ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ

+5
ஜாஹீதாபானு
பார்த்திபன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
கவினா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹைக்கூ  - Page 2 Empty ஹைக்கூ

Post by கவினா Mon Jan 16, 2012 4:49 am

First topic message reminder :



 இனித்தது
கரும்புக்குள்ளிருக்கும்
உழவனின் வியர்வை.


 புன்னகை செய் பூமியே
உன்னை புகைபடம் பிடிக்கிறது
பளிச்சென மின்னல்.


 தலைக்கணம் மிகுந்தவன்
அழிந்துபோவான்
தீக்குச்சி.


 முன்னேற்றம்தான்
பின்னோக்கி சென்றாலும்
கயிறு திரிப்பவன்.


 மசூதியின்மேல்
இளைப்பாறுகிறது
கோயில்புறா.


 தொட்டாலும் விரிகிறது
தொட்டா சுருங்கி
தொடுவது அவள்.


 சுற்றிலும் முட்கள்
நடுவில்ரோஜா
வெற்றி.


 தலைகுனிந்ததுதானாக வேண்டும்
மாடி வீட்டுக்காரன்
குடிசையை பார்க்க.


 புதுவருடம்
காலண்டர் மாற்றப்பட்டது
ஆணிமட்டும் அப்படியே.


 ஒரே விலங்கில் பிணைக்கப்பட்டிருக்கும்
கைதியும் காவலனும்
சரி தண்டனை யாருக்கு?


 சமுதாயத்தை தலைநிமிர்த்தியது
எழுதுகோல்
தலை குனிந்து.


 சின்ன ஓட்டையில்
பிரபஞ்சமே தெரியும்
ஹைக்கூ


 சோகமான கவிதை
மைதீர்ந்து போன
பேனா.


 மழை வருகிறது
எங்கேயாச்சும் ஒடு
வயற்காட்டு பொம்மையே.


 என்ன திட்டடினாலும்
கூடவே ஓடிவரும்
நிலா.


 எதிர்காலம் சொல்லும்
ஜோசியக் கிளியே!
உன் விடுதலை எப்போது.


 "பணக்காரனாவது எப்படி? "
புத்தகம் விற்கிறான்
ஏழைச்சிறுவன்.


 கிழிந்த இதயங்கள்
முறிந்த சிறகுகள்
அன்பின் சின்னங்கள்.


 பூமிக்கட்டிலின்
ஒரே கால்
மனிதன்.


 காலைக்கழுவாமலே
கடற்கரையை விட்டு திரும்புவார்
மனது எப்படி நனையும்?


 பரணில் போடப்பட்ட
கைராட்டையில்
சிலந்தி வலை.


 கைகள் பின்னி
சோம்பல் முறிக்குமவள்
நரம்புகளறுபடுமெனக்கு.


 ஒல்லியாய்தான் இருந்தது
பெயர் என்னவோ
குண்டூசி.


 தாத்தாவின் கம்பீரத்தை
இன்னும் நினைவுபடுத்தும்
தேக்கு மரக்கட்டில்.


 இன்று
நாளை மாறும்
நேற்றாய்.


 பஞ்சு மெத்தை
முள்ளாய் குத்தியது
மனைவியின் பிரிவு.

 பாமரன் வரைந்த
மாடர்ன் ஆர்ட்
கைநாட்டு.


 அதில் கூடுகட்டாதே கருவியே!
கொன்றுவிடப் போகிறார்கள்
ஆளுங்கட்சி கொடிமரம்.


 விசா இல்லாமலேயே
வெளிநாடு போனது
பறவை.


 புதைந்துபோன விதையின்
சரித்திரம் சொல்லும்
முளைத்துவரும் செடி.


 கடற்கரையில் யாருமின்றி
வீனாய் போனது
அலைகள்.


 பூவிலிருந்து இதழ்களல்ல
இதழ்களிலிருந்து உதிரும் பூக்கள்
புன்னகை.


 எத்தனை கவிதை உதிர்ந்ததோ
வெள்ளைப் புறாவின்
சிறகடிப்பில்.


 வெள்ளைநிறத்தை இழத்ததும்
கருப்பானது தேசம்
பாபர் மசூதி.


 டெக்ஸ்டைல் சைன்சே
கைகட்டி பிரமிக்கும்
சிலந்திவலை.


 சும்மாதான் கிடக்கின்றன
கூண்டுக்குள் அடைபட்ட
கிளியின் இறக்கைகள்.


 எந்த கான்வெண்டில் படிக்கிறது
மூட்டை சுமந்துபோகும்
இந்த நத்தை.


 பட்டணத்தில் ஆளானயெங்கள்
பழங்கதையை சொல்லும்
பரண்மேலிருக்கும் டிரங்குபெட்டி.


 நேற்றைய மழையில்
குளமான பள்ளம்
அட . . . மீன்கள் எப்படி?


 வந்து போவதை தவிர
வேறு வேலையே இல்லையா
அலைகளே.


 வார்த்தையை மாற்றுங்கள்
ஒட்டாமாலே போகிறது உதடுகள்
காதலென சொல்லும்போது.


 நேற்று புதைந்தது
இன்று புதையலாய்
கவிதை.


 தலைகுனிந்தே கிடக்கும்
தண்ணீர் குழாய்கள்
பயன்படாமல் போன வருத்தம்.


 தாயின் முகம்
பேயின் நகம்
மதம்.


 ஓயாமல் எதையாவது
கத்திக்கொண்டே இருக்கும்
ரேடியோவும் அப்பாவும்.


 விழுந்து செத்தது
சித்தெறும்பு
விரும்பி குடித்த தேனிலேயே.


 உதவும் மனது
ஒழிந்து போனதோ
கேரியரில்லாத சைக்கிள்.


 பாவம்
மழையில் நனையும்
குடை.


 வியாபாரம் இல்லாமல்
அலுத்துக்கொள்ளும் கடிகார கடைக்காரர்
"சே நேரமே சரியில்லை".


 நடுக்கடலில் புயலாம்
சேதி சொல்ல வருகிறது
அலை.


 இறந்தவன் கட்டியிருந்த
கை கடிகாரம்
டிக். டிக்.. டிக்...



 கோடுகள் போட்டு
வானத்தையும் பிரித்தான்
ஜெட் விமானம்.


 மதுக்கடை நோட்டுகளில்
இயலாமையால் சிரிக்கும்
மகாத்மா.


 பருவ பள்ளிக்கூடத்தில்
கவிதை ஆசிரியர்
காதலி.


 சாத்தி கிடக்கும் கதவுகள்
வாசல்கோலம் சொல்லும்
"நல்வரவு"

 எத்தனை முகம் தாங்கியும்
முகமிழக்காமல்
கண்ணாடி.


 உதிர்கிறேனென்பது உண்மைதான்
ஆனால் சருகாயல்ல
விதையாய்.


 வேலை கிடைத்தது
"வேலை காலியில்லை"
போர்டு எழுத.


 மதங்கள்தோறும்
மாறி மாறி பிரசாரம்
மூச்சு திணறும் கடவுள்.


 கட்டை விரல்முதல்
சுண்டு விரல்வரை
குடும்பம்.


 எரிந்து சாம்பலான குடிசை
உள்ளே இருக்கும்
குடம் குடமாய் தண்ணீர்.


 காகித நிலத்தை உழுது
(க)விதை விதைக்கும் கலப்பை
பேனா.


 பட்டபகலில்
இரவை நினைவுபடுத்திகொண்டிருக்கும்
நிழல்.


 புழுக்கமாயிருக்கும்
நீர்க்குமிழிக்குள்ளிருக்கும்
காற்றுக்கு.


 திருட்டுபயமோ
வீட்டையும் கொண்டுபோகிறது
ஆமை.


 கண்ணாடியாய் கவிதை
உள்ளே தெரிந்தது
சமுதாயம்.


 என்னவரம் வேண்டி
ஒற்றைக்கால் தவம்?
பரந்த மணலில் பனைமரம்.

 துணியாலான
வெள்ளைத் திரையில்
துணியின்றி நடிகை.


 எழுந்து நின்றிருக்கும் நான்
நீளமாய் விழுந்து கிடக்கும்
என் நிழல்.


 உதறாதே பேனாவை
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு கவிதை.


 என்ன குற்றத்திற்காய்
கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறாய்
ஜோசிய கிளியே!


 புடம்போடப்படும் தங்கம்
பட்டை தீட்டப்படும் வைரம்
தோல்விகள் பழகும் மனிதன்.


 பெயர் பொருத்தம் சரிதான்
உயிரை கத்தரித்தது
சிசர் சிகரெட்.


 நாட்களை விழுங்கி கொண்டே போகும்
தினமும் தோலுரித்து கொள்ளும் பாம்பு
சுவரில் தொங்கும் காலண்டர்.


 துவைக்கப்படாமல்
அழுக்கு மண்டி கிடக்கிறது
வண்ணானின் வாழ்க்கை.


 தேன்குடிக்க வந்து
உட்கார்ந்து ஏமாறும் வண்டு
விரைப்பாக நிற்கும் பிளாஸ்டிக் பூ.


 மக்களிடம் ஏன் கையேந்துகிறான்
மந்திரத்தால் பணம்வரவைத்த
தெருவித்தைக்காரன்?


 ஜாக்கிரதையை உணர்த்துவது
நமக்கா? நாய்களுக்கா?
"நாய்கள் ஜாக்கிரதை" போர்டு.


 ஆனந்தத்தில் குதித்து குதித்து
முன்னால் ஓடிவரும் அலைகள்
கடற்கரையில் நிற்கும் அவள்.


 உள்ளங்கைக்குள் உலகம்
சின்னதாய் நின்று சுழலும்
ஹைக்கூ.


 புத்துணர்ச்சி எப்படிதரும்
புது உடையே என்றாலும்
ஈமச்சடங்கு வேஷ்டி.


 யார் வரைந்தது
பட்டாம்பூச்சி இறக்கைகளில்
மாடர்ன் ஆர்ட்.


 வீட்டுக்குள் செல்லவே
பயமாய் இருக்கும்
வாசலில் அப்பாவின் செருப்பு.


 வெற்றித்தோல்விகள் குறித்த
தராசு நிறுத்தல்
ஒடிந்துப்போகும் நான்.


 முதுகு வளைந்து
சம்மட்டி அடிக்கிறான்
கம்பியை நீட்ட.


 ஏய்! காலைக்கழுவாதே அதில்
இந்த நதியில்தான் கரைத்திருக்கிறேன்
என் அம்மாவின் அஸ்தியை.


 கொடுத்து வைத்த குடும்பம்
அழுகையற்ற வாழ்க்கை
டிவியில்லா வீடு.


 கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும்
இனிமையாய் பேசிய கிளி
அட கிளியும் வாயால் கெடும்.


 எத்தனை சுருக்கங்கள்
இஸ்திரி செய்யும்
கிழவனின் முகத்தில்.


 நிழல் - குளிர்ச்சி
நெருப்பு - சூடு
நெருப்பின் நிழல்?


 திருடிகொண்டு திரும்புகையில்
கடைவாசலில் தொங்கும் போர்டு
"நன்றி மீண்டும் வருக".


 எத்தனை சோகங்களோ
எத்தனை சந்தோஷங்களோ
தபால் பெட்டிக்குள்.


 கருப்பாய்தான் இருக்கிறது
தரையில்படிந்த நிழல்
சிகப்பு மனிதருக்கும்.


 கவிதையெழுதினேன்
சின்னக்குழந்தையின் கண்ணத்தில்
முத்தம்.


 மரம் வெட்டும் கோடாரியின்
கைப்பிடியாய் இருக்கும்
மரம்.


 சீரான பாதை
கரடுமுரடான பயணம்
நகர வாழ்க்கை.


 பார்த்து ரசிக்கிறோம்
பக்கத்திலேயே உட்கார்ந்து
தொலைக்காட்சியை.


 மாறிமாறி வரும்
பகலும் இரவும்
சபாஷ் சரியான போட்டி.


 பிரிந்து போகும் பிள்ளைகளை
எரித்தே அனுப்பும்
தீப்பெட்டி.


 அலங்காரம் செய்து கொள்ளுமவள்
மெருகேறிகிகொண்டே போகும் அழகு
பொறாமை கொள்ளும் கண்ணாடி.


 நேற்று எடுத்துபோன செருப்பை
கொண்டு வருமா
அலைகள்?


 வாழ்க்கை புத்தகம்
இரண்டே வார்த்தைகள்
பிறப்பும் இறப்பும்.

 அதிகாரிகளின் நெற்றியில்தான்
தொங்கவேண்டுமிந்த போர்டு
"தினமும் என்னை கவனி".


 காற்றுக்காதலன் உரசல்
மேகப்பெண்ணின் கண்ணீர்
மழை.


 நிகழ்காலமென
உச்சரித்த நொடிகூட சேர்ந்துவிட்டது
இறந்தகால கணக்கில்.


 பகலில் விரிக்கப்பட்ட
சின்னஞ்சிறிய இரவு
குடை.


 அணிகலனா? அறிவிப்பு மணியா
காட்டி கொடுக்கும்
கால் கொலுசு.

 காதலின் கண்ணாமூச்சு
தேடித்திரியும் எனக்குள்ளேயே
ஒளிந்து சிரிக்குமவள்.


 அழகானயெதையும்
கண்ணில் காட்டாதீர்கள்
நினைவில் வரும் அவள்.


 வருத்தம் கொள்ளச் செய்யும்
வறண்ட என் வாழ்க்கை பூமி
நீர்ச்சுனையாய் கிளம்பும் நீ.

 ஆறறிவும் ஐந்தறிவும்
மூர்க்கமாய் மோதிக்கொள்ளும்
ஜல்லிக்கட்டு.

 காற்றிலா கரைகிறது
நாளுக்குநாள் இந்த கற்பூரம்
நிலவு.

 துருத்தி நிற்கும்
இளமையின் முத்திரை
சதைப்பந்துகள்.

 விர்ரென்று பாய்கிறது
நரம்புகளில் மின்சாரம்
தயவு செய்து கண்களை மூடடி.

 காதலர் பூங்கா
கை வைப்பாள் அகலிகை
கல்லாவான் ராமன்.

 என்ன யாசிக்கின்றன குளங்கள்
திருவோடுகளை ஏந்தி?
அடடே தாமரைகள்!


 மரமாய் விரிந்திருக்கும் உலக வரைபடம்
கிளையாய் படர்ந்திருக்கும் இந்தியா
தேன்கூடாய் தொங்கும் இலங்கை.


 எந்த மரங்கொத்தி
இப்படி கொத்தி சென்றதோ
செதுக்கப்பட்டிருக்கும் காதலியின் பெயர்.

 கருப்பு நிறத்தில்
இரண்டு வானவில்
புருவங்கள்.

 கொத்தாமல்
தயங்கி திரும்பும் மரங்கொத்தி
பெயர் செதுக்கிய மரம்.

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down


ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹைக்கூ

Post by கவினா Fri Jan 20, 2012 10:02 pm

கே. பாலா wrote:அறுசுவை விருந்து ..!....தினமும் கொஞ்ச கொஞ்சமாக பரிமாறலாம் ...
...பலரும் படித்து கவிதை பசியாறலாம்....இனி சில கவிதை ...போதுமே ..ஒவ்வொருநாளும் :idea:

அனுபவக் குறைவின் காரணமாக அவ்வாறு அச்சேற்றிவிட்டேன் நண்பரே.
இனி சரி செய்து கொள்கிறேன்.
தங்கள் சிறந்த ஆலோசனைக்கு நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹைக்கூ

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Jan 26, 2012 8:01 pm

கவிதைகள் அனைத்துமே சிறப்பு. நண்பர் சுந்தரபாண்டி அவர்களே.....
இதில் பல கவிதைகள் தாங்கள் மற்றவர்களின் கவிதைகளைப் பகிர்ந்துள்ளீர்கள் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹைக்கூ

Post by கவினா Thu Jan 26, 2012 8:36 pm

Kaa Na Kalyanasundaram wrote:கவிதைகள் அனைத்துமே சிறப்பு. நண்பர் சுந்தரபாண்டி அவர்களே.....
இதில் பல கவிதைகள் தாங்கள் மற்றவர்களின் கவிதைகளைப் பகிர்ந்துள்ளீர்கள் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

அன்பு நண்பர் கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு.
உங்கள் வெளிப்படையான பின்னூட்டத்திற்கு முதலில் என் நன்றி .

வேறு எந்த கவிதை வடிவத்தைக் காட்டிலும் ஹைக்கூ கவிதையில் படித்ததையே படிப்பதைப்போல ஒரு அனுபவம் ஏற்பட்டு விடுகிறது.
ஹைக்கூ என்பது மூன்று வரிகளுக்குள் ஒரு காட்சியை படம் பிடிக்க வேண்டியுள்ளதால் இந்த விபத்து அடிக்கடி அனைத்து கவிஞர்களின் கவிதையிலும் நடந்து விடுகிறது.
ஒருவர் பிடிக்கும் புகைப்படம் அடுத்தவர் ஒருவரின் புகைப்படத்தைப்போல தோற்றமளிக்கிறது.
காரணம் என்னவென்றால் இருவருக்குமான காட்சி ஒன்றுதான்.
இதுதான் ஹைக்கூ கவிதைகளின் பலவீனமே.

இதுபோக தொடர்ந்து நம் வாசிப்பு அனுபவத்தின் காரணமாகவும் இந்த விபத்து நடந்துவிடுகிறது.நாம் படித்த சில நல்ல வரிகள் நம் மனதிலேயே ஆழமாக பதிந்து பின்னர் வேறொரு சூழலில் நம்மையும் மீறி வேறு சில வார்த்தைகளை அழைத்துக் கொண்டு வந்து நமது சொந்த சிந்தனையைப் போல நின்று விடுகிறது.

இவற்றையெல்லாம் நான் மறுக்கவில்லை.
சில நேரங்களில் எனது ஹைக்கூ கவிதையை ஒத்த வேறு சில ஹைக்கூ கவிதைகளைக் கண்டு நானும் ஆச்சர்யம் கொண்டிருக்கிறேன்.
மேலே உள்ள கவிதைகளெல்லாம் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பத்திரிக்கைகளில் இடம்பெற்றவை.
ஒருவேளை என் பெயரிலேயே பத்திரிக்கைகளில் வெளியான கவிதைகளையும் நீங்கள் படிக்க நேர்ந்திருக்கலாம்.

இந்த விபத்து சூழல் போக, வேறு யாருடைய கவிதைகளையேனும் ஒத்த கவிதைகளாய் எனது கவிதைகள் இருப்பதாய் தங்களுக்கு தோன்றினால் தயவுசெய்து எனக்குத் தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இது நான் வெளியிட இருக்கும் கவிதை தொகுப்பை சரி செய்ய எனக்கு உதவியாகவும் இருக்கும். உங்கள் பதிலை நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹைக்கூ

Post by சிவா Fri Apr 18, 2014 6:47 am

திருட்டுபயமோ
வீட்டையும் கொண்டுபோகிறது
ஆமை.

ரசித்தேன்! சூப்பருங்க
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹைக்கூ

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 18, 2014 8:11 am

கவினா wrote:[link="/t78737-topic#714278"]

 காலைக்கழுவாமலே
கடற்கரையை விட்டு திரும்புவார்
மனது எப்படி நனையும்?

 கொத்தாமல்
தயங்கி திரும்பும் மரங்கொத்தி
பெயர் செதுக்கிய மரம்.


இவ்விரண்டையும் ரசித்தேன்... பாராட்டுகள்...
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum