புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்!
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக்குக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது, பாராட்டுக்குரியது. இதற்காக "தினமணி' சார்பில் முதல்வருக்கு நன்றியைப் பதிவு செய்கின்றோம்.
முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் கருத்து மாறுபாடு கொண்டிருக்கும் நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை. 1911-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மறைந்த பென்னிகுயிக் நினைவு நூற்றாண்டு விழாவின் தொடக்கமாகவே தற்போதைய அறிவிப்பைக் கொள்ள வேண்டும்.
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுக்கு உயிர் கொடுத்தவர் பென்னி குயிக். அந்த மாபெரும் மனிதரைப் பல குடும்பங்கள் தெய்வமாக மதித்தன. இன்றும்கூட பல வீடுகளில் தங்கள் முன்னோர் படங்களுடன் பென்னி குயிக் படத்தையும் இடம்பெறச் செய்துள்ளனர். ஆனால், இந்த அளவுக்கு அந்த மாமனிதரை தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் இன்றும்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பென்னி குயிக்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறாக இல்லை. அவரைப் பற்றி அறிந்த பொறியாளர்கள் மத்தியில் மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். சிறு அளவில் கருத்தரங்குகளில் பேசப்படுகிறார். இப்போது, இந்த மணிமண்டபம் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருப்பதன் மூலம், தமிழர் அனைவருக்கும் குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு இந்த மாபெரும் மனிதரின் அளப்பரிய சேவை மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது.
1858-ல் பிரிட்டிஷ் அரசில் ராயல் பொறியாளராகச் சேர்ந்தது முதல் தமிழகத்தை மிக நுட்பமாகக் கவனித்து அதன் தேவைகளை உணர்ந்தவர் பென்னி குயிக். ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் சென்ற நூற்றாண்டில் கடும் வறட்சி ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் நேரிட்டதைப் பார்த்து மனம் வருந்தியவர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, ஓடி, கடலில் வீணாகிப் போகும் தண்ணீரைத் தமிழகத்துக்குத் திருப்பும் திட்டத்தை உருவாக்கியவர். பலத்த மழை வெள்ளத்தால் பணிகள் பாதிக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் அரசு இத்திட்டத்துக்கு நிதிஒதுக்குவதில் மெத்தனம் காட்டியது. பணி முடங்கிவிடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்தில் இருந்த தன் சொத்துகளை விற்று, இந்த அணையைக் கட்டி முடித்தவர்.
தெருச் சாக்கடை திட்டத்துக்கும்கூட 10 விழுக்காடு எதிர்பார்க்கும் இந்த நாளில், தன் சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடிக்க பென்னி குயிக் முற்பட்டதன் காரணம், நம்மவர்களைவிட ஆங்கிலேயரான அவர் இந்த மக்களின் வேதனையைப் புரிந்துகொண்டவர் என்பதுதான்.
அணுக முடியாத காட்டுப் பகுதியில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தது மட்டுமல்ல, எத்தகைய வெள்ளம் வந்தாலும் தாங்கி நிற்கும் அளவுக்கு இந்த அணையைப் புவியீர்ப்பு விசை அணையாகக் கட்டினார். அதாவது, அணையில் 156 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கும்போது, அணையைத் தகர்த்து வெளியேற முட்டுகின்ற நீரின் விசையைத் தாங்கும் அளவுக்கு, அணையின் மொத்த எடை (அல்லது நிறை) இருக்கும் வகையில் அமைக்கப்படுவதே புவியீர்ப்பு விசை அணை!
கற்களாலும் சுண்ணாம்பாலும் அமைந்த இந்த அணையின் நிறை மேலும் கூட்டப்பட்டுள்ளதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. ஆனால், 156 அடி உயரத்துக்கு நீர் தேக்காமல், தற்போது 132 அடி உயரம்தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது அணை நீரின் விசை மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், கேரளத்தின் அழுகுணிக் குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது.
தமிழக அரசு மணிமண்டபத்துடன் நின்றுவிடக்கூடாது. இந்த மணிமண்டப வளாகத்தைப் பென்னி குயிக் பாசன மேலாண்மை மையமாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் நிலவிய பாசன முறைகள் குறித்து பயிற்றுவிக்கும் கல்லூரிகள் இன்றில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் பாசன மேலாண்மைக்கான படிப்பு இருக்கின்றது. திருச்சி துவாக்குடியில் பாசன மேலாண்மைப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பொதுப் பணித் துறையில் உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில், விருப்ப முறையில் புத்தொளிப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மிகச் சிறிய எண்ணிக்கையில் விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனாலும் இது போதாது.
பாசன மேலாண்மை என்பது முக்கியமாக கடைக்கோடியில் உள்ள சாதாரண விவசாயிகளுக்குத்தான் அளிக்கப்பட வேண்டும். ஏரி, குளங்களில் தேங்கும் நீர் அளவு என்ன, எந்த அளவுக்கு நீர் தேங்கினால் எந்தெந்த நீர்ப் போக்கியைப் பயன்படுத்தலாம், எந்தெந்த மதகுகளைத் திறக்கலாம் என்பதற்கு கரைகளிலும், மதகுகளிலும் அடையாளம் வைத்த தமிழர்களின் பாசன அறிவு இன்று பயன்படுத்தப்படவில்லை. பாசன மேலாண்மையில் நிலவிய தமிழ்ச் சொற்களைக்கூட இன்றைய விவசாயிகள் அறிந்திருக்கவில்லை.
ஒவ்வொரு பாசனக் கால்வாயையும், ஏரிகளையும், குளங்களையும் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைப்பதுதான் தமிழக பாசனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இருக்கும். தேவைக்கேற்ப அணை நீரைத் திறப்பதும், வாய்க்கால் தூர் வாருவதும் அந்தந்தப் பகுதி விவசாயிகளின் பொறுப்பில்விட்டு, அளிக்கப்பட்ட நிதி சரியாகச் செலவிடப்பட்டதா என்கின்ற தணிக்கையை மட்டுமே அரசு மேற்கொள்ளும் நிலைமை உருவாக வேண்டும். இதற்கு சாதாரண விவசாயிகள் அளவில் பாசன மேலாண்மை குறித்த அறிவும் பயிற்சியும் அவசியம்.
தமிழர் வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணிப்பு செய்த பென்னி குயிக் மணிமண்டப வளாகம், தமிழகத்தின் சிறுவிவசாயிகளுக்கு தங்கள் பகுதி நீராதாரத்தை எப்படிச் செவ்வனே பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லித் தரும் வளாகமாக மாறட்டும்.
நன்றி - தினமணி.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1