ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

5 posters

Go down

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Empty சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

Post by பிரசன்னா Sun Jan 08, 2012 6:10 pm

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

மும்பையில் ஏதேனும் திருட்டுப் போனால், ‘சோர் பஜாரில் தேடிப் பாருங்க...’ என்று கேலியாக சொல்வதுண்டு. மும்பையின் பல பகுதிகளில் இருக்கும் வீடுகளிலும் கடைகளிலும் திருடப்படும் பொருட்கள் இங்கு சர்வசாதாரணமாகவும் பகிரங்கமாகவும் விற்கப்படுவதுதான் காரணம்!தென் மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதி அமைந்திருக்கும் கிராண்ட் ரோடு அருகில் உள்ள லேம்ங்டன் சாலையே சோர் பஜார் கூடாரம்.
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Kungumam_23சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Kungumam_24
150 ஆண்டுகளாக இந்த பஜார் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மலிவுவிலை பொருட்களை சாலையோரங்களில் கூவிக்கூவி விற்பார்களாம். அப்போது, இது ‘ஷோர் பஜார்’ (கூவி விற்கும் சந்தை) என்ற பெயரில் அழைக்கப்பட்டதாம். நாளடைவில் திருட்டுப்பொருள் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து ‘ஷோர்’ என்பது ‘சோர்’ என்று மருவி திருட்டுப்பொருள் சந்தை என்றே வழக்காகி விட்டது.வெள்ளிக்கிழமைகளில் இந்த சந்தை களை கட்டுகிறது. போலீசாருக்கு இரவு நேர ரோந்துப்பணி முடிந்து, காலையில் மீண்டும் பணி தொடங்குவதற்கு இடைவெளியில் இருக்கும் 4 மணி நேரம்தான் & அதாவது அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரைதான் இந்த சோர் பஜார் செயல்படுகிறது. அதிகாலை நேரத்தில் போலீசார் பொதுவாக வருவதில்லை என்பதாலேயே வியாபாரிகள் இந்த 4 மணி நேரத்தை தங்கள் வியாபாரக் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பகிரங்கமாகவே இந்த சந்தை செயல்பட்டு வந்தாலும், போலீசார் கண்டுகொள்வதில்லை.

பொருள் எங்கு திருடப்பட்டது, யாருடையது, அதைக் கொண்டு வந்து தங்களிடம் விற்பது யார் போன்ற ரிஷிமூலங்கள் வியாபாரி களுக்கே தெரிவதில்லை என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. அதையும் தாண்டி நடவடிக்கை எடுக்க முயன்றாலும், அவர்களது கரங்களை வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கணிசமாகத் தரும் ‘மாமூல்’

கட்டிப்போட்டு விடுகிறது!
மும்பையிலும் சுற்றியுள்ள சிறிய நகரங்களிலும் இரவு திருட்டுப் போகும் இருசக்கர வாகனங்கள் சோர் பஜாரில் மறுநாள் காலை உதிரிப் பாகங்களாக மாறி நல்ல விலை போகின்றன. கார்களும்கூட தனித்தனி பார்ட்களாகி விற்பனைக்கு வந்துவிடுகின்றன. பல மெக்கானிக்குகள் இந்தச் சந்தையிலிருந்துதான் வாகன உதிரிப் பாகங்களை வாங்கிச் செல்கிறார்கள். பிராண்டட் ஷர்ட்கள், பேன்ட்கள், ஜீன்ஸ், வெளிநாட்டு ஷூக்கள், பழங்கால நாணயங்கள், மியூசியங்களில் வைக்கத் தகுந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள், கலைப்பொருட்கள் என வெளிச்சந்தையில் கிடைக்காத பல அரிய பொருட்களை இங்கு எளிதாக வாங்க முடியும்.
சமீப காலம் வரை வெளிநாட்டுத் துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி போன்றவையும் விற்பனையாகின. போலீஸ் கெடுபிடி காரணமாக இப்போது மறைமுகமாக இந்த வியாபாரம் நடக்கிறது. பார்த்தாலே கிலியூட்டும் கத்திகள், வாள்கள் போன்றவை இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன. விலையுயர்ந்த கார் ஸ்டீரியோக்களும் இங்கு கிடைக்கும்.
இங்கு வரும் ஒருவர், ஏதேனும் ஒரு பொருளை விலை கேட்டுப் பார்த்து, ‘வேண்டாம்’ என சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது. பொருளை அந்த நபர் வாங்கும் வரை வியாபாரி பாடாய்ப்படுத்தி விடுவார். அதோடு அதிக விலைக்கும் தலையில் கட்டிவிடுவார்.

இங்கு மும்பைவாசிகள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வியாபாரம் செய்கிறார்கள். இவர்களுக்கென தனி அமைப்பும் உண்டு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் இங்கு வியாபாரம் செய்யமுடியும். காலை 4 மணிக்கு தொடங்கி 8 மணி வரை நடக்கும் வியாபாரம் சட்டென முடித்துக் கொள்ளப்படுகிறது. அதன் பிறகு இங்கு நிரந்தரக் கடைகள் திறக்கப்படுகின்றன. இந்தக் கடைகளுக்கும் திருட்டுப் பொருள் விற்பனைக்கும் சம்பந்தம் கிடையாது என்கிறார்கள்.
சோர் பஜார் வியாபாரிகள் எல்லோருமே, ‘தாங்கள் விற்பது திருட்டுப் பொருட்கள் இல்லை’ என்று சத்தியம் செய்யாத குறையாகத்தான் பேசுகிறார்கள்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ராவ் சாகிப் 20 ஆண்டுகளாக சோர் பஜாரில் வியாபாரம் செய்கிறார்... ‘‘முன்பு போல இப்போது வியாபாரம் ஆவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் தினம் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். இப்போது ரூ.2 ஆயிரம் கிடைப்பதே போதும் என்றாகி விடுகிறது. இந்த வருமானத்தில் போலீஸ்காரர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார் அவர்.
60 ஆண்டுகளாக சோர் பஜாரில் வியாபாரம் செய்யும் 80 வயது இஸ்மாயில் மசூரி, வருவாய் குறைந்ததற்கு போலீசைக் குறைகூறுகிறார்... ‘‘நான் இங்கு தொழில் செய்ய வந்தபோது போலீஸ் கெடுபிடி கிடையாது. விலையுயர்ந்த பல பொருட்கள் எங்களுக்கு மிக மலிவான விலையில் கிடைத்தது. அதனால் லாபமும் அதிகம் கிடைத்தது. இப்போது போலீஸ் கெடுபிடியால் அதிக சிரமத்துக்கு இடையேதான் பொருட்களை விற்கிறோம். அதிக விலை கொடுத்துதான் அவற்றை வாங்குகிறோம்...’’ என்கிறார்.
ஒவ்வொரு தொழிலுக்கும் அவரவர் பார்வையில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது போல!.

நன்றி குங்குமம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Empty Re: சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

Post by Guest Sun Jan 08, 2012 6:21 pm

அதிர்ச்சி துப்பாக்கி கிடைக்குறது என்றால் ஒரு சுற்று போய் வந்து விடலாம் போல ... புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Empty Re: சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 08, 2012 6:58 pm

மிகவும் நல்ல செய்திக்கு நன்றி பிரசன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Empty Re: சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

Post by கேசவன் Sun Jan 08, 2012 8:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 1357389சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 59010615சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Images3ijfசோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Empty Re: சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

Post by சார்லஸ் mc Sun Jan 08, 2012 8:16 pm

திருட்டுப் பொருள்களுக்கு மக்கள் ஏன் இப்படி ஆதரவு தரவேண்டும்? திருட்டுக்கு ஆதரவு தருவதும் மக்கள். திருட்டுக்கு புகாா் செய்து புலம்புவதும் மக்கள். தேவையா இது. சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 56667
எங்கள் ஊா் பக்கம் ஒரு சொல் உண்டு. “திருடுபவன் மட்டும் திருடனில்லை; திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவனும் திருடன்தான் என்று”. மக்கள் திருந்தினால் அனைத்தும் சாியாகி விடும்.
அரசு நினைத்தால் இந்த வியாபார சந்தையை இழுத்து மூடிவிட முடியும். ஆதாரம் இல்லையென்பதற்காக பல ஆண்டுகாலம் வெளிப்படையாக இது இயங்கி வருவதே போதுமான ஆதாரம். அவசியம் இந்த சந்தை தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. மக்கள் இதற்கு ஆதரவு தராதிருப்பது நன்று.


சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Empty Re: சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

Post by அசுரன் Sun Jan 08, 2012 8:23 pm

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Empty Re: சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum