ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபிக்கப்பட்டவர்கள்

2 posters

Go down

சபிக்கப்பட்டவர்கள் Empty சபிக்கப்பட்டவர்கள்

Post by சிவா Fri Jan 06, 2012 10:00 pm




என் வாழ்க்கையில் அந்த அதிசயமான, அபூர்வமான நிகழ்ச்சி நடந்தது!மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையாக நான் பாரிஷால் பகுதிக்குப் போக வேண்டியிருந்தது.இந்தப் பகுதியின் படித்துறையிலிருந்து, பன்னிரண்டு மணியளவில் படகில் புறப்பட்டேன். பாரிஷால் பகுதியில் வசித்த ஒருவரும் என்னுடன் படகில் வந்தார். ஏதோ பேசிக்கொண்டே வந்ததில் நேரம் கழிந்தது!அப்போது துர்க்கா பூஜை முடிந்திருந்தது. வானத்தில் மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் தவழந்து கொண்டிருந்தன. இடையிடையே மழைத் தூறலும் விழுந்துக் கொண்டிருந்தது. சுந்தியாக் காலத்திற்குச் சற்று முன்பு, வானம் சற்றே வெளிறிப் போயிருந்தது. உடைந்த மேகங்களுக்கிடையே சதுர்த்தசியின் நிலவு லேசாக மின்னிக் கொண்டிருந்தது. சந்தியாக்காலம் நெருங்கியதுமே நாங்கள் நதியின் முக்கியமான அகலமான பகுதியை விட்டுவிட்டு ஒரு கால்வாய்க்குள் நகர்ந்து போய்க் கொண்டிருந்தோம். இந்தக் கால்வாய் இங்கிருந்து ஆரம்பித்து நோயாகாளியின் வடக்குப் பகுதி வழியாக ஓடி நேரடியாக மேகனா நதியில் போய்க் கலக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கிழக்கு வங்காளத்துக்கு இதுவரை நான் போனதில்லை. இப்போதுதான் முதல்முறையாகப் போகிறேன். எல்லாக் காட்சிகளுமே புதியனவாக இருந்தன. நீண்ட கால்வாயின் இரு மருங்கிலும் மழை நீரில் குளித்திருந்த கேயாவின் காடுகளில், மேகத்தால் பாதி மூடப்பட்டிருந்த சதுர்த்தசியின் ஒளி மின்னிக் கொண்டிருந்தது. இடையிடையே நதியின் ஓரத்தில் பெரிய பெரிய நிலப்பரப்புகள் தெரிந்தன. ஷட்டி, மூங்கில், ஃபெர்ன் செடிகள் மிக அடர்த்தியாக வளர்ந்து சிற்சில இடங்களில் நதிநீரை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

வெளியில் சற்றே குளிர் இருந்தாலும் நான் படகில் இருந்த குடிசைப் பகுதிக்கு வெளியில் திறந்த வானத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பாரிஷாலின் அந்தப் பகுதி சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் இருந்தது. சிறிய கால்வாய்களும் நதிகளும் எல்லாப் பக்கத்திலும் கண்ணில் பட்டன. கடலும் அருகில்தான் இருந்தது. பத்துப் பதினைந்து மைல்கள் தொலைவில், ஹாத்தியா, சந்த்வீப் பகுதிகள் இருந்தன. இரவு தொடங்கிவிட்டது. கால்வாயின் இருகரையிலும் இருந்த ஜனநடமாட்டமே இல்லாத காட்டுப் பகுதி, தெளிவில்லாத நிலவொளியில் அற்புதமாகக் காட்சியளித்தது. இந்தப் பகுதியில் மக்கள் யாருமே வசிக்கவில்லை. வெறும் காடு. கரையில் பெரிய பெரிய ஹோக்லா செடிகள்!என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தவர் "இரவாகிவிட்டது. வெளியில் இருக்காதீர்கள்... வாங்க கூரைக்குள்ள வாங்க.. புரியுதா?' என்றார்.அதற்குப் பிறகு அவர் சுந்தரவனக் காடுகளைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய சித்தப்பா ஒருவர் காட்டிலாகாவில் வேலைசெய்துகொண்டிருந்தாராம். அவருடைய லாஞ்சில் ஒருமுறை சுந்தரவனக் காடுகளின் பல பகுதிகளை நன்றாகச் சுற்றிப் பார்த்திருக்கிறாராம்.இரவு மணி பன்னிரண்டு இருக்கலாம். எங்கள் படகில் ஒரேயொரு படகோட்டிதான் இருந்தான். அவன், "அய்யா கொஞ்சம் போனாக்கா, பெரிய நதி வருது. என்னால தனியா அதுல போக முடியாது. படகு இழுக்கும், தடுமாறும்... அதனால் படகை இங்கேயே நிப்பாட்டிக்கப்போறேன்' என்றான்.படகை அங்கேயே கட்டிப்போட்டான். பெரிய பெரிய மரங்களுக்கிடையே நிலவு காணாமல் போய்விட்டது.

நீண்ட கால்வாயின் இரு கரையிலும் அடர்த்தியான, இருள் நிறைந்த காடு இருந்தது! நான்கு திசையிலம் நிசப்தம். பட்டாம்பூச்சிகள்கூட மௌனமாகிப் போயின... என்னுடன் இருந்தவரிடம் "ஸார்... இது ரொம்பக் குறுகிய கால்வாயாக இருக்கு... கரையிலிருந்து, காட்டுக்குள்ளிருந்து புலி படகுமேலே பாய்ஞ்சு வந்திடுமா ஸார்?' என்று கேட்டேன்."வந்து பாயாவிட்டால்தான் நான் ஆச்சர்யப்படுவேன்...' என்றார் அந்த மனிதர்!இதைக்கேட்டதும் பயந்துபோய்க் குடிசைக்கு நடுவில் போய் உட்கார்ந்துகொண்டேன். சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டிருந்த பிறகு அந்த மனிதர், "வாங்க கொஞ்ச நேரம் தூங்கலாம். தூக்கம் எப்படியும் வராது, தூங்குவதும் சரியல்ல. வாங்க... கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டுப் படுத்திருக்கலாம்.' என்றார்.சிறிது நேரம் மௌனமாக இருந்த பிறகு, அந்த மனிதரைக் கூப்பிடப் போனேன். அவர் அதற்குள் நன்றாகத் தூங்கிப் போயிருந்தார். படகோட்டியும் கண் விழித்திருந்ததாகத் தெரியவில்லை. நான் மட்டும் ஏன் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்? நானும் அவர்கள் வழியில் போக முடிவு செய்தேன்.அதற்குப் பிறகு நடந்ததுதான் என் வாழ்வின் நான் பெற்ற அற்புதமான அனுபவம்! தூங்கப் போனேன். திடீரென்று இபுருண்ட காட்டுப் புதர்களின் மறுபக்கத்தில் வெகுதொலைவிலிருந்து அடர்ந்து காட்டுக்குள்ளிருந்து யாரோ எங்கோ கிராமபோன் இசைத்தட்டை இசைத்தார்கள்... அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்தேன். கிராம போனா? இந்த ராத்திரியில் இந்த காட்டுக்குள்ளிருந்தா? காதைத் தீட்டிக் கொண்டு கேட்டேன். அல்ல, அது கிராமபோன் அல்ல. இருட்டில் ஹிஜல், ஹிந்தால் புதர்கள் மிக மிக அடர்த்தியாக வளர்ந்து கிடக்கும் அவ்விடத்திலிருந்து யாரோ பரிதாபமான உச்சக்குரலில் ஏதோ சொல்லுகிறார்கள்.


சபிக்கப்பட்டவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சபிக்கப்பட்டவர்கள் Empty Re: சபிக்கப்பட்டவர்கள்

Post by சிவா Fri Jan 06, 2012 10:01 pm



இன்னும் சிறிது நேரம் கவனித்து உற்றுக் கேட்ட பிறகு, ஒன்றுக்குமேல் அதிகமான எண்ணிக்கை அளவில் பலர் ஒரே குரலில் ஏதோ சொல்கிறார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டில் கிராமபோன் இசைத்தால் சில சமயம் தெளிவாக இருக்கும். சில சமயம் தெளிவில்லாமல் இருக்கும். ஆனாலும் ஒரே நீண்ட ஒலியின் அலை வந்து காதுக்குள் மோதும். இந்த ஒலியும் அப்படித்தான் இருந்தது. தெளிவில்லாத வங்காள மொழி வார்த்தைகள் காதில் விழுந்ததாகத் தோன்றியது. ஆனால் அவை தெளிவில்லாமல் இருந்தன. என்ன வார்த்தைகள் என்பது புரியவில்லை. இந்த ஒலிகளைச் சில நிமிடங்கள் வரை கேட்க முடிந்தது. பிறகு சில நிமிடங்கள் வரை ஒரே அமைதி. மறுபடியும் தெளிவில்லாத வார்த்தைகளின் ஒலி. அவசரம் அவசரமாக எழுந்து குடிசைப் பகுதிக்கு வெளியில் வந்தேன். நான்கு தசையிலும் பீர்க்கங்காய் விதை போலக் கன்னங்கரேலென்று இருள். காட்டுப் பகுதியில் அமைதி. படகுக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்த நதிநீரின் சலசலப்பும் படகின் மீது மோதும் சப்தமும் மட்டும் கேட்டன. இரவின் கடைசிப் பகுதியில் வீசிய காற்றில் ஜலத்தின் ஓரத்தில் கேயா புதரில் ஒருவிதமான தெளிவில்லாத ஒலி கேட்டது. கரையிலிருந்து தொலைவில் ஹிஜல் செடியின் கறுப்பு வேர்கள் இருளில் ஓர் அதிசயமான உருவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.மற்ற இருவரையும் எழுப்பிவிடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். வேண்டாம். பாவம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கூப்பிட்டு என்னாகப் பேபிறது? அதைவிட நானே கண்விழித்து உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். நின்றபடியே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.

பிறகு குடிசைப் பகுதிக்குள் போகலாம் என்று நினைத்தபோது, அந்த இருள் சூழ்ந்த, அடர்ந்த வனப் பகுதியின் ஒரு பகுதியிலிருந்து தீட்டிய அம்புபோலக் கூர்மையான உச்சக்குரலில் ரீங்காரமிடும் ஜீ ஜீ வண்டின் ரீங்காரத்தைப் போல ஒலி ஆகாயத்தின் இதயத்தைக் கிழித்துக் கொண்டு எழுந்தது. ஓ படகில் போறவங்களே... நீங்க யாரு? நாங்க இங்க மூச்சு முட்டிச் செத்துக்கிட்டு இருக்கோம்... எங்களைத் தூக்கி விடுங்க... தூக்கிவிடுங்க... எங்களைக் காப்பாற்றுங்க...படகோட்டி பதற்றத்துடன் எழுந்து ஓடிவந்தான். நான் அந்த இன்னொரு மனிதரை எழுப்பினேன். ஸார்...! ஸார்...! எழுந்திருங்க... எழுந்திருங்க...படகோட்டி என்னருகில் வந்து நின்றான். பயத்தில் அவன் குரல் நடுங்கியது. அல்லா! அல்லா! காதுல விழுந்திச்சா பாபு...?அந்த இன்னொரு மனிதர், "என்ன சார்! என்ன ஸார்! எதுக்குக் கூப்பிட்டீங்க? ஏதாவது காட்டு மிருகம் வந்திருக்குதா ஸார்?' என்றார்.நான் விஷயத்தை விளக்கிச் சொன்னேன். அவரும் பதற்றத்துடன் படகின் நடுவில் இருந்த குடிசைப் பகுதியிலிருந்து வெளியில் வந்தார் மூவருமாகப் படகின் திறந்த வெளிப் பகுதியில் வந்து நின்றோம். நான்கு திசையிலும் மறுபடியும் அமைதி. நீர் மட்டம் ஏறுவதால் நதி நீரில் ஏற்படும் அழுத்தம், வேகம் காரணமாகப் படகின் அடிப்பகுதியிலிருந்து இன்னும் பலத்த ஓசை எழுந்தது.அந்த மனிதர் படகோட்டியிடம் கேட்டார், "அப்ப இது என்ன...?' "ஆமாம் அய்யா... இதுதான் கீர்த்தி பாஷாவின் பெரும்பள்ளம்' என்றான் படகோட்டி."அப்ப ஏன் இந்த நடுராத்திரியில படகை இங்க கொண்டுவந்து நிறுத்தினே? முட்டாள்... அசடு...' என்றார்."நாம மூணுபேரு இருக்கோம் அப்படின்னுதான் நிறுத்தினேன் பாபு! தண்ணீர் மட்டம் உயர்ந்து கிட்டே போறதே படகைப் பின்னால திருப்பிக்கிட்டுப் போக முடியாது அய்யா!'அவன் பேசியதைக் கேட்டுவிட்டு, அந்த மனிதரைப் பார்த்து "என்ன ஸார்! உங்களுக்க ஏதாவது தெரியுமா? என்ன விஷயம்?' என்று அவரிடம் கேட்டேன்.அவர் "ஏய்! உன் கெரோஸின் விளக்கை ஏத்திவை. விளக்கை ஏத்தி வச்சிட்டு ஒக்கார்ந்திருக்கலாம்.. ராத்திரி கழிய இன்னும் நிறைய நேரம் இருக்கு' என்றார். பயம் தெரியவில்லை என்றாலும் ஆச்சர்யம் காரணமாக அப்படியே திகைத்துப் போய்விட்டோம்.

படகோட்டியிடம் "ஒனக்குச் சத்தம் காதில விழுந்திச்சா?' என்று கேட்டார்."ஆமாம் பாபு! சத்தம் காதுல விழுந்துதானே நான் தூக்கம் கலைஞ்சு எழுந்து வந்தேன்.. இதுக்கு முன்னாலேயும் ரெண்டுவாட்டி இதே அழுகுரலைக் கேட்டிருக்கேன்...'"இது இந்தப் பகுதியில அதிசயமான நிகழ்ச்சி. இந்த இடம் சுந்தரவனக் காடுகளுக்குப் பக்கத்தில் இருக்கறதாலேயும் ஜனங்க யாருமே இங்க வசிக்காததாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் படகோட்டிகளுக்கு மட்டும்தான் தெரியும். இதுக்குப் பின்னால ஒரு சரித்திரம் இருக்குது. ஆனா அந்தக் கதை இந்தப் படகோட்டிகளுக்கு தெரியாது. அந்தக் கதையை இப்ப நான் ஒங்களுக்குச் சொல்றேன். கேளுங்கள்' என்றார் அவர்.புகையைக் கக்கிக் கொண்டிருந்த கெரோஸின் விளக்குக்கு முன்பாக உட்கார்ந்தபடி, காட்டுப் பகுதியின் இருளில் மூழ்கி, அந்த மூன்றாம் மனிதரின் கதையைக் கேட்க ஆரம்பித்தோம்.முன்னூறு வருஷங்களுக்கு முன்னால நடந்த நிகழ்ச்சி, முனிம்கான் அப்போது கௌட தேசத்தின் சுபேதாராக இருந்தார். இந்தப் பக்கத்தில் பன்னிரண்டு பூயியாக்களில் இரண்டு பிரதாபசாலி பூயியாக்கள், ராஜா ராமசந்திர ராயும் ஈஷா கான் இ அலியும். இவர்களின் பிரதாபம் மேலோங்கி இருந்தது. மேகனா நதி சமுத்திரத்தில் சந்திக்கும் இடத்தில் - அதைத்தான் இப்போது சந்த்வீப் என்று சொல்கிறார்கள் - அங்கேதான் அப்போது மக் - பதுர்கீஜ் கடல் கொள்ளைக்காரர்கள் வேட்டையைத் தேடி ÷ஷான பறவை தவம் செய்வதுபோலக் காத்துக் கிடப்பார்கள்.அந்த காலத்தில் அப்போது இது போன்ற அடர்ந்த காடு கிடையாது. இந்தப் பகுதி முழுவதும் கீர்த்திராயின் அதிகாரத்தின் கீழ் இருந்தது.


சபிக்கப்பட்டவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சபிக்கப்பட்டவர்கள் Empty Re: சபிக்கப்பட்டவர்கள்

Post by சிவா Fri Jan 06, 2012 10:01 pm



இங்கே அவருடைய மிக உறுதியான பெரிய கோட்டை இருந்து மக்கள் கடல் கொள்ளைகாரர்களுடன் அவர் பலமுறை போரிட்டிருக்கிறார். அவருக்குக் கீழ் சேனை, தளபதிகள், ஆயதங்கள், கவசங்கள் ஆகிய எல்லாமே இருந்தன. சந்த்வீப் என்னும் தீவு அப்போது பதுர்கீஜ் கடல் கொள்ளைகாரர்கள் கூடும் முக்கிய இடமாக இருந்தது. இவர்கள் போன்ற கடல் கொள்ளைகாரர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இந்த பகுதியில் இருந்த ஜமீன்தாரர்கள் எல்லாருமே தங்கள் அதிகாரத்தின் கீழ் ராணுவ வீரர்களை நல்லபடியாக வைத்திருந்தார்கள். இந்த வனத்தின் மேற்குக் கரையில் இன்னொரு நதி கால்வாய் என்றுகூடச் சொல்லலாம். அது ஓடிய பாதையை இப்போது கூடப் பார்க்க முடியும்.கீர்த்தி ராய் மிகவும் கொடுமைக் கார ஜமீன்தாராக இருந்தான். அவனுடைய ராஜ்யத்தில் இருந்த அழகான பெண்களை அவன் விட்டு வைக்கமாட்டான். அதுவுமில்லாமல் அவனே ஒரு வகையில் பெரிய கொள்ளைக்காரனாக இருந்தான் தன் ராஜ்யத்தில் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தில் இருந்த ஜமீன்தார்களின் ராஜ்யத்திலும் அவர்கள் நிலப்பகுதியிலும் சொத்து அதிகம் உள்ள குடும்பஸ்தர்களின் பணம், நகைகள், பெண்கள், மனைவிகள், நகைகள், பெண்கள் ஆகிய எல்லாவற்றையும் அவன் கொள்ளையடித்து அக்கிமம் செய்து கொண்டிருந்தான்.கீர்த்தி ராயின் நண்பனின் ஜமீன்தாரி நிலப் பகுதி பக்கத்தில் இருந்தது. இவர்கள் சந்திர த்வீபதிரன் ராஜா, ராமச்சந்திர ராய்களுக்கு கப்பம் கட்டுபவர்களாக இருந்தார்கள் கீர்த்தி ராயின் நண்பர் இறந்து போனதும் இளம் வயதினனான அவருடைய புத்திரன் நரநாராயண ராய் தந்தையின் நிலபுலன்களுக்குச் சொந்தக்காரனாகிவிட்டான். தரநாரயண் மிகவும் இளைஞனாக இருந்தான், சுந்தர புருஷனாகவும் சக்திசாலியாகவும் இருந்தான் கீர்த்தி நாராயணணின் பிள்ளை சஞ்சல் ராயின் பிள்ளையும் நரநாராயணனும் சமவயதினர், நண்பர்கள். சில தினங்கள் இப்படி விளையாட்டாகக் கழித்து பிறகு கீர்த்திராயின் கட்டளையின் பேரில் சஞ்சலராய் ஏதோ வேலையாகத் திடீரென்று கௌட நாட்டுக்குக் பயணப் பட வேண்டியது வந்தது.

நாநாரயணனும் நண்பனின் மனைவி என்னவெல்லாம் பைத்திரகாரத்தனம் என்னவெல்லாம் செய்வாளோ என்று பயம். சந்தேகம் தவிப்பு இவற்றோடு சில தினங்கள் அங்கே தங்கியிருந்துவிட்டு பிறகு தன் பஜ்ரா எனப்படும் ஒரு வகை பெரிய படகில் ஏறிக்கொண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். அவன் கிளம்பும் நேரத்தில் லட்சுமி தேவி மறுபடியும் இங்கே வரும்போது, உங்கள் நம்பிக்கை பாத்திரமான ஓர் ஆளை அழைத்துக் கொண்டு வாருங்கள், உங்கள் சாமான்கள் காணாமல் போய் நீங்களும் தவிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். நரநராயணணின் பஜ்ரா படகு ராய்மங்களின் படித்துரையை வீட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திற்குப் பிறகு கடல் கொள்ளைகார்ரகள் மூலம் தாக்கப்பட்டது. அப்போது மதிய நேரம் கடுமையான வெயில் காரணமாகப் படகின் தெற்குத் திசையில் தொடுவானம்வரை நீண்டு பரந்து கிடந்த நீர்ப் பரப்புத் தீட்டிய வாள்போல மின்னியது. கடலின் அந்தப் பகுதியில் வேறு படகுகளே இல்லை. உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் அந்தப் பகுதி ராய்மங்கள படித்துறை கடல் கொள்ளையார்கள் தாக்கியதில் நரநாராயணணின் பஜ்ரா படகில் இருந்த ஆட்ககளில் சிலர் கொல்லப்பட்டார்கள். யுத்தம் செய்யப் போய்த் தொடைப் பகுதியில் எதோ ஓர் ஆயுதத்தால் குத்தப்பட்டு, நினைவிழந்து கீழே விழுந்து விட்டான்.நினைவு திரும்பியபோது, தான் இருள் சூழ்ந்த இடத்தில் படுத்துக் கிடந்தது புரிந்தது. அவன் கண்முன்னால் நட்சத்திரம்போல ஏதோ ஒன்று ஜவலித்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கண்விழித்துக் கவனமாகப் பார்த்த பிறகுதான் புரிந்தது எதை மின்னும் நட்சத்திரம் என்று நினைத்தானோ அது இருள் சூழ்ந்த குகையின் வாயில் பகுதியிலிருந்து வந்த ஒளிவெள்ளம். தான் குகையினுள் தரையில் படுத்துக்கொண்டிருந்ததையும் குகையின் சுவர் முழுவதும் பச்சைபசேல் என்று பாசி படர்ந்துகிடந்தையும் கவனித்தான்.

இன்னும் சில தினங்களும் இரவுகளும் கழிந்தன. அவனுக்கான யாரும் எந்த உணவே கொடுக்காமல் வைத்து அவனைக் கொன்று போடுவதுதான் அவர்களுடைய எண்ணமாக இருக்க வேண்டும் மரணம்; தவிர்க்க முடியாத மரணம். அன்றைய தினமும் கழிந்தது. காயம் காரணமாக வந்த வலி, தாகம், பசியால் தவித்த நரநாராயணன் களைத்துப்போன உடலோடு மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிரந்தான். இயற்கையில் இருக்கும் ஒரு சக்தி மயக்க மருந்து போல வேலை செய்து மரணத்தருவாயில் இருக்கும் மனிதர்களை அவர்களுடைய வலி, வேதனை இவற்றிலிருந்து விடுவித்துக் காப்பற்றும். அந்த இரக்கம் - எவ்வளவு நேரம் என்பது தெரியாது - திடீரென்று கண்களில் ஒளி வெள்ளம் பாய்ந்து நித்திரை கலைந்து திகைத்துப்போன் நரநராராயண் கண்களை எதிரி‘ல் கையில் விளக்குடன் நண்பனின் மனைவி லட்சுமி தேவி நின்று கொண்டிருந்தாள் எதோ பேச முயன்ற நரநராயணன் லட்சுமி தேவி விளக்கை புடவைத் தலைப்பால் முடியபடி நரநாரயணனைத் தன்னைத் தொடர்ந்து வரும்படி சைகைக்காட்டினாள். நரநாராயணனுக்குச் சந்தேகம் வந்தது - இது கனவோ? ஆனால் இந்த விளக்கின் ஓளியில் பசுமையான பாசிக் கூட்டம் கூட்டமாகச் சுவரில் படர்ந்த திருப்பது தெளிவாகக் கண்ணில் படுகிறதே! நரநாராயன் திடகாத்திரமான இளைஞன். பசி காரணமாகப் பலஹீனமாகிய போயிருந்தாலும் நிச்சயமான மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டும். என்ற உற்சாகத்தில் அவன் உறுதியான காலடிகளை வைத்து, முன்னால் சென்று கொண்டிருந்தான். வளைந்து செல்லும் படி வழியாக ஏறி மேலே இருந்த சுரங்கப்பாதை வழியாகச் சென்ற பிறகு கீர்த்திராயின் மாளிகையின் எதிரில் இருந்த நரநராயாணன் கவனித்தான் லட்சுமி மூங்கிலான சிறுபையை அவனிடம் கொடுத்து இங்கே சாப்பிடாதே உனக்கு நீச்சல் தெரியுமா கால்வாயின் மறுகரைக்குப் போய் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டு சீக்கிரம் இந்த இடத்தை விட்டு ஓடிப் போ என்றாள்.விஷயம் என்ன என்பது நரநாரயணனுக்கு கொஞ்சம் புரிந்தது.


சபிக்கப்பட்டவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சபிக்கப்பட்டவர்கள் Empty Re: சபிக்கப்பட்டவர்கள்

Post by சிவா Fri Jan 06, 2012 10:01 pm



அவனுடைய பரந்த ஜமீன்தாரி நிலப்பகுதி கீர்த்தியின்ö சொத்து படைவீர்களுக்கு ராயின் கைகளுள் வேறு என்ன வேண்டும்? அவருக்கு ஒரு பக்கத்தில் பாக்லா, சந்த்ரத்வீப், இன்னொரு பக்கத்தில் பூலூயாரின் சக்தி வாய்ந்த பூயியா ராஜா லட்சுமி நாராயண் இருந்தான் காரணமாகக் கீர்த்தி ராய் கொஞ்சம் அடங்கி இருந்தார்.விளக்கொளியில் நரநாராயணன் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அதில் விளையாட்டு, சிறு பிள்ளைத்தனம், கேலி, பரிகாம் என்ற எந்த உணர்வு இல்லை. அவள் முகம் கருணையும் அன்பு பாசமும் நட்பும் நிறைந்த தாயின் முகம்போல மென்மையாக இருந்தது. அவர்கள் இருவரையும் சுற்றித் தலைக்கு மேலே வானத்தின் தொடுவானம் வரை ஒளியுடன் கூடிய நிழல் பாதை அருகில் இருந்த கால்வாயில் நீர்மட்டம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும் நதியில் வேகம் அதிகமாக இருந்தாலும் கரையில் இருந்த, ஹோக்லா மரம் ஆடி ஆடி கலகல என்ற சபதத்தை எழுப்பியபடி நதியை நோக்கி ஓடியது. நரநாராயன் நண்பனின் மனைவி உன் கணவன் இல்லை தம்பி அவருக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாது இத்தனை சதித்திட்டத்திற்கும் காரணம் மாமனார்தான் இப்டி ஒன்று அவர் நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தால் உங்கள் நண்பரை வேறு இடத்திற்கு திட்டமிட்டே ஏதோ காரணம் சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார். கௌட நாட்டுக்குப் போகச் சொன்னது வெறும் கண்துடைப்பு என்று இப்போது தோன்றுகிறது. அவனமானம் வெட்கம், வேதனை காரணமாக லட்சுமி தேவியின் முகம் வெளுத்துப்போயிருந்தை நரநாரயாணன் கவனித்தான் லட்சுமி தேவி எனக்கு இது இன்று தெரியவந்தது கிடுக்கி கோட்டையின் காவலாளி சர்தார் என்னை அம்மா என்றுதான் அழைப்பான் அவன் உதவியுடன் இரவு, பகல் காவலாளிகளை எல்லாம் விலக்கிவைத்துவிட்டேன் அதனால்தான்.நரநாராயணன் ""அண்ணி'' எனக்கு ஒரு இளைய சுகோதரி இருந்தாள் சிறுவயதிலேயே செத்துப்போய் விட்டாள். இனி நீயே என் இளைய சகோதரி...இன்று அந்தச் சகோதரி உன் வடிவில் திரும்பி வந்து கண்முன்னால் நிற்கிறாள் என்றான். லட்சுமி தேவி அன்றலர்ந்த தாமரை முகம் கண்களிலிருந்து வழிந் த கண்ணீர் மூழ்கி கொண்டிருந்தது சற்றே தவிப்புடன் தம்பி சொல்லத் தைரியம் வரவில்லை ஆனாலும் சொல்லுகிறேன் சகோதரி என் நீ நினைத்தால்... நரநாராயண் என்ன விஷயம் அண்ணி என்று கேட்டாள் லட்சுமி தேவி நீ எனக்கு வாக்கு கொடுக்க வேண்டும். உன் நண்பரின் தந்தையை என் மாமனாரை நீ எந்த வகையில் பழிவாங்க நினைக்கக் கூடாது என்றாள்.

விடைபெறும் முன் நரநாராயன் அண்ணி நீ தனியாகத் திரும்பியப்போக முடியாது என்று கேட்டான். நான் போய்விடுவேன் ஆனால் உன்னல் எத்தனை துரத்திற்குப் போக முடியுமோ அத்தனை தொலைவிற்குத் தண்ணீருக்குள்ளேயே மூழ்கியபடியே நீந்திச் சென்று உனக்குத் தெரிந்த பாதுகாப்பான இடத்தில் கரையேறு...'' என்றாள். நரநாரயண் அடர்ந்த கிருஷ்ணனைப் போன்று கறுத்துக்கிடந்த இருளில் ஒசைப்படமல் கால்வய்த் தண்ணீருக்குள் மூழ்கிக் கலந்து மறைந்து போனான். லட்சிமி தேவி கையில் பிடித்த கொண்ருந்த விளக்கை அனைத்து விட்டு வெகுநேரமாகிவிட்டாது. அவள் இருளில் மாமனாரின் கோட்டையை நோக்கி நடந்தாள், மிக வேகமாக நடந்துபோய் மறைவிடத்தில் இருந்த சுரங்கப் பாதை அருகில் வந்துதும் அந்தப் பாதை திறந்திருந்தை கவனித்தாள் அவள் பதற்றத்துடன் அவசரம் அவசரமாகச் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தாள். கையில் இருக்கும் ஐந்து விரல் களில் ஒன்று விஷமாகப் போய்விட்டால்கூட அதை வெட்டி எறிவதைத் தவிர வேறு வழியில்லை என்பது கீர்த்திராய்க்கு நன்றாகவே தெரியும் அதுதான் உடலுக்கு இரவு வ்நது கொடூரமான பிறகு யாருமே பார்க்கவில்லை இரவின் கொடூர இருள் அவளை அப்படியே கவ்வி விழுங்கிவட்டிருந்தது.அன்றைய தினம் இரவு நிலவு எழுந்ததும் தன் மாளிகை உப்பரிகையில் உலாவிக்கொண்டே நான்கு திக்கிலும் பரவியிருந்த வெண்மையான அழகு நிறைந்த ஒளியில் கடல் பிரதேசத்தின் மீது தன் பார்வையைச் செலுத்திய நரநாரயணன் உறுதியான மனமும் கண்ணிமைகளில் நனைந்தன அன்பில் உலகமே மூழ்கிக் கொண்டிருக்கிறதோ என்று அவனுக்கு தோன்றியது .

ஆகாயத்தின் கீழே லட்சுமிதேவியின் அவன் இளைய சகோதரியின் குறும்புச் சிரிப்பு ஒவ்வொரு விண் மீனிலும் புத்தம் புதிதாக மலர்ந்த மல்லிகை மலர்களைப் போல மலர்ந்து விகசித்துக் கொண்டிருந்ததாக அவனுக்கு தோன்றியது. நரநாரணின் முன்னோர்கள் கொடுமையான பங்கரமான பூமிப் பிரதேசத்தை அதிகாரத்திற்குள் ஆட்படுத்திக் கொள்ளும் கொள்ளைகாரர்களாக ஒரு காலத்தில் இருந்தார்கள்.நாட்கள் கழிந்தன. ஒரு நாள் குளிர்காலத்தில் விடியாற்காலையில் ராத்திரியில் பனிப்படலம் நீஙகத் தொடங்கிய உடனேயே கீர்த்திராயின் கோட்டைச் சுற்றி இருந்த கால்வாயில் சிறிய படகுகள், பெரிய படகுகள், கப்பல் போன்றவை நிறைந்து, நின்றுகொண்டிருப்பதைக் காண முடிந்தது. துப்பாக்கிச் சூட்டின் அதிரடியான ஒலியால் கீர்த்திராயின் மாளிகை, கோட்டை இவற்றின் அஸ்திவரமே நடுங்கிக் கொண்டிருந்தது. கீர்த்தி ராய்க்கு செய்தி வந்தது தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பவன் நரநராயணன் ராய் என்று அவனுக்கு துøயாக போராடிக்கொண்டிருப்பன் போர்த்துக்கீசியக் கடல் கொள்ளைக்காரன் செபாஷ்டியோ கோஞ்ஜாலெஸ்இந்தத் தாக்குதல் குறித்து முன்பே செய்த வந்துவிட்டதால் கீர்த்தி ராய் தயாரான நிலையில் இருந்தார். கோஞ்ஜலோஸ் அபராமான வீரன் , அவனுடைய அதிகாரத்தின் கீழ் இருந்த பெரிய படகுகளை சுற்றி சுற்றி வந்து கோட்டைக்குள் நுழைந்தமே கீர்த்தி ராயின் படகுப்படையின் ஒரு பகுதியை வழித் தடங்கள் செய்தன.


சபிக்கப்பட்டவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சபிக்கப்பட்டவர்கள் Empty Re: சபிக்கப்பட்டவர்கள்

Post by சிவா Fri Jan 06, 2012 10:02 pm



கோட்டையின் பீரங்கிக் குண்டு அந்த இடத்தில் மிகவும் கடுமையா இருந்தது கால்வாயின் வாயில் பக்கத்தில வீரர்கள் செத்து விழுந்தார்கள் கோஞ்ஜாலெஸ்ஸின் அதிகாரத்தின் கீழ் இருந்த இன்னொரு கடல் கொள்ளைக்காரான் - மைக்கே ரோஜாரியே டி பேகா இந்தச் சிறிய படகைக் கால்வாயின் உள்ளே நுழைத்துக் கோட்டையின் மேற்குத் திசையில் தாக்குவதற்காகத் தயாராக இருந்தது. இந்த எதிர்பாராத தாக்குதல் காரணமாகக் கீர்த்தி ராயின் படகு வீரர்கள், கால்வாயினுள் நன்றாக அகப்பட்டடுக்கொண்டு வெளியில் நதியில் ÷õபய் போராட அவர்களுக்கு திறமை சிறிதும் இருக்கவில்லை கீர்த்தி ராயின் படகு - வீரர்கள் சேøணை ஆயத்தப்படுத்த வேண்டி இருந்தது.மாலை நேரத்திற்குள் ரோஜாரியோவின் பீரங்கிக் குண்டுகளுக்க முன்பாக கோட்டையின் மேற்குப் பக்கம் ஒரேடியக நொறுங்கி விழுந்துவிட்டது. கீர்த்தி ராயின் கோட்டை பீரங்கிகள் மௌனமாகிவிட்டன. நதியின் இரு கரைகளிலும் சந்தியாக் காலம் இறங்கி விட்டிருந்தது. திடீரென்று நண்பனின் மனைவி விடைபெற்றுக்கொண்டு போனாளே அந்த இரவில் தாமரை முகம் வேதனை நிறைந்து காணப்பட்டது. கோøழாகி வேண்டுகோள் நிறைந்த கெஞ்சல் அவனுக்கு வந்தது மிகவும் கவலையயும் வருத்தமும் கொண்டான். என்ன இதென்ன? அவன் இப்படிச் செய்துவிட்டானே இப்படி ஒரு காரியம் செய்து.. தன் பாசம் நிறைந்த தனக்கு உயிர்ப் பிச்சை கொடுத்த தெய்வத்தின் கடைசி வேண்டுகோளை அவன் நிரகாரித்து விடுவானா ?நரநாரயாண ராய் கட்டளை இட்டான் கீர்த்தி ராயின் குடும்பத்தில் இருப்பவர்களில் யாருடைய உயிருக்கும் எந்தவிதமான கெடுதலும் வந்துவிடக் கூடாது. சற்றைக்கெல்லாமே செய்தி வந்தது! கோட்டைக்குள் யாருமே இல்லை. நரநரயாண் ராய்க்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனே கோட்டைக்குள் நுழைந்தான் அவனும் கோஞ்ஜாஸும் சேர்ந்து கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலசித் தேடிப்பார்த்தார்கள். உண்மையிலேயே யாருமே எங்குமே இல்லை . கோட்டையை கொல்லையடிக்க முயன்றபோது விலைமதிப்புள்ள நகைகள், பணம் என எதுவுமே அதிகம் கிடைக்கவில்லை.

மறுதினம் மதியம் வரை கொள்ளையர்கள் கோட்டையினுள் அமர்க்களம் செய்துகொண்டிருந்தார்கள். கீர்த்தியின் ராயின் குடும்பத்தினரில் யாருமே கிடைக்கவில்லை, மாலையில் நரநாரணயணன் இரண்டு பெரிய படகுகளைக் கால்வாய்முன் காவலாக நிறுத்திவிட்டுத் தன்னிருப்பிடத்திற்கு திரும்பி வந்தார்.இந்த நிகழ்ச்சிக்குச் சில தினங்களுக்குப் பிறகு போர்த்துக்கீசியர்கள் கொள்ளையடித்துக் கொண்டுபோன பிறகு கீர்த்தி ராயின் வேலைக்காரன் ஒருவன் கோட்டையினுள் பிரவேசித்தான். தாக்குதல் நடந்த அன்றே இந்த வேலைக்காரன் இன்னும் பலருடன் சேர்ந்து கோட்டையைவிட்ட ஓடிவிட்டான். சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்த போது ஒரு தூண் மறைவில் அடிப்பட்ட ஒருவன் அவனை கூப்பிட்டு அவனிடம் ஏதோ சொல்ல விரும்பியதைப் என்படத புரிந்துகொண்டு அருகில் போய் பார்த்தபோது அவன் கீர்த்தி ராயின் குடும்பத்திற்கு மிகமிக நம்பமான பழைய வேலைக்காரன் என்பது தெரியவந்தது. கீர்த்திராயின் குடும்பத்தினர் ஒளிந்திருக்கும் ரகசிய இடம் எங்கே என்பதைச் சொல்லும் முன்னேர அந்த அடிப்பட்ட ஆள் சட்டஎன்று இறந்துவிட்டான். எத்தனை வருஷங்கள். எத்தனை யோமுறை பூமிக்கடியில் இருக்கும் அந்த ரகசிய இடத்தை யாராலும் எப்படித் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படியாக கீர்த்திராயும் அவருடைய பரிவாரங்களும் குடும்பமும் உணவில்லாமல் மெல்ல மெல்ல மூச்சுதிணறி கோட்டைக்குள் இருந்த ஒரு ரகசிய அறைக்குள் விழுந்துகிடந்தார்கள். அவர்களை தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை =- அந்த மிகப்பெரிய மாளிகø - கோட்டை மலை போன்ற மண்-கல் இவற்றினால் அழுத்தப்பட்டு அந்த துரதிருஷ்டம் பிடித்தவர்களின் எலும்புக்கூடுகளை காற்றே இல்லாத இருண்ட ரகசிய அறைக்குள் மெல்ல மெல்லப் பொடிப்பொடி யாக்கிவிட்டது. என்கிற விஷயம் கூட வெளியில் யாருக்கும் தெரியாது.அந்த சிறிய கால்வாய் சந்த்வீப்சானலின் ஒரு கிளை. அதன் ஓரத்திலிருந்து சிறிது தொலைவு சென்றால், அடர்ந்த காட்டில் கீர்த்தி ராயின் கோட்டையின் விசாலமான இடிபாடுகளை இன்று போய்ப் பார்த்தாலும் காணமுடியும். கால்வாயிலிருந்து சற்று தொலைவில் காட்டினுள் இரண்டு வரிசையிலும் மிகப் பழைய மகிழ மரங்களைக் காணமுடியும் முன்பு இந்த இடத்தில் கீர்த்திராயின் கோட்டைக்கு போகும் ராஜா பாதை இருந்ததும் இன்னும் போனால் பெரிய ஏரி கண்ணில் படும் அதற்குத் தெற்குத் திசையில் பொடியான கற்களின் காட்டுச்செடிகளால் மூடப்பட்ட ஸ்தூபம் உடைந்த தூணின் ஒரு பாகம் - பூமியாக்களின் பங்களாவிலிருந்து ராஜா ப்ரதாபாதித்யா ராயின் பங்களாவிலிருந்து நிகழ்கால யுகத்தின் ஓளியில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கடந்த யுகத்தின் ராஜ குடும்பத்தினரின் நாட்டுப் பெண்களின் செம்பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்களின் அடையாளங்கள் பதிந்திருந்தன. ஆனால் இன்றோ பெரிய பெரிய புலிகளின் காலடிச் சுவடுகள் பதிந்துகிடக்கின்றன.

கோக்ரா = கேவுடே பாம்பு வகைகளை படத்தை தூக்கியபடி சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தன.வெகுதினங்ங்களாகவே இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மதியம், இரவு காலத்தில் காட்டுப் பிரதேசம் மயான அமைதியில் ஆழ்ந்து கிடக்கும்போது ஹந்தால் ஹிஜல் மரங்களின் கறுப்பு வேர்கள் இருளில் காட்டுப் பிரதேசத்தின் பிரேதத்தைப் போல நின்றுகொண்டிருக்கையில் சந்த்வீப் சானலில் நீர் மட்டம் உயர்ந்து, அலைகள் எழும்புகையில், நிலவொளி பட்ட உப்பு ஜலம் கால்வாயின் மேல்பகுதியில் மின்மினிப் பூச்சியைப் போல மின்னிக்கொண்டிருக்கும். அப்போது, அந்த கால்வாய் வழியாகப் படகில் போகும். தேன், மெழுகு இவற்றை சேகரிப்பவர்கள் எத்தனையோமுறை இருள் நிறைந்த காட்டின் உள்பகுதியிலிருந்து யாரோ சிலர், அலறிக் கூக்குரலிடுவதைப் பயத்துடன் கேட்டிருக்கிறார்கள் "ஓ' பாதையில் போகிறவர்களே படகில் போகிறவர்களே நாங்க இங்க மூச்சு முட்டி செத்துப்போய்க்கொண்டிருக்கிறோம்.. தயவுசெய்து எங்களைத் தூக்கிவிடுங்க.. யாராவது எங்களை தூக்கிவிடுங்க.....பயம் காரணமாக இப்போது யாரும் படகில் அந்த வழியாகப் போவதில்லை!இக்கதை, காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2012, ஜனவரி புத்தகக் காட்சியில் வெளிவரவிருக்கும் விபூதிபூஷன் பந்தோபாத்யாயயின் காட்டில் நடந்த கதை என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

காலச்சுவடு


சபிக்கப்பட்டவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சபிக்கப்பட்டவர்கள் Empty Re: சபிக்கப்பட்டவர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jan 06, 2012 10:35 pm

சூப்பருங்க திகிலாக ஆரம்பித்து திடீரென திசை மாறி விட்டது... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சபிக்கப்பட்டவர்கள் Empty Re: சபிக்கப்பட்டவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum