ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்

3 posters

Go down

வழக்கு  பதிவு செய்யாத  போலீஸ் மீது  எஸ் எம் எஸ் இல் புகார்  அறிமுகம்  Empty வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்

Post by இளமாறன் Sat Jan 07, 2012 9:13 pm

மதுரை: வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் போலீசார் குறித்து, எஸ்.எம்.எஸ்.,சில், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யும் முறை, தமிழகத்தில் முதன்முறையாக ஜன.,15ல் மதுரையில் அறிமுகமாகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உட்பட 20 விதிமீறல்களை தடுக்க, "வெய்கிள் டிராகிங் சிஸ்டம்' வசதி, கடந்த நவ., 8ல், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான சாப்ட்வேரில், தமிழகம் முழுவதுமுள்ள 1.50 கோடி வாகனங்களின் பதிவெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவெண்ணை குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம். எஸ்., மூலம் போலீஸ்
அனுப்பினால் போதும். மூன்று வினாடிகளில் வாகனத்தின் முழு விபரத்தையும் எஸ்.எம்.எஸ்.,சில் அறிய முடியும். "இவ்வசதியால் இதுவரை 19 திருட்டு வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது,'' என்கிறார், இந்த சாப்ட்வேரை உருவாக்கிய, மதுரை எஸ்.எஸ். காலனி "ஆக்மி சாப்ட்வேர் டெக்னாலஜி' இயக்குனர் எஸ்.கே. மாரியப்பன்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது :

குடிபோதையில் வாகனம் ஓட்டி மாட்டும்போது, அதுகுறித்த விபரமும் பதியப்படும். மீண்டும் அதே நபர் சிக்கும்போது,போலீசார் எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், எத்தனை முறை விதிமீறல் செய்துள்ளார் என்ற விபரம் உடனுக்குடன் தெரிவிக்கும் வசதி உள்ளது. பதிவெண்ணை திருடர்கள் மாற்றினாலும், இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பரை கொண்டு வண்டியின் முழுவிபரத்தையும் அறிய முடியும். இரு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எம்.எஸ்.,சில்(97881 11000) புகார் செய்யும் முறை, மதுரையில் அறிமுகமானது. சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, மீண்டும்
இத்திட்டத்தை செயல்படுத்த ஆஸ்ரா கர்க் எஸ்.பி., கூறியுள்ளார். புகார் குறித்து பொதுமக்கள்எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டதற்கான மனு எண் புகார்தாரருக்கு உடனடியாகஅனுப்பப்படும். அந்த புகார் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தெரிவிக்கப்படும். அவர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்து நடவடிக்கை எடுப்பார். அதுகுறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் அனுப்புவார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும் எஸ்.பி., அலுவலகத்திற்கு பொதுமக்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். ஜன.,15ல் இவ்வசதியை அறிமுகப்படுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர், என்றார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வழக்கு  பதிவு செய்யாத  போலீஸ் மீது  எஸ் எம் எஸ் இல் புகார்  அறிமுகம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வழக்கு  பதிவு செய்யாத  போலீஸ் மீது  எஸ் எம் எஸ் இல் புகார்  அறிமுகம்  Empty Re: வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்

Post by சிவா Sat Jan 07, 2012 9:42 pm

///இரு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எம்.எஸ்.,சில்(97881 11000) புகார் செய்யும் முறை, மதுரையில் அறிமுகமானது. சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டு விட்டது.///

ஏன்? அழகிரிக்கும் அவரது அடியாட்களுக்கும் தொந்தரவாக இருக்கிறது என்றா?


வழக்கு  பதிவு செய்யாத  போலீஸ் மீது  எஸ் எம் எஸ் இல் புகார்  அறிமுகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழக்கு  பதிவு செய்யாத  போலீஸ் மீது  எஸ் எம் எஸ் இல் புகார்  அறிமுகம்  Empty Re: வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்

Post by அசுரன் Sat Jan 07, 2012 11:32 pm

சிவா wrote:///இரு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எம்.எஸ்.,சில்(97881 11000) புகார் செய்யும் முறை, மதுரையில் அறிமுகமானது. சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டு விட்டது.///

ஏன்? அழகிரிக்கும் அவரது அடியாட்களுக்கும் தொந்தரவாக இருக்கிறது என்றா?
அருமையிருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வழக்கு  பதிவு செய்யாத  போலீஸ் மீது  எஸ் எம் எஸ் இல் புகார்  அறிமுகம்  Empty Re: வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம்
» சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!
»  துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி: போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - ஜான்பாண்டியன்
»  வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum