ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேக்கும் இராம.கோபாலனும்!

2 posters

Go down

விவேக்கும் இராம.கோபாலனும்! Empty விவேக்கும் இராம.கோபாலனும்!

Post by பிரசன்னா Sun Jan 08, 2012 1:56 pm

விவேக்கும் இராம.கோபாலனும்!

கொஞ்ச காலமா கோடம்பாக்கத்தில் ஒரே பொசுங்குன வாடை... வாயிலேயே பெட்ரோல் பங்க்கை தெறந்து, அதுல தீவிட்டிய விட்டு ஆட்டுன மாதிரி அப்படி ஒரு ‘ஹாட்’டுத்தனமான பேச்சு விவேக்கிடம். உயர்தர சைவ உணவகம்னு நினைச்சா, இப்படி முள்ளு தெரியற கொடுவா மீனை அவிச்சு கொட்டிட்டாரேன்னு மொத்த சனமும் அதிர்ந்து கெடக்கு.

அதைவிட பெரிய அதிர்ச்சி அவருக்கு எப்போதும் சப்போர்ட் பண்ணுற இன்னொரு பத்திரிகைக்குதான். ஏன்னா, அன்னைக்கு பத்மஸ்ரீ வாயிலே விழுந்து பலகாரம் மாதிரி நசுக்குனது அந்த பத்திரிகையும்தான்.

விவேக்கும் இராம.கோபாலனும்! Images
மருத்துவர்களும், பொறியாளர்களும், வங்கி அதிகாரிகளும், ஏராளமாக படித்தவர்களும் தெய்வமா நினைக்கிற சிவசங்கர பாபாவை நக்கலடிப்பாராம். தப்பில்லே. வேளச்சேரி பகுதியில் நாடார்களின் நம்பிக்கையாகவும், படிக்காத மக்களின் பாசக்காரராகவும் இருந்த யாகவா முனிவரை கிண்டலடிப்பாராம். தப்பில்லே. ஒரு படம் விடாம ஊன முற்றவர்களை மென்று துப்புவாராம். ரஜினி சொன்ன மாதிரி வயித்து பிழைப்புக்கு எல்.எம்.எல். பிசினஸ்லே இறங்கி இம்சையை மடியிலே கட்டிக்கிட்ட சிவகாசி ஜெயலட்சுமியை புண்படுத்துவாராம். தப்பில்லே. தன்னைப் போலவே வயித்து பிழைப்புக்காக வேஷம் போடும் ஷகிலாவை நக்கலடிப்பாராம். தப்பில்லே. இந்துக்களை மட்டுமே டார்கெட்டா வச்சிகிட்டு பொளந்து கட்டுவாராம். தப்பில்லே. ஒட்டுமொத்தத் திரையுலகமே பல்கலைக்கழகமா நினைச்சிட்டு இருக்கிற நடிகர் திலகம் சிவாஜியை ஒரு படம் விடாம மிமிக்கிரி பண்ணுவாராம். அதுவும் தப்பில்லே... ஆனா, இவரை எழுதினா மட்டும் கொதிச்சுப் போவாராம். நல்லாயிருக்குய்யா பத்மஸ்ரீ நடிகரின் பாலிசி.

’நேரம் இருந்தா ஏதாவது எழுதிக்கொடுங்களேன்’னு ‘குங்குமம்’ இன்சார்ஜ் எடிட்டர் சாருப்ரபா கேட்டதாலே விவேக்கை சந்திக்கப் போனேன். அதுக்கு முன்னாடி குங்குமத்திலே என்ன நடந்ததுன்னே தெரியாம போனதால வந்த விளைவு அது. ஒரு படத்திலே மனோகராவில் வரும் நீதிமன்ற வசனத்தை அப்படியே ஸ்டைலா அடிச்சிருப்பாரு விவேக். அது சம்பந்தமா பேட்டியும் கொடுத்திருந்தாராம் குங்குமத்துக்கு. ‘சிவாஜியால் எனக்கு பெருமை’ன்னு விவேக் சொல்ல, ‘என்னால் சிவாஜிக்கு பெருமை’ன்னு மாத்தி எழுதிட்டாய்ங்க. சும்மா இல்லாம, ‘என்னால் சிவாஜிக்கு பெருமை’ன்னு டைட்டிலும் வச்சுட்டு டி.வி.யிலேயும் ஒரு நாளைக்கு முப்பது வாட்டி திருப்பித் திருப்பி சொல்லவும் விவேக்கோட ஃபோனுக்கு ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் வந்து ஒரே காச்மூச்! அவ்வளவுதான்... உடம்பெல்லாம் ஃபைல்ஸ் வந்த மாதிரி ஓ...ன்ன்ன்ன்னு அலற ஆரம்பிச்சிட்டாரு விவேக். (தப்பில்லையே?) (வந்த பிறகாவது)

எலியே எரவாணத்திலே சிக்கிக்கிட்டு தொங்குது. இதுலே கரப்பான் பூச்சி போயி வாலை நக்குனா என்னாவும்? என் நிலைமையும் அப்படிதான் இருந்திச்சு. விவேக்கிடம் போய் ‘குங்குமத்துக்காக ஒரு இன்டர்வியூ’ன்னு வாயைத் திறந்தேன். அவ்வளவுதான், அத்தனை ஆத்தாவும் மொத்தமா ஏறுனா மாதிரி மூஞ்சை வச்சிக்கிட்டு ‘எங்கேர்ந்து?’ன்னாரு. நான் திரும்பவும் ‘குங்குமம்’னு சொல்லவும், உதடு உண்டி வில்லு ஆயிருச்சு விவேக்குக்கு! வையாபுரி உடம்புலே ஓம்பூரிய ஒட்ட வைச்சா மாதிரி உடம்பை விறைச்சுகிட்டு அப்படியே எந்திருச்சாரு. வாயிலேர்ந்து சரோஜாதேவி புத்தகத்திலே வருமே, முக்கியமான ‘மேட்டர்களோட’ பேரு. அதுவா வந்து கொட்டுது. அவ்வளவும் என்னையில்லே, என்னைய அனுப்பியதா அவரு நினைச்சுக்கிட்டிருந்த சாருப்பிரபாவை!’ அவன் பண்ணின வேலையாலே நான் சந்திச்ச பிரச்னை கொஞ்சமா, நஞ்சமா? இவ்வளவும் பண்ணிட்டு ஆளு அனுப்புறானா, பேட்டிக்கு? நான் நினைச்சா என்னாவும் தெரியுமா? தொலைச்சிருவேன்’னு பாய, நான் ‘சார் என்னைய அவரு அனுப்பலே’ன்னேன்.

அதுக்கு பிறகாவது என்னை உட்கார வைச்சி பேசியிருக்கலாம். நானும் பாலுவும் நின்னுகிட்டே இருந்தோம். பொதுவா பேட்டின்னு ரிப்போர்ட்டர்ஸ் போனா முதலில் உட்காரச் சொல்ற வழக்கம் எல்லா நடிகர் நடிகைகளுக்கும் உண்டு. சேர் இல்லேன்னா அவங்களும் எழுந்து நிப்பாங்க. சேர் வந்த பிறகு நம்மோடு சேர்ந்து உட்காருவாங்க. இப்படியே பழகிய எனக்கு விவேக் கொடுத்த மரியாதை ரொம்ப கேவலமாக பட்டது. அப்படியே திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தா அவ்வளவு பேரும் எங்களை பார்த்திட்டு இருந்தாங்க. ‘சார் பேட்டி வேணாம்னா விடுங்க. அதுக்குப்போயி எதுக்கு இவ்வளவு பேசுறீங்க? தைரியம் இருந்தா சாருபிரபாகிட்டே போயி பேசுங்களேன்’னேன். ‘இப்பதான் அவன் ஆபிசுக்கே நேரா போயி காதெல்லாம் நாறிப் போற மாதிரி திட்டிட்டு வர்றேன். பின்னாடியே ஆளு அனுப்புறானா?’ன்னாரு மறுபடியும்! (அட இது வேறயா...? தெரியாமப் போச்சுடா சொக்கா...)

விருட்டுன்னு கோவிச்சுகிட்டு வெளியே வந்தோம் நானும் பாலுவும். அப்போ அவரும் ரொம்ப கோவப்பட முடியாதபடி ஒரு இன்டர்நெட் பத்திரிகையிலே இருந்தார். இப்போ பாலு தினமலர்லே இருக்கார். (சுத்தம்) வண்டியிலே வரும்போது விவேக் மாதிரியே குரலை மாத்தி என் முகத்தை பார்த்து பாலு சொன்னாரு. ‘அண்னே சொம்பு ரொம்ப நசுங்கியிருக்கே?’

‘இல்லே பாலு யாரு சொம்பு நசுங்குதுன்னு பாருங்க’ன்னு அப்போதைக்கு பதிலைச் சொன்னாலும், உள்ளுக்குள்ளே ஒரு காட்டுமிராண்டி கோவணத்தை அவுத்து போட்டுட்டு குய்யோ முறையோன்னு ஆடுறான். ராவெல்லாம் யோசிக்க காலையிலே ஒரு முடிவுக்கு வந்தேன். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் வீட்டுக்கு அப்பாயின்ட்மென்ட்டே வாங்காமப் போயிட்டேன்.

‘ஐயா, ஒரு பேட்டி?’

‘உட்காருங்க தம்பி, பேரு என்ன?’ பேச ஆரம்பிச்சாரு பெரியவரு.

எங்கெங்கோ தாவி சினிமாவிலே வந்து நின்னுச்சு மேட்டர். நமக்கும் அதுதானே டார்கெட்? ‘ஐயா, எல்லாப் படத்திலேயும் இந்து மதத்தை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறாரே விவேக், அவரை கண்டிச்சு போராட்டம் எதுவும் நடத்த மாட்டீங்களா?’ன்னு நான் கேட்க, அதுக்காகவே காத்திருந்தது காவி சிங்கம்!

‘ஆமா, நெறய பேரு எங்கிட்டவும் சொன்னாங்க. நான் சினிமா பார்க்கிற பழக்கம் இல்லேன்னாலும் அவங்க சொல்றதைப் பார்த்தா அவன் ரொம்பத்தான் பேசுறான். இனிமேலாவது அவன் இந்து மதத்தை இழிவு படுத்தறதை நிறுத்தணும். இல்லைன்னா, அவன் எங்கெல்லாம் ஷூட்டிங் போறானோ, அங்கே எங்க அமைப்பு போயி செருப்பை வீசும்’னாரு. அந்த வார்த்தையை கேட்கும்போதே நெஞ்சிலே நீலகிரி தைலத்தை தடவிய மாதிரி குளுகுளுன்னு இருந்திச்சு.

செருப்படி விஷயத்தை ‘ஹைலட்’ பண்ணி ஒரு சினிமா பத்திரிகையில் பெரிய கவர் ஸ்டோரியாக எழுதி வெளியிட்டேன். அவ்வளவுதான்... அலறி அடித்துக் கொண்டு விகடன் அலுவலகத்திற்கு ஓடினார் விவேக். ‘என்னையும் இராம.கோபாலனையும் நீங்கதான் சந்திக்க வைக்கணும்’ விவேகின் வேண்டுகோளை அப்படியே ஏற்று இருவரையும் சந்திக்க வைத்தது ஆ.வி. அந்த பேட்டியில்தான் முதன் முதலாக தன்னை ஆத்திகன் என்றும், வடபழனி கோவிலுக்கு வாரம் தவறாமல் போகிறவன் என்றும் ஒப்புக் கொண்டார் விவேக். இராம கோபாலனின் முடிவும் மாறியது.

இப்போ விவேக் தன் நாக்குல நஞ்சை தடவிக்கிட்டு பேசுனதும் அதே ஆ.வி. யைதானேய்யா...ஹூம், ஒரு ஆளைப் பற்றி இப்பவாவது புரிஞ்சா சரி.

பின் குறிப்பு: பத்திரிகையாளர் ராதாராஜ் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் நிதி கொடுத்தார் விவேக். அதிர்ந்து போனேன் நான். உடனடியாக அவருக்கு போன் செய்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். இப்போது என் மனதில் விவேக் பற்றிய பழைய மதிப்பீடுகள் அத்தனையும் ‘பெரிய ரப்பர்’ கொண்டு அழிக்கப்பட்டு விட்டது!

- ஆர்.எஸ். அந்தணன் (பளபள உலகம் கலகல பார்வை)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விவேக்கும் இராம.கோபாலனும்! Empty Re: விவேக்கும் இராம.கோபாலனும்!

Post by பேகன் Sun Jan 08, 2012 3:19 pm

சிரி சிரி சிரி சிரி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum