ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

GMAT வருகிறது புதிய மாற்றம் !/ ஜிமேட் என்றால் என்ன?

Go down

GMAT வருகிறது புதிய மாற்றம் !/ ஜிமேட் என்றால் என்ன? Empty GMAT வருகிறது புதிய மாற்றம் !/ ஜிமேட் என்றால் என்ன?

Post by முஹைதீன் Thu Jan 05, 2012 5:57 pm

GMAT வருகிறது புதிய மாற்றம் !
Thanks to Respected Sister : ஜி.மினாட்சி

GMAT வருகிறது புதிய மாற்றம் !/ ஜிமேட் என்றால் என்ன? Image0011k
வெளிநாடுகளில் மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் ஜிமேட் (GMAT) தேர்வை எழுதவேண்டும். இத்தேர்வில் வரும் ஜூன் மாதம் முதல் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

புதிய மாற்றத்தின்படி ஜிமேட் தேர்வில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட இருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு முதலில், தற்போதைய நடைமுறை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஜிமேட் என்றால் என்ன?
வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள், கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட் (ஜிமேட்) என்ற தேர்வை எழுத வேண்டியது கட்டாயம். கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் கவுன்சில் இத்தேர்வை நடத்துகிறது.

இதேபோல இத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு அட்மிஷன் நடத்தும் இந்தியக் கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன. ஐ.ஐ.எம்.களில் ஓராண்டு பி.ஜி.பி.எக்ஸ் (PGPX-Post Graduate Programme in Management for Executives)படிக்க விரும்புபவர்களும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (ISB) ஸ்கூலில் பி.ஜி.பி.எம்.ஏ.எக்ஸ் படிக்க விரும்புபவர்களும் ஜிமேட் தேர்வை எழுதி அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வை எப்பொழுது எழுதலாம்?
ஆண்டு முழுவதும் எப்பொழுது வேண்டுமானாலும் ஜிமேட் தேர்வை எழுத முடியும். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஜிமேட் தேர்வு எழுத 250 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஜிமேட் தேர்வு முடிவுகள் எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்?
ஜிமேட் தேர்வு முடிவுகள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லு படியாகும். ஏதேனும் பட்டப் படிப்பை முடித்துவிட்டோ அல்லது தொழில் படிப்பை முடித்துவிட்டோ குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள், ஜிமேட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மேனேஜ்மெண்ட் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிப்பது எளிதாக இருக்கும்.

ஜிமேட் தேர்வு எப்படி இருக்கும்?
மூன்றரை மணி நேரம் தேர்வு நடைபெறும். மாணவர்களின் எழுத்துத் திறமை, கணிதத்திறமை, பகுத்தறியும் திறமை (அனலிட்டிக்கல் ஸ்கில்) போன்ற திறமைகளை சோதிக்கும் வகையில் இத்தேர்வு நடைபெறும்.

அனலிட்டிக்கல் ரைட்டிங் அசஸ்மெண்ட் செக்ஷன் (AWA) பிரிவு: தேர்வு எழுதுபவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், தமது கருத்துக்களை தெளிவாக வெளிப்படும் திறன் போன்றவை இந்தப் பிரிவில் சோதித்தறியப்படும். இந்தப் பிரிவில், இரண்டு வகையான கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொன்றுக்கும் 30 நிமிடங்கள் வீதம் ஒரு மணி நேரம் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அனலிசிஸ் ஆஃப் ஏன் இஸ்யூ மற்றும் அனலிசிஸ் ஆஃப் ஏன் ஆர்க்யூமெண்ட் டாப்பிக்ஸ் என்ற இரு பிரிவுகளில் இக் கேள்விகள் இடம் பெறும்.

அனலிசிஸ் ஆஃப் ஏன் இஸ்யூ பிரிவில், உங்கள் முன் ஒரு பிரச்சினை வைக்கப்பட்டு, அதற்கு உங்களது கருத்துக்கள் அல்லது ஐடியாக்களை எடுத்துச் சொல்லும்படி கேட்டிருப்பார்கள். பல்வேறு உதாரணங்களுடன், உங்கள் அனுபவம் மற்றும் கணித்தறியும் இயல்பின்படி தீர்வு சொல்ல வேண்டும்.

அனலிசிஸ் ஆஃப் ஏன் ஆர்க்யூமெண்ட் பிரிவில், உங்கள் முன் ஒரு விவாதம் வைக்கப்படும். அதைப் பற்றி அலசி ஆய்வு செய்து ஆதாரப்பூர்வமாக அந்த விவாதத்தை முடித்து வைக்க வேண்டும்.

நீங்கள் எழுதும் கருத்துக்களில் உங்களது எழுத்துத் திறமை கணக்கிடப்படும். எளிய ஆங்கிலத்தில், இலக்கணப் பிழையின்றி எழுதினாலேயே, சிறப்பான மதிப்பெண்களை அள்ள முடியும்.

AWA பிரிவில் 0-6 மதிப்பெண்கள் வழங்கப்படும். 5 அல்லது 5.5-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.

இந்தத் தேர்வு முடிந்தவுடன் 10 நிமிடங்கள் பிரேக் விடுவார்கள்.

குவாண்டிடேட்டிவ் ரீசனிங் பிரிவு: இதில் 37 கேள்விகள் இடம்பெறும். 75 நிமிடத் தேர்வு இது. MCQ எனப்படும் மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்விகள் இடம்பெறும். இதில் புள்ளி விவரங்கள் சரிபார்ப்பு, பிரச்சினைகளுக்கான தீர்வு போன்ற கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டுமானால், அரித்தமேட்டிக், அல்ஜீப்ரா மற்றும் ஜியாமெட்ரி அறிவு பெற்றிருக்கவேண்டும். இந்தப் பிரிவில் இடம்பெறும் கேள்விகள் அனைத்தும், சிபிஎஸ்இ பிரிவில் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டவை.

இந்தப் பிரிவுக்குப் பிறகு 10 நிமிடங்களுக்கு பிரேக் எடுத்துக் கொள்ளலாம்.

வெர்பல் எபிலிட்டி பிரிவு: இந்தப் பிரிவில் 41 கேள்விகள் கேட்கப்படும். 75 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். மூன்று பிரிவுகளில் கேள்விகள் இடம்பெறும். ஒரு வார்த்தையைக் கொடுத்து, அது சரியான முறையில் பிழையின்றி எழுதப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில் சென்டன்ஸ் கரெக்ஷன், கொடுக்கப்பட்டுள்ள பத்தியிலிருந்து கேள்விகள் கேட்டு, அதற்குச் சரியாக பதில் எழுதும் ரீடிங் காம்பிரிஹென்சன் , கிரிட்டிக்கல் ரீசனிங் போன்ற பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

இந்த இரு பிரிவுகளிலும் சேர்த்து 200-800 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். இதில் 700க்கு மேல் மதிப்பெண்கள் பெறுவது சிறந்ததாகக் கருதப்படும்.

ஜிமேட் தேர்வில் கருத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள் எவை?
தேர்வில் கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்வியையும் தெளிவாகப் புரிந்துகொண்டு சிந்தித்து பதிலளிக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடாப்டிவ் டெஸ்ட் முறையில் இவை அமைந்திருப்பதால், எந்தக் கேள்வியையும் ஸ்கிப் செய்ய முடியாது. எழுதிய விடைகளை மாற்ற முடியாது. பின்னோக்கிக் கேள்விகளுக்குச் செல்ல முடியாது. இத்தேர்வில் நேர நிர்வாகம் முக்கியம். ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதற்குள் விடைகளை எழுதும் வகையில் பயிற்சி செய்து பழகவேண்டும்.

தேர்வு முடிந்த உடனேயே மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியும். குவான்டிடேட்டிவ் ரீசனிங் மற்றும் வெர்பல் எபிலிட்டி பிரிவில் உடனடியாக நாம் பெறும் மதிப்பெண்களை அறிந்துகொள்ள முடியும். AWA பிரிவில் பெறும் மதிப்பெண்கள் உடனடியாகத் தெரியாது. அதிகாரப்பூர்வமான தேர்வு முடிவுகள் ஆன்லைனில் 20 நாட்களுக்குள் வெளியிடப்படும்.

எப்படியிருக்கும் புதிய மாற்றம்?
17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிமேட் தேர்வில் ஒரு சில மாற்றங்களை செய்திருக்கிறது தி கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் கவுன்சில். இந்த மாற்றங்கள் வரும் ஜுன் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரப்போகிறது.

புதிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் சென்னையில் ஜிமேட் தேர்வுக்குப் பயிற்சியளித்து வரும் கே.எஸ்.பாஸ்கர்.

“AWA பிரிவில் இப்போது நடைமுறையில் இருக்கும் அனலிசிஸ் ஆஃப் ஏன் இஸ்யூ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அனலிசிஸ் ஆஃப் ஏன் ஆர்க்யூமெண்ட் டாப்பிக்ஸ் பிரிவு மட்டுமே இடம்பெறும். இந்தப் பிரிவில் கட்டுரை எழுத 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 0-6 மதிப்பெண்கள் வழங்கப்படும். குவான்டிடேட்டிவ் ரீசனிங் பிரிவு மற்றும் வெர்பல் எபிலிட்டி பிரிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிதாக இன்டகிரேட்டட் ரிசனிங் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 12 கேள்விகள் இடம்பெறும். 30 நிமிடங்களில் இதற்கு பதிலளிக்க வேண்டும். சராசரியாக ஒரு கேள்விக்கு இரண்டரை நிமிடங்களில் பதில் எழுதினால் மட்டுமே, 30 நிமிடங்களுக்குள் விடையெழுதி முடிக்க முடியும். இந்தப் பிரிவில், கிராபிக் இன்டர்பிரிட்டேஷன், டேபிள் அனாலிசிஸ், மல்டி சோர்ஸ் ரீசனிங், டூ பார்ட் அனாலிசிஸ் என நான்கு வகையான கேள்விகள் இடம்பெறும்.

ஒரு கிராபிக் இன்டர்பிரிட்டேஷனில் ஒரு கிராப் அல்லது சார்ட் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். எல்லாமே மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள்தான்.

டேபிள் அனாலிசிஸில், புள்ளிவிவரங்கள் அடங்கிய கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் இடம்பெறும். மல்டி சோர்ஸ் ரீசனிங், டூ பார்ட் அனாலிசிஸ் போன்ற பிரிவுகளிலும் இதைப் போன்ற கேள்விகளே இடம்பெறும்.

புதிய நடைமுறையின்படி, இத்தேர்வில் கால்குலேட்டரை உபயோகிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிரிவுக்கு எத்தனை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது ஏப்ரல் மாதத்துக்குள் தெரியவரும்” என்கிறார் பாஸ்கர்.

ஜிமேட் தேர்வு பற்றிய விவரங்களுக்கு: www.bimtech.ac.in


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
» குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum