புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 6:38 pm


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..' என்று பரந்தாமனைப் போற்றுகிறாள் ஆண்டாள்.

ஆனால், அந்த நாரணன் நாமத்தைப் பாட, ஏன் சொல்லக் கூட முடியாமல் தவித்தான் ஒரு பக்தன். காரணம், அந்த இறைவனே அவனை அப்படிப் படைத்திருந்ததுதான். கடவுளின் படைப்பை அந்தக் கடவுளைத் தவிர வேறு யாரால் மாற்ற முடியும்? அதனால் தெய்வமே கதி என இருந்தான் அவன்.

அவன் நம்பிக்கைக்கு இரங்கினார் நாரணன். உத்தமனான அவனைப் பேச வைத்து தன பெயரையும் உத்தமராயப் பெருமாள் என்றே கொண்டார்.

அது என்ன கதை? எங்கே நடந்தது?

முன்னொரு காலத்தில் அய்யம்பாளையம் என்னும் தலத்தில் (இன்று பெரிய அய்யம்பாளையம்) ஆடுமாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பெயரோ ஊரோ யாருக்கும் தெரியவில்லை. காரணம் அவனுக்குப் பேசவே இயலாது என்பதுதான்.

எல்லோர் வீட்டு ஆடு, மாடுகளையும் மேய்த்து விட்டு தந்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி காலம் தள்ளினான் அவன். தீய குணம் எதுவும் இல்லாத அவனை உத்தமன் என்றே போற்றினார்கள் அனைவரும்.

ஒரு நாள் மேய்ச்சலுக்கான இடம் தேடி அங்கிருந்த மலை ஒன்றின் மீது ஏறியவன், அங்கே திருமாலின் சிலை ஒன்று புதர்களின் இடையே இருக்கக் கண்டான்.

அந்த தெய்வத்தின் பெயரைக்கூட அறியாத அவன் ஏனோ அந்தச் சிலையிடம் தன் மனதை பறிகொடுத்தான். தன்னைப் பேச வைக்கவே அந்தக் கடவுள் அங்கே தோன்றியிருப்பதாக நம்பினான். கண்களில் நீர் வழிய வேண்டினான். தினமும் இது தொடர்ந்தது.

சில நாட்களுக்குப்பின் ஸ்ரீதேவி நாதன் மனம் இரங்கினார். அன்று தன்னையும் அறியாமல் அந்தச் சிலை முன் ஏதேதோ பேசத் தொடங்கினான் சிறுவன்.

அந்தப் பக்கமாக வந்த சிலர் அவன் பேசுவதைக் கண்டு (கேட்டு) அதிசயித்தனர். தனக்குப் பேச்சு வந்த சந்தோஷத்தில் அந்தப் பெரிமாள் சிலையைக் கட்டிக் கொண்டு அழுதான் சிறுவன்.

அப்போதுதான் எல்லோரும் அச்சிலையைப் பார்த்தார்கள். மகத்துவம் மிக்க திருமாலின் வடிவம் அது என்பதை உணர்ந்தார்கள். அச்செய்தி ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் வந்து எம்பிரானை தரிசித்தார்கள்.

வேண்டியோர் வேண்டியன கிடைத்ததால், பெருமாளுக்கும் சிறியதாக ஒரு ஆலயம் எழுந்தது. அது படிப்படியாக வளர்ந்தது. உத்தமச் சிறுவனுக்கு அருளியதால், பெருமாள் உத்தமராயப் பெருமாளானார்.

ஊரின் வடக்கே ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலயம். விஜயநகரப் பேரரசர் காலத்து பாணியில் கட்டப்பட்டுள்ளதால் இதன் காலப் பழமை விளங்குகிறது.

இயற்கை அழகுடன் உள்ள குன்றின் மேல் இருநூறு படிகளேறிச் சென்றால், கோயிலை அடையலாம். ஒரு திருச்சுற்றுடன் மகாமண்டபம், இடை மண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது கோயில்.

கருவறையில் அபய, கடி ஹஸ்தங்களுடன் சங்கு, சக்கரம், தாங்கி சேவைசாதிக்கிறார், உத்தமராயப் பெருமாள். இவரை வழிபடுவோர்க்கு வாக்கு வன்மையும், தேயாத செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

கருடாழ்வார், அனுமன் சன்னதிகள் இருக்கின்றன. ஆழ்வார்கள் தரிசனமும் கிடைக்கிறது. பெருமாள் திருத்தலத்தில் தாயார் இருக்க வேண்டுமல்லவா? தேடினால் அப்படி ஒரு சன்னதி இல்லவே இல்லை. கேட்டால் இங்கு பெருமாளின் திருமார்பிலேயே திருமகள் நீங்காது வாசம் செய்வதால் தனிச்சன்னதி இல்லை என்கிறார்கள்.

சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. இவருக்கு அபிஷேகிக்கப்படும் தேன், பேச்சுக் குறைபாடுள்ளோருக்கு வாக்கு வன்மையைத் தரும் என நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும், பொங்கலை ஒட்டி, காணும் பொங்கலுக்கு மறுநாளும் சிறப்பு விழாக் காணுகிறார் இத்தலத்துப் பெருமாள்.

உத்தமமான மனதுடன், உத்தமராயப் பெருமாளை தரிசிப்போர் வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெறுவர் என்பது நிச்சயம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் அத்திமலைப்பட்டி எனும் இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ.யில் உள்ளது பெரிய அய்யம்பாளையம். வேலூர், ஆரணியில் இருந்து பேருந்து வசதி உண்டு.


குமுதம் பக்தி



பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக