புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம் 100% உண்மை. சவால்!


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 3:17 pm

First topic message reminder :


சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!

சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.

மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...

மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ஜாலி ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!

சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...

"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)

அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!


அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...

சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....

என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?

குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.

வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?

தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!

சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!

சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)

"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!

இப்போது சவாளுக்கு வருகிறேன்...

என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!

சவால்!!

யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?

குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!

"அந்தப்பார்வை"



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 4:08 pm

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1கோடி பரிசு

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு! ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!!

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை. ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்திலிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.

இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.

பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.

தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரிடம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள்.

பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது.

ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதிடத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதிடம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறுபிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடவுள்கள் உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மை யென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார்.

ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வரவில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.

எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:

சவாலை ஏற்று வரும் ஜோதிடரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.

ஜோதிடம் என்பதே எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திரவாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.

ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார்.

ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்துள்ளார்.

ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று அறிந்தார்.

ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம். மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.

மூலம்: செ. கஜபதி (எதிரொலி -28.2.2010)

http://theriyumaithu.blogspot.com/2010/10/1.html



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 4:11 pm

உங்களுக்குத் திறமை இருந்தால் ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்த ஏ.எஸ்.நடராஜ் அவர்களுடன் போட்டியிடுங்கள்.





சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 4:17 pm

சிவா அண்ணா அருமையான பதிவு, இந்த பதிவைப் பார்க்கும் பொழுது, ஜோதிடர்களின் நிலை அப்பட்டமாக தெரிகிறது.

என்னுடைய பெயரில் இன்னொருவரைப் பார்தது எனக்கு மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 4:18 pm

சிவா wrote:உங்களுக்குத் திறமை இருந்தால் ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்த ஏ.எஸ்.நடராஜ் அவர்களுடன் போட்டியிடுங்கள்.

எனது நிபந்தனைகளோடு அது ஒத்துப் போகவில்லையே...




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 4:29 pm

சிவா wrote:
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

இந்த டாட்டா எதற்கு? நான் தான் உங்களோடு வாதம் செய்து கொண்டிருக்கிறேனே... ஒரு வேளை நீங்கள் திருப்பி சொல்கிறீர்களோ....



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 4:42 pm

சிவா wrote:ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1கோடி பரிசு

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு! ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!!

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

...............................
ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.

கிட்டத் தட்ட நான் செய்வதைத் தான் அவரும் செய்கிறார்! இன்று முழுமையான சோதிடம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நன்கு அறிந்துள்ளதால் இந்த சவால்! சோதிடத்தை நன்கு கற்கும் போது இந்த உண்மை புரியத் தொடங்கும்!..

அவர் சோதிடர்களுக்கு சவால் விட்டிருக்கிறார்..

நான் சோதிடம் பொய் என்பவர்களுக்கு சவால் விட்டிருக்கிறேன்...!!

சோதிடம் பொய்யல்ல!




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 4:49 pm

எனக்கு ஜோதிடம் பாக்கலாம் பிடிக்காது, வீட்டுல பாப்பாங்க.........என்ன தான் சொல்லுங்க........ஜோதிடம் கேக்குறதுல இருக்குற சுகமே தனி, அவ்ளோ இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கும், கதை விடுறது சரியா தெரியும், இருந்தாலும், அத மாடுலேசனோட சொல்றது நல்லா இருக்கும். நேரம் போராதே தெரியாதுனா பாதுக்கோங்களேன்.

எனக்கு ஜோதிடம் லாம் தெரியாது, இருந்தாலும், என்ன பொறுத்த வரை ஜோதிடமும் சினிமாவும் ஒண்ணு தான், ரெண்டுமே உண்மை கிடையாது, ஆனா ரெண்டுமே நம்மள சந்தோஷமும் படுத்தும், அழுகவும் வைக்கும், முக்கியமான விஷயம் ரெண்டுமே நம்ம கைள இருக்குற காச குறி பார்த்து கரைக்கும்.

இது என் தனிப்பட்ட கருத்து, மாற்று கருத்து கூறுவோர் கூறலாம்..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 5:04 pm

பிஜிராமன் wrote:எனக்கு ஜோதிடம் பாக்கலாம் பிடிக்காது, வீட்டுல பாப்பாங்க.........என்ன தான் சொல்லுங்க........ஜோதிடம் கேக்குறதுல இருக்குற சுகமே தனி, அவ்ளோ இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கும், கதை விடுறது சரியா தெரியும், இருந்தாலும், அத மாடுலேசனோட சொல்றது நல்லா இருக்கும். நேரம் போராதே தெரியாதுனா பாதுக்கோங்களேன்.

எனக்கு ஜோதிடம் லாம் தெரியாது, இருந்தாலும், என்ன பொறுத்த வரை ஜோதிடமும் சினிமாவும் ஒண்ணு தான், ரெண்டுமே உண்மை கிடையாது, ஆனா ரெண்டுமே நம்மள சந்தோஷமும் படுத்தும், அழுகவும் வைக்கும், முக்கியமான விஷயம் ரெண்டுமே நம்ம கைள இருக்குற காச குறி பார்த்து கரைக்கும்.

இது என் தனிப்பட்ட கருத்து, மாற்று கருத்து கூறுவோர் கூறலாம்..........

சரி தான் நண்பரே... இதே கருத்தை நான் வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறேன்...
இங்கே சென்று பாருங்கள். http://www.eegarai.net/t47286-snkuyilan




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 06, 2012 5:17 pm

ANTHAPPAARVAI wrote:
RaRa3275 wrote:நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...

என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!
அப்படினா லக்னத்துலே கேதுவா?
ரமணியன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 5:22 pm

அப்படினா லக்னத்துலே கேதுவா


ஐயா, லக்னத்துல கேது இருக்காது.... சூது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்....... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக