ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்!

2 posters

Go down

சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்! Empty சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்!

Post by பிரசன்னா Sat 14 Jan 2012, 12:35

சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்!

சுப்பிரமணியன் சுவாமிக்கும் ப.சிதம்பரத்துக் கும் ஓர் ஒற்றுமை உண்டு.

சுவாமி ஹார்வர்டு பல்கலைக்​கழக பேராசிரியர். சிதம்பரம் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர். ஆக, ஆசிரியருக்கும் மாணவருக்கும் போர் ஆரம்பம்!.

'2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் டெலிகாம் உரிமங்களைக் கொடுத்தது, நாட்டின் பாதுகாப்பில் மெத்தனமாக இருந்தது ஆகிய விவகாரங்களில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ... அதே அளவு பங்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் உண்டு’ என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் வாதம்.

அதனால், சுப்ரீம் கோர்ட்டில், சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரியும்... டெல்லி சி.பி.ஐ. சிறப்பு

சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்! P13
நீதிமன்றத்தில், சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கக் கோரியும் மனு செய்து ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். சுவாமியின் பொதுநலன் வழக்கின் வாதங்கள் முற்றிலும் முடிவடைந்து, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்த தீர்ப்பு எப்போதும் வரலாம். இதற்கிடையே, சுவாமி ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்த தனிநபர் மனுவில், 'மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, ஆ.ராசாவோடு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்’ என்று மனு செய்ய, இந்தப் புகாரையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டார். சுவாமி கேட்கும் ஆவணங்களை வழங்கவும் சி.பி.ஐ-க்கு நீதிபதி சைனி உத்தரவிட்டார். மேலும் பல ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருந்தார். இந்த ஆவணங்களோடு சாட்சிகளின் பட்டியலையும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒப்படைத்தார். இதை ஏற்றுக்கொள்ள நீதிமன்றத்தில் சில முறைகள் உண்டு. ஒரு தனிநபர் அளிக்கும் ஆவணங்களும் சாட்சியங்களும் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை சம்பந்தப்பட்ட துறைகளும் அமைப்புகளும் உறுதி செய்து சான்றொப்பங்களோடு கொடுக்க வேண்டும்.
அதன்படி சுவாமி ஆவணங்களை வாங்கி, சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி ஒப்படைத்து இருக்கிறார்.

சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்! P12
2007 நவம்பர் மாதம் முதல் 2008 பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை பல முறை நிதித் துறை அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்வது குறித்து நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். 2008 ஜனவரி 9-ல் நிதி அமைச்சக அதிகாரிகள் எழுதிய 13 பக்கக் குறிப்பு​கள், 2008 பிப்ரவரி 11-ம் தேதி நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரப்பிரிவு அனுப்பிய குறிப்புகள் போன்றவை நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை உஷார்படுத்தின. ஆனால், இவற்றை மீறி ஆ.ராசாவின் முடிவுகளுக்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்தார். இதன்மூலம் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரமும் தனது கடமைகளில் இருந்து தவறினார். ஆ.ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து, தெரிந்தே தவறு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார் சுவாமி.

இதற்கு சுவாமி கொடுத்துள்ள மற்ற ஆதாரங்கள், 2008 ஜனவரி முதல் அக்டோபர் 2008 வரை ராசாவும் சிதம்பரமும் ஐந்து முறை சந்தித்துப் பேசிய நடவடிக்கைக் குறிப்புகள். 'இந்த மினிட்ஸ் மூலம், 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மற்றும் டெலிகாம் உரிமங்களை குறைந்த விலைக்கு கொடுக்க சிதம்பரம் ஒப்புக்கொண்டது தெரிய வருகிறது’ என்கிறார் சுவாமி.

இவை தவிர, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 15.01.2008 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதம், சுவாமியின் கேள்விகளுக்குப் பிரதமர் அலுவலக அதிகாரி டாக்டர் பி.ஜி.எஸ். ராவ் எழுதிய பதில் கடிதங்கள், தொலைத்தொடர்புத் துறை அதிகாரியான மதன் சௌராஷ்யா மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் சட்ட ஆலோசகர் சன்டோக் சிங் ஆகியோர் எழுதிய குறிப்புகளும் சிதம்பரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.

எடிஸாலட் நிறுவனத்துக்கு தனது பங்குகளை பல மடங்குக்கு விற்றது ஸ்வான். இதே மாதிரி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற யுனிடெக் டெலிகாம் நிறுவனமும், டெலினார் என்கிற நார்வே நாட்டு கம்பெனிக்கு பங்குகளை விற்றது. இந்த முதலீட்டுக்கும் பங்கு விற்பனைகளுக்கும் நிதித்துறை அனுமதி​யளிக்க, இது சிதம்பரத்தின் கவனத்துக்குச் சென்று விவகாரமாகியது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது தந்தை உஸ்மான் இப்ராஹிம் பல்வா, இவர்களது பார்ட்னர்களான வினோத் கோயங்கா ஆகியோருக்கு தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொழில் தொடர்பு இருப்பது குறித்து, மத்திய ரகசியப் புலனாய்வுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது. அதனால், 'தேசத்தின் பாதுகாப்பில் சிதம்பரமும் அலட்சியமாக இருந்து ராசாவோடு சேர்ந்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார்’ என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் சுவாமி.

வருகிற 21-ம் தேதி அன்று சுவாமியை வாதாடுமாறு நீதிபதி சைனி கேட்டுக்கொண்டுள்ளார். சுவாமியின் வாதங்களைக் கேட்ட பின்னர், ப.சிதம்பரத்தைக் குற்றவாளியாகக் கருத முடியுமா இல்லையா என்று நீதிபதி கூறுவார். இந்த முடிவுக்கு முன், சி.பி.ஐ. தரப்பின் வாதத்தையும் கேட்கலாம்.

என்ன நடக்கும்... விரைவில் தெரியும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்! Empty Re: சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்!

Post by ந.கார்த்தி Sat 14 Jan 2012, 12:37

பகிர்வுக்கு நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum