புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_m10இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 1:59 pm

இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை

பூமிப்பந்தின் இயற்கை சங்கிலியை தன் விருப்பம் போல இழுத்து வளைக்கும் மனிதனின் மாசு படாத மலைதான் கொல்லிமலை. கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்று, கற்கண்டு போன்ற தண்ணீர், கண்கொள்ளா பசுமை, மூலிகை சுவாசம், தாய்ப்போல் போன்ற கலப்படமில்லாத, கபடமில்லாத மக்களைக் கொண்டுள்ளது கொல்லிமலை.

இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Tamil_News_large_376790
நாமக்கல் மாவட்டதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில், விரிந்து, பரந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் கொல்லிமலை அமைந்துள்ளது. கடையெழுவள்ளல்களில் ஒருவரும், ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான், காட்டுப்பன்றி, உடும்பு ஆகியவற்றை வீழ்த்திய வீரருமான வல்வில் ஒரி கி.பி.200ல் ஆண்ட மண் இது.

சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூற்றில் இடம் பெற்ற தலம். மேலும் இளங்கீரனார், அவ்வையார், பெருஞ்சித்திரனார் போன்ற சங்ககால புலவர்களாலும் பாடப் பெற்ற இடமாகும்.

இங்கு, 1100 படிகளில் இறங்கிச் சென்று பார்த்தால் ஆனந்தமும், குளித்தால் பரவசமும் தரும் ஆகாயகங்கை அருவி உள்ளது. பெயருக்கேற்றாற்போல 180 அடி உயரத்தில் இருந்து வெண்பனிபோல அருவி ஆகாயத்தில் இருந்து விழுவது அவ்வளவு அற்புதமாக உள்ளது. இந்த அருவிக்கு செல்லும் வழியில் கோரக் சித்தர் உள்ளிட்ட சில சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. பல ஆண்டுகாலமாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் குகைக்குள் போகமுடியாத அளவிற்கு வவ்வால்களின் நெடி உள்ளது. பல படி இறங்கி ஆகாயகங்கை அருவிக்கு போக முடியாதவர்கள் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே ஒடும் அருவியில் குளித்து மகிழலாம்.

மேலும் 1300 ஆண்டு கால பழமைவாய்ந்த அறப்பளீஸ்வரர் கோயிலுக்குப் போகலாம். இந்நாளில் எட்டுக்கை அம்மனாகவும், முன்னாளில் கொல்லிப்பாவையாகவும் அழைக்கப்பட்ட அம்மனை தரிசிக்கலாம். வாசலூர்பட்டி படகு துறையில் படகுவிட்டு சந்தோஷப்படலாம். தாவரவியல் பூங்காவில் உள்ள "கிங்காங்' மனித குரங்கையும், படகு வீட்டையும் பார்த்து ரசிக்கலாம். இன்னும் சீக்குப்பாறை, வியூபாயிண்ட் போன்ற இடங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். அரசு மூலிகை பண்ணையில் உள்ள கருநெல்லி, ஜோதிப்புல் போன்ற மூலிகையையும் பார்க்கலாம்.

இங்குள்ள மலைப்பாறைகளில் விளையும் ஆட்டுக்கால் போன்ற வடிவத்தில் இருக்கும் முடவாட்டுக்கால் சூப் சாப்பிட்டு களைப்பை போக்கிக்கொள்ளலாம். இங்கு விளையும் காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசி, வாழை, பப்பாளி போன்றவைகளை உண்டும் மகிழலாம், தேவைக்கு ஏற்ப குறைந்த விலைக்கு வாங்கிவந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தும் சந்தோஷப்படலாம்.

நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு நாமக்கல், சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் இருந்து பஸ்கள் விடப்படுகின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் வளைந்து, நெளிந்து, மேகம் வந்து மலை முகடுகளை தொட்டு, தொட்டு செல்லும் இயற்கை காட்சியை பார்த்தபடி சென்றால் சுமார் 2 மணி நேர பயணத்திற்குள் கொல்லிமலையை அடையலாம்.

கொல்லிமலை என்பது ஒரு தொடர்ச்சியான மலை என்பதால் ஒரு குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பார்க்கவேண்டிய இடங்கள் பரந்து, விரிந்து உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை என்பது மிக, மிகக் குறைவாகவே இருப்பதால், இங்கு வாகன வசதி கிடையாது. பஸ்சில் வந்தால் நிறைய இடங்களை பார்க்க முடியாது. ஆகவே வாடகை அல்லது சொந்த வாகனங்களில் வருவது மேலானதாகும்.

இங்கு பி.எஸ்.என்.எல்., தவிர வேறு எந்த தொடர்பும் தற்போதைக்கு கிடைக்காது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டுவரவும்.

மாடர்ன் தியேட்டர் காலம் தொட்டு கொல்லிமலை என்றாலே ஏதோ ஒரு அமானுஷ்யம் நிறைந்த மர்ம பிரதேசசமாக தப்பாய் சித்தரித்து வருகின்றனர். உண்மையில் அப்படி எதுவுமில்லை. இது இயற்கை வாங்கி வந்த வரம். அழகின் சிகரம். அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற நிம்மதியான தேசம். மற்றபடி பேய், பிசாசை எல்லாம் நாம் கூட்டிக்கொண்டு போனால்தான் உண்டு.

நல்ல சாப்பாடு கிடைக்கிறது, தங்குவதற்கு மிக சொற்பமான விடுதிகளே இருப்பதால், சொல்லிவைத்து சென்றால் கொல்லிமலையில் சுகமாய் தங்கலாம்.

இந்த இடத்தின் அருமையை உணர்ந்து, முன்பு இங்கிருந்த ஆட்சியாளர்கள் சுந்தரமூர்த்தியும், சகாயமும் இங்கு சுற்றுலாவை மேம்படுத்த செய்திட்ட பணிகள் நிறையவே உண்டு. இதனை இங்குள்ள மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். இப்போது கொல்லிமலைக்கு மகுடம் சூட்டுவது போல 2 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கி கொல்லிமலையை சுற்றுச்சுழல் (எக்கோ டூரிசம்) சுற்றுலா தலமாக அறிவித்துள்ளதால் முதல்வர் ஜெயலலிதாவை கொண்டாடுகின்றனர்.

-எல்.முருகராஜ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 08, 2012 8:06 pm

எங்கள் ஊரில் உள்ள இந்த மலையின் பெருமைகளை பகிர்ந்த பிரசன்னாவிற்கு என் நன்றிகள் .மேலும் இந்த பதிவிற்கு ரிப்ளை எழுதாதவர்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 1357389இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 59010615இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Images3ijfஇயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 08, 2012 9:05 pm

நல்ல மிரட்டல். இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 230655

நானும் அருகாமையில்தான் வசிக்கிறேன். இருந்தாலும் அதன் பெருமை அருகில் இருப்பவா்களுக்கு தொிவதில்லை என்பது உண்மையே.
நண்பா் பிரசன்னா அவா்களுக்கு நன்றி. இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 678642



இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 154550இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 154550இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 154550இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 154550இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 08, 2012 10:05 pm

சார்லஸ் mc wrote:நல்ல மிரட்டல். இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 230655

நானும் அருகாமையில்தான் வசிக்கிறேன். இருந்தாலும் அதன் பெருமை அருகில் இருப்பவா்களுக்கு தொிவதில்லை என்பது உண்மையே.
நண்பா் பிரசன்னா அவா்களுக்கு நன்றி. இயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை 678642
கேசவன் wrote:எங்கள் ஊரில் உள்ள இந்த மலையின் பெருமைகளை பகிர்ந்த பிரசன்னாவிற்கு என் நன்றிகள் .மேலும் இந்த பதிவிற்கு ரிப்ளை எழுதாதவர்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வழக்கமாக அருகில் இருப்பவர்களுக்கு தானே அதன் அருமை பெருமைகள் தெரிந்திருந்தும் கண்டுக்கொள்ளமாட்டார்கள் என்று ஒரு வழக்கம் சொல்லப்படும் புன்னகை தொலைவில் இருந்தாலும் இதுபோன்ற இடங்களை சென்று பார்ப்பதில் எங்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் இந்த கொல்லிமலையின் பெருமைகளை சொல்லிய விதம் பாராட்டுக்குரியது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக