம் உள்பட ஏராளமான அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தோட்டக்கலைத்துறைக்கு பின்புறத்தில் 2 மாடிகளுடன் கூடிய பழமையான கட்டிடத்தில் சமூகநல இயக்ககம், தொழில் மற்றும் வணிக இயக்குனரகம், சேப்பாக்கம் தபால் அலுவலகம், தொழிற்சாலை தலைமை ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வந்தன.

பயங்கர தீவிபத்து

சமூகநல இயக்கக அலுவலக கட்டிடத்தில் நேற்று அதிகாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த அலுவலக காவலாளியாக விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கபூர்பேக் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வெளி கேட்டை பூட்டி விட்டு, சமூக நல இயக்கக வளாகத்தில் காவலாளி கபூர்பேக் அங்கே படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கபூர்பேக் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது அலுவலக அறை முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. சமூக நல இயக்ககத்தின் கீழ் தள அறையில் இருந்த மேஜை, பலகைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தன. அப்போது இரவு 12.30 மணி இருக்கும்.

தீயணைப்பு படையினர் விரைந்தனர்

தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கபூர்பேக் மற்றொரு காவலாளியுடன் சேர்ந்து தண்ணீரை ஜன்னல் வழியாக ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் அறை முழுவதும் தீ வேகமாக பரவத்தொடங்கியது.

இதனால் பதற்றம் அடைந்த காவலாளி கபூர்பேக் அருகில் உள்ள அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு ஓடிச்சென்று தகவல் தெரிவித்தார். அரசு அலுவலகம் தீப்பிடித்து எரிவதை கேள்விப்பட்ட போலீசார் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர்கள் பாஸ்கர், ஜோசி நிர்மல்குமார், உதவி கமிஷனர் செந்தில்குமரன், அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எடிசன் சாந்தகுமார் ஆகியோர் போலீஸ் படையோடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, அசோக்நகர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் போலோ நாத் மற்றும் உயர் அதிகாரிகள் விஜயசேகர், சுரேஷ் ஆனந்த், வீரமணி, நமச்சிவாயம், முருகன், பழனிச்சாமி சரவணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

துணிச்சலுடன் சென்ற பெண் அதிகாரி

கட்டிடத்தின் உள் அறையில் தீ பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. பழமையான இந்த கட்டிடம் பெரும்பாலும் மரத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது. மரத்தூண்கள் மட்டுமின்றி கட்டிட தளத்துக்கு இடையேயும் மரங்கள் இருந்ததால் தீ வேகமாக பரவி தூண்களும், கட்டிடத்தின் மேற்கூரைகளும் வெடி வெடிப்பதுபோல பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து கொண்டு இருந்தன.

அப்போது, சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் (வயது 35) தலைமையில், அசோக்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி முருகன் (37), தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் அன்பழகன் (வயது 55), தீயணைப்பு வீரர் பிரபாகரன் (22) ஆகியோர் உள்பட 6 பேர் 2-வது வெளி கேட்டை திறந்து கொண்டு கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.

வெளியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், அவர்களை உள்ளே போக வேண்டாம் என்று கூறி தடுத்தனர். இருந்தாலும், யாராவது உள்ளே சிக்கி இருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும் என்றும், ஆவணங்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடும், துணிச்சலோடும் பிரியா ரவிச்சந்திரன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

அங்கு அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருந்தது. மேற்கூரையை தாங்கிக்கொண்டு இருந்த மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் திடீரென அறையின் மேற்கூரை இடிந்து அவர்கள் மீது விழுந்தது. உடனடியாக வெளியே இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காற்றும் அதிகமாக இருந்ததால், தீ வேகமாக பரவியது. அறையின் வாசலிலும் தீப்பற்றி எரிந்ததால் உள்ளே செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினார்கள். ஒரு வழியாக உள்ளே சென்று அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த தீயணைப்பு வீரர்களை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தீயணைப்பு வீரர் பலி

ஆனால், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய தேனாம்பேட்டை தீயணைப்பு முன்னணி வீரர் கே.அன்பழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை 2 மணி நேரம் போராடி வெளியே எடுத்தனர். கே.அன்பழகன் மீது எரிந்து கொண்டு இருந்த காங்கிரீட் சிலாப்புகள் உடைந்து விழுந்து உள்ளன. விழுந்த வேகத்தில் அந்த இடம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால், அன்பழகன் எங்கு கிடக்கிறார் என்பதை தீயணைப்பு துறையினரால் உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. கட்டிட இடிபாடுகளுக்குள் அவரது கை மட்டும் தெரிந்தது.

மேலும் அவர் மீது சிமெண்டு தூண் ஒன்று விழுந்து கிடந்தது. அந்த தூணை சிரமப்பட்டு அகற்றிய பின் அன்பழகன் மீட்கப்பட்டார். ஆனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெரும் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அன்பழகனின் உடலை மீட்டு ஸ்டெக்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தனர்.

பெண் அதிகாரி உள்பட 3 பேர் காயம்

மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் தலையில் பலத்த காயம் மற்றும் கை, முகம் ஆகியவற்றில் தீக்காயங்களுடன் ரத்தம் சொட்டச்சொட்ட வெளியில் வந்தார். அவரது உடலில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பாய்ச்சி அணைத்தனர். இதனால் உடலில் பல பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு, தலை முடியும் கருகியது.

படுகாயம் அடைந்த பிரியா ரவிச்சந்திரனை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அசோக்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி முருகனின் ஒரு காலும், கையும் முறிந்தது. தீயணைப்பு வீரர் பிரபாகரனுக்கும் ஒரு கையில் முறிவு ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தீயில் சிக்கி காயம் அடைந்துள்ள பிரியா ரவிச்சந்திரன் இந்தியாவில் முதல் பெண் தீயணைப்பு கோட்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கணவர் ரவிச்சந்திரன் வருமான வரித்துறை உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கட்டிடம் முழுவதும் எரிந்தது

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய தீயணைப்பு வீரர்களை காப்பாற்றுவதற்குள், தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கோர தாண்டவம் ஆடத் தொடங்கியது. பழமையான கட்டிடம் முழுவதும் தேக்கு மரத்தை பயன்படுத்தி கட்டப்பட்டு இருந்தது. இதனால் மரங்கள் கொழுந்து விட்டு எரிந்தன. கட்டிடத்தின் அனைத்து அறைகளிலும் தீ பரவி எரியத் தொடங்கியது.

அதே கட்டிடத்தில் இயங்கி வந்த தொழில் வணிகத்துறை அலுவலகத்திலும் தீ பரவியது. இதனால் எழும்பூர், கீழ்ப்பாக்கம், மைலாப்பூர், கிண்டி உள்பட நகரின் பல பகுதிகளில் இருந்து கூடுதலாக 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டன. 75 மீட்டர் நீளமும், 50 மீட்டர் உயரமும் கொண்ட கட்டிடத்தை தீயணைப்பு படையினர் நாலாபுறமும் அரண்போல் சூழ்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் எரிந்தன


நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய தீ அதிகாலை சுமார் 3 மணி அளவில்கூட முழுவேகத்துடன் எரிந்து கொண்டு இருந்தது. தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடியும் பயன் கிடைக்கவில்லை. கட்டிடத்தின் மேற்கூரையில் பதிக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து கருகியதால் ஒவ்வொரு அறையின் மேற்கூரைகளும் பகுதி பகுதியாக பெயர்ந்தும், இடிந்தும் விழுந்தன. இதனால், தீயணைப்பு வீரர்களால் அறைக்குள் சென்று தீயை அணைக்க முடியவில்லை. ஜன்னல் மற்றும் அறை வாசல்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், மேஜை, நாற்காலி, பீரோ, கம்ப்ïட்டர், பேக்ஸ் இயந்திரம், தொலைபேசி உள்பட அனைத்து அலுவலக உபயோகப் பொருட்களும் எரிந்து சாம்பலானது. சமூக நலத்துறை, தொழில் வணிகத்துறை அலுவலகங்களின் சுவடுகளே இல்லாமல் நாசமாகிப்போனது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர தீ விபத்தால் சேப்பாக்கம் பகுதியே கரும் புகையால் சூழப்பட்டு இருந்தது. பலத்த காற்று வீசியதால் புகையோடு சாம்பலும் பறந்து சாலைகளிலும், அலுவலக சுவர்களிலும் படர்ந்தது.

`ஸ்கை லிப்ட்' மூலமாக தீ அணைக்கப்பட்டது

காலை 5 மணி அளவில் `ஸ்கை லிப்ட்' எனப்படும் 75 அடி உயர ஏணிப்படிகளை கொண்ட நவீன தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. அதன்மூலம் கட்டிடத்தின்மேல் அந்தரத்தில் ஏணியில் இருந்து அமர்ந்தபடி, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும், நாலாபுறமும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

அதைத் தொடர்ந்து காலை சுமார் 5.30 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயை அணைக்க 30-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. 150 தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து 8 மணி 30 நிமிடங்கள் போராடி காலை 9 மணி அளவில் தீயை முற்றிலும் அணைத்தனர்.

மின் கசிவு காரணமா?

இந்த பயங்கர தீ விபத்து எப்படி ஏற்பட்டது? மின் கசிவு காரணமா? அல்லது ஏதாவது ஆவணங்களை அழிப்பதற்காக திட்டமிட்டே விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து தீ விபத்துக்கு வழி வகுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. தடய அறிவியல் நிபுணர் வரதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விபத்து தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-

ஆங்கிலேயர் வடிவமைத்த கட்டிடம்


இந்த கட்டிடம் 1801-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதை ஆங்கில பொறியாளர் பால் பென்பீல்டு என்பவர் வடிவமைத்தார். உலகத்திலேயே இந்தோ சராசெனிக் கட்டிடக்கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட முதல் கட்டிடம் இதுதான். இந்த கட்டிடத்தை மெட்ராஸ் ரூப் கட்டிடம் என்றுதான் அழைப்பார்கள். ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்டது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இந்த கட்டிடம் வந்தபோது முதலில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டது. இதனால் இதை என்ஜினீயரிங் கட்டிடம் என்றும் அழைப்பார்கள். பழமையான இந்த கட்டிடத்தில் இயங்கி வந்த சம்பள கணக்கு அலுவலகம் ஒரு ஆண்டுக்கு முன்பு வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததால், இங்கு செயல்பட்ட மற்ற அலுவலகங்களுக்கும், கிண்டியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி



எழிலகம் விபத்து - சதியா? விதியா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 17, 2012 1:38 pm

மிகவும் வேதனையா இருக்கு..பார்க்க...
விதியோ, சதியோ போனது ஒரு உயிர் .... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 17, 2012 1:39 pm

உள்ளே ஏதோ முக்கியமான ஆவணங்கள் இருந்திருக்கும் போல


தீயணைப்பு வீரர் அன்பழகன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் சோகம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 3:06 pm

எழிலகம் விபத்து - சதியா? விதியா?  440806 எழிலகம் விபத்து - சதியா? விதியா?  440806 எழிலகம் விபத்து - சதியா? விதியா?  440806



எழிலகம் விபத்து - சதியா? விதியா?  154550எழிலகம் விபத்து - சதியா? விதியா?  154550எழிலகம் விபத்து - சதியா? விதியா?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எழிலகம் விபத்து - சதியா? விதியா?  154550எழிலகம் விபத்து - சதியா? விதியா?  154550எழிலகம் விபத்து - சதியா? விதியா?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக