புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
81 Posts - 67%
heezulia
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
1 Post - 1%
viyasan
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
18 Posts - 3%
prajai
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_m10கருவறைக் குற்றவாளிகள்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறைக் குற்றவாளிகள்..!


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jan 16, 2012 2:08 am

கருவறையில் இடம் தந்தேன்..!
உன் வீட்டில் நான் வசிக்க..
இல்லையா சிறு அறை..!
இது ஒரு கவிஞனின் ஹைக்கூ..!
பெற்ற மகன்களால் அன்பாகப் பராமரிக்கப்படாமல், முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட அபலை மூதாட்டியின் ஆதங்கக் குரலாய் ஒலிக்கிறது இந்த புதுக் கவிதை..!
தோளிலும், மார்பிலும் தாலாட்டிய உறவுகளே பாராமுகம் காட்டுவதால், முதியவர்கள் வேதனையில் உள்ளனர். அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைகள்,வளர்ந்து ஆளானவுடன் பெற்றவர்களைப் பாரமெனக் கருதி, முதியோர் இல்லத்தில் தள்ளும் போக்கு ஆபத்தானது..!
கூட்டுக் குடும்பமுறை சிதைந்து விட்டதால், தற்காலக் குழந்தைகளின் சிந்தனையோட்டமே மாறிப்போய் விட்டதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.
ப்ரி கே.ஜி. வகுப்பு பிரேயர் கூட “காட் பிளெஸ் மம்மி..; காட் பிளெஸ் டாடி..; மேக் தெம் ஹாப்பி..!” என மனித மனங்களைப் போல சுருங்கிப் போய்விட்டன..!
தெருவில் ஒரு பெண், தனது குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். “அந்தக் கிழவிட்ட போவியா..! போவியா..!”
மகனிடம் கோபித்துக் கொண்டு, பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும், அவரது மாமியாரைத்தான் சாடையாகச் சாடுகிறார் என்பதை யூகிக்க முடிந்தது.
மற்றொரு சம்பவத்தில், வீதியில் இரு இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தால்.., கிடைத்த தகவல் பகீரென்றது..! அவர்களது தந்தை இறந்துவிட்ட நிலையில், வயதான தாயாரை யார் பார்த்துக் கொள்வது..? என்பதில் தான் இருவருக்கும் தகராறாம்..!
பிரமை பிடித்ததுபோல ஒரு மூதாட்டி, ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்..
அவர்களுடைய தாயாகத்தான் இருக்க வேண்டும்..! இப்படிப்பட்ட மகன்களைப் பெற்று வளர்த்து ஆளாக்க, அப்பெண் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்..?
“திரைகடலோடியும் திரவியம் தேட” வெளிநாடுகளுக்குச் செல்வோர், முதலில் ஓரிரு மாதங்களுக்குப் பெற்றோரிடம் தொலைபேசியில் நலம் விசாரிக்கின்றனர்.
திருமணமாகி அங்கேயே செட்டிலாகி விட்டால்,அதன்பிறகு தலைகீழ் மாற்றம்.
தொப்புள்கொடி உறவு, கடைசிவரை தொலைத்தொடர்பு உறவாக மட்டுமே தொடரும் அவலம் நிகழ்கிறது.
பொருளாதாரக் காரணங்களைக் கூறி தாய், தந்தையரைப் பிரித்து நீ ஆறு மாசம்; நான் ஆறு மாசம்; என அலைக்கழிக்க விடுவோரும் உண்டு..!
பாரத அன்னையாக நாட்டைக் கொண்டாடுகிறோம்.. தாய், தந்தையரைத் துண்டாடுகிறோம்..!
எங்கே போய்க் கொண்டிருக்கிறது..?
வந்தாரை வாழவைக்கும் தேசம்..!
முதியோர் இல்லங்கள்..!
சமூகத்தில் வேகமாகப் பரவிவரும் கரையான்கள்..!

நலிவுற்ற மனிதர்களை, காலனிடம் துரிதமாக அழைத்துச் செல்லும் முதுமக்கள் தாழிகள்..!
உணவும், உறைவிடமும் கிடைத்துவிட்டாலும், உடல் நோவோடு போராடும் காலத்தில், கழிவிரக்கம் சூழ்ந்த தனிமையில் முதியோர் இல்லங்களில் ஒடுங்கும் மனிதர்களிடையே அன்பு துளிர்க்குமா..?
அன்பாய் மடியில் தவழ்ந்து விளையாடிய குழந்தைகளே புறக்கணித்ததால், எஞ்சிய காலம் முழுவதும் ஆற்றாமையோடும், ஒருவிதத் தவிப்போடுமே கழியும்.!
தனிமையின் கொடுமையே, அந்திமக் காலத்தை விரைவுபடுத்திவிடும்.. இதனைச் சுயநலமிக்க வாரிசுகள் உணராதிருப்பது விநோதமானது..!
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசின் தலைமைச் செயலர் பேசுகையில், நாட்டில் முதியோர் இல்லங்களே இல்லாமல் போக வேண்டும்; மேலைநாட்டுக் கலாசார முறை இங்கு பரவுவதால், முதியோரை மதிக்கும் எண்ணம் அருகி வருவதாக ஆதங்கப்பட்டார்.
மதுரையில் மட்டும், 2006ல் 6ஆக இருந்த முதியோர் இல்லங்கள், 2009ல் 86 ஆகப் பெருகி, நூறை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
பெற்றோரைப் புறக்கணித்தால், 3 மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் இயற்றியுள்ளது.
ஆனால், இதுவரை ஒரு சிலர் கூட இச்சட்டத்தின்கீழ் கைதானதாகத் தகவல் இல்லையே..! ஏன்..?
தம்மைப் புறக்கணித்தாலும், தண்டிக்க விரும்பாத தாய், தந்தையரின் புத்திர பாசத்தால்தான், இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோரைக் கைவிடுவோரைப் பிடிக்க, காவல்துறையினர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. முதியோர் இல்லங்களில் முதலில் விசாரணையைத் தொடங்கினாலே போதும்..!
தனிக்குடித்தனம் செல்வதற்காக முதியவர்களைக் கைவிடுவோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு, “எப்போதும் முரண்பட்டு, பிடிவாதப் போக்குடனே நடந்து கொள்கிறார்கள்..”
ஒரு வாதத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக.. அவர்களைத் தனிமைப்படுத்துவது நியாயமா..?
வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல, பெற்றோரிடமே குற்றம் காணும் பிள்ளைகள்தான் கருவறையில் பிறந்த குற்றவாளிகள்..!
இவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை போதாதுதான்..!
எஞ்சியிருக்கும் கொஞ்சகாலமாவது பேரன், பேத்திகளோடு அவர்கள் கொஞ்சி விளையாடி கவலைகளை மறந்திருக்க வேண்டாமா..?
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது.
“முற்பகல் செய்யின்.. பிற்பகல் விளையும்..!”
என்பதுதானே நியதி.
பெற்றோர்களுக்கு இவர்கள் என்ன தண்டனையை அளித்தார்களோ..!
பின்னாளில், அதே தண்டனையைத் தரத்தான், இவர்களது குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

நன்றி : ப.செ.சங்கரநாராயணன்



[You must be registered and logged in to see this image.] "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 6:33 am

“தனிக்குடித்தனம் செல்வதற்காக முதியவர்களைக் கைவிடுவோர் கூறும் பொதுவான
குற்றச்சாட்டு, “எப்போதும் முரண்பட்டு, பிடிவாதப் போக்குடனே நடந்து
கொள்கிறார்கள்..”
ஒரு வாதத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக.. அவர்களைத் தனிமைப்படுத்துவது நியாயமா..?“


இந்திய கிாிமினல் சட்டத்தில் கூட தராத தண்டனையை இப்படிப்பட்டவா்கள் தங்கள் பெற்றோருக்கு தர முன்வரும் அளவிற்கு அவா்கள் என்ன அப்படி தவறிழைத்தாா்கள்??!!
பெரும்பாலும் மருமகளால்தான் மகனின் பெற்றோா்கள் முதியோா் இல்லங்களுக்கு செல்கிறாா்கள். எனவே, மருமகளின் பெற்றோரை முதலில் முதியோா் இல்லத்தில் சோ்த்து விட்டு, பின்பு மாமனாா் மாமியாரை சோ்ப்பது நல்லது.
மனைவியின் பேச்சை இந்த விஷயத்தில் தட்டாமல் கேட்கும் கையாலாகாத மகனை என்ன சொல்வது?
“வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல, பெற்றோரிடமே குற்றம் காணும் பிள்ளைகள்தான் கருவறையில் பிறந்த குற்றவாளிகள்..!
இவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை போதாதுதான்..!”
[You must be registered and logged in to see this image.]
இன்னொரு விஷயம். முதியோா் இல்ல நிா்வாகிகள் தங்களிடம் சோ்க்க வருவோாிடம் தீர விசாாித்து, அவா்களே காவல் துறையிடம் புகாா் செய்ய முன் வருதல் நல்லது.

ஏதோ நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக